தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Monday, October 1, 2012

ஹெச்.ரி.எம்.எல்









                        ஹைப்பர் ரெக்ஸ் மார்க்கப் லாங்குவேஜ் (Hyper Text Markup Language) என்பதன் சுருக்கம் தான் HTML. எண் 5 என்பது அதன் ஐந்தாவது முக்கிய பதிப்பு என்பதைக் குறிக்கின்றது. இணையத்தளத்தில் பக்கங்களை வடிவமைக்கப்படும் கணனி மொழிதான் ஹெச்.ரி .எம்.எல்.

Tim Berners Lee என்பவர் தான் இந்த மொழியை வடிவமைத்தவர். இவர் உருவாக்கிய ENQUIRE எனும் கணனிமொழிதான் இதன் அடிப்படை. அது பின்னர் ஹெச்.ரி.எம்.எல். ஆனது. அதன் ஐந்தாம் முக்கியமான பதிப்பு இப்போது உருவாகன்கப்பட்டு வருகின்றது. பழைய பதிப்புக்களில் இல்லாத சில அம்சங்களை இதில் சேர்த்திருக்கின்றார்கள் என்பதுதான் இதன் சிறப்பைக் கூட்டுகின்றது.

குறிப்பாக வீடியோக்களை இயக்குவது, drag and drop எனப்படும் இணையப்பக்கத்தில் உள்ளவற்றை மாற்றி வடிவமைக்கும் வசதி போன்றவற்றை இந்தப் பதிப்புக் கொண்டிருக்கின்றது. இதனால் இனிமேல் இணையப்பக்கத்தை இணைக்கும் போது வேறு எந்த கூடுதல் மென்பொருட்களின் (add ens) தேவையும் இல்லாமல் இந்த ஹெச்.ரி .எம்.எல். எல்லாவற்றையும் காட்டிவிடும் என்பது சிறப்பம்சம்.


             WHATWG எனப்படும் Web Hypertext Application Technology இதில் பயன்படுத்தப்படுகின்றது. 2011 ஆம் ஆண்டு இது M W3C (World Wide Web Consertium) இன் ஒப்புதலுடன் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. W3Cதான் உலகலாவிய இணையப்பக்கங்கள், கட்டமைப்பு, சேவைகள், ஹெச்.டி.எம்.எல். போன்றவற்றுக்கான விதிமுறைகளையும் தர நிலைகளையும் நிர்ணயம் செய்கின்றது. இதை ஆரம்பித்தவர் ஹெச்.ரி.எம்.எல்.ஐ உருவாக்கிய Tim Berners Lee என்பவர்தான். இந்தப் பதிப்பு ஹெச்.ரி.எம்.எல்.  வரலாற்றின் மைல் கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews