தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Monday, December 15, 2014

போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறிவது எப்படி



உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு பல மின்னஞ்சல்கள் யார் அனுப்பினார்கள் என்றே தெரியாமல் வந்திருப்பதை அவதானித்திருப்பீர்கள். அப்படியான மின்னஞ்சல்கள் பற்றி பலர் கவலை கொள்வதே இல்லை. ஆனால் அப்படியான மின்னஞ்சல்கள் ஆபத்து நிறைந்தவை. அவற்றில் பல உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடும் நோக்கில் அனுப்பப்பட்டவையாக இருக்கும்.
இவற்றை அனுப்புவபர்கள் தமது பெயரை மறைத்தே அனுப்புவார்கள். இப்போது ஜிமெயில், யாகூ போன்ற பிரபல மின்னஞ்சல் வழங்குனர்கள் Spam Filters ஐ பயன்படுத்தி இவ்வாறான மின்னஞ்சல்களை இனங்கண்டாலும், அதையும் மீறி சில மின்னஞ்சல்கள் வரத்தான் செய்கின்றன.
Phissing எனப்படும் முறையை பயன்படுத்தி அனுப்பப்படும் போலி மின்னஞ்சல்கள் Spam Filters இன் கண்களில் இருந்து தப்பிவிடுகின்றன. கடந்த சில மாதங்களாக இவ்வாறான Phissing மின்னஞ்சல்கள் பரவலாக எல்லோருக்கும் வரத்தொடங்கியுள்ளன.
ஆகவே அடையாளம் தெரியாமல் வரும் மின்னஞ்சல்களை திறக்காமல் இருப்பதுதான் பாதுகாப்பு. அப்படி இல்லை கட்டாயம் திறந்து பார்க்க வேண்டும் என்றால் இருக்கவே இருக்கிறது ஒரு வழி
உங்களுக்கு வரும் மின்னஞ்சலின் முகவரியை இந்த தளத்தில் கொடுத்தால் அது பற்றிய சகல விபரமும் கொடுக்கிறார்கள்.
அது போலியாக இருந்தால் சிவப்பு நிறத்தில் அடையாளமிட்டு காட்டும். அருகில் உள்ள info என்பதை கிளிக் செய்தால் அந்த மின்னஞ்சல் முகவரி தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
இணையதள முகவரி
http://tools.email-checker.com/

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews