தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Monday, December 22, 2014

YOUTUBEஇல் வீடியோக்களை பார்க்க இனி இணைய இணைப்பு தேவையில்லை


கூகுள் நிறுவனம் தனது யு டியூப் பயன்பாட்டை இந்தியாவில் அதிகரிக்கும் வகையில் இணைய இணைப்பு இல்லாமல் வீடியோவை பார்க்கும் புதிய வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
வீடியோக்களை ஒன்லைன்னில் பார்க்கும் அவை 48 மணி நேரத்திற்கு சேமித்து வைக்கப்படும். அதன்படி எதிர்வரும் 48 மணிநேரங்களுக்கு இணைய இணைப்பு இல்லாமல் வீடியோக்களை பார்வையிட முடியும். ஆனால் Mobile App மூலம் பார்ப்பவர்களுக்கு மாத்திரமே இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இந்த வசதி காணப்படுகின்றது. இந்நிலையில் இந்தியாவிலும் இந்த வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து யு டியூப் அதிகாரி கூறுகையில் ”இந்தியாவில் மொபைல் மூலமாக யு டியூப் பார்ப்பது தற்போது 40 சதவீதமாக உள்ளது. இந்த புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் இதன் பயன்பாடு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் டேட்டா செலவு மிச்சமாவதோடு எந்த தடையும் இல்லாமல் திரும்ப திரும்ப வீடியோ பார்க்கலாம்” என்றார்.
மேலும், இணைய கட்டணங்கள் அதிகமாக இருப்பதால் மொபைலுக்கேற்ப வீடியோ அளவை குறைத்து செலவை குறைக்கவும் யு டியூப் திட்டமிட்டுள்ளது. உலகளவில் யு டியூபுக்கு இந்தியா 5ஆவது பெரிய சந்தையாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews