தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Tuesday, July 2, 2013

பிரதான கணனி நினைவகம் - 2

பதிவகங்கள்(Register)

பதிவகங்கள் என்பது மிகச்சிறிய கொள்ளளவைக் கொண்ட நினைவகம் ஆகும். நினைவக வேகப் படி நிலையில் உயர்நிலையில் இருப்பது இதுவாகும்.


பதுக்கு நினைவகம்(Cash Memory)

கணினி செயற்பாடு சம்மந்தமான காலத்தினை கணிப்பிடுவது மிகச்சிறிய அலகினால் ஆகும்.  கணினி செயலி (Processor ) பிரதான நினைவகத்தினை அனுக எடுக்கும் நேரம் பொதுவாக வினாடியின் மில்லியனின் 60 ஒரு பங்காகும். அதாவது நனோ செக்கன் 60 ஆகும்.ஆனாலும் செயலியின் செயற்பாட்டில் ஒரு சுற்றுக்காக எடுக்கும் நேரம் நனோ செக்கன் 2 ஆகும். இதன் படி செயலிக்கு நனோ செக்கன் 60 என்பது மிகப்பெரிய காலமாகும்.
இதன்படி கணினி செயலி தரவுகளை பிரதான நினைவகத்தில் இருந்து அனுகிக் கொள்வதற்கு அதிகநேரம் செலவிடப்படும் விடயமானபடியால் பிரதான நினைவகத்தினை விடக்கொள்ளளவு குறைந்து இருப்பினும் வேகமாக அனுகக்கூடிய செயலிக்கு மிக நெருக்கமாக இருக்க கூடிய நினைவக வகையே பதுக்கு நினைவகங்கள் ஆகும்.
இதில் பெரும்பாலும் செயலியினால் அடிக்கடி பயன்படுத்தப்படும் பிரதான நினைவகத்தினுல் உள்ள தரவுகளின் பிரதியாகும். செயலி பிரதான நினைவகத்தில் ஓர் இடத்தில் உள்ளவற்றை வாசிக்க அல்லது அதில் எழுதுவதற்கு தேவைப்பட்டால் செயலி முதலாவதாக பதுக்கு நினைவகத்தில் அதற்குரிய பிரதி உள்ளதா என்பதை பரிச்சித்து பார்க்கும். அதற்குரிய பிரதி இருந்தால் உடனடியாக செயலி பெற்றுக்கொள்ளும்.
நவீன தனிநபர் கணினிகளில் பதுக்கு நினைவக மட்டங்கள் மூன்று உள்ளன. முதல்மட்டம் L1  பதுக்கு நினைவகம் இது மிகவும் வேகமானதுடன் செயலியின் உள்ளேயே அமைந்துள்ளது. இதனால் இது தாய்பலகையின் தரவு மார்கத்தினை பயன்படுத்த மாட்டாது என்பதனால் தரவு அனுகும் வேகம் உயர்வானது. இரண்டாம் மட்டம் L2 , மூன்றாம் மட்டம் L3  என்பன தாய்பலகையில் அமைந்து காணப்படும் . இதனால் இது தாய்பலகையின் தரவு மார்கத்தினை பயன்படுத்துவதினால் இதன் வேகம் சற்று குறைவானதாக காணப்படும்.




Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews