தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Monday, March 26, 2012

மடிக்கணணி பேட்டரியின் நேரத்தை அதிகரிக்க


அனேகமாக தற்போது அதிகமானவர்கள் மடிக்கணணி பயன்படுத்துபவர்களாக இருப்பீர்கள். நீங்கள் உங்கள் மடிக்கணணியின் Battery Life பற்றி கவலைப்படுகிறீர்கள் என்றால் அதை அதிகரிக்க சில வழிமுறைகளை பின்பற்றலாம்.
Ubuntu ஐ பயன்படுத்துங்கள்: அதாவது நீங்கள் Ubuntu பயன்படுத்தினால் Memory இன் தலையில் கட்டப்படும் வேலைப்பளு குறைக்கப்படும். இதனால் உங்கள் Battery  மற்ற OS பயன்படுத்திய போது பயன்பட்டதை விட குறைவாகவே Ubuntu பயன்படுத்தும் போது செலவாகும்.
Wireless சாதனங்கள்: உங்களுக்கே தெரியும் Wireless சாதன பாவனை எப்படி Battery இன் வாழ்கையை குறைக்கும் என்று. இதில் முக்கிய அறிவுரை என்ன வென்றால் Battery ஆனது Charge இல் இருக்கும் போது Wi-fi மற்றும் Bluetooth என்பன பாவனையில் இல்லாத போது அவற்றை off செய்யவும்.
திரை விளைவுகளை சரி செய்தல்: Battery  கொஞ்சம் அதிக நேரம் வேலை செய்யணும் என்றால் திரையின் Brightness ஐ உங்கள் வசதிக்கு ஏற்ற படி குறைத்துக் கொள்ளுங்கள்.
USB மற்றும் CD/DVD: இவையும் Wireless போல தான் இவ்வாறான சாதனங்கள் பாவனையில் இல்லாத போது அவற்றை துண்டித்து விடுதல் நல்லது. மேலும் i-POD ஐ மடிக்கணணியில் Charge போடுவது ஒரு சரியில்லாத வேலை தான்.
கொஞ்சம் அதிகமான RAM: குறிப்பாக சொல்லபோனால் RAM இன் தொழில்பாடு மிகையானால் அது தற்காலிக விளைவாக உங்கள் Hard Disk இன் வேலையை அதிகரிக்கும். அதுவும் உங்கள் Battery ஐ குறைக்கலாம். எனவே கொஞ்சம் அதிகமான RAM போட்டால் உங்கள் Battery கொஞ்சம் கூட வேலை செய்யும்.
Background applications: உங்கள் கணனியில் Background Apps கள் CPU இன் வேலைப்பளுவை அதிகரிக்கும். குறிப்பாக Messengers, Clock Apps போன்றன. இவை தேவையில்லாத நேரங்களில் நிறுத்தி விடப்படுவது சிறந்தது.
Battery ஐ charge இல் போடும் நேரம்: Battery எந்நேரமும் Charge இல் போடுவது ஒரு தவறான வேலை. Battery இல் உள்ள இலத்திரன்கள் ஒழுங்காக ஓடுவதை நிச்சயப்படுத்த நீங்கள் தூங்கும் போது வாரத்தில் ஒரு முறையாவது Charge இல் இருந்து துண்டித்து விடுங்கள்.

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews