தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Saturday, June 1, 2013

கணினியின் அடிப்படை-1

கணினியின் செயல்பாடும் அதன் வகைகளும்.
உள்வாங்குதல் (reviving), சேமித்தல் (Storage) மாற்றியமைத்தல் (Manuplating) போன்ற திறமைகளைக்கொண்ட ஒரு இலத்திரனியல் சாதனம் கணினி என அழைக்கப்படுகின்றது.

கொடுக்கப்படும் தரவுகளை (Data) மாற்றியமைத்தலே Processing என அழைக்கப்படுகின்றது. இதன்போது சுருக்குதல், சேமித்தல்,வழங்கப்படும் தரவுகளை மீளப்பெறல் போன்றவற்றுடன் கூட்டல்,கழித்தல்,பிரித்தல், பெருக்கல் போன்ற கணித்தல் வேலைகளும் நடைபெறுகின்றன.
கணினி பலவகையான தரவுகளை உள்ளெடுத்து செயன்முறைப்படுத்துகின்றது.கணினி தரவுகளை உள்ளெடுப்பதற்குச் சில வழிகள் உள்ளன. இவற்றில் பொதுவானது Keyboard முறையாகும். அதாவது,Keyboard  இனைப் பயன்படுத்தித் தரவுகளை உள்ளனுப்புதல் ஆகும். இந்த Keyboard  ஆனது உள்ளீட்டுச் சாதனம் (Input Device) என அழைக்கப்படுகின்றது. தரவுகள் கணினியினுள் சென்றதும் அவற்றைச் செயற்படுத்துவதற்கு கணினி தயாராக இருக்கும். ஆனால், அவற்றை எவ்வாறு, எப்படி, என்ன செய்யவேண்டும் என்பதெல்லாம் கணினிக்கு முன்னரே சொல்லப்பட்டிருத்தல் வேண்டும். இவை அறிவுறுத்தல்கள் (Instruction) அல்லது கணினி நிகழ்ச்சித்திட்டங்கள் (Program) என அழைக்கப்படுகின்றன.
கணினியானது குறிப்பிட்ட வேலையினைச் செய்வதற்கு நிகழ்ச்சித்திட்டங்கள் வழிகாட்டுகின்றன. கணினி நிகழ்ச்சித்திட்டத்தின் அறிவுறுத் தல்கள் முழுமையாகவும் தெளிவானமுறையிலும் கொடுக்கப்படல் வேண்டும்.
கணினி மொழிகள் சில :
BASIC

PASCAL
C++
C#
Java
தரவுகள் உரியமுறையில் செயற்படுத்தப்பட்டதும் விளைவுகள் கணினியைப் பயன்படுத்துவோருக்கு வெளியீட்டுச் சாதனம் (Output Device) மூலம் வழங்கப்படுகின்றது.



கணினியின் வகைகள் (Type of the computer)
         கணினியானது பார்வை அடிப்படையிலும் தொழிற்பாட்டின் அடிப்படையிலும் பாவனை அடிப்படையிலும்  வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தொழிற்பாட்டின் அடிப்படையில் வகைப்படுத்தல்
 
Analog Computer 


ஆரம்பகாலத்தில் கணினிகள் Analog கணினிகளாகவே இருந்தன. ஆனால் தந்பொழுது இவை அரிதாகி Digital Computer  களே உலகை ஆக்கிரமித்துள்ளன. இருப்பினும் Analog கணினிகள், ஆய்வுகூடங்களில் தற்பொழுதும் பயன்படுத்தப்படுகின்றன.



Digital Computer 

 தற்போது கூடுதலான பயன்பாட்டிலுள்ளவை இக்கணினிகளே. இவ்வகை கணினிகள் 1 - 0 இனை அடிப்படையாகக் கொண்டே தொழிற்படுகின்றன. 

 







Hybrid Computer

  

Analog Computer , Digital Computer ஆகிய இரண்டினதும் இயல்பினை உள்ளடக்கிய கணினியே Hybrid Computer என அழைக்கப்படுகின்றது. இது ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது.




பார்வை அடிப்படையில் வகைப்படுத்தல்
Main Frame

 தொழில் சாலைகளில் பல நூறு கணினிகளுக்குத் தலைமைக் கணினியாக செயற்படும் கணினியே Main frame எனப்படுகிறது. இது பருமனில் மிகவும் பெரியதாகவும், வேகமானதாகவும் கூடிய கொள்ளளவு உடையதாகவும் இருக்கும். இவை மிகப்பெரிய தொழில் சாலைகளிலும் பயன் படுத்தப்படுகிறது.

 


Mini Compute
Mainframe  உடன் இணைந்து செயற்படும் துணைக்கணினிகள் Mini Computer  என அழைக்கப்படுகின்றன. இவை  Mainframe இனைவிடப் பருமனில் சிறியவையாக இருக்கின்றன. இவற்றுடன் குறிப்பிடத்தக்க தொகையில் தனிநபர் கணினிகள்  இணைக்கப்படுகின்றது.

 Micro Computer
நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் personal Computer  கள் (PC) யாவுமே Micro Computer எனும் வகையைச் சேர்ந்தவையாகும். இவை பயன்படுத் தப்படும் விதத்திற்கேற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அவையாவன
1. Desktop computer
2. Laptop/Note book computer
3. Palmtop computer 

4. Pocket computer
Desktop computer
இது நாம் சாதரனமாக பயன்படுத்தும் மேசைக்கணினிகள் ஆகும். மேசையின்மேல் வைத்துப் பயன்படுத்தக்கூடியதாக இருப்பதனால் இதனை desktop computer என அழைக்கப்படுகின்றது.

Laptop/Note book computer 
இதனை ஒரு மனிதன் தனது மடியில் வைத்துப் வேலை செய்வதுடன் எடுத்துச்செல்லக்கூடிய அளவில் இலகுவாக உள்ளது. அத்தோடு இது  Desktop computer செய்யும் வேலைகள் அனைத்தையும் செய்யக்கூடிய தாகும்.

Palmtop computer 
இதனை ஒரு மனிதன் தனது உள்ளங்கையில் வைத்துப் பயன்படுத்தமுடியும். இதனாலேயே இது Palmtop computer  என அழைக்கப்படுகின்றது. இதில் ஒரு Desktop computer இல் செய்யும் வேலையின்; குறிப்பிடத்தக்க பகுதியினையே செய்யமுடியும்.

Pocket computer
இதனை ஒரு மனிதன் தனது சட்டைப்பையினுள்ளேயே கொண்டு செல்லக்கூடியவாறு இருக்கின்றது. இதனாலேயே இது Pocket computer என அழைக்கப்படுகின்றது. இதில் குறித்த ஒருசில வேலையினை மட்டுமே செய்யமுடியும். தற்பொழுது பயன்படுத்தப்படும் Blackberry, Android போன்ற கைத்தொலைபேசிகளும் இவ்வகையினை சார்ந்தனவே

பாவனை அடிப்படையில் வகைப்படுத்தல்
special purpose computer
ஆராய்ச்சி போன்ற விசேட தேவைகளுக்கென வடிவமைக்கப்படும் கணினிகள் யாவும் special purpose computer என அழைக்கப்படுகின்றன. இவற்றுல் வின்வெளி ஆராச்சிககள், அணுதொழிற்பாட்டாரச்சிகள் போன்ற மிகப்பெரிய ஆராச்சித்தேவைகளுக்காக உருவாக்கப்படும் கணினிகள் வேகம் கூடியனவாகவும் தரவுகளை கையாள கூடியஅளவு (Memory  Capacity) கூடியனவாகவும் அமைக்கப்படும் இவை Super computer எனவும் அழைக்கப்படுகின்றன.
 General purpose computer 
    பொதுவான தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் கணினிகள் யாவும் General purpose computer என அழைக்கப்படுகின்றன. அதாவது அலுவலகம் மற்றும் வீட்டுப் பாவனையில் உள்ள கணினிகள் யாவும் இவ்வகையினைச் சேர்ந்தவையாகும்.

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews