தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Wednesday, December 18, 2013

Hibernation - Stand by என்ன வேறுபாடு?




கணினியில் எம்.எஸ்.வர்ட், எக்ஸல், மீடியா ப்ளேயர், வெப்பிரவுஸர் என ப்ல எப்லிகேசன்களை ஒரே நேரத்தில் திறந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென உங்களுக்கு வேறொரு வேலையாக வெளியில் செல்ல வேண்டிய தேவை ஏற்படுகிறது. அப்போது திறந்திருக்கும் எல்லா எப்லிகேசன்களையும் மூடி விட்டு கணினியை நிறுத்தி விட்டுச் செல்ல முடிந்தாலும் மறுபடியும் அத்தனை எப்லிகேசன்களையும் விட்ட இடத்திலிருந்து தொடர வேண்டியிருக்கிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் கை கொடுக்கிறது விண்டோஸில் இருக்கும் ஹைபனேசன் Hibernation எனும் வசதி.

விண்டோஸ் தரும் இந்த ஹைபனேசன் வசதி மூலம் ஒரெ க்ளிக்கில் திறந்த நிலையிலுள்ள அத்தனை எப்லிகேசன்களையும் பாதுகாப்பாக ஹாட் டிஸ்கில் சேமிக்கப்படுவதோடு கணினியை நிறுத்த முன்னர் பணியாற்றிய அத்தனை எப்லிகேசன்களையும் பைல்களையும் மறுபடி யும் நீங்களாக அவற்றைத் திறக்காமலேயே டெஸ்க் டொப்பில் திறந்த நிலையில் காட்சியளிக்க வைக்கிறது
ஹைபனேசன் மடிக்கணிகள் உப்யோகிப்போருக்கு அதிகம் பயனளிக்கிறது. இதன் மூலம் லெப்டொப் கணினிகளிலுள்ள பேட்டரியின் மின் சக்தியைச் சேமிக்க முடிவதுடன் நேரத்தையும் கூட மீதப்படுத்தலாம்.
விண்டோஸ் இயங்கு தளம் கணினி மற்றும் துணைச் சாதனங்க ளுக்கான மின் சக்தியை கட்டுப்படுத்தக் கூடியவாறு உருவாக்கப் பட்டுள்ளது. மின் சக்தியைக் கட்டுப் படுத்தவென் விண்டோஸ் Hibernation / Stand by என இரு வசதிகளைக் கொண்டுள்ளது. இவற்றின் மூலம் திறந்திருக்கும் அனைத்து பைல்களையும் மூடிவிட்டு கணினியை நிறுத்தி ம்றுபடியும் ஸ்டர்ட் செய்து அதே பைல்களையும் எப்லிகேசன்களையும் திறப்பதற்கு ஆகும் நேரத்தை குறைக்க முடிவதோடு மின் சக்தியையும் சேமிக்க முடிகிறது,
ஹைபனேசன் எனும் வசதி தற்போது திறந்து வைத்துப் பணியாற்றும் அத்தனை பைல்களையும் எப்லிகேசன்களையும் டெஸ்க்டொப்பின் பிரதியாக ஹாட் டிஸ்கில் சேமித்து கணினியின் இயக்கத்தை நிறுத்தி விடுகிறது. மறுபடியும் கணினியை ஓன் செய்யும் போது முன்னர் திறந்து வைத்துப் பணியாற்றிய பைல்கள் ப்ரோக்ரம்கள் அனைத்தும் ஹைபனேட் செய்வதற்கு முன்னர் இருந்த அதே நிலையில் டெஸ்க் டொப்பில் கொண்டு வந்து விடுகிறது.

ஒரு குறிப்பிட்டட நேரம் கணினியில் எந்த வித செயற்பாடுகளும் இல்லாதிருந்தால் விண்டோஸே தானாக கணினியை ஹைப்னேட் செய்து நிறுத்தி விடும். அவ்வாறே லெப்டொப் கணினிகளில் உள்ள பேட்டரியில் மின் சக்தியின் அளவு குறைந்து வருமானால் அதனை உணர்ந்து, பேட்டரி முழுமையாக செயலிழக்க முன்னர் கணினியை ஹைபனேட் நிலைகு மாற்றி பைல்களை பாதுகாப்பாக சேமிப்பதுடன் கணினியையும் நிறுத்தி விடுகிறது. சில கணினிகளில் ஹைபனேட் வசதியை பயன்படுத்த முடியாது. அக்கணினிகளில் மதர் போர்ட்டானது ஹைபனேட் வசதியை ஆதரிக்காததே அதற்குக் காரணம்.

விண்டோஸ தானாக கணினியை ஹைபனேட் செய்யப் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள். முதலில் கண்ட்ரோல் பேனலில் Power Options தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் Hibernate டேபில் க்ளிக் செயுங்கள். இங்கு Enable hibernate தெரிவு செய்து Apply பட்டனில் க்ளிக் செய்யுங்கள். இந்த டயலொக் பொக்ஸில் Hibernate டேப் இல்லாதிருந்தால் உங்கள் கணினி ஹைபனேட் வசதியை ஆதரிக்கவில்லை என்பதைக் கவனத்திற் கொள்ளுங்கள். அடுத்து Power Schemes டேபில் க்ளிக் செய்து எவ்வளவு நேத்தில் ஹைபனேட் நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதைத் தீர்மாணிக்க System hibernates எனுமிடத்தில் பொருத்தமான ஒரு நேர இடை வெளியை தெரிவு செய்து விட்டு ஓகே செய்து விடுங்கள். நீங்கள் தெரிவு செய்யும் நேரத்திற்கேற்ப கணினி எந்த இயக்கமும் இல்லாத நிலையில் ஹைபனேட் ஆகும்.

தானாக அல்லாமல் கணினியை நீங்களாகாவே விரும்பிய நேரம் ஹைபனேட் செய்யவும் முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது : முதலில் மேலே குறிப்பிட்டது போல் Enable hibernate என்பதைத் தெரிவு நிலையில் வைத்து விடுங்கள். பின்னர் Start , Turn Off Computer தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் Stand By, Turn Off, Restart எனும் மூன்று பட்டன்கள் மட்டுமே இருப்பதைக் காணலாம். அங்கு ஹைபனேட் பட்டன் தோன்றாது. அதனைத் தோன்றச் செய்ய கீபோர்டில் Shift விசையை அழுத்துங்கள். அப்போது Stand By பட்டன் Hibernate பட்டனாக மாறும் . அதனைக் க்ளிக் செய்வதன் மூலம் கணினியை ஹைபனேட் செய்து விடலாம்.

மேற் சொன்ன அதே டயலொக் பொக்ஸை டெஸ்க்டொப்பில் வெற்றிடத்தில் ரைட் க்ளிக் செய்வதன் மூலம் வரும் மெனுவிலிருந்து Properties தெரிவு செய்வதன் மூலமும் வரவழைக்கலாம்.

ஹைபனேசன் போன்றே ஸ்டேண்ட்பை என்பது மின் சக்தியைக் கட்டுப் படுத்துவதற்காக விண்டோஸ் தரும் மற்றுமொரு வசதி. ஸ்டேண்ட்பை மோடில் கணினி குறைந்தளவு மின்சாரத்தையே பயன்படுத்துகிறது. கணினி ஸ்டேண்ட்பை நிலைக்குச் செல்ல முன்னர் இருந்த நிலைக்கு மறுபடியும் வரவைக்கலாம். எனினும் நினைவகத்திலுள்ள எதுவும் ஹைபனேசனில் போன்று இங்கு ஹாட் டிஸ்கில் பதியப்படுவதில்லை.

ஸ்டேண்ட்பை நிலையில் தற்போது உபயோகத்திலில்லாத ஹாட் டிஸ்க், மொனிட்டர் போன்ற ஹாட் வெயர் சாதனங்களுக்கான மின் வழங்களை விண்டோஸ் நிறுத்தி விடும். எனினும் நினைவகத்திற்கான மின் வழங்கள் தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கும். இதன் மூலம் இறுதியாக நீங்கள் பணியற்றிக் கொண்டிருந்த அதே பைலிலேயே பணியற்ற முடிகிறது. அதாவது நினைவகத்திலிருந்து எதுவும் இழக்கப் படுவதில்லை.

ஹைபனேசன் போன்றே இங்கும் கணினியில் எந்த செயற்பாடுகளும் இல்லாத நிலையில் கணினியை தானாகவே ஸ்டேண்ட்பை நிலைக்குச் செல்ல வைக்கலாம். அதற்கு மேற் சொன்ன அதே டயலொக் பொக்ஸில் Power Schemes டேபின் கீழ் System Stand by எனுமிடத்தில் பொருத்தமான ஒரு நேரத்தைத் தெரிவு செய்து ஓகே சொல்லி விடுங்கள்.

சில கீபோர்டுகளில் கணினியை ஸ்டேண்ட்பை நிலைக்கு மாற்றவும் ஸ்டேண்ட் பை மோடிலிருந்து மீளவும் Sleep / Wake என தனியாக விசைகள் காண்ப்படும். அது போன்ற விசைகள் இல்லாதிருந்தால் மவுஸை அசைப்பதன் மூலம் அல்லது கீபோர்டில் ஏதேனுமொரு கீயை அழுத்துவதன் மூலம் ஸ்டேண்ட்பை மோடிலிருந்து மீளலாம்.


0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews