தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Monday, December 15, 2014

அமர்வதிலும் அக்கறை காட்டுங்கள்! -- உபயோகமான தகவல்கள்,


ம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் திறனிலும் அறிவிலும் அகிலத்துக்கே சவால்விடும் ஆட்களாகிவிட்டோம் நாம். புதிய மென்பொருள் எழுதுகிற அளவுக்கு கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை நாம் திறமையாகக் கையாண்டாலும், பார்வைப் பாதிப்போ, முதுகெலும்புப் பிரச்னையோ வராதபடி கம்ப்யூட்டர் முன்னால் எப்படி அமர்வது என்று நம்மில் பலருக்குத் தெரியாது


''கம்ப்யூட்டர் முன்பு நாம் அமரும் முறை சரியாக இருந்தால், கண் வலி, முதுகு வலி போன்ற பிரச்னைகளை நிச்சயமாகத் தவிர்க்க முடியும்!'' என்கிறார் ஸ்போர்ட்ஸ் மெடிசின் டாக்டர் கண்ணன் புகழேந்தி. செய்தியும் படங்களுமாக கம்ப்யூட்டரைக் கையாளும் பக்குவம் குறித்து இங்கே விளக்குகிறார்...

இருக்கையின் நுனிப் பகுதியில் அமர்வதும் தவறு. இதனால் தொடைப் பகுதியில் ரத்த ஓட்டம் தடைப்படும். தொடைப் பகுதியில் உள்ள தசைநார்கள் இறுகி இடுப்பு வலியும் உருவாகும். தொடந்து தசை நார்கள் இறுகிய நிலையில் இருந்தால், ஆக்ஸிஜன் கிடைப்பது தடைப்பட்டு தசை நார்கள் சுருங்கிய நிலையை அடைந்துவிடும்.
பாதம் முழுவதும் தரையில் அழுந்துமாறு உட்கார வேண்டும். கால் விரல்களின் நுனிப்பகுதி மட்டும் தரையைத் தொடும்படி அமர்வது தவறு. இதனால் காலின் பின் பக்கத்தசை இறுகி ரத்த ஓட்டம் தடைப்படும். இது கால் வலியை உண்டாக்கும். குதிகால் மட்டும் தரையில் படும்படி அமர்வதால் கால் கட்டை விரலிலும் கணுக்காலிலும் வலி ஏற்படும்.
'மடிக்கணினி’ என்றால் அதனை மடியில் வைத்தபடி வேலை செய்யவேண்டும் என்பது இல்லை. எனவே, குனிந்து பார்த்து வேலை செய்யக் கூடாது. இப்படி வேலை செய்வது தலைவலி, கண் வலி, கழுத்து வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.

முதுகுத்தண்டு எலும்பு முன்னோக்கி வளையாமலும், பக்கவாட்டில் வளையாமலும் அமர வேண்டும்.
கைப்பகுதியும் மணிக்கட்டும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.
கால் மூட்டுகளை அதிகப்படியாக மடக்கியோ நீட்டியோ இருக்காமல், தலைகீழ் 'லி’ வடிவத்தில் இருக்க வேண்டும்.
தாடையானது மேல் நோக்கியோ, கீழ் நோக்கியோ இல்லாமல் படத்தில் இருப்பது மாதிரி நேராக இருக்க வேண்டும்.

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews