தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Monday, November 24, 2014

பேஸ்புக்கை பயன்படுத்துபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை

சமூக இணையத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவற்றை கவனிக்கும் முதலாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களின் முதலாளிகள் தங்களது ஊழியர்களை கண்காணிப்பதற்காவே பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர் என புளோரிடா சர்வதேச பல்கலைக்கழக ஆய்வாளர் Vanessa de la Llama தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், தமது ஊழியர்களைக் கண்காணிக்கவும், புதிய தொழிலாளர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் நிறுவனங்கள் இம்முறையை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பரிசோதனை செய்யும் போது பேஸ்புக் சுயவிபரத்தில் பொருத்தமற்ற படங்களைப் பார்த்தவுடனேயே, குறிப்பிட்ட ஊழியர்களைப் பற்றி தவறாக மதிப்பிட்டு அவர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை அல்லது புதியவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுதல் போன்ற சந்தர்ப்பங்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews