தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Monday, June 17, 2013

Portable Image Converter

உங்களிடம் உள்ள படங்களை இணையத்தில் Upload செய்வதற்கு முன்னர் இப்படங்களை Compressசெய்வதற்காக பல மென்பொருட்களை பயன்படுத்தி இருப்பீர்கள், இதன்போது ஒவ்வருபடமாக Compressசெய்து Upload செய்து இருப்பீர்கள்.
உங்களிடம் உள்ள அனைத்து படங்களையும் ஒரே முறையில் ஒரே அளவாக Compress செய்வதற்கு மிக சிறந்த இலகுவான ஒரு Portable Software.
Image Converter என்னும் இம் மென்பொருளின் ஊடாக குறிப்பிட்ட Folder உள்ள அனைத்து படங்களையும் ஒரேமுறையில் அதன் Quality மாறாமல் இலகுவாக Compress செய்ய முடியும்.

  
Absolute என்றபகுதியின் ஊடாக உமக்கு தேவையான நீள அகலத்தினையும் Format என்றபகுதியின் ஊடாக உமக்கு தேவையானபட Format இனையும் Quality இனையும் தெரிவு செய்து Process இனை தெரிவு செய்து குறிப்பிட் Folder உள்ள அனைத்து படங்களையும் இலகுவாக மாற்றமுடியும்.
download Ling

Net work of computer

கணினிகளுக்கு இடையிலான வலையமைப்பு என்பது ஒரு கணினியை ஏனைய கணினிகளோடு பல் பயன் பெறும் நோக்குடன் வலைப்பின்னல் அமைப்பின் ஊடு இணைத்துக்கொள்ளும் செயற்பாடு கணினி வலையமைப்பு ஆகும். இது 3 வகைப்படும்.
  • LAN – Local Area Net work
  • MAN – Metropolitan Area Net work
  • WAN – Wide Area Net work
 LAN:

இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளை இணைப்பதன் மூலம் குறிப்பிட்ட புவியியல் எல்லைக்குள் அதாவது குறிப்பிட்ட அறை அல்லது அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் வலைப்பின்னல். இங்கு புவியியல் எல்லை வரையறை செய்யப்பட்டுள்ளது. 
Eg :  பாடசாலை கணனி ஆய்வு கூட வலையமைப்பு

MAN

நிறுவனங்களுக்கு இடையிலான அல்லது தலைமை நிறுவனத்துக்கும் அதன் கிளை நிறுவனத்துக்கும் இடையிலான வலையமைப்பு இதுவாகும். இது பல LAN களைக்கொண்டிருக்கும்.
Eg: வங்கிகளுக்கு இடையிலான வலையமைப்பு

WAN
நகரங்களுக்கு இடையிலான அல்லது நாடுகளுக்கு இடையிலான  வலையமைப்பு இதுவாகும். இங்கு புவியியல் எல்லை வரையறை செய்யப்படமாட்டாது. இது பல LAN, WAN களைக் கொண்டிருக்கும். 


வலையமைப்பின் நன்மைகள்

  • தகவல்களையும், தரவுகளையும் மிக விரைவாக கணினிகளுக்கு இடையில் பரிமாறலாம்;
  • ஒரே நேரத்தில் பலர் ஒன்றாக இணைந்து வேலை செய்யக் கூடிய வசதி.
  • ஒரு கணினியில் உள்ள மென்பொருட்கள், தகவல்களை மற்றய கணினிகளில் பயன்படுத்தக்கூடிய வசதி.
  • Printer,Scanner போன்ற peripheral device களை ஏனைய கணினிகளோடு பகிர கூடிய வசதி.
வலையமைப்பின் தீமைகள்:
  • செலவு அதிகம்.
  • கணினிகளை பாதுகாப்பது,பராமரிப்பது கடினம்.
  • வலையமைப்பில் ஏற்படும் பாதிப்பானது குறித்த நிறுவனத்தின் அனைத்து செயற்பாடுகளையும் பாதிப்படைய செய்யும்.
வலைப்பின்னல் ஏற்படுத்த தேவையான கருவிகள்:

  • sever, Personal computer
  • Communication media (Twisted pair wire,Coaxial cable,Fiber optical) 
  • Modem, Network card
  • Hub / Switch,,Router
  • Network soft ware 
வலையமைப்பின் வகைகள் (Network topology)
Star topology

Ring topology


Bus topology

Mesh topology

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews