தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Wednesday, December 18, 2013

Send To மெனுவில் உங்கள் போல்டர் !!


விண்டோஸ் எக்ஸ்பீயில் ஒரு பைல் மீது ரைட் க்ளிக் செய்ய வரும் மெனுவில் Send To எனும் கமாண்ட் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த Send To கமாண்ட் மூலம் ஒரு பைலை இலகுவாக இ-மெயில் செய்யவோ, டெஸ்க்டொப்பிற்கு ஒரு Shortcut ஐ உருவாக்கவோ, அல்லது புலொப்பி ட்ரைவ் அல்லது பென் ட்ரைவிற்குப் பிரதி செய்யவோ முடியும்.

சில வேளைகளில் அந்த பைலின் பிரதியொன்றை குறிப்பிட்ட ஒரு போல்டரில் சேர்க்க வேண்டிய தேவையும் ஏற்படலாம். உங்கள் பைல்களை நீங்கள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட போல்டரிலேயே சேமிப்பதானால் அந்த போல்டரின் பெயரையும் Send To மெனுவில் சேர்த்து விடலாம். இதன் மூலம் உங்கள் வேலை இலகுவாவதுடன் மேலுமொரு விண்டோஸ் எக்ஸ்ப்லோரர் விண்டோவைத் திறந்து ஒரு போல்டரிலிருந்து இன்னுமொரு போல்டருக்கு பைலைப் பிரதி செய்யும் வேலையும் தவிர்க்கப்படுகிறது.

உங்கள் போல்டரை Send To மெனுவில் சேர்க்க நீங்கள் செய்ய வேண்டியது :

முதலில் மை கம்பியூட்டரைத் திறந்து கொள்ளுங்கள். அங்கு Tools மெனுவில் Folder Options தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் View டேபில் க்ளிக் செய்து Show hidden files and folders என்பதைத் தெரிவு நிலைக்கு மாற்றுங்கள். பின்னர் மை கம்பியூட்டர் விண்டோவில் (C:) ட்ரைவில் உள்ள Documents and Settings போல்டரைத் திறந்து உங்கள் User Account க்குரிய போல்டரையும் திறந்து கொள்ளுங்கள். அங்கு Send To எனும் போல்டரைக் காணலாம். பின்னர் Send To போல்டரைத் திறந்து அதனுள் File - New - Shortcut ஊடாக நீங்கள் Send To மெனுCல் சேர்க்க விரும்பும் போல்டருக்கு ஒரு Shortcut ஐ உருவாக்கிக் கொள்ளுங்கள். இப்போது எதேனுமொரு பைலின் மேல் ரைட் க்ளிக் செய்து Send To தெரிவு செய்ய அங்கு நீங்கள் Shortcut உருவாக்கிய போல்டரையும் காணலாம்.

Hibernation - Stand by என்ன வேறுபாடு?




கணினியில் எம்.எஸ்.வர்ட், எக்ஸல், மீடியா ப்ளேயர், வெப்பிரவுஸர் என ப்ல எப்லிகேசன்களை ஒரே நேரத்தில் திறந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென உங்களுக்கு வேறொரு வேலையாக வெளியில் செல்ல வேண்டிய தேவை ஏற்படுகிறது. அப்போது திறந்திருக்கும் எல்லா எப்லிகேசன்களையும் மூடி விட்டு கணினியை நிறுத்தி விட்டுச் செல்ல முடிந்தாலும் மறுபடியும் அத்தனை எப்லிகேசன்களையும் விட்ட இடத்திலிருந்து தொடர வேண்டியிருக்கிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் கை கொடுக்கிறது விண்டோஸில் இருக்கும் ஹைபனேசன் Hibernation எனும் வசதி.

விண்டோஸ் தரும் இந்த ஹைபனேசன் வசதி மூலம் ஒரெ க்ளிக்கில் திறந்த நிலையிலுள்ள அத்தனை எப்லிகேசன்களையும் பாதுகாப்பாக ஹாட் டிஸ்கில் சேமிக்கப்படுவதோடு கணினியை நிறுத்த முன்னர் பணியாற்றிய அத்தனை எப்லிகேசன்களையும் பைல்களையும் மறுபடி யும் நீங்களாக அவற்றைத் திறக்காமலேயே டெஸ்க் டொப்பில் திறந்த நிலையில் காட்சியளிக்க வைக்கிறது
ஹைபனேசன் மடிக்கணிகள் உப்யோகிப்போருக்கு அதிகம் பயனளிக்கிறது. இதன் மூலம் லெப்டொப் கணினிகளிலுள்ள பேட்டரியின் மின் சக்தியைச் சேமிக்க முடிவதுடன் நேரத்தையும் கூட மீதப்படுத்தலாம்.
விண்டோஸ் இயங்கு தளம் கணினி மற்றும் துணைச் சாதனங்க ளுக்கான மின் சக்தியை கட்டுப்படுத்தக் கூடியவாறு உருவாக்கப் பட்டுள்ளது. மின் சக்தியைக் கட்டுப் படுத்தவென் விண்டோஸ் Hibernation / Stand by என இரு வசதிகளைக் கொண்டுள்ளது. இவற்றின் மூலம் திறந்திருக்கும் அனைத்து பைல்களையும் மூடிவிட்டு கணினியை நிறுத்தி ம்றுபடியும் ஸ்டர்ட் செய்து அதே பைல்களையும் எப்லிகேசன்களையும் திறப்பதற்கு ஆகும் நேரத்தை குறைக்க முடிவதோடு மின் சக்தியையும் சேமிக்க முடிகிறது,
ஹைபனேசன் எனும் வசதி தற்போது திறந்து வைத்துப் பணியாற்றும் அத்தனை பைல்களையும் எப்லிகேசன்களையும் டெஸ்க்டொப்பின் பிரதியாக ஹாட் டிஸ்கில் சேமித்து கணினியின் இயக்கத்தை நிறுத்தி விடுகிறது. மறுபடியும் கணினியை ஓன் செய்யும் போது முன்னர் திறந்து வைத்துப் பணியாற்றிய பைல்கள் ப்ரோக்ரம்கள் அனைத்தும் ஹைபனேட் செய்வதற்கு முன்னர் இருந்த அதே நிலையில் டெஸ்க் டொப்பில் கொண்டு வந்து விடுகிறது.

ஒரு குறிப்பிட்டட நேரம் கணினியில் எந்த வித செயற்பாடுகளும் இல்லாதிருந்தால் விண்டோஸே தானாக கணினியை ஹைப்னேட் செய்து நிறுத்தி விடும். அவ்வாறே லெப்டொப் கணினிகளில் உள்ள பேட்டரியில் மின் சக்தியின் அளவு குறைந்து வருமானால் அதனை உணர்ந்து, பேட்டரி முழுமையாக செயலிழக்க முன்னர் கணினியை ஹைபனேட் நிலைகு மாற்றி பைல்களை பாதுகாப்பாக சேமிப்பதுடன் கணினியையும் நிறுத்தி விடுகிறது. சில கணினிகளில் ஹைபனேட் வசதியை பயன்படுத்த முடியாது. அக்கணினிகளில் மதர் போர்ட்டானது ஹைபனேட் வசதியை ஆதரிக்காததே அதற்குக் காரணம்.

விண்டோஸ தானாக கணினியை ஹைபனேட் செய்யப் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள். முதலில் கண்ட்ரோல் பேனலில் Power Options தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் Hibernate டேபில் க்ளிக் செயுங்கள். இங்கு Enable hibernate தெரிவு செய்து Apply பட்டனில் க்ளிக் செய்யுங்கள். இந்த டயலொக் பொக்ஸில் Hibernate டேப் இல்லாதிருந்தால் உங்கள் கணினி ஹைபனேட் வசதியை ஆதரிக்கவில்லை என்பதைக் கவனத்திற் கொள்ளுங்கள். அடுத்து Power Schemes டேபில் க்ளிக் செய்து எவ்வளவு நேத்தில் ஹைபனேட் நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதைத் தீர்மாணிக்க System hibernates எனுமிடத்தில் பொருத்தமான ஒரு நேர இடை வெளியை தெரிவு செய்து விட்டு ஓகே செய்து விடுங்கள். நீங்கள் தெரிவு செய்யும் நேரத்திற்கேற்ப கணினி எந்த இயக்கமும் இல்லாத நிலையில் ஹைபனேட் ஆகும்.

தானாக அல்லாமல் கணினியை நீங்களாகாவே விரும்பிய நேரம் ஹைபனேட் செய்யவும் முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது : முதலில் மேலே குறிப்பிட்டது போல் Enable hibernate என்பதைத் தெரிவு நிலையில் வைத்து விடுங்கள். பின்னர் Start , Turn Off Computer தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் Stand By, Turn Off, Restart எனும் மூன்று பட்டன்கள் மட்டுமே இருப்பதைக் காணலாம். அங்கு ஹைபனேட் பட்டன் தோன்றாது. அதனைத் தோன்றச் செய்ய கீபோர்டில் Shift விசையை அழுத்துங்கள். அப்போது Stand By பட்டன் Hibernate பட்டனாக மாறும் . அதனைக் க்ளிக் செய்வதன் மூலம் கணினியை ஹைபனேட் செய்து விடலாம்.

மேற் சொன்ன அதே டயலொக் பொக்ஸை டெஸ்க்டொப்பில் வெற்றிடத்தில் ரைட் க்ளிக் செய்வதன் மூலம் வரும் மெனுவிலிருந்து Properties தெரிவு செய்வதன் மூலமும் வரவழைக்கலாம்.

ஹைபனேசன் போன்றே ஸ்டேண்ட்பை என்பது மின் சக்தியைக் கட்டுப் படுத்துவதற்காக விண்டோஸ் தரும் மற்றுமொரு வசதி. ஸ்டேண்ட்பை மோடில் கணினி குறைந்தளவு மின்சாரத்தையே பயன்படுத்துகிறது. கணினி ஸ்டேண்ட்பை நிலைக்குச் செல்ல முன்னர் இருந்த நிலைக்கு மறுபடியும் வரவைக்கலாம். எனினும் நினைவகத்திலுள்ள எதுவும் ஹைபனேசனில் போன்று இங்கு ஹாட் டிஸ்கில் பதியப்படுவதில்லை.

ஸ்டேண்ட்பை நிலையில் தற்போது உபயோகத்திலில்லாத ஹாட் டிஸ்க், மொனிட்டர் போன்ற ஹாட் வெயர் சாதனங்களுக்கான மின் வழங்களை விண்டோஸ் நிறுத்தி விடும். எனினும் நினைவகத்திற்கான மின் வழங்கள் தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கும். இதன் மூலம் இறுதியாக நீங்கள் பணியற்றிக் கொண்டிருந்த அதே பைலிலேயே பணியற்ற முடிகிறது. அதாவது நினைவகத்திலிருந்து எதுவும் இழக்கப் படுவதில்லை.

ஹைபனேசன் போன்றே இங்கும் கணினியில் எந்த செயற்பாடுகளும் இல்லாத நிலையில் கணினியை தானாகவே ஸ்டேண்ட்பை நிலைக்குச் செல்ல வைக்கலாம். அதற்கு மேற் சொன்ன அதே டயலொக் பொக்ஸில் Power Schemes டேபின் கீழ் System Stand by எனுமிடத்தில் பொருத்தமான ஒரு நேரத்தைத் தெரிவு செய்து ஓகே சொல்லி விடுங்கள்.

சில கீபோர்டுகளில் கணினியை ஸ்டேண்ட்பை நிலைக்கு மாற்றவும் ஸ்டேண்ட் பை மோடிலிருந்து மீளவும் Sleep / Wake என தனியாக விசைகள் காண்ப்படும். அது போன்ற விசைகள் இல்லாதிருந்தால் மவுஸை அசைப்பதன் மூலம் அல்லது கீபோர்டில் ஏதேனுமொரு கீயை அழுத்துவதன் மூலம் ஸ்டேண்ட்பை மோடிலிருந்து மீளலாம்.


Macro என்றால் என்ன?


ஒரு ஹோட்டலுக்கு தினமும் போகிறீர்கள். ஒரு பீஸா, இரண்டு ரோல்ஸ், ஒரு டீ என்று ஒவ்வொரு நாளும் தவறாமல் அதே ஹோட்டலில் ஓடர் செய்து சாப்பிடுகிறீர்கள். ஒரு நாள் உங்களைப் பார்த்ததுமே ஹோட்டல் சர்வர், “வழக்கம் போல் தானே ஐயா?” எனக் கேட்கிறார். “ஆம்” என்று நீங்கள் தலையசைக்க சர்வர் செயற்படுத்துவது ஒரு மேக்ரோ ஆணைத் தொடரை. பீஸா, ரோல்ஸ், டீ என்பதற்குப் பதிலாக ஒரு தலையசைப்பின் மூலம் மூன்றையும் ஓடர் செய்கிறீர்கள் அல்லவா? இது தான் மேக்ரோ.
மேலே நீங்கள் படித்தது மேக்ரோ என்பதற்கு மறைந்த எழுத்தாளர் சுஜாதா சொன்ன விளக்கம்.
கணினியில் ஒரே செயலை திருமபத் திரும்ப செய்கிறீர்கள். அவ்வாறு செய்வது சோர்வை உண்டாக்குவதோடு நேரத்தையும் சக்தியையும் கூட வீணாக்குகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நமக்கு உதவுகிறது மேக்ரோ எனும் வசதி. மேக்ரோவைப் பயன்படுத்துவதன் மூலம் எமது வேலையை இலகுவாக்க முடிவதோடு மன மகிழ்ச்சியையும் தருகிறது..

திருமபத் திருமபச் செய்யப்படும் செயற்பாடுகள் எதுவாயிருந்தாலும் அனைத்தையும் மேக்ரோ கொண்டு இலகுவாகச் செய்யலாம். கணினியில் நாம் ஒரே வேலையைப் பல முறை திரும்பத் திரும்பச் செய்கிறோம்.
இந்த மேக்ரோ மூலம் நீண்ட மற்றும் சலிப்பை உண்டாக்கும் வேலைகளை ஒரே க்ளிக்கின் மூலம் செய்து முடிக்கலாம்.
விண்டோஸ் இயங்கு தளத்திற்கான பயன்பாட்டு மென்பொருள்களில் மேக்ரோ அதிகம் பாவனையிலுள்ளது. எம்.எஸ்.வர்ட், எக்ஸல், பவர்பொயிண்ட் போன்ற பல எப்லிகேசன் மென்பொருள்களில் மேக்ரோ வைப் பயன்படுத்தும் வசதி இணைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள்களில் மேக்ரோவைப் பதிவு செய்யும் வசதி, மற்றும் புதிதாக தங்கள் தேவைகளுக்கேற்ப மேக்ரோவை விசுவல் பேசிக் எனும் கணினி மொழி மூலம் வடிவமைப்பதற்கான வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறே சில நிறுவனங்கள் பொதுவான தேவைக்கான எந்தவொரு எப்லிகேசன் மென்பொருளுடனும் பயன் படுத்தக் கூடியவாறான மேக்ரோ நிரல்களையும் வெளியயிட்டுள்ளன.

ஒரே வேலையே திரும்பத் திரும்ப உங்களால் செய்யப்படுவதாக உணர்ந்தால் அந்த செயறபாட்டுக்கென ஒரு மெக்ரோவினை உருவாக்கி வைப்பதன் மூலம் அடுத்த முறை அதே வேலையை மறுபடியும் செய்யு வேண்டிய தேவை ஏற்படும்போது ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ள மெக்ரோவினை இயக்கி ஒரே க்ளிக்கில் அந்த வேலையை செய்து முடிக்கலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் கணக்குகள் வைத்திருப்பின் அவை ஒவ்வொன்றினையும் லொகின் செய்து மின்னஞ்சல்களைப் பார்த்தல், டைப் செய்த ஒரு டொகியுமென்டை போமட் செய்தல், திகதி பக்க இலக்கம் போன்றவற்றை உள்ளீடு செய்தல், அறிக்கைகளை தயாரித்தல், வெவ்வெறு எப்லிகேசன் மென்பொருள்களுக்கிடையே டேட்டாவை பிரதி செய்தல் என எண்ணிலடங்கா செயற்பாடுகளை மேக்ரோவினை உருவாக்குவதன் மூலம் இலகுவாக செய்து கொள்ளலாம்.

இப்போது எம்.எஸ். எக்ஸலில் மேக்ரோவை எவ்வாறு செயற்படுத்துவது எனப் பார்ர்ப்போம். முதலில் எக்ஸலைத் திறந்து மெக்ரோவை செயற்படுத்தவிருக்கும் பைலை அல்லது வேர்க்புக்கை திறந்து கொள்ளுங்கள். அடுத்து Tools மெனுவில் Macro தெரிவு செய்து அதிலிருந்து வரும் சப் மெனுவிலிருந்து Record New Macro தெரிவு செய்யுங்கள். அப்போது படம் 1 இல் இருப்பது போன்ற ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும் .

இங்கு Macro Name – எனுமிடத்தில் மேக்ரோவுக்குப் பொருத்தமான ஒரு பெயரை வழங்க வேண்டும்.

Shortcut Key – இங்கு ஏதேனுமொரு ஆங்கில எழுத்தை வழங்கலாம். படத்தில் S எனும் எழுத்து வழங்கப்பட்டுள்ளது. CTRL +Shift உடன் S விசையை அழுத்த மேக்ரோவை ஓட விடலாம். எனினும் இது கட்டாயமன்று.
Store macro in – இது வழமையாக நீங்கள் பணியார்றும் வேர்க்புக் ஆக இருக்கும்.. புதிதாகத் திறக்கும் ஒவ்வொரு வேர்க்புக்கிலும் இந்த மேக்ரோ வினைப் பயன்படுத்த வேண்டுமானால் New Workbook என்பதைத் தெரிவு செய்யுங்கள்.

Description – இங்கு நீங்கள் உருவாக்கும் மேக்ரோவை பற்றி சிறுது விவரிக்கலாம் இவ்வாறு விவரிப்பதன் மூலம் பிரிதொரு நேரம் பயன் படுத்தும் போது எதற்கான மேக்ரோ என்பதை எமக்கு ஞாபகமூட்டும்., இதுவும் கட்டாயமன்று.

இந்த விவரங்கள் அனைத்தையும் வழங்கிய பிறகு ஓகே சொல்ல மேக்ரோ ரெகோடர் பதிவு செய்ய ஆரம்பிக்கும். அத்தோடு Stop Recording என ஒரு சிறிய டூல்பாரும் (படம் 2 ) திரையில் தோன்றும்.

இப்போது எக்ஸலில் நீங்கள் தினமும் செய்யும் வேலைகளை வழமை போல் செய்ய ஆரம்பியுங்கள். உதாரணமாக ஒரே அட்டவணைய தினமும் டைப் செய்ய வேண்டியிருப்பதாக வைத்த்துக் கொள்ளுங்கள். அந்த அட்டவணையை மறுபடியும் இங்கு டைப் செய்யுங்கள். அடுத்து உங்கள் செயற்பாடுகள் அனைத்தும் முடிய டூல்பாரில் Stop Recording பட்டனில் க்ளிக் செய்து மெக்ரோவை நிறுத்தி விடுங்கள்.
அடுத்து பதிவு செய்த மேக்ரோவை இயக்குவதற்கு மறுபடியும் Tools மெனுவில் Macro, தெரிவு செய்து வரும் சப் மெனுவிலிருfது Macros தெரிவு செய்யுங்கள். அப்போது படம் - 3 ல் உள்ளது போல் ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு உருவாக்கப்பட்டுள்ள மேக்ரோக் களின் பெயரும் காண்பிக்கப்படும். அதிலிருந்து உரிய மேக்ரோவை தெரிவு செய்து Run பட்டனில் க்ளிக் செய்யுங்கள். இப்போது அடிக்கடி நீங்கள் சிரமப்பட்டு செய்து வந்த ஒரு வேலை ஒரே க்ளிக்கில் செயற்படுத்தப்டுவதைக் காணலாம்.

Cookies என்றால் என்ன?



எதற்கு இந்த System Restore ?


புதிதாக ஒரு பயன்பாட்டு மென்பொருளை நிறுவும்போது (install) அல்லது அதனை புதுப்பிக்கும் (update) போது உங்கள் கணினியை ஒரு மாற்றத்யதிற்கு உட்படுத்துகிறீர்கள். இந்த மாற்றம் சில வேளைகளில் கணினியின் இயக்கத்தில் பாதிப்பை உண்டாக்கி கணினி முன்னர் போல் செயற்பாடாமல் போகவும் இடமுண்டு. இது போன்ற நிலைமைகளில் உங்களுக்குக் கை கொடுக்கிறது விண்டோஸிலுள்ள சிஸ்டம் ரீஸ்டோர் எனும் வசதி. இதன் மூலம் கணினியில் மாற்றத்தை ஏற்படுத்த முன்னர் இருந்த நிலைக்கு கணினியை மறுபடியும் மாற்றி கணினியை சீராக்கி விடலாம்.

சிஸ்டம் ரீஸ்டோர் என்பது மைக்ரோஸொப்ட் வர்ட், எக்ஸல் மற்றும் ஏனைய பயன்பாட்டு மென்பொருள்களில் உள்ள Undo எனும் கட்டளை போன்றதே. கணினியில் செய்த மாற்றத்தை இல்லாமல் செய்து கடைசியாக கணினி முறையாக இயங்கிக் கொண்டிருந்த நிலைக்கு மறுபடியும் சீரமைத்து விடுகிறது இந்த சிஸ்டம் ரீஸ்டோர் எனும் வசதி.

கணினி வைரஸ் தாக்குதலுக்குட்படும் சந்தர்ப்பங்கDலும் கூட இந்த சிஸ்டம் ரீஸ்டோர் மூலம் சில வேளைகளில் வைரஸை விரட்டி விடலாம். எனினும் சில கணினி வைரஸ் இந்த சிஸ்டம் ரீஸ்டோரயே இயங்காமல் (disable) செய்து விடுவதுமுண்டு.

சிஸ்டம் ரீஸ்டோர், விண்டோஸ் இயங்கு தளத்தில் செய்த மாற்றத்தையே இல்லாமல் செய்து விடுகிறது தவிர நீங்கள் முன்னர் பணியாற்றி சேமித்த எந்த ஒரு பைலையும் பாயதிப்பதில்லை. உதாரணமாக எம்.எஸ்.வர்ட் கொண்டு உருவாக்கிய ஒரு ஆவணம், இண்டநெட் எக்ஸ்ப்லோரர் கொண்டு பார்த்த இணைய தளங்கள், உங்களுக்கு வந்த மின்னஞ்சல் என எதனையும் இல்லாமல் செய்து விடாது. அதாவது சிஸ்டம் ரீஸ்டோர் செய்வதனால் உங்கள் தனிப்பட்ட பைல்களுக்கு எந்த வித ஆபத்தும் நேர்ந்து விடாது.

விண்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளம், கணினியில் நீங்கள் செய்யும் மாற்றங்களை முறையாக அவதானித்து அவ்வப்போது அவை பற்றிய விவரங்களை அதாவது என்ன திகதியில் என்ன நேரத்தில் என்ன மாற்றம் செய்யப்பட்டது போன்ற விவரங்களை பதிந்து வைக்கிறது. எடுத்துக் காட்டாக ஒரு பயன்பாட்டு மென்பொருளை நிறுவுதல் அல்லது ஒரு ட்ரைவர் மென்பொருளை நிறுவுதல் போன்ற கணினியில் ஒரு முக்கிய மாற்றத்தைச் செய்யும்போது அவை பற்றிய விவரங்களைப் பதிவு செய்து விடுகிறது. இந்த விவரங்கள் அடங்கிய குறிப்புகளை ரீஸ்டோர் பொயின்ட் (Restore Point) எனப்படும்.

இந்த ரீஸ்டோர் பொIன்டை நீங்களாகவே கூட கணினியில் ஏதும் மாற்றத்தை செய்வதற்கு முன்னர் உருவாக்Bக் கொள்ளலாம்.

நீங்கள் நிறுவிய ஒரு மென்பொருள் கணினியில் பாதிப்பை உண்டாக்கியிருந்தால் சிஸ்டம் ரீஸ்டோரை இயக்கி அதிலிருந்து ஒரு ரீஸ்டோர் பொயின்டைத் தெரிவு செய்து கணினியை மறுபடியும் முன்னர் இருந்தவாறு சீராக இயங்கிய நிலைக்குக் கொண்டு வரலாம். சிஸ்டம் ரீஸ்டோரை இயக்கியதும் ஒரு கலண்டர் தோன்றுகிறது. அதிலிருந்து ரீஸ்டோர் பொயின்ட் எனப்படும் நிலைகளைத் தெரிவு செய்யலாம். தினமும் கணினியை உபயோகிக்காமலிருந்தால் சில தினங்களில் ரீஸ்டோர் பொயின்ட் உருவாகியிருக்காது. மாறாக கணினியை அடிக்கடி உபயோகித்திருந்தால் அனேகமாக தினமும் ரீஸ்டோர் பொயின்ட் உருவாவதோடு ஒரே தினத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ரீஸ்டோர் பொயின்டுகளும் உருவாகியிருப்பதைக் காணலாம்.

ரீஸ்டோர் செய்யும் பணி முடிந்ததும் கணினி ரீஸ்டார்ட் ஆக ஆரம்பித்து விடுவ தால் சிஸ்டம் ரீஸ்டோரை இயக்குவதற்கு முன்னர் கணினியில் திறந்து வைத்துப் பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து எப்லிகேசன்களையும் மூடி விடுதல் வேண்டும்.

கணினியில் நீங்கள் செய்யவிருக்கும் ஒரு மாற்றம் கணினியில் ஸ்திரத்த தன்மையைப் பாதிக்கும் என நினைத்தால் அந்த மாற்றத்தைச் செய்வதற்கு முன்னர் ஒரு ரீஸ்டோர் பொயின்டை உருவாக்கிக் கொள்வது உங்களுக்கு நன்மை யளிக்கும்.

இந்த சிஸ்டம் ரீஸ்டோரை Start / All Programs / Accessories / System Tools மற்றும் Start / Help and Support / Pick a Task / Undo changes to your computer with System Restore என இரண்டு வழிகளில் அணுகலாம்.

ரீஸ்டோர் செய்வது எப்படி?
சிஸ்டம் ரீஸ்டோர் செய்வது ஒரு எளிமையான செயற்பாடு. சிஸ்டம் ரீஸ்டோரை இயக்கிய பின்னர் ஒரு விசர்ட் தோன்றும். இங்கு Restore your computer to an earlier time (படம்-1) தெரிவு செய்து அடுத்த கட்டத்திற்குச் செல்ல (படம்-2) ல் உள்ளது போல் ஒரு விண்டோ தோன்றும். இங்கு நீங்கள் விரும்பும் ரீஸ்டோர் பொயின்டைத் தெரிவு செய்யுங்கள். தேவையானால் இடப் பக்கமுள்ள கலண்டரில் க்ளிக் செய்து ரீஸ்டோர் பொயின்டைத் தெரிவு செய்து கொள்ளலாம். அடுத்து ரீஸ்டோர் பட்டனில் க்ளிக் செய்ய ரீஸ்டோர் செய்யும் பணி ஆரம்பித்து விடும்.

ஒரு சிஸ்டம் ரீஸ்டோர் பொயின்டை உருவாக்குவது எப்படி?
அவ்வாறே புதிதாக ஒரு ரீஸ்டோர் பொயின்டை உருவாக்கிக் கொள்ள ரீஸ்டோர் விசர்டில் வரும் முதல் கட்டத்தில் Create a restore point (படம்-1) தெரிவு செய்து Next க்ளிக் செய்ய வரும் திரையில் (படம்-3) உருவாக்கயிருக்கும் ரீஸ்டோர் பொயின்டுக்கு ஒரு பொருத்தமான ஒரு பெயரை டைப் செய்து Create பட்டனில் க்ளிக் செய்ய புதிதாக ஒரு ரீஸ்டோர் பொயின்ட் உருவாக்கப்பட்டு விடும்.

அதேபோல் சிஸ்டம் ரீஸ்டோர் விசர்டில் முதல் திரையில் System Restore Settings எனும் இணைப்பில் க்ளிக் செய்ய படம்-4 ல் உள்ளது போல் ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும். (இதனை வேறு வழி முறைகளிலும் வரவைக் கலாம்) இதன் மூலம் ஹாட் டிஸ்கில் எந்த ட்ரைவிலும் சிஸ்டம் ரீஸ்டோர் வசதியை இல்லாமல் செய்யவும், ஏற்கனவே இல்லாமல் செய்திருந்தால் அதனை மீள அமைக்கவும் முடியும். அத்துடன் இந்த டயலொக் பொக்ஸில் Settings பட்டனில் க்ளிக் செய்து ஒவ்வொரு ட்ரைவவிலும் சிஸ்டம் ரீஸ்டோர் செய்வதற்கென ஒதுக்கப்பட்டிருக்கும் வெற்றிடத்தை அதிகரித்துக் கொள்ளவும் குறைத்து கொள்ளவும் முடியும்.






ISO பைல் என்றால் என்ன?



ஐ.எஸ்.ஓ பைல் அல்லது ஐ.எஸ்.ஒ இமேஜ் என்பது ஒரு சிடி அல்லது டிவிடி யின் விம்பம் அல்லது பிரதி எனலாம். சிடி அல்லது டிவிடியில் அடங்கியிருக்கும் அனைத்து டேட்டாவையும் ஒரே பைலாக ஐ.எஸ்.ஒ பைலில் உள்ளடக்கி விடலாம். ISO என்பது International Organization for Standardization என்பதைக் குறிக்கிறது. இது .ISO எனும் பைல் `ட்டிப்பைக் (file extension) கொண்டிருக்கும். ஐ.எஸ்.ஓ பைல் என்பது ஒரு சிப் (zip) பைல் அல்லது கேப் (cab) பைலைப் போன்றதே. எனினும் இவை Hப் பைல் போன்று சுருங்கிய வடிவத்திலல்லாமல் சிடி அல்லது டிவிடியில் அடங்கியுள்ள மொத்த பைல்களின் கொள்ளளவில் இருக்கும்.

இந்த ஐ.எஸ்.ஓ பைலை, பகுதி பகுதியாகப் பொருத்தி ஒன்று சேர்க்கும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களைத் தாஙகி வரும் ஒரு பெட்டிக்கு ஒப்பிடலாம். எமக்கு பயன்படுவது அந்தப் பெட்டிக்குள் அடங்கிருப்பவையே தவிர அந்தப் பெட்டியல்ல. ஐ.எஸ்.ஓ பைல்களும் இதே போன்றதே.

அதிக கொள்ளளவு கொண்ட மென்பொருள்களை இனையத்தின் வழியே பகிர்வதற்காகவே ஐ.எஸ்.ஓ பைல்கள் அனேகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு மென்பொருளுக்குரிய அனைத்து பைல்களும் போல்டர் களும் ஒரே பைலுக்குள் அடங்கி விடுவதாலும் இதன் மூலம் பைல் இழப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என்பதனாலும் ஐ.எஸ்.ஓ பைலாக அவை இணையத்தில் பகிரப்படுகின்றன. உதாரணமாக 600 மெகாபைட்டுக்கு மேல் கொள்ளளவு கொண்ட லினக்ஸ் இயங்குதளத் தின் உபுண்டு பதிப்பு இணையத்தில் இருந்து டவுன் லோட் செய்து கொள்ளக் கூடியதாக ஐ.எஸ்.ஓ பைல் வடிவிலேயே கிடைக்கிறது.

ஐ.எஸ்.ஓ பைலில் என்ன அடங்கிIருக்கின்றன என நேரடியாகத் திறந்து பார்க்க விண்டோஸில் வழியில்லை. எனவே அவை வேறு வழிகளிலேயே கையாளப்படு கின்றன. அவற்றுள் முதலாவது வழி ஐ.எஸ்.ஓ பைலை கையாள்வதற்கான யூட்டிலிட்டிகளைப் பயன்படுத்துவதாகும். அதற்கென IsoBuster, CDmage ,Daemon Tools எனச் சில யூட்டிலிட்டிகலைப் பிற நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இவற்றின் மூலம் ஐ.எஸ்.ஓ பைலில் அடங்கியுள்ளவற்றை “சிப் பைல்” போல் வெறொரு போல்டருக்குள் விரியச் செய்து பார்க்கலாம்.

இரண்டாவது வழி அதனை சீடியிலோ அல்லது டிவிடியிலோ பதிவு செய்து பயன்படுத்துவதாகும். அனேகமாகப் பலரும் இந்த வழியையே கையாள்கின்றனர். எனினும் இந்த ஐ.எஸ்.ஓ பைலை சீடியில் பதிவு செய்வதென்பது வழமையான டேட்டா அல்லது வீடியோ பைலை பதிவு செய்வது போன்றதல்ல. இங்கு சீடி அல்லது டிவிடியில் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தும் மென்பொருள் ஐ.எஸ்.ஓ பைலை சீடியில் ஒன்று சேர்த்துப் பொருத்த வேண்டியிருக்கிறது. எனவே சீடியில் பதிவு செய்வதற்கான மென்பொருளில் ஐ.எஸ்.ஓ இமேஜ் பைலைப் பதிவு செய்வதற்கான வசதியும் (image burner ) இருந்தாலே அதனைப் பதியலாம்.

ஒரு ஐ.எஸ்.ஓ பைலை சீடியில் பதிவு செய்த பிறகு சீடியில் அந்த பைலைக் காண முடியாது. மாறாக சீடியில் வேறு சில பைல்களையும் போல்டர்களையும் மட்டுமே காணக் கூடியதாய் இருக்கும்.

ஐ.எஸ்.ஓ பைலைக் கையாளும் மூன்றாவது வL அதனை ஒரு வேர்ச்சுவல் சீடி ரொம்மில் ஏற்றிப் பார்வையிடுவதாகும். ஒரு சீடி ரொம்மிலிருந்து மட்டுமே இயங்கக் கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள்களை இயக்குவதற்கான ஒரு வழியே இந்த வேர்ச்சுவல் சீடி ரொம். Virtual CD-ROM Control Panel for Windows XP என்பது அவ்வாறான ஒரு இலவச யூட்டிலிட்டி.

ஐ.எஸ்.ஓ பைல்களை உருவாக்கவும் சிடி அல்லது டிவிடியில் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தும் மென்பொருள்களே உதவுகின்றன. ஒரு சிடி அல்லது டிவிடியில் அடங்கியிருக்கும் டேட்டாவை ஐ.எஸ்.ஓ பைல் வடிவில் சேமித்துக் கொள்வதன் மூலம் அந்த சிடி அல்லது டிவிடி இல்லாமலேயே பிரிதொரு நேரம் அதனை சிடியில் பதிவு செய்து கொள்ளும் வசதியை இந்த ஐ.எஸ்.ஓ பைல் தருகிறது.


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews