தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Tuesday, July 29, 2014

HTML கற்போம் - 7

HTML Frame
ஒரு HTML Document இனை வேவ்வேறு பகுதிகலாக பரிப்பதற்கு இச்சட்டக அமைப்பு பயன்படுகின்றது. அதற்கு பிரதானமாக <FRAMESET>, <FRAME> ஆகியTag பயன்படுத்தப்படுகின்றது.
Sample Code
<HTML>
<HEAD> ................... </HEAD>
<FRAMESET>
     ..............................
     ...............................
</FRAMESET>
</HTML>
Frame tag இனுல் பின்வரும் attributes பயன்படுத்தப்படும்.
1.   Bordercolor =“Color”
2.   Frameborder =”Yes/No”
3.   Framespacing=”Value”
4.   Marginheight=”Value”
5.   Marginwidth=”Value”
6.   Scrolling=”yes/no”
7.   SRC=”Document”
Frameset tag இனுல் பின்வரும் attributes பயன்படுத்தப்படும்.
1.   Border=”Value”
2.   Cols=”Scale Value”    Colum Scale
3.   Rows=”Scale value”    Row Scale 




HTML Frame ROWS/COLS attributes
Rows attributes இன் மூலம் கிடையா வழங்கப்படும் frame களின் எண்ணிக்கையினை பின்வருமாறு காட்டப்படும்.
<FRAMESET ROWS=”VALUE,VALUE,VALUE”>
Value – அதற்குரிய அகலம் pixels அளவுகளில் வழங்குதல் வேண்டும்.
Value% - அதற்குரிய அகலம் விகித அளவுகளில் வழங்குதல் வேண்டும்.
Value* - * குறியீடு மாத்திரம் உள்ளதாயின் மிகுதியாக உள்ள இடம் முழுவதும் குறிப்பிட்ட         frame க்காக பயன்படுத்தல் வேண்டும்.
உதாரணமாக
<frameset rows=”20%,60%,20%”>
இங்கு 3 Row ஆக பிரிக்கப்பட்டு இருக்கும் முதலாவது Row மொத்த உயரத்தின்20% ஆகவும், இரண்டாவது Row மொத்த உயரத்தின் 60% மூன்றாவது Rowமொத்த உயரத்தின் 20% காணப்படும்.

<frameset rows=”50,*,2*,20%”>
இங்கு நான்கு Row ஆக பிரிக்கப்பட்டு இருக்கும் முதலாவது Row 50 pixel அளவு உள்ளதாகவும், நான்காவது Row மொத்த உயரத்தின் 20% மாகவும், இரண்டாம்,மூன்றாம் Row முறையே மிகுதியாக உள்ள உயரத்தினை 1:2 என்ற வீதத்தில் பிரிக்கும்.

இதே போலவே Cols பயன்படுத்தப்படும் இங்கு Value ஒவ்வரு Column த்தின் அகலத்தினை தீர்மாணிக்கும்.

HTML Frame களில் தரவு உள்ளடக்கப்படும் விதம்
குறிப்பிட்ட frame இன் தகவல்கள் உள்ளடக்கங்களை <frameset> tag கீழ் வரும்<frame> tag இனை பயன்படுத்தி  இடமுடியும். இதன்போது SRC (Source)என்னும் attributes பயன்படுத்தப்படும்.
உதாரணம்
<frame src=”cell.html”>


<HTML>

<HEAD>

      <TITLE> frame Example </TITLE>

</HEAD>

<FRAMESET rows="50%,50%">

      <FRAMESET COLS="20%,80%">

            <FRAME SRC="CELL1.HTML">

            <FRAME SRC="CELL2.HTML">

      </FRAMESET>

      <FRAMESET COLS="80%,20%">

            <FRAME SRC="CELL3.HTML">

            <FRAME SRC="CELL4.HTML">

      </FRAMESET>

</FRAMESET>


</HTML>

இங்கு CELL1.HTML, CELL2.HTML, CELL3.HTML, CELL4.HTML என்னும் வேவ்வேறு நான்கு HTML ஆவனங்கள் Frame களினுல் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews