தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Monday, November 24, 2014

உங்கள் போனில் போட்டோஸ் மற்றும் வீடியோவை ரகசியமாக வைக்க வேண்டுமா..?

Newsஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனையே தங்களுடைய ரகசியங்களை காப்பாற்றுவது எப்படி என்று தெரியாததுதான்.

புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் நமது ஸ்மார்ட்போனில் என்ன தான் லாக் செய்து வைத்திருந்தாலும், எளிதாக ஹேக்கர்களின் கைகளுக்கு சென்றுவிடுகிறது.

இதெற்கென எத்தனையோ ஆப்ஸ்-கள் வந்தாலும் அவை அனைத்தையும் எளிதாக கடந்து உள்ளே சென்று புகைப்படங்களை பார்க்க முடிகின்றது.
கேலரியை லாக் செய்தால் எல்லா போட்டோஸுமே லாக் ஆகும். ஆப் லாக் போட்டு லாக் செய்தால் செட்டிங்ஸ்-ல் போய் ஃபோர்ஸ் ஸ்டாப் (Force Stop) செய்து ஆப்ஸை க்ளீன் போல்ட் ஆக்கி உள்ளே நுழைந்துவிடலாம்..

நம் ஸ்மார்ட்போனுக்கு ஏற்ற ஸ்மார்ட் சேஃப் ஆப் -இன்று அதிகபட்ச ஸ்மார்ட்போன் யுசர்களால் டவுன்லோடு செய்யப்பட்டிருக்கும் மிகச் சிறந்த ஆப் தான் - கீப் சேஃப் ஆப்ஸ் (Keep Safe Vault).

நாம் எவ்வளவுதான் லாக்கிங் ஆப்ஸ் போட்டு கேலரியை பாதுகாப்பாக வைத்தாலும், சிலர் ஈஸியாக உள்ள நுழைந்து நம்ம கேலரியை யூஸ் பண்ண ஆரம்பிச்சிடுறாங்க.

அப்படி நடக்காமல் இருக்க கீப் சேஃப் ஆப்ஸ்-ஐ இன்ஸ்டால் செய்வதுதான் பெஸ்ட் சாய்ஸ். இதை ஐ-போன், ஸ்மார்ட்போன்களிலும் இன்ஸ்டால் செய்யலாம்.

இந்த ஆப்ஸ்-ஐ இன்ஸ்டால் செய்ததும் நமது இ-மெயில் அக்கவுண்ட வைத்து ரிஜிஸ்டர் செய்து ஆப்ஸ்-ஐ ஆக்டிவேட் செய்தால் போதும். நமக்கு தேவையான போட்டோஸ், வீடியோவை மட்டும் லாக் பண்ணி வைத்துக் கொள்ளலாம். இது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.

நம்ம கீப் சேஃப் ஆப்ஸ்-ன் ஸ்பெஷாலிட்டியே ஃபேக் பாஸ்வேர்ட் அன்ட் ஃபேக் பேக்ரவுண்ட் தான். யாராவது கீப் சேஃப் ஆப்-ஐ ஒப்பன் செய்தால் ஸ்கீரின் System Scan Complete-என்று தான் வரும். ஸ்கேனர்னு நினைத்து அவங்களும் அப்படியே விட்டு விடுவார்கள்.

ஆனா நமக்குதான் தெரியும் கீப் சேஃப் லோகோவை ப்ரெஸ் செய்தால் மட்டுமே பாஸ்வேர்ட் ஸ்கிரீனை ஓப்பன் செய்ய முடியும் என்று. அப்படியே அவர்கள் போனாலும் நம்பர் பாஸ்வேர்ட் போட்டால்தான் ஸ்கிரீனை ஓப்பன் செய்ய முடியும்.

இவற்றிலும் ஒரு ட்ரிக் உண்டு. ஃபேக் பின் போட்டு நம்மால் உள்ளே போகமுடியும் ஆனால் உள்ள எந்த போட்டோஸ், வீடியோஸும் இருக்காது.

நமக்கு மட்டுமே தெரிந்த சீக்ரெட் பாஸ்வேர்ட் போட்டால் மட்டுமே கேலரி ஓப்பன் ஆகும்.

அந்த கேலரிக்கும் நம்ம குறிப்பிட்ட பாஸ்வேர்ட் சேவ் செய்துவிட்டால் போதும். உங்களோட கேலரியை ஸாரி ஸாரி உங்களோட ப்ரைவேட் கேலரி ஓவர் சேஃப்.. இந்த ஆப்ஸோட இன்னொரு ஸ்பெஷாலிட்டி நம்ம செட்டிங்க்ஸ்&ல ஃபோர்ஸ் ஸ்டாப் (Force Stop) செய்தாலும் இந்த ஆப் வேலை செய்து கொண்டே தான் இருக்கும்.

கீப் சேஃப் ஆப்ஸை டவுன்லோட் செய்ய இந்த link-ஐ கிளிக் செய்யவும்.


https://play.google.com/store/apps/details?id=com.kii.safe&hl=en

ஸ்கைப் உரையாடலின் ​போது குரலை மாற்றுவதற்​கு

உலகில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்படும் முன்னணி வீடியோ தொடர்பாடல் மென்பொருளான ஸ்கைப்பில் தொடர்பு கொள்ளும் போது குரலை மாற்றியமைப்பதற்கு Skype Voice Changer எனும் மென்பொருள் துணைபுரிகின்றது.

இம்மென்பொருளின் உதவியுடன் ஆண்கள், பெண்களின் விதம் விதமான குரலை மாற்றக் கூடியதாகக் காணப்படுவதுடன், உரையாடலின் போது பின்னணி இசையினையும் செயற்படுத்த முடியும்.
தவிர குறித்த பின்னணி இசையின் பிச்சினையும் மாற்றியமைக்க முடியும். இவற்றுடன் குறித்த உரையாடலை பதிவு செய்து கொள்ளவும் இம்மென்பொருள் உதவிபுரிகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மென்பொருள் பதிவிறக்க

பேஸ்புக்கை பயன்படுத்துபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை

சமூக இணையத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவற்றை கவனிக்கும் முதலாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களின் முதலாளிகள் தங்களது ஊழியர்களை கண்காணிப்பதற்காவே பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர் என புளோரிடா சர்வதேச பல்கலைக்கழக ஆய்வாளர் Vanessa de la Llama தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், தமது ஊழியர்களைக் கண்காணிக்கவும், புதிய தொழிலாளர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் நிறுவனங்கள் இம்முறையை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பரிசோதனை செய்யும் போது பேஸ்புக் சுயவிபரத்தில் பொருத்தமற்ற படங்களைப் பார்த்தவுடனேயே, குறிப்பிட்ட ஊழியர்களைப் பற்றி தவறாக மதிப்பிட்டு அவர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை அல்லது புதியவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுதல் போன்ற சந்தர்ப்பங்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் Slideshow படங்களை உருவாக்க



பேஸ்புக்கை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் வெவ்வேறு முறைகளில் தமது அன்றாட நடவடிக்கைகளை பகிர விரும்புவார்கள். அதனடிப்படையில் தினந்தோறும் பலவிதமான அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.


அதேபோல் பேஸ்புக்கில் படங்களை பகிருவதற்கு பல்வேறு வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில் விசேடமான முறையாக Slideshow காணப்படுகின்றது.

இவ்வாறு சிறந்த முறையில் Slideshowக்களை உருவாக்குவதற்கு Magix Slideshow Maker என்ற மென்பொருளை பயன்படுத்த முடியும். இதில் நூற்றுக்கணக்கான effects, transitions, music, sound காணப்படுகின்றமை விசேட அம்சமாகும்.

இம்மென்பொருளை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட Slideshow வை வீடியோவாக மாற்றி பேஸ்புக் தளத்தில் பகிர முடியும். தவிர YouTube, Flickr போன்ற தளங்களிலும் நேரடியாக பதிவேற்ற முடியும்.




புகைப்படங்களை ஓன்லைனிலேயே எடிட் செய்வதற்கு

 

ஒவ்வொருக்கும் தங்களது புகைப்படங்கள் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. இதற்காக ஓன்லைனிலேயே பல்வேறு தளங்கள் உள்ளன.


Online-Image-Editor.com
இதில் உங்கள் புகைப்படத்தை தரவேற்றம் செய்து கொள்ளலாம் அல்லது URL முலம் கொடுக்கலாம். இதில் CROP செய்யலாம், ANIMATED TEXT ADD செய்யலாம், மின்னும் நட்சத்திரங்கள் சேர்க்கலாம். இன்னும் பல வசதிகள் இருக்கிறது.



Aviary.com
இது மற்றதை விட அதிக அளவு FEATURES உள்ளது. இது ANDROID மற்றும் APPLEக்கு APPLICATIONஆக கிடைக்கிறது.

Phixr.com
இது மற்றதை போல தான் RESIZE, CROP செய்து கொள்ளலாம். இதில் பலவிதமான EFFECTS கொடுக்கலாம்.

உள்ளங்கையில் பயனுள்ள இணையதளம்



இதில் முக்கிய தளங்களைத் தொடர்பு கொள்ள லிங்க்ஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஒருமுறை கிளிக் செய்தால் போதும். முகவரியில் எந்த எழுத்துக்களையும் டைப் செய்திடத் தேவையில்லை.
 

பல இணைய தளங்கள் நாம் அன்றாடம் செல்லும் இணைய தளங்களாக அமைகின்றன. இவற்றில் இமெயில், புதிய தகவல்கள், உறவுகளுக்கு கடிதங்கள், கேள்விகளுக்குப் பதில்கள் எனப் பலவகையான செயல்களை மேற்கொள்கிறோம்.
 

இந்த தளங்கள் அன்றாடம் செல்ல வேண்டிய தளங்களாக இருந்தாலும் ஒவ்வொரு முறையும் இவற்றை அடைய இந்த தளங்களின் முகவரிகளை டைப் செய்திட வேண்டும். அல்லது அதன் தொடக்க எழுத்துக்களையாவது அமைக்க வேண்டும். இதற்குப் பதிலாக இது போன்ற அடிக்கடி அனைவரும் பயன்படும் தளங்களுக்கு பைல்களின் ஐகான்களைக் கிளிக் செய்வது போல லிங்க்குகளை ஒரே தளத்தில் அமைத்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதனைத்தான்http://www.MyEverydayPage.com என்ற தளம் செய்கிறது.

இதில் முக்கிய தளங்களைத் தொடர்பு கொள்ள லிங்க்ஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஒருமுறை கிளிக் செய்தால் போதும். முகவரியில் எந்த எழுத்துக்களையும் டைப் செய்திடத் தேவையில்லை. இந்த தளத்தை உங்கள் ஹோ ம் பேஜாக வைத்துக் கொண்டால் இணையத்தைத் திறந்தவுடன் உங்களுடைய அனைத்து தளங்களும் உங்கள் கண் முன்னால் டெஸ்க் டாப்பில் நீங்கள் கிளிக் செய்வதற்காகக் காத்திருக்கும்.

அனைவரும் எப்படியும் செல்ல வேண்டிய தளங்களுக்கென (Most Visited Websites) ஒரு தனிப் பிரிவு அமைத்து அதில் : yahoo, google, orkut, hotmail, rediff, facebook, youtube போன்ற தளங்களுக்கான லிங்க்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் உங்களை உற்சாகப் படுத்தி சிந்திக்க வைத்திட சான்றோரின் பொன்மொழிகள் தரப்படுகின்றன. இவற்றுடன் இனிமையான மியூசிக் இசைக்கப்படுகிறது. பாடல் ஒலிக்கிறது. இந்த தளத்தில் உள்ள பிரிவுகளைப் படித்தால் உங்களுக்கு என்ன என்ன தளங்கள் இதில் அடுக்கப்பட்டுள்ளன என்று தெரியவரும்.
 

Top Emailing Websites / Search Engines /Photos & Wallpapers/Social Networking Websites /Google Tools /Finance /Downloads /Office Productivity /Health Conscious/Mind Power & Spirituality/Technical Paradise/Entertainment இவற்றில் ஒவ்வொரு பிரிவி லும் குறைந்தது 7 தளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 
நிச்சயம் நீங்கள் இதுவரை பார்க்காத தளங்களும் இந்த பட்டியலில் இருக்கும். இந்த தளங்களைப் பெறுவதற்குக் கிளிக் செய்திடும் முன் கர்சரை இதன் அருகே கொண்டு சென்றவுடனேயே அதன் தம்ப் நெயில் படம் பெரிதாகத் தெரிகிறது. எடுத்துக் காட்டாக யாஹூ இமெயில் தளம் சென்றவுடன் அத்தளத்தின் முகப்புப் பக்கம் தெரியும். தவறுதலாக யாஹூ வின் முதன்மைப் பக்கத்திற்குப் பதிலாக இதனைக் கிளிக் செய்வது இதனால் தடுக்கப்படுகிறது. ஒவ்வொரு முறை இந்த தளத்தை ரெப்ரெஷ் செய்தால் பொன்மொழிகள் மாறுகின்றன. பாட்டு தரப்பட்டிருக்கும் இடத்தில் கிளிக் செய்தால் அருமையான பாட்டு ஒன்று டவுண்லோட் ஆகி இசைக்கப்படுகிறது. நீங்கள் எந்த தளத்தை யேனும் அனைவருக்கும் பயனுள்ள தளம் என்று எண்ணினால் அது குறித்து இவர்களுக்கு எழுதலாம். இந்த முயற்சி எல்லாருக்கும் நல்ல விஷயங்கள் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அமைக்கப் பட்டது என்றும் அதனால் இத்தகைய தளம் இருப்பதை அனைவருக்கும் சொல்லுங் கள் என்று வேண்டுகோளும் இந்த தளத்தில் விடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை பார்த்தால் இதனை நீங்கள் விரும்பி பார்ப்பீர்கள் என்பது உறுதி. ஏனென்றால் நம்முடைய பொன்னான நேரத்தை இது அதிகம் மிச்சப்படுத்துகிறது.

உங்கள் புதிய லேப்டாப்பில் இருந்து Recovery DVD ஐ உருவாக்குவது எப்படி ?



நீங்கள் புதிதாக லேப்டாப் வாங்கிவிட்டீர்களா மறக்காமல் உங்கள் லேப்டாப் Restore Recovery DVD ஐ உருவாக்கிக்கொள்ளுங்கள்...
 
நீங்கள் புதிதாக வாங்கி இருக்கும் லேப்டாப்பில் Windows XP, Windows Vista, Windows 7 என ஏதாவது ஒரு OSஅதாவது Operating Systemஇன்ஸ்டால் செய்து இருக்கும்.

அந்த ஆபரேட்டிங் சிஸ்டாம் திடீரென வேலை செய்யாமல் போய் எரர் ஆகிவிட்டதன் காரணமாக உங்கள் லேப்டாப் திறக்க முடியாமல் போய்விட்டால் அதனை சரி செய்ய உங்களுக்கு அந்த லேப்டாப்பில் எற்கனவே இன்ஸ்டால் செய்து உள்ள ஆபரேடிங் சிஸ்டத்தை போல ஒரு Restore Recovery DVDஇருந்தால்தான் அதனை சரி செய்ய முடியும்இல்லை என்றால் பிரச்சனைதான்.

முன்பெல்லாம் நாம் எந்த பிராண்ட் லேப்டாப் வாங்கினாலும் அந்த லேப்டாப் பேக்கில் ஒரு Drivers CD மற்றும் Windows Recovery CD இரண்டும் இருக்கும்ஆனால் இப்பொழுதெல்லாம் அப்படி வருவதில்லை. Recovery File நம் லேப்டாப்பிலேயே தனியாக ஒரு டிரைவராக காப்பி செய்து வைக்கப்பட்டு இருக்கிறதுஅது தேவை என்றால் நாம் தான் அதனை ஒரு ரிகவரி Cdயாக உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

சரி அந்த Restores Recovery DVD ஐ நாம் எப்படி நம் லேப்டாப்பில் இருந்தே உருவாக்கிக்கொள்வது என்பதை நாம் இந்த பாடத்தில் பார்ப்போம்.



இந்த பாடத்தை PDF பைலாக கீழே உள்ள லிங்கின் மூலம் டவுண்லோடு செய்துகொள்ளுங்கள்
  

Facebook-ல் பகிரப்படும் படங்களுக்கு வண்ண வண்ண "எபெக்ட்" கொடுக்க

எமது வாழ்வின் உன்னதமான தருணங்களை நண்பர்களுடன் பகிர்வதற்கு பிரபல சமூகத்தளமாக Facebook-ஐ பயன்படுத்துகின்றோம்.
இதன் மூலம் புகைப்படங்களையும் பகிர முடியும் என்பது அறிந்த விடயம். அதேபோல் அப்புகைப்படங்களுக்கு விதம் விதமான Effect வழங்கிய பின் நண்பர்களுடன் பகிர முடியும்.




இதற்காக பல இணையத்தளங்கள் உள்ளன. ஆனால் அது சற்று சிரமமான விடயமாகும். காரணம் பகிர வேண்டிய புகைப்படத்ததை குறித்த தளங்களுக்குUpload செய்து பின் Effect வழங்கியதை தொடர்நது Download செய்து மீண்டும் பேஸ்புக் தளத்தில் Upload செய்ய வேண்டும்.

இச்சிரமத்தை தவிர்த்து நேரடியாகவே பேஸ்புக்கில் Upload செய்யப்பட்டுள்ள புகைப்படங்களுக்கு Effect கொடுக்கும் வசதியை Mess My Photo என்ற இணையத்தளம் வழங்குகின்றது.
எவ்வாறு Effect கொடுப்பது என்று பார்ப்போம். 

1. இந்த இணைப்பில் அழுத்தி Mess My Photo தளத்திற்கு செல்லவும்.

2. தளத்திலுள்ள FB Select என்பதை அழுத்தவும்.
 3. நீங்கள் முதல் தடவை இவ்வசதியை பயன்படுத்துவதனால் அனுமதி கேட்கும் எனவே Install என்பதை அழுத்தி, தொடர்ந்து Allow என்பதை அழுத்தவும்.

 4. அடுத்தாக உங்கள் பேஸ்புக்கில் உள்ள எல்லா புகைப்படங்களும் காண்பிக்கும் ஒரு Window தோன்றும். அதில் நீங்கள் Effect கொடுக்க விரும்பும் படத்தை தேர்ந்தெடுக்கவும்.

click to select a photo 








5. தொடர்ந்து நீங்கள் விரும்பும் Effect ஒன்றை தேர்வு செய்துApply என்பதை அழுத்தவும்.



தற்போது இந்த புதிய படமானது உங்களது பேஸ்புக் கணக்கில் சேமிக்கப்பட்டிருக்கும். இனி அந்த படத்தை உங்கள் நண்பர்களுடன் பரிமாறலாம்.

நமக்கு பிடித்தவாறு முகப்புத்தகத்தை வடிவமைத்துக் கொள்ளலாம்



இணையத்தில் வந்துடன் தட்டச்சு செய்யும் முதல் தளமாகவும், மிகப்பெரிய சமூக தளமாகவும் Face Book மாறிவிட்டது. இப்பொழுது இதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

தற்போது இந்தத்தளத்தினை நாளொன்றிற்கு 500 மில்லியனுக்கும் மேற்ப்பட்டோர் உபயோகப் படுத்துகின்றனர். நாம் பயன்படுத்தும் முகப்புதகத்தின் பயன்பாட்டை அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் அதன் தோற்றம் ஒரே மாதிரியாக இருப்பது தான் நம்மில் அநேகருக்கு மிகவும் சலிப்பை ஏற்படுத்துகின்றது. 

இதை மாற்றும் வகையில் அந்த நிறுவனம் ப்ரொபைல் தீம்ஸை தற்போது அறிமுகபடுத்தி இருக்கிறது. அதன் மூலம் FACEBOOK-இன் தோற்றத்தை மாற்றி அமைக்கலாம். ஆனால் அது மிகவும் குறைவாக உள்ளது. மேலும் அவை நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு இருக்குமா என்று தெரியாது. அதனால் நாம் விரும்பும் வண்ணம் தீம்களை வடிவமைப்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தளத்திற்கு சென்று மாற்றிக்கொள்ளலாம். 
இணையதள முகவரி

இந்த தளத்தில் நீங்கள் விரும்பும் வண்ணம் உங்களுக்கான தீம்ஸை வடிவமைக்கலாம். மேலும் அதில் உள்ள தீம்சையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம், முதலில் நீங்கள் அதற்குரிய மென்பொருளை அந்த தளத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக் கொள்ளவேண்டும்.
மேலும் இதில் நீங்கள் இன்னும் சில மாற்றங்களை செய்யலாம், உங்கள் கணக்கில் வலது பக்கத்தில் உள்ள SETTINGS என்ற பொத்தானை அழுத்தவும் அதில் SNOW FLAKES மற்றும் FALLING HEARTS போன்றவற்றை பயன்படுத்தலாம், தேவை இல்லை என்றல் அதை DISABLE செய்து கொள்ளுங்கள். 

மேலும் நீங்கள் உங்களுக்கு பிடித்த பாடலை தேர்வு செய்து கேட்கலாம் மற்றும் இதில் THUMB NAIL VIEW போன்ற வசதிகள் இந்த மென்பொருளில் உள்ளது. இதை பதிவிறக்கி உங்கள் பக்கத்தை அழகாக மாற்ற உதவுகின்றது.
பழைய பக்கம்





Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews