2038 இல் கணினிகள் செயலிழக்க வாய்ப்பு
உலகம் முழுவதும் கணினி மயமாகியிருக்கும் இந்த நூற்றாண்டில் கணினிகள் செயலிழக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2038 ஆம் ஆண்டில் பெரும்பலான கணினிகள் செயலிழக்கக்கூடிய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கணினிகளில் நேரத்தை கணக்கிடும் முறையிலுள்ள தொழில்நுட்பமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
1938 மார்ச் 19 ஆம் திகதி கிறீனிச் நேரப்படி அதிகாலை 3 மணி 14 நிமிடம் 7 வினாடி எனும் நேரத்தை அடையும்போது கணினிகளால் நேரத்தை புரிந்துகொள்ள முடியாமல் போய்விடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனை Year 2038 Problem என நிபுணர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும்பாலான கணினிகளின் ஒப்பரேட்டிங் சிஸ்டம் 32 பிட் சிஸ்டம் முறைமையிலேயே இயங்குகின்றன. 32 பிட் இன்டிஜர்( 32-bit integer )முறையில் அதிபட்சமாக 2,147,483,647 வினாடிகளையே கணக்கிட முடியும். இத்தகைய 32 பைட் சிஸ்டம் கணினிச் செயன்முறைகளில் ஆரம்ப நேரமானது 1970 ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலை 00.00 மணியாக குறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2038 மார்ச் 19 ஆம் தேதி அதிகாலை 3.14 மணியாகும்போது 1970 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து 2,147,483,647 வினாடிகள் கடந்துவிடும்.
அதன்பின் நேரத்தை சரியாக கணக்கிட முடியாமல் 32 பிட் சிஸ்டம் கணினிகள் செயலிழக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் 64 பிட் சிஸ்டம் முறைமைக்கு கணினிகளின் மென்பொருட்கள் மாற்றப்பட வேண்டியிருக்கும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே யூ ரியூப் இணையத்தளம் இத்தகைய நெருக்கடியை எதிர்கொண்டு 64 பிட் சிஸ்டத்துக்கு மாறியிருந்தது.
0 comments:
Post a Comment