தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Showing posts with label தெரிந்து கொள்ளுங்கள். Show all posts
Showing posts with label தெரிந்து கொள்ளுங்கள். Show all posts

Monday, December 22, 2014

ப்ளேம் (Flame) வைரஸ் எச்சரிக்கை




புதிய வைரஸ் ஒன்று வேகமாகப் பரவி வருவதனை, வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் காஸ்பெர்ஸ்கி நிறுவனம் கண்டறிந்து எச்சரிக்கை வழங்கியுள்ளது.

ஈரான் நாட்டில் பரவியுள்ள இந்த வைரஸ் விரைவில் மற்ற நாடுகளிலும் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களில் பரவலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு தொலைதொடர்பு அமைப்பு அறிவித்துள்ளது.

(http://in.reuters.com/article/ 2012/05/29/cyberwar-flame-idINDEE84S0 EU20120529) இந்த வைரஸ் இதுவரை தாங்கள் சந்திக்காத ஒரு குழப்பமான குறியீட்டினைக் கொண்டு இயங்குவதாக காஸ்பெர்ஸ்கி அறிவித்துள்ளது. இது குறித்து மேலும் சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.


ப்ளேம் வைரஸ், கம்ப்யூட்டரை நேரடியாகத் தாக்காமல், ட்ரோஜன் வைரஸ் போலவே நுழைகிறது. பெரும்பாலும் பாதிக்கப்பட்ட இணைய தளங்களிலிருந்து, அவற்றை அணுகும் கம்ப்யூட்டர்களுக்குச் செல்கிறது. பின்னர், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ், லோக்கல் நெட்வொர்க் ஆகியவற்றின் மூலம் மற்ற கம்ப்யூட்டர்களை அடைகிறது.

பாதிப்பை ஏற்படுத்த கம்ப்யூட்டரை அடைந்த பின்னர், பாஸ்வேர்ட் தகவல்களைத் திருடுதல், மைக் மூலம் அனுப்பப் படும் ஆடியோ தகவல்களைப் பதிந்து அனுப்புதல், முக்கிய புரோகிராம் இயக்கங்களின் ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்புதல், இன்ஸ்டண்ட் மெசேஜ் விண்டோக்களில் உள்ள தகவல்களை எடுத்து அனுப்புதல் போன்ற அனைத்து திருட்டு வேலைகளை யும் நாசூக்காக மேற்கொள்கிறது.

கம்ப்யூட்டருடன் புளுடூத் முறையில் இணைக்கப்படும் சாதனங்களிலிருந்தும் தகவல்களைத் திருடுகிறது இந்த வைரஸ். திருடப்படும் தகவல்கள் அனைத்தும், உலகின் பல நாடுகளில் இயங்கும் இதன் சர்வர்களுக்கு அனுப்பப்படுகின்றன.

2010 ஆம் ஆண்டில், ஈரான் நாட்டில் பெரும் சேத விளைவுகளை ஏற்படுத்திய ஸ்டக்ஸ்நெட் (Stuxnet worm) போல இது செயல்படுகிறது. ஆனால், அதனைக் காட்டிலும் குழப்பமான குறியீட்டில் இந்த வைரஸ் எழுதப்பட் டுள்ளது.

எனவே இதனைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கிறது. இந்த வைரஸ் பைல் 20 எம்பி இடத்தை எடுத்துக் கொள்ளும் அளவிற்குப் பெரியதாக உள்ளது.

இந்த வைரஸ், வங்கி இணையக் கணக்கிலிருந்து பணம் மாற்றும் வழியைக் கொண்டிருக்கவில்லை என்பது சற்று ஆறுதலான விஷயம் தான். ஈரான் எண்ணை வள நிறுவனங்களில் குழப்பத்தினை உண்டு பண்ண இது தயாரிக்கப்பட்டி ருக்கலாம் என்றும் ஒரு கோணத்தில் ஆய்வு நடக்கிறது.

அப்படி இருந்தால், மற்ற நாடுகளின் அடிப்படைக் கட்டமைப்பில் நாச வேலைகளை மேற்கொள்ள இந்த வைரஸ் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

2038 இல் கணினிகள் செயலிழக்க வாய்ப்பு

y2k
உலகம் முழுவதும் கணினி மயமாகியிருக்கும் இந்த நூற்றாண்டில் கணினிகள் செயலிழக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2038 ஆம் ஆண்டில் பெரும்பலான கணினிகள் செயலிழக்கக்கூடிய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கணினிகளில் நேரத்தை கணக்கிடும் முறையிலுள்ள தொழில்நுட்பமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
1938 மார்ச் 19 ஆம் திகதி கிறீனிச் நேரப்படி அதிகாலை 3 மணி 14 நிமிடம் 7 வினாடி எனும் நேரத்தை அடையும்போது கணினிகளால் நேரத்தை புரிந்துகொள்ள முடியாமல் போய்விடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனை Year 2038 Problem என நிபுணர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும்பாலான கணினிகளின் ஒப்பரேட்டிங் சிஸ்டம் 32 பிட் சிஸ்டம் முறைமையிலேயே இயங்குகின்றன. 32 பிட் இன்டிஜர்( 32-bit integer )முறையில் அதிபட்சமாக 2,147,483,647 வினாடிகளையே கணக்கிட முடியும். இத்தகைய 32 பைட் சிஸ்டம் கணினிச் செயன்முறைகளில் ஆரம்ப நேரமானது 1970 ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலை 00.00 மணியாக குறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2038 மார்ச் 19 ஆம் தேதி அதிகாலை 3.14 மணியாகும்போது 1970 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து  2,147,483,647  வினாடிகள் கடந்துவிடும்.
அதன்பின் நேரத்தை சரியாக கணக்கிட முடியாமல் 32 பிட் சிஸ்டம் கணினிகள் செயலிழக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் 64 பிட் சிஸ்டம் முறைமைக்கு கணினிகளின் மென்பொருட்கள் மாற்றப்பட வேண்டியிருக்கும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே யூ ரியூப் இணையத்தளம் இத்தகைய நெருக்கடியை எதிர்கொண்டு 64 பிட் சிஸ்டத்துக்கு மாறியிருந்தது.

Monday, December 15, 2014

அமர்வதிலும் அக்கறை காட்டுங்கள்! -- உபயோகமான தகவல்கள்,


ம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் திறனிலும் அறிவிலும் அகிலத்துக்கே சவால்விடும் ஆட்களாகிவிட்டோம் நாம். புதிய மென்பொருள் எழுதுகிற அளவுக்கு கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை நாம் திறமையாகக் கையாண்டாலும், பார்வைப் பாதிப்போ, முதுகெலும்புப் பிரச்னையோ வராதபடி கம்ப்யூட்டர் முன்னால் எப்படி அமர்வது என்று நம்மில் பலருக்குத் தெரியாது


''கம்ப்யூட்டர் முன்பு நாம் அமரும் முறை சரியாக இருந்தால், கண் வலி, முதுகு வலி போன்ற பிரச்னைகளை நிச்சயமாகத் தவிர்க்க முடியும்!'' என்கிறார் ஸ்போர்ட்ஸ் மெடிசின் டாக்டர் கண்ணன் புகழேந்தி. செய்தியும் படங்களுமாக கம்ப்யூட்டரைக் கையாளும் பக்குவம் குறித்து இங்கே விளக்குகிறார்...

இருக்கையின் நுனிப் பகுதியில் அமர்வதும் தவறு. இதனால் தொடைப் பகுதியில் ரத்த ஓட்டம் தடைப்படும். தொடைப் பகுதியில் உள்ள தசைநார்கள் இறுகி இடுப்பு வலியும் உருவாகும். தொடந்து தசை நார்கள் இறுகிய நிலையில் இருந்தால், ஆக்ஸிஜன் கிடைப்பது தடைப்பட்டு தசை நார்கள் சுருங்கிய நிலையை அடைந்துவிடும்.
பாதம் முழுவதும் தரையில் அழுந்துமாறு உட்கார வேண்டும். கால் விரல்களின் நுனிப்பகுதி மட்டும் தரையைத் தொடும்படி அமர்வது தவறு. இதனால் காலின் பின் பக்கத்தசை இறுகி ரத்த ஓட்டம் தடைப்படும். இது கால் வலியை உண்டாக்கும். குதிகால் மட்டும் தரையில் படும்படி அமர்வதால் கால் கட்டை விரலிலும் கணுக்காலிலும் வலி ஏற்படும்.
'மடிக்கணினி’ என்றால் அதனை மடியில் வைத்தபடி வேலை செய்யவேண்டும் என்பது இல்லை. எனவே, குனிந்து பார்த்து வேலை செய்யக் கூடாது. இப்படி வேலை செய்வது தலைவலி, கண் வலி, கழுத்து வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.

முதுகுத்தண்டு எலும்பு முன்னோக்கி வளையாமலும், பக்கவாட்டில் வளையாமலும் அமர வேண்டும்.
கைப்பகுதியும் மணிக்கட்டும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.
கால் மூட்டுகளை அதிகப்படியாக மடக்கியோ நீட்டியோ இருக்காமல், தலைகீழ் 'லி’ வடிவத்தில் இருக்க வேண்டும்.
தாடையானது மேல் நோக்கியோ, கீழ் நோக்கியோ இல்லாமல் படத்தில் இருப்பது மாதிரி நேராக இருக்க வேண்டும்.

Friday, December 12, 2014

கம்ப்யூட்டரின் இறுதி மூச்சு


உங்கள் கம்ப்யூட்டர் அடுத்த சில மணி நேரத்தில் முடங்கிப் போவதைப் போல இயக்கத்தினைக் காட்டு கிறதா? உடனே பதற்றம் அடைய வேண்டாம். இந்த நிலை ஏற்படுவதற்கான பொதுவான பிரச்னை களையும் அவற்றிற்கான தீர்வுகளையும் இங்கு காண்போம்.


பொதுவாக, கம்ப்யூட்டர் இயக்கம் எந்த நேரமும் முன் அறிவிப்பின்றி தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் என்பது நாம் தெரிந்து கொள்ளவேண்டிய
ஓர் உண்மை. எந்த நேரத்திலும் இது நிகழும் என்பதால், அதனை எந்த நேரத்திலும் நாம் எதிர்பார்க்கவும் வேண்டும்.

உங்கள் சிஸ்டத்தில் தான் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று மற்றவர்கள் கூறுவது மிகவும் சகஜமாகிவிட்டது. முதலில் வேகமாக இயங்கிய கம்ப்யூட்டர், இப்போது மிகவும் குறைவான வேகத்தில் இயங்குகிறது, அடிக்கடி நீல நிறத்தில் திரையில் எச்சரிக்கை செய்தி கிடைக்கிறது, சிபியு கேபினிலிருந்து பிளாஸ்டிக் சற்று கருகியது போல வாசனை வருகிறது, சிறிய கிரைண்டர் ஓடுவது போல சத்தம் வருகிறது போன்ற பேச்சுக்கள் எல்லாம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் குறை கூறும் குற்றச்சாட்டுக்களே. இவற்றை எப்படி எதிர் கொள்ளலாம் அல்லது ஆய்வு செய்திடலாம் என்று பார்ப்போம்.

இவை அனைத்திற்கும் இதுதான் தீர்வு என எதனையும் உறுதியாக எழுதித் தந்துவிட முடியாது. ஏனென்றால், ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் அது இயங்கும் சுற்றுப்புறச் சூழ்நிலை, உள்ளாகப் பதிக்கப்பட்ட அப்ளிகேஷன் புரோகிராம்கள், ஹார்ட் ட்ரைவின் தன்மை இவற்றைப் பொறுத்தே இந்த பிரச்னைகள் ஏற்படும். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

நாம் சந்தேகிக்கும் வகையில், சிபியு கேபினிலிருந்து சத்தம் வருகிறது என்றால், நிச்சயமாய் ஐந்து வாரங்களிலோ அல்லது ஐந்து நிமிடங்களிலோ ஹார்ட் ட்ரைவ் இயக்கத்தினை நிறுத்தப் போகிறது என்பதன் அடையாளமே அது. எனவே அது போன்ற சூழ்நிலையில், உங்கள் பைல்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எந்த ட்ரைவினை உங்கள் கம்ப்யூட்டரில் பொருத்தலாம் என்பதனை அறிந்து, அதனை எங்கு வாங்கலாம் என்பதனை முடிவு செய்திடுங்கள்.

சில வேளைகளில், நாம் எந்த புரோகிராமின் ஐகான் மீது கிளிக் செய்தாலும், அது இயங்க, வழக்கத்திற்கு மாறாக, சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதற்கும் பல காரணங்கள் உண்டு. உங்கள் ராம் மெமரியில் பிரச்னை இருக்கலாம்;

ஒரே நேரத்தில் பல புரோகிராம்களை நீங்கள் திறந்து வைத்து இயக்கலாம். அல்லது நீங்கள் அறியாமலேயே, பல புரோகிராம்கள் திறக்கப்பட்டு பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கலாம். ரன் விண்டோவில் msconfig என டைப் செய்து கிடைக்கும் விண்டோவில், start up என்ற டேப்பினைத் தேர்ந்தெடுத்து கிடைக்கும் பட்டியலைப் பார்க்கவும்.

இதில் உங்களுக்குத் தேவைப்படாத சில புரோகிராம்கள் இருக்கலாம். சிலவற்றின் பெயர்கள் நீங்கள் இதுவரை கேள்விப்படாதவையாக இருக்கலாம். அவை குறித்து கூகுள் தேடல் மூலம், எத்தகைய பயன் தரும் புரோகிராம்கள் அவை என அறிந்து கொள்ளவும்.

அவை உறுதியாக நீங்கள் பயன்படுத்தாத புரோகிராம்கள் எனில், அவற்றிற்கு எதிரே உள்ள சிறிய கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிட்டு, Apply என்பதில் கிளிக் செய்து பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இந்த மாற்றத்தினை இயக்க, நீங்கள் ரீபூட் செய்திட வேண்டிய திருக்கும்.

இன்னொரு பிரச்னை ட்ரைவர் புரோகிராம் களால் ஏற்படும். தேவையற்ற அல்லது ஒருங்கிணைந்து செயலாற்றாத ட்ரைவர் புரோகிராம்கள் இவ்வாறு புரோகிராம் இயக்கத்தினைக் கொண்டு வராது. எனவே குறிப்பிட்ட புரோகிராமிற்கான அப்டேட் செய்யப்பட்ட ட்ரைவர் புரோகிராமினை டவுண்லோட் செய்திடவும்.

சில வேளைகளில், கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடுகையில், மற்றவர்கள் கம்ப்யூட்டரில் லாக் இன் செய்துள்ளார்கள் (‘Other People Are Logged On to This Computer’); எனவே மூட வேண்டியது அவசியமா? என்ற கேள்வியுடன் ஒரு கட்டம் கிடைக்கும். உங்கள் கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட யூசர் அக்கவுண்ட் இருக்கலாம்;

இன்னொருவர் கம்ப்யூட்டரைப் பயன் படுத்தி, தன் பணியை முடித்த பின்னர், லாக் ஆப் செய்திடாமல் விட்டுவிட்டுச் சென்றிருக்கலாம். அந்நிலையில், நீங்கள் பயன் படுத்தி ஷட் டவுண்ட் செய்திட்டால், இந்த செய்தி கிடைக்கும். யூசர் அக்கவுண்ட்ஸ் சென்று, யார் அக்கவுண்ட் பயன்பாட்டில் உள்ளது என அறிந்து, அதனையும் சேர்த்து லாக் ஆப் செய்திடவும்.

கம்ப்யூட்டர் பூட் ஆகும் வேளையில் பீப் ஒலிகளை வெளிப்படுத்தி இயங்காமல் நின்றுவிடும். ஒவ்வொரு வகை பீப் ஒலியும் ஒருவகையான சிக்கலைக் காட்டுகிறது. மவுஸ், கீ போர்ட், வீடியோ கார்ட், ஹார்ட் ட்ரைவ் இணைப்பு என எதில் வேண்டு மானாலும் பிரச்னை இருக்கலாம்.

இந்த பீப் ஒலி கேட்க முடியாத வகையில் ஸ்பீக்கரில் பிரச்னை இருந்தால், உங்கள் நிலை சிக்கல் தான். ஒவ்வொன்றாக, நீங்கள் சரி செய்து பார்க்க வேண்டும். இது போன்ற பிரச்னைகளில், கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள, உள்ளே இணைப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள கேபிள்களை நீக்கி மீண்டும் இணைத்தாலே போதும்.

கேபிள்களை இணைத்த கையோடு, கனெக்டர்கள் சரியாகப் பொருந்தி உள்ளனவா என்று பார்க்கவும். சரியான முறையில் பொருத்தாமல், அதிக அழுத்தம் கொடுத்திருந்தால், கனெக்டர்களில் உள்ள பின்கள் வளைந்திருக்க சந்தர்ப்பம் உண்டு. அதனைச் சரி செய்திடவும்.

கிராஷ் ஆகாமலேயே, புளு ஸ்கிரீன் தோன்றாமலேயே, உங்கள் கம்ப்யூட்டர் ரீபூட் ஆகிறதா? சிஸ்டம் கேபின் அதிக சூடு ஆகிறது என்று பொருள். சிபியு மேலாக உள்ள சிறிய மின் விசிறி நன்றாகச் சுழல்கிறதா எனச் சோதனை செய்திடவும். மற்ற மின்விசிறிகளையும் சோதனை செய்துவிட்டு, அவற்றைச் சுத்தம் செய்திடவும்.

சில வேளைகளில், நீங்கள் என்ன டைப் செய்தாலும், அந்த கட்டளை, சிபியுவிற்குச் செல்லாது. கீபோர்டில் இருந்து எந்த சிக்னலும் அனுப்பப்படாத நிலையை இது குறிக்கிறது. உங்கள் கீ போர்ட் யு.எஸ்.பி. கீ போர்டாக இருந்தால், உங்கள் பயாஸ் செட்டிங்ஸ், அதனை இயக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளதா எனப் பார்க்கவும்.

பழைய PS/2 கீ போர்டு எனில், விண்டோஸ் டிவைஸ் மேனேஜர் சென்று, அதனை அன் இன்ஸ்டால் செய்து, கம்ப்யூட்டரை இயக்கவும். கம்ப்யூட்டர் தானாக, அதனை உணர்ந்து இயக்கத்திற்கு எடுத்துக் கொள்ளும்.

சிபியு கேபினிலிருந்து வழக்கத்திற்கு மாறான ஸ்மெல் வருகிறதா? கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் சக்தியை நிறுத்தி, எந்த பகுதியிலிருந்து இந்த வாசனை வருகிறது எனப் பார்த்து, அந்தப் பகுதியை மாற்றி, புதியதாக ஒன்றைப் பொருத்துவதே இதனைச் சரிப்படுத்தும் வழியாகும்.


இன்னும் நம்மால் அறியமுடியாத பிரச்னைகள் இருந்தால், அது அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பினால் கூட இருக் கலாம். குறிப்பிட்ட அந்த தொகுப்பினை ரீ இன்ஸ்டால் செய்வதே இந்த சிக்கலிலிருந்து உங்கள் கம்ப்யூட்டரை விடுவிக்கும்.

Thursday, December 11, 2014

கணினித் தொழில்நுட்ப 'அடிமைத்தனத்துக்கு' சிகிச்சை அளிக்க புதிய மையம்

கணினித் தொழில் நுட்பம் வளர்ந்து வரும் உலகில், தொழில்நுட்பத்துக்கு மனிதர்கள் அடிமையாகிறார்களா? தொழில்நுட்பப் பயன்பாடு என்பது மனிதர்களின் சமூக, தனி மனித உறவுகளைப் பாதிக்கிறதா? கலாசார ரீதியாக கணினித் தொழில்நுட்பம் ஏற்படுத்துக்கும் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது?
கணினி யுகத்தில், நமது முன்னோர் காலத்தில் எவரும் கற்பனை செய்து பார்க்காத சில நவீன கண்டுபிடிப்புகள் நமது வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. ட்ரன்க் கால் வசதி மூலம் நீண்ட தொலைவில் இருந்த உறவினர் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தது அந்த காலம். ஸ்கைப் வசதி மூலம் கடல் கடந்து வாழும் உறவினர்களை நேரில் பார்த்தபடி பேசுவது இந்த காலம். தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், தொலைவு ஏற்படுத்தும் தடைகளைக் குறைத்ததுடன் , மனிதர்கள் உலக அளவில் தொடர்புகள் வைத்துக்கொள்ளவும் வழி வகுத்துள்ளன.
ஆனால் அசுர வேகத்தில் கடந்த இரு தசாப்தங்களில் வளர்ந்த கணினி மற்றும் இணையத் தொழில் நுட்பம் ஏற்படுத்திய சமூக மாற்றங்கள் சிந்திக்கத்தக்கவை.
குறிப்பாக இன்றைய சிறார்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் மிகவும் பாரிய அளவிலானவை.
கோடைகால விடுமுறை நாட்களில் திறந்த வெளியில் குழந்தைகள் பந்து விளையாடும் காலங்கள் மாறி தற்போது கணினியின் மோகத்தில் குழந்தைகள் ஆட்பட்டிருக்கிறார்கள்.
கணினி, தொலைபேசி போன்ற தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் குழந்தைகள் , இளைஞர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். சில சமயம் அந்த கண்டுபிடிப்புகள் மனிதர்களை தங்களின் அடிமைகளாக்கி விடுகின்றன. நவீன யுகத்தில், பதின்பருவ இளைஞர்கள், உடன் வாழும் குடும்பத்தினரிடம் நேரம் செலவிடுவதை குறைத்து, தொழில்நுட்பத்துடனே அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்றும் இது பெற்றோர்களுக்கு ஒரு பெரும் பிரச்சனை என்றும் கூறுகிறார் பெங்களூருவை சேர்ந்த ஒரு தாயார் புவனா.
இளைஞர்கள்தான் அளவிற்கு மீறி, இரவு பகல் என்று பார்க்காமல் தொழில் நுட்பத்துக்கு அடிமைப்பட்டு கிடப்பது ஒரு மருத்துவ ரீதியான பிரச்சனையென்று பெங்களூருவில் இருக்கும் தேசிய மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் அறிவியல் கழகத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தொழில் நுட்பத்திற்கு அடிமைப்பட்டிருப்போருக்கு சிகிச்சை அளிக்க ‘ஷட் கிளினிக்’ என்ற ‘தொழில்நுட்பத்தை ஆரோக்கியமாக பயன்படுத்த உதவும் சேவையை இந்த கழகம் சமீபத்தில் துவங்கியுள்ளது. தொழில்நுட்பத்திற்கு அடிமைப்பட்டிருப்போருக்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் மருத்துவமனை இதுவே என்பது குறிப்பிடதக்கது.
இந்த சிறப்பு மருத்துவமனையின் நிறுவனரும் மூத்த மருத்துவருமான டாக்டர் மனோஜ் ஷர்மா, அந்த மருத்துவமைக்கு சிகிச்சைக்கு வருபவர்களில் 13லிருந்து 19வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் என்று கூறுகிறார்.
தொழில் நுட்பத்தை அதிகமாக உபயோகப்படுத்தும் ஒருவர் அதற்கு அடிமையாக இருக்கிறார் என்பதை அவரது எந்த நடவடிக்கைகள் மூலம் கண்டறியமுடியும் என்றும், அவ்வாறு கண்டறியப்பட்டவர்களுக்கு எந்த விதமான சிகிச்சைகள் அளிக்கப்படும் என்று கேட்டதற்கு பதிலளித்த டாக்டர் மனோஜ் ஷர்மா.
"எத்தனை மணி நேரம் ஒருவர் கணினியில் செலவிடுகிறார், எத்தனை மணி நேரம் வரை செலவிடுவது ஆரோக்கியமானது என்பதை நாங்கள் அடுத்த ஆராய்ச்சியில் கண்டறியவுள்ளோம். எனினும் நமது புரிதலுக்காக சொல்ல வேண்டும் என்றால், இணையத்திலேயே இருக்க வேண்டும் என்ற அடங்கா ஆசை இருப்பவர்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்று கூறலாம். இணையத்தையோ அல்லது மற்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தும்போதோ தங்களின் கட்டுப்பாட்டை அவர்கள் இழக்கிறார்கள் என்றாலும் அவர்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்று கூறலாம். வெறும் பத்து நிமிடம் செலவிட நினைத்து இணையத்தில் சென்று மணிக் கணக்காக நேரம் செலவழிப்பவர்களும் இதில் அடங்குவர். எந்தத் தேவையும் இன்றி அவர்கள் இணையத்தில் நேரம் செலவிடுவதும் பிரச்சனைதான். இவர்களுக்கான சிகிச்சை முறையை நாங்கள் இன்னும் உருவாக்கி வருகிறோம். ஒருவரின் நடத்தைகள் அடிப்படையிலான சிகிச்சைகளை வழங்க முயற்சித்து வருகிறோம். ஊக்கத்தை மேம்படுத்துவதற்கான சிகிச்சையை அளிக்கிறோம்.

பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரிடமும் அவரின் பிரச்சனை குறித்து அறிவுரை அளிப்போம். இந்த அடிமைத்தனத்திலிருந்து வெளிவருவதற்கான முடிவையும் நடவடிக்கையையும் அவர்களே மேற்கொள்ளுமாறு அவர்களுக்கு பயிற்சி அளிப்போம். சலிப்பு தன்மை மிகுந்தவரகளுக்கு ஆர்வமான பொழுதுபோக்குகளை பழக உதவுவோம்" என்றார் டாக்டர் மனோஜ் ஷர்மா.


கட்டுரை: http://tamil.webdunia.com/

நாள் தோறும் கணினியில் பணிபுரிபவ ர்களுக்கு

நாள் தோறும் கணினியில் பணிபுரிபவர்கள் சில விசயங்களை கவனிப்பதில்லை. விசைப்பலகை மற்றும் மவுஸ் எப்படி உபயோகப்படுத்தவேண்டும் என்றும் தெரிவதில்லை. இதை சாதாரணமாக நினைத்தால் பின்னாளில் பெரிய ஆபத்தில் கொண்டு போய் விட்டு விடும். கார்பல்டன்னல் சிண்ட்ரோம் (Carpal tunnel Syndrome) என்ற நோய் இதனால் ஏற்படுகிறது தெரியுமா?
தவறாக பயன்படுத்துவதும் சரியாக பயன்படுத்துவதும்



http://teacherlibrariannp.wordpress.com/

Tuesday, December 9, 2014

பிரபஞ்சம் குறித்து அறிய சக்தி வாய்ந்த டெலஸ்கோப் அமைப்பு

அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா நாடுகள் இணைந்து மிகவும் சக்தி வாய்ந்த கதிர் இயக்கமுள்ள டெலஸ்கோப் ஒன்றை அமைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இதன் மூலம் பிரபஞ்சங்கள் குறித்தும், பூமிக்கு வெளியே உயிரினம் இருக்கிறதா? என்பது பற்றியும் ஆய்வு மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அரிய டெலஸ்கோப் அமைக்கும் பணி வரும் 2016-ம் ஆண்டு 
தொடங்கப்பட்டு 2024-ம் ஆண்டில் நிறைவு பெறும் என கருதப்படுகிறது. 

Monday, December 8, 2014

வர இருக்கும் தொழில் நுட்ப மாற்றங்கள்

அடுத்த 10 ஆண்டுகளில் கம்ப்யூட்ட ரில் என்ன மாற்றங்கள் வரும். இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி யின் அடிப்படையில் கணித்த சில எதிர்பார்ப்புகளை இங்கு காணலாம்.


1. அதிக இடத்தை எடுத்துக் கொண்டு, மெதுவாகவும், சூடாகவும் இயங்கும் சிலிகான் நீக்கப்படும். கம்ப்யூட்டரின் புதிய கட்டமைப்பில் குறைவான அளவில் எலக்ட்ரான்களும் அதிக அளவில் ஆப்டிகல் இழைகளும் பயன்படும். ஆப்டிகல் கம்ப்யூட்டர்கள் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

2. கம்ப்யூட்டர்கள் திருடு போகாது. பயோமெட்ரிக் பயன்பாடு பரவலாகி, கைரேகைகளுக்கு மட்டுமே கம்ப்யூட்டரின் கதவு திறக்கும்.

3. கீ போர்டுகள் ஓரம் கட்டப்படும். டச் ஸ்கிரீன் இப்போதேவந்துவிட்டது. இனி சைகை மூலம் நாம் கம்ப்யூட்டரையும், சாப்ட்வேர் அப்ளிகேஷனையும் இயக்க லாம். அடுத்ததாக நம் குரல் மூலமே அனைத்தையும் இயக்கும் வழிகள் கண்டறியப்படும்.

4. கம்ப்யூட்டர்கள் கையடக்க சாதனமாக மாறும். அலுவலகத்தில் டெஸ்க்குகளில் உள்ள இணைப்புகளில் இணைத்த பின்னர், டாப்பில் உள்ள பெரிய திரைகளில் கம்ப்யூட்டர் இயங்குவதைப் பார்க்கலாம். எனவே டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் இனி டெஸ்க்கில் உள்ள டாப் கம்ப்யூட்டராக இயங்கும்.

5.வீடுகளில் உள்ள கம்ப்யூட்டர்கள் நமக்காக, நம் பெர்சனல் தேவைகளுக்காக இயங்கும். நாம் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் நம்மை ஓய்வெடுக்கச் சொல்லி, நமக்காக சாதனங்களை இயக்கும். சமையல், வாஷிங், டிவி, ஏர்கண்டிஷனர் இயக்கம் ஆகியவற்றைக் கம்ப்யூட்டரே பார்த்துக் கொள்ளும்.

6. டிவிடிக்கள் பல டெராபைட்டுகள் கொள்ளளவினைக் கொண்டிருக்கும். பிளாஸ்டிக் பிளாட்டர் படு வேகத்தில் சுழலும். ஹோலோ கிராபிக் தொழில் நுட்பத்தில் எழுதுவதற்கு ஒரு பக்கத்தில் ஒரு லேசரும், இன்னொரு பக்கத்தில் இன்னொன்றுமாக இயங்கும்.

7.இப்போதிருக்கும் சிபியு அப்படியே இருக்கும். ஆனால் எலக்ட்ரானிக் மைக்ரோ ப்ராசசருக்குப் பதிலாக ஆப்டோ எலக்ட்ரானிக் இன்டக்ரேய்டட் சர்க்யூட் அமைக்கப்படும். இதனை ஸ்விட்ச் ஆன் செய்திட சிலிகான் இருக்கும். ஆனால் மற்ற இயக்கவேலைகளை ஆப்டிக்ஸ் பார்த்துக் கொள்ளும். தற்போது கிடைக்கும் இயக்க வேகத்தினைக் காட்டிலும் 100 மடங்கு அதிக வேகத்தில் சிபியு இயங்கும்.

8. இனி ராம் மெமரி ஹோலோகிராபிக் ஆக இருக்கும். இது முப்பரிமாணம் உடையதால், எத்தனை அடுக்குகளையும் இது கொள்ளும். எனவே கொள்ளளவு கற்பனையில் எண்ண முடியாத அளவில் அமையும்.

9.இன்டெல் நிறுவனத்தின் புதிய ப்ராசசர் கள் எண்ணிப் பார்க்க இயலாத வேகத்தில் செயல்படும்.

10. இன்டர்நெட் டிவி புழக்கம், கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் டிவி, ஸ்மார்ட் போன், பல மானிட்டர்களுடன் இயங்கும் கம்ப்யூட்டர், புளு ரே டிவிடி, விண்டோஸ் புதிய சிஸ்டம் தரும் முழு பயன்பாடு, நம் வேலைகளுக்கேற்ப இயக்க வேகத்தை மாற்றிக் கொள்ளும் சிப் என வரும் ஆண்டுகளில் முற்றிலும் புதிய தொழில் நுட்பங்கள் வர இருக்கின்றன.

இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன?



இணையம் என்பது உள்ளுரம் வாய்ந்த ஓர் அமைப்பு. ஒரே ஒரு சாதனத்தைச் சார்ந்தோ அல்லது ஒரே ஒரு கேபிள் இணைப்பிலோ இது இயங்குவது இல்லை. இணையம், பல கம்ப்யூட்டர்களின் நெட்வொர்க்குகள் இணைந்த ஒரு நெட்வொர்க். உலகைப் பல முனைகளிலிருந்து இது இணைக்கிறது.

கண்டங்களைத் தாண்டி, கடல்களுக்கு ஊடாக, விண்வெளியில் சாட்டலைட் களைத் தடவி எனப் பல வகை ஊடகங்களின் வழியாக இணைக்கப் பட்டுள்ளது. இணையம் இவ்வாறு பலமுனைகளில் வளர்ந்ததனால் தான், இன்று நம் வாழ்க்கையின் பல பரிமாணங்கள் இணையத்தைச்
சார்ந்தே உள்ளன.

இணையத்தின் ஊடாகச் செல்லும் இணைப்புகள் வளைந்து கொடுக்கும் தன்மையுடையன. உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி இணையத் தில் இணைப்பு கொண்ட இன்னொரு கம்ப்யூட்டரைத் தொடர்பு கொள்கையில் ஏற்படும் டேட்டா பரிமாற்றம், பல லட்சம் இணைப்பு வழிகளில் ஒன்றில் மேற்கொள்ளப்படுகிறது.



நீங்கள் ஒரு பைலை டவுண்லோட் செய்கையில், இணையம் வழியே அது பல தகவல் பொட்டலங்களாகப் பயணம் செய்து உங்களை அடைகிறது. இந்த தகவல் பொட்டலங்கள் ஒரே வழியில் மட்டுமே பயணிப்பதில்லை. பல வழிகளை மேற்கொள்கின்றன. ஒரு குறிப்பிட்ட வழியில், ஏதேனும் ஓர் இடத்தில் தடங்கல் ஏற்பட்டால், உடனே மாற்று வழியில் தகவல் பயணம் மேற்கொள்ளப்படும்.

இதனால் தான், நாம் இணையத்தின் மீது நம்பிக்கை வைத்து நம் வாழ்வின் பல செயல்பாடுகளை ஈடேற்றி வருகிறோம். இயற்கை அழிவினாலோ, அணுக்கதிர் தாக்கத்தினாலோ, இணையத் தின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டாலும், இன்னொரு பகுதியின் மூலம் இணையம் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கும். அழிக்கப்படும் பகுதியில் உள்ள டேட்டா ஒருவேளை மீட்கப்படாத அளவில் அழியலாம்; ஆனால் இணையம் உயிரோடு தான் இயங்கும்.

இணையத்தை மொத்தமாக அழிக்கும் வகையிலான சூழ்நிலைகளை நாம் கற்பனையில் கூட எண்ணிப் பார்க்க இயலாது. இருந்தாலும் அப்படி ஒரு வேளை இணையம் அழியும் என்றால், என்ன என்ன விளைவுகளை நாம் சந்திக்க வேண்டிய திருக்கும்? நம் வாழ்வு,நாம் இணையத்திற்கு முன்னால் கொண்டிருந்த தகவல் தொடர்பு சாதனங்களின் துணையுடன் மீண்டும் தொடருமா? என்பதே இன்றைய சிந்தனைப் போக்காக அமைகிறது.

இணையம் இல்லாத வாழ்க்கை நமக்கு மிகவும் விநோதமாகத்தான் இருக்கும். மொபைல் போன் சேவை, அதன் மூலம் கிடைக்கும் டெக்ஸ்ட் மெசேஜ் பரிமாற்றம் எல்லாம் என்னவாகும்? கேபிள் வழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கிடைக்கும் என்றாலும், இணையம் சார்ந்த சாட்டலைட் வழி கிடைத்த தொடர்பு அறுந்தால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கிடைக்காதே?

பேஸ்புக், ட்விட்டர் எல்லாம் பழங்கதை ஆகிவிடும். மீண்டும் ""அன்புள்ள அண்ணனுக்கு'' என போஸ்ட் கார்டில் பணம் கேட்டு எழுத வேண்டி இருக்கும். நம் நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று உடனுடக்குடன் அறிய முடியாது. சீமந்தம் குறித்த செய்தி கிடைக்கும் போது அங்கு குழந்தை பிறந்து தவழ ஆரம்பிக்கலாம்.

கம்ப்யூட்டர்களில் பைல்களை ஸ்டோர் செய்திடலாம். ஆனால், தொலைவில் உள்ள இன்னொரு கம்ப்யூட்டருக்கு மாற்ற முடியாது. எவ்வளவு நீளத்திற்கு கேபிள் இணைப்பு கொடுக்க முடியும்? கிரிட் கம்ப்யூட்டிங் முறையெல்லாம் இல்லாமல் போய், குழப்பமான கணக்கீடுகள் எல்லாம் எண்ணிப் பார்க்கக் கூட இயலாமல் போய், அறிவியல் ஆய்வுகள் தாமதமாகலாம்.

இணையம் இல்லாமல் போனால், பொருளாதாரச் சீரழிவு மிகவும் மோசமான நிலையை எட்டும். எலக்ட்ரானிக் பேங்கிங் மறைந்து போய், செக்குகளை வைத்துக் கொண்டு நீண்ட வரிசையில் நிற்க வேண்டும். கூகுள் அல்லது அமேசான் போன்ற இன்டர்நெட் நிறுவனங்கள், சரித்திரத்தில் மட்டுமே இடம் பெறும்.

மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தங்களின் வர்த்தக இலக்குகளை கனவுகளாக எண்ணி அமைதியடைய வேண்டி வரும். கோடிக்கணக்கில் மக்கள் தங்கள் வேலைகளை இழந்துவிடுவார்கள். பல கோடி டாலர் மதிப்பிலான வர்த்தகம் இயங்கும் எல்லை தெரியாமல் மூடப்படும். ஒரு சில வகை வர்த்தகங்களே இன்டர்நெட் உதவியின்றி இயங்கும்.

அப்படியானால், இணையம் அழியும் சாத்தியக் கூறுகள் உள்ளனவா? என்று ஒருவித பயம் கலந்த கேள்வி எழுகிறதா? இதற்கான பதில் நிச்சயமாய் இல்லை. இன்டர்நெட் என்பது ஆன்/ஆப் செய்யக் கூடிய ஸ்விட்ச் கொண்டு இயங்கும் மந்திரப்பெட்டி இல்லை. ஏதாவது ஒரு பிளக்கை இழுத்துவிட்டால், இயக்கம் இன்றி அணைந்துவிடக் கூடிய எலக்ட்ரானிக் சாதனம் இல்லை. இன்டர்நெட், பலவகையான சாதனங்கள் இயங்கும் ஒரு பெரிய வலைப்பின்னல்.


அது மட்டுமின்றி, நாள் தோறும், கணந்தோறும் அது தன்னை மாறுதலுக்கு உள்ளாக்கிக் கொண்டே உள்ளது. இன்டர்நெட்டின் ஒரு பகுதியில் சேதம் ஏற்பட்டாலும், மற்ற பகுதிகளின் துணை கொண்டு அதனை சரி செய்திடும் வகையில் தான் இன்டர்நெட் இயங்கி வருகிறது. எனவே அர்த்த மற்ற பயம் இன்றி, இன்னும் அதனை வலுப்படுத்தும் முயற்சி யில் இறங்குவோம்.

Saturday, December 6, 2014

பூமி தோன்றியது எப்போது?

தற்போது இந்த பூவுல கில் மனிதர் கள் எண் ணற்ற அதிசயங்கந ளயும், வெற்றிகளையும் கண்டு வருகின் றனர்.முன்பிருந்த காலத்தோடு ஒப்பி டுகையில் தற்போது மனிதர்கள் பல்வித மான முன்னேற்றங்களைக் கண்டு விட்டனர்,கண்டும் கொண்டிருக்கின்றனர். 

இந்த மனிதன் எங்கிருந்து தோன்றினான்?

இந்த பூமி எப்போது தோன்றி யது?

எங்கிருந்து மனிதனுக்கு இவ்வளவு  ஆற்றல் கிடைத்தது என்பது இன்றும்,இவையெல்லாம் நம் சிந்தனைக்கு எட்டாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது.இதற்கான தேடல்களும், ஆராய்ச்சிக ளும் பல மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இவை எப்போது தோன்றின என்பதற் கான
விடைகள் இன்னும் சரியாக கணக் கிடப்படவில்லை. இருப்பினும் அறிவியல் ஆய்வாளர்கள் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டிருந்த பல ஆய்வுகளின் முடிவின்படி இந்தப் பூவுலகம் எப்போது தோன்றியது என்பது ஓரளவு கணிக்கப்பட்டிருக்கிறது. பூமியில் மனிதனின் தோற்றம், அவன் மொழி யைக் கற்றுக் கொண்ட விதம் பற்றிய தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கின்றனர்.


வற்றாத நீரும், வளமான நிலமும், வாயு மண்டலமும் சூழ்ந்த உயிரினமும், பயிரினமும் கொண்ட அண்டகோளமானது நாம் வசிக்கும் இந்த பூகோளம். இந்த கோளம் சுற்றிவரும் சூரியன் ஒரு சுய ஒளி விண்மீன். அவ்வாறாக கோடான கோடி விண்மீன்களைக் கொண்டது ஒளிமய மந்தை எனப்படும் "கேலக்ஸி" (Galaxy). இந்த "கேலக்ஸியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் கிரகமானது நம் பூமி.
அறிவியலாளர்கள் பல மூலங்களைப் பயன்படுத்தி பூமி தோன்றிய காலத்தை பல வகையாக கணித்திருக்கின்றனர். பெரிய பாறைகள், பூமியில் விழுந்த விண்கற்கள் ஆகியவற்றைக் கொண்டு பல ஆய்வுகளை நடத்தி, பூமி இப்பொழுதுதான் தோன்றிய காலைத்தைப் பற்றிய சில முடிவுகளை நமக்குக் கொடுத் திருக்கின்றனர்.

பூமி சுமார் 4.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது என்பது விஞ்ஞானி களின் ஒருமித்த கருத்து. பூமி தோன்றிய நாள் முதலாக, பூமியின் தளவடிவம் தொடர்ந்து மாறுபட்டு வந்திருக்கிறது என்று வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் பூமியிலிருக்கும் மிக்க முதுமை யான பாறையைக் கொண்டு அறிவியலாளர் கள் ஓர் ஆய்வினை மேற்கொண்டிருந்தனர். அந்த ஆய்வின்போது அப்பாறையின் மூலத்தின் கதிரியக்கத் தேய்வை (Radioactive Decay of Elemets) ஆராய்ந்து, பூமியின் வயது 3.8 மில்லியன் என்று கணிக்கிட்டிருக்கிறார்கள்.

ஆனால், பூமியில் விழுந்த மிகப் புராதன விண்கற்களின் (Meteorites) மூலக் கதிரியக்கத் தேய்வை ஆராய்ந்த போது, மீண்டும் சூரியக் குடும் பத்தில் பூமியின் வயது 4.6 மில்லியன் என்று கணித் திருக்கின்றனர். விண்வெளி விஞ்ஞானம் பேரளவில் விருத்தி அடைந்து கொண்டிருக்கும் இந்த மகத்தான யுகத்திலே, வானியல் நிபுணர்கள் பிரபஞ்சத்தின் வயதைக்கூட கணக்கிட பல்வேறு முறைகளையும் ஆய்வுகளையும் கடைப்பிடித்து வந்துள்ளார்கள். இருப்பினும் பிரபஞ்சத்தின் உண்மையான வயதை தெரிந்து கொள்ள இன்றும் முடியவில்லை.பூமிக்கடியில் புதைந்திருக்கும் புராதனப் பாறைகளில் உள்ள மூலங்களின் கதிரியக்கத் தேய்வை கணக்கிட்டு பூமியின் வயது 4.6 பில்லியன் ஆண்டுகள் இருக்கலாம் என்று அறியப்பட்டது. 

வான்மண்டலத்தில் ஒளிமிக்க விண்மீன்களின் ஒளித்திரட்சியையும் அதன் உஷ்ணத்தையும் பல மாதங்களுக்குப் பதிவு செய்து விண்மீனின் தூரத்தோடு ஒப்பிட்டு பிரபஞ்சத்தின் வயதை 12 பில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டது. இதைத் தவிர, சூரியன் தோற்றுவித்த காலத்தையும் சில ஆய்வுகளின் மூலம் தெளிவு செய்துள்ளனர். சூரிய பரிதியின் பிளாஸ்மா (Plasma) எனப்படும் ஒளிப்பிழம்பின் வெப்பத்தையும், அதன் வாயுக்களையும் கொண்டு செய்த ஓர் ஆய்வில் சூரியன் 10 பில்லியன் வயது கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது.

பூமி தோன்றிய காலத்தைப் பற்றிய ஆய்வுகளின் முடிவுகள், குத்துமதிப்பாக பூமி மேற்குறிப்பிட்ட காலத்தில் தோன்றியிருக்கும் என்றுதான் கூறுகின்றன. ஆனால் மனிதன் எப்போது தோன்றினான், அவனின் மொழி எப்படி தோன்றியது என்பதனைப் பற்றிய ஆய்வுகளையும் அவர்கள் மேற்கொள்வதை விடவில்லை. இதற்கும் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு இறுதியில் இதற்கான பதிலையும் அறிவியலாளர்கள் கணித்தனர். மனிதன் தோன்றிய காலத்தில் அவன் தனது இனத்தோடு தொடர்பு கொள்ள தற்போது இருக்கும் தமிழ், மலாய், ஆங்கிலம், சீனம், கிரேக்கம், அரபு மொழிகள் அல்லது இதர மொழிகளைப் பயன்படுத்தவில்லை. இவைகளெல்லாம் மனிதன் தோற்றுவித்து பல நூற்றுக்கணக்கான வருடங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டவை என்று அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி மனிதர்கள், விலங்கினக் கூட்டத்தில் சேர்ந்த ஒரு இனமே. ஆறாவது அறிவு எனக்கூறப்படும் பகுத்தறிவு கொண் டவன் என்பதே அவனை மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபட்டு காட்டுகிறது. விலங்குகள் மனிதர்களோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டவை.
ஏறக்குறைய மனிதனை ஒட்டிய குணாம்சங்கள் அவைகளுக்கு உண்டு. பரிணாம வளர்ச்சியின் போக்கில் குரங்கினத்திற்கு அடுத்ததாக மனிதன் என்று சொல்கிறது அறிவியல். மனிதர்களின் ஒத்த குணாம்சங்களைக் கொண்ட இந்த குரங்குகளைக் கொண்டு நடத்திய ஒரு ஆய்வின் மூலம் மனிதர்களின் மொழி எப்படி தோன்றியிருக்கும் என்பது பற்றிய சில தெளிவுகளை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

வாய் வழி ஒலி எழுப்பி மற்றவர்களோடு தொடர்பு கொண்ட மனிதன், காலப்போக்கில் பேச்சை, பேச்சு மொழியை உருவாக்கியிருக்கலாம் என்பது
தெளிவு. ஆனால் மனிதன் முதலில் சைகைகளையும், உடல் அசைவுகளையும் மூலமாகக் கொண்டு  செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டிருப்பார்கள் என்பதனை ஆதாரப்பூர்வமாகக் கூறுகின்றனர் நம் அறிவியலாளர்கள்.
 
மனிதர்கள் இயல்பாகவே அதிகமாக அங்க அசைவுகள் சைகைகள் மூலம் தொடர்பு கொள்ளக் கூடியவர்கள். மனித மொழி இத்தகைய அங்க அசைவுகளை முக்கியமாகக் கொண்ட சைகை மொழியாகவே முதலில் தோன்றியது. பிறகு பரிணாம வளர்ச்சிக்கிணங்க மனித மூளையின் மொழியைச் சார்ந்த பகுதிகள் நன்றாக வளர்ச்சியடைந்த பின், பேச்சு மொழியானது உருவாகியிருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.மேலும் மனிதன் சைகைகளுக்கு வலது கைகளையே அதிகம் பயன்படுத்துகிறான். வலது கையைக் கட்டுப்படுத்துவது இடது பக்க மூளையாகும். மனித மொழிக் கட்டுப்பாட்டு மையம் அமைந்திருப்பதும் இடது பக்க மூளையில்தான் என்பதன் மூலம் மனித இனத்தின் மொழி சைகைகளில் உருவாகியது என்பதில் சந்தேகமில்லை.

இணையத்தின் வளர்ச்சி படிகள் - சில ஆச்சரிய தகவல்கள்

நமது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்ட இணையத்தின் வயது 43.நாற்பது ஆண்டுகளுக்கு முன் இரண்டு கணினிக்கு தகவல் பரிமாற்றம் செய்யத் தொடங்கி
இன்று அபார வளர்ச்சி அடைந்து இருக்கின்றது.இணையம் பயன்படுத்த ஆரம்பித்த காலத்தில் இருந்து உலாவிகளின் செயல்பாடு நாளுக்கு நாள் அபரிவிதமான வளர்ச்சியை பெற்று வேகமாக வளர்ந்து வருகிறது


1969 :
செப்டம்பர் 2-ஆம் தேதி ,கலிபோர்னியா பல்கலைகழகத்தில்இரண்டு கணினிகள் சில தகவல்களை பரிமாறிகொண்டன.இது Arpanet ,ராணுவத்தின் சோதனை இணையமாகும்.

1972:
Ray Tomilinson மின்னஞ்சலை மற்ற கணினிகளுக்கு அனுப்பும்முறையை கண்டுபிடித்தார்.

1973 :
Arpanet மூலம் இங்கிலாந்து மற்றும் நார்வே நாடுகளில்வெற்றிகரமாகசெயல்படுத்தப்பட்டது.

1974 :
Viant Cerf and Bob kahn தகவல் தொடர்பில் ஒரு புரட்சியானTCP உருவாக்கினர்.இதன் மூலந்தான் உண்மையான இணையம்உருவானது.

1983 :
வலைத்தளங்களுக்கு Domain Name System கொண்டு வரப்பட்டது".com".அடுத்த வருடங்களில் ".gov" and ".edu" அறிமுகபடுத்தபட்டது.

1988 :
இணையத்தை தாக்கியது Internet Worm Morris ,ஆயிரக்கணக்கானகணினிகள் சேதமடைந்தன.

1990 :
Tim Berners-Lee World Wide Web (WWW) உருவாக்கினர்.

1994 :
Andreessen மற்றும் குழுவினர் உலகின் முதல் கமர்ஷியல்இணைய உலாவியான Netscape-ஐ உருவாக்கினர்.

1998 :
Larry Page and Sergey Brin கூகுளை உருவாக்கினர் Stanford பல்கலைகழகத்தில்.

1999 :
Napster ஒரு பெரும் புரட்சியை இசை கோப்புகளை பரிமாறுவதிலும்வாங்குவதிலும் ஏற்படுத்தியது.

2000 :
இணைய தளங்கள் அதிகமாக தொடங்கியது.

2004 :
Mark Zuckerberg Facebook-ஐ உருவாக்கினர் Harvard பல்கலைகழகத்தில்.

2005 :
வீடியோ படங்களை பகிர்ந்து கொள்ள உதவும் Youtube உருவானது .

2007 :
Apple Iphone-ஐ வெளியிட்டது ,இதன் மூலம் லட்சகனக்கனர்வர்கள்
இணையத்தை உபயோகப்படுத்த தொடங்கினர்.

2008 :
Twitter உதயம்...


2010:
anbuthil.blogspot.comஉதயம்...

2012:
www.anbuthil.com உலகம் முழுவதும் உதயம்...

உலகம் முழுவதும் இணையம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை:


China - 29.8 கோடி (22.4%)
USA - 22.7 கோடி (74.7%)
Japan - 9.4 கோடி (73.8%)
India - 8.1 கோடி (7.1%)

Brazil - 6.8 கோடி (34.3%)

Germany - 5.5 கோடி (67%)

UK - 4.8 கோடி (72%)

France - 4.1 கோடி (66%)

Russia - 3.8 கோடி (27%)

S.Korea - 3.7 கோடி (76%)

Australia - 1.7 கோடி (80.6%)

Friday, December 5, 2014

மாற்றப்பட வேண்டிய சில மோசமான பழக்கங்கள்



தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் இன்று நம் வாழ்வின் ஓர் முக்கிய அங்கமாக, அடிப்படை சாதனங்களாக மாறிவிட்ட பின்னரும், பல மோசமான பழக்க வழக்கங் களை, அவை மோசம் என்று தெரிந்த பின்னரும், மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.


1. மோசமான சூழ்நிலையில் கம்ப்யூட்டரை இயக்குதல்:

கம்ப்யூட்டர் முன்னால், பல மணி நேரங்கள் தொடர்ந்து அமர்ந்து அதனை இயக்குவது பலருக்கு வாடிக்கையாகி விட்டது. நம்முடைய முதுகைத் தாங்கிப் பிடிக்காத நாற்காலி, உயரத்தை அட்ஜஸ்ட் செய்ய முடியாத மேஜை மற்றும் நாற்காலிகள், உடல்வலி வந்த பின்னரும் உட்கார்ந்து பணியாற்றும் நிலையை மாற்றிக் கொள்ளாமல் தொடருதல் ஆகியவை நமக்குப் பெரிய அளவில் துன்பத்தை வரவழைக்கும் விஷயங்களாகும்.


2. ஒரே அழுக்கு:

கம்ப்யூட்டர், கீ போர்ட், மவுஸ், சிபியு உள்ள கேபின் - இவை யாவும் மோசமான தூசு மற்றும் அழுக்கு படிந்த நிலையிலேயே இயக்கப்படுகின்றன. வெளிர் நிறங்களில் வடிவமைக்கப்பட்ட பல கீ போர்டுகள், அழுக்குப் படிந்ததனால், முற்றிலும் நிறம் மாறி, தங்கிவிட்ட அழுக்கு கறைகளுடனேயே காணப்படுகின்றன.

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில்
, பொதுக் கழிப்பறைகளில் அமரும் இடத்தில் காணப்படும் கிருமிகளைக் காட்டிலும் 60 மடங்கு மேலாகக் கிருமிகள், கீ போர்டில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஒருமுறை என இல்லா விட்டாலும், வாரம் ஒருமுறையாவது, இவற்றைச் சுத்தப்படுத்தும் திரவம் கொண்டு சுத்தப்படுத்தினால், இயக்குபவரின் உடல் நலம் பாதுகாக்கப்படும் அல்லவா?


3. தொல்லை தரும் வகையில் போன் பேசுதல் :

நம்மில் பலர், பெரும்பாலானவர்களின் வெறுப்புக்கு ஆளாவது, நாம் மொபைல் பயன்படுத்தும் முறைகளினால் தான். சாப்பிடும் மேஜைகளிலிருந்து போன்களைத் தள்ளியே வைக்கவும்; கடைகள், ஜிம், பொது அலுவலகங்கள், லிப்ட்கள், மருத்துவமனை, பஸ், ஆட்டோ, ட்ரெயின் போன்ற இடங்களில், மொபைல் போனில் உரக்கப் பேசுவதை எப்போது நிறுத்தப் போகிறோம்?


4. பேக் அப்பா? அப்படின்னா?

நம்மில் பெரும்பாலோர், கம்ப்யூட்டரில் அமைக் கப்படும் பைல்களுக்கான பேக் அப் காப்பி எடுப்பதே இல்லை. சரியான கால இடைவெளியில், கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து பைல்களையும், இன்னொரு எக்ஸ்டெர்னல் ஹார்ட் ட்ரைவிற்கு மாற்றி வைப்பது, நல்லதொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.

இதனால், நாம் அரும்பாடு பட்டு பாதுகாத்து வைத்த அந்நாள் படங்கள், போட்டோக்கள், டேட்டாக்கள், பைல்கள், கடிதங்கள், நிதி நிர்வாகத் தகவல்கள் என அனைத்துமே சில வேளைகளில் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். தெரிந்தும் ஏன் பேக் அப் எடுப்பதில்லை? (பல தன்னாட்சி கல்லூரி கள் கூட தங்கள் மாணவர்களின் மதிப்பெண்கள் மற்றும் முக்கிய தகவல்களுக்கு பேக் அப் எடுப்பதில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்து வருகிறது.)


5. விட்டேனா பார் வீடியோ :

அடுத்த அடுத்த லெவலை முடித்துத் தான் வருவேன் எனப் பலர், பல கம்ப்யூட்டர் கேம்ஸ்களை வெறியோடு தொடர்ந்து நான்கு மணி நேரத்திற்குப் பின்னர் கூட விளையாடு கிறார்கள். இடையே ஓய்வு எடுக்காமல், தண்ணீர் அருந்தாமல், கால்கள் மற்றும் உடம்பை அசைக்காமல் நாற்காலியில் அமர்ந்தே இருப்பது, உடலுக்குத் தீங்கினை விளைவிக்கும் என்பது தெரிந்தும் ஏன் பலர் இந்த பழக்கத்தினை மாற்றுவதில்லை?


6.ஷட் டவுண்:

லேப்டாப் கம்ப்யூட்டர்களை, அதில் வேலை முடிந்த பின்னர், ஜஸ்ட் அப்படியே திரை உள்ள மேல் மூடியை மூடி எடுத்துச் செல்லலாம். ஆனால், இது நல்லதல்ல; லேப்டாப் வெகுநாட்கள் உழைக்க வேண்டும் என எண்ணினால், அதனை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஷட் டவுண் செய்திடும் பழக்கத்தினை மேற்கொள்ள வேண்டும்.


7. படுக்கையே தொழில் கூடமாக:

லேப்டாப், ஸ்மார்ட் போன், ஐபேட் என அனைத்தையும் படுக்கைக்கு உறங்கச் செல்லும் போது கொண்டு செல்வது, வெகு நேரம் விழித்திருந்து பயன்படுத்துவது, சரியான நேரத்தில் தூங்க மறுப்பது, பின்னர் தூக்கம் சரியாக வருவதே இல்லை என்று குற்றம் சாட்டுவது போன்ற செயல்கள் தவறு என்று தெரிந்த பின்னரும், தொடர்ந்து இந்தப் பழக்கத்தைப் பலரும் கடைப்பிடிப்பது ஏன்?

(குறிப்பாக சில மருத்துவர்கள், இரவு நேரங்களில் கண் விழித்து லேப்டாப் கம்ப்யூட்டரில் பணியாற்றி, அதனுட னேயே உறங்குகின்றனர். மறு நாளில், நோயாளிகளைப் பார்க்கையில் எரிச்சல், கண்களிலும் மனதிலும் தோன்றாதா?)


8. சிஸ்டம் அப்டேட் கேன்சல்:

பல வேளைகளில், நமக்கு நாம் பயன்படுத்தும் சிஸ்டம், அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் மற்றும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் ஆகியவற்றிற்கு அப்டேட் பைல்கள் உள்ளன. அப்டேட் செய்திடலாமா? என்று கேள்வி வரும். அந்த வேலையை மேற்கொண்டு, பின்னர், கம்ப்யூட்டரை மறுபடியும் ரீஸ்டார்ட் செய்திட சோம்பேறித்தனப்பட்டு, பலர் அப்டேட் செய்வதைக் கேன்சல் செய்து விடுகின்றனர்.

இது தவறு மட்டுமின்றி, தேவையற்ற அபாயத்தினையும் வரவழைக் கும். நிறுவனங்கள் அப்டேட் பைல்களை அளிக்கையில், தாங்கள் தயாரித்து வழங்கிய புரோகிராம்களில் கூடுதல் வசதிகளை மட்டும் அளிப்ப தில்லை. தங்கள் புரோகிராம்களில் உள்ள எந்த பலவீனமான இடத்தைப் பயன்படுத்தி, வைரஸ்கள் நுழைகின்றனவோ, அவற்றை யும் சரி செய்து அப்டேட் பைல்களை அளிக்கின்றனர். இவற்றை அப்டேட் செய்திடும் பணியை கேன்சல் செய்வதன் மூலம், நாம் வசதிகளை மட்டும் இழப்பதில்லை; வைரஸ் எதிரான பாதுகாப்பினையும் இழக்கிறோம்.


9. உங்கள் பாஸ்வேர்ட்:

ஏறத்தாழ ஐந்துக்கும் மேற்பட்ட பாஸ்வேர்ட்களை ஒருவர் ஒரு நாளில் குறைந்தது பயன் படுத்த வேண்டியதுள்ளது. உங்கள் பாஸ்வேர்ட் 1234 என உள்ளதா? உங்கள் பெயர், பிறந்த நாள், தொலைபேசி எண் என உள்ளதா? நிச்சயம் அவை பாதுகாப்பானவை இல்லை. பல ஆண்டுகளாக ஒரே பாஸ்வேர்டையே பயன்படுத்தி வருகிறேன் என்று பெருமை அடித்துக் கொள்கிறீர்களா? இதனை எச்சரிக்கும் செய்திகளை உதாசீனம் செய்கிறீர்களா? இது தவறில்லையா?


10. பேட்டரி ட்யூனிங்:

லேப்டாப் கம்ப்யூட்டரின் பவர் ப்ளக்கைச் செருகி, அதனைப் பயன்படுத்துவது மிக எளிதுதான். ஆனால் அதோடு நின்றுவிடக் கூடாது. பேட்டரிகளை அதன் திறன் முழுமையாகக் கிடைக்கும் வகையில், அதனை சார்ஜ் செய்வதுடன் ட்யூனிங் செய்திடவும் வேண்டும். சில மாத இடைவெளியில், பேட்டரிகளை முழுமை யாகச் சோதனை செய்து, அவற்றின் திறனை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் தயார் செய்திட வேண்டும். ஆனால், இது தெரிந்திருந்தும் ஏன் பலர் இந்த செயல்பாட்டினை மேற்கொள்வதில்லை?

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews