தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Tuesday, August 21, 2012

உங்கள் கணினி தொடர்ந்தியங்க 10 வழிமுறைகள்







கம்ப்யூட்டர் நம் வாழ்வின் இணையாக, தோழனாக, இன்றியமையாத ஓர் அங்கமாக மாறிவிட்டது. எம் உடல் நலனைப் பாதுகாப்பது போல இதனையும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது.


அதற்கான சில குறிப்புகள் 


01. ஆண்ட்டி வைரஸ்
கம்ப்யூட்டர் இயங்கும் போது எப்போதும் வைரஸ் தடுப்பு தொகுப்பு ஒன்று இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். கட்டணம் செலுத்தியும், இலவசமாகவும் இந்த தடுப்பு தொகுப்புகளைப் பெறலாம். இவற்றை அவ்வப்போது அப்டேட் செய்து வைத்தல் மிக முக்கியமானது. அப்போதுதான், அன்றாடம் உருவாகும் வைரஸ்கள் மற்றும் கெடுக்கும், தகவல் திருடும் தொகுப்புகளிலிருந்து நம் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கலாம். இலவச தடுப்பு திட்டங்கள் பல கிடைத்தாலும்,

கீழ்க்கண்டவை நிலையான நல்ல பயன்பாட்டைத் தருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

1. ஏவிஜி ஆண்ட்டி வைரஸ்(AVG Antivirus): http://www.avg.com/inen/liteproductavgantivirusfree

2. அவிரா பேசனல் பிரீ ஆண்ட்டி வைரஸ் (Avira Personal Anti Virus) http://www.freeav.com/en/download/1/download_avira_antivir_personal_free_antivirus.html.)

3.அவாஸ்ட் ஹோம் எடிஷன் பிரி ஆண்ட்டி வைரஸ் (Avast Home Edition Free Antivirus):http://www.avast. com/eng/avast_4_home.html)



02. பயர் வோல் 
ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளுடன், திருட்டுத்தனமாக நம் கம்ப்யூட்டர்களுக்குள் நுழைய வரும் புரோகிராம்களைத் தடுக்கும் பயர்வோல் அமைப்பினை, நம் கம்ப்யூட்டர்களில் அமைக்க வேண்டும்.

ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைப் போலவே, இணையத்தில் இலவச பயர்
வோல் தொகுப்புகளும் கிடைக்கின்றன. அவற்றில் சில:

1.ஸோன் அலார்ம் பிரீ பயர்வால் (Zone Alarm Free Firewall):http://www.zonealarm.com.

2.பிசி டூல்ஸ் பயர்வால் ப்ளஸ் (PC Tools Firewall Plus)http://www.pctools.com/firewall/
3.கொமொடோ இன்டர்நெட் செக்யூரிட்டி(Comodo Internet Security)http://personalfirewall. comdo.com/



03. நாள் பட்ட பைல் நீக்கம்
பாதுகாப்பு தொகுப்புகளை நிறுவிய பின், நாம் எப்படி எம் கம்ப்யூட்டருக்குக் கெடுதல் விளைவிக்கிறோம் என்பதனை எண்ணிப் பார்த்து, அவற்றை நீக்குதல் நலம் தரும்.

வெகுநாட்களாகப் பயன்படுத்தாத கோப்புகள், ஒரே பெயரில், பல ட்ரைவ்களில் சேமிக்கப்படும் வீடியோ, ஆடியோ மற்றும் சில ஆவணக் கோப்புகள், திருத்தி அமைத்த பின்னும், அதன் பழைய ஆவணக் கோப்புகள், இணையத்தில் செல்கையில் இறக்கப்படும் தற்காலிகக் கோப்புகள் எனப் பல கோப்புகளை நாம் ஹார்ட் டிஸ்க்கில் வைத்து, கம்ப்யூட்டரின் இயக்க வேகத்தை மட்டுப் படுத்துகிறோம்.

இதே போல் அழிக்கப்படும் பைல்கள் எப்போதும் ரீசைக்கிள் பின் நிறைந்து வழியும் வகையில் நிரப்புகிறோம். ஒரே சொப்ட்வயா அப்ளிகேஷன் சார்ந்த பழைய பதிப்புகளின் மூலக் கோப்புகளைத் தேவையில்லாமல் வைத்திருக்கிறோம்.

வாரம் அல்லது மாதம் ஒருமுறை இவற்றை நீக்கினால், கம்ப்யூட்டர் நலமாக, அதிகப் பயன்தரும் வகையில் இயங்கும்.



04. ரெஜிஸ்ட்ரி சுத்தம் செய்திடுக
தேவைப்படாத சொப்ட்வயா அப்ளிகேஷன்களை நீக்கினாலும், இவை ரெஜிஸ்ட்ரியில் ஏற்படுத்திய பல நூறு வரிகள், அப்படியே தங்கி, நம் இயக்க வேகத்தினைக் குறைக்கும். நாமாக இவற்றை நீக்க முயன்றால், ரெஜிஸ்ட்ரிக்குப் பாதிப்பு ஏற்பட்டு, இயக்க வேகம் குறையும். இவற்றை நீக்க இணையத்தில் இலவச ரெஜிஸ்ட்ரி கிளீனர்கள் கிடைக்கின்றன.

இவற்றில் சில கிடைக்கும் முகவரிகளை இங்கு காணலாம்.

1.ரெஜிஸ்ட்ரி மெக்கானிக் (Registry mechanic): http://www.pctools. com./registrymechanic)

2.ரெஜிஸ் ட்ரி ஈஸி (Registry Easy):http: //www.regeasy cleaner.com

3.ரெஜிஸ்ட்ரி பிக்ஸ் (Registry Fix):http ://www.registryfix. com




05. ஸ்பைவேர் தொகுப்பு இயக்குதல்
ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு மற்றும் பயர்வோல் தொகுப்புகளைப் போல, நம் கம்ப்யூட்டரில் நாம் அறியாமல் வந்திறங்கும், நம் பேசனல் தகவல்களைத் திருடும் ஸ்பைவேர் புரோகிராம்களைக் கண்டறிந்து நீக்கும் தொகுப்புகளையும் நாம் பதிந்து இயக்க வேண்டும்.

ஸ்பைவேர், மால்வேர், அட்வேர் எனப் பல பெயர்களில் இவை அழைக்கப்படுகின்றன. இந்த வகை புரோகிராம்களும் கம்ப்யூட்டர் இயக்கத்தினை மட்டுப்படுத்தும். தகவல்களைத் திருடும் பட்சத்தில், பெரிய அளவில் இழப்பையும் ஏற்படுத்தும்.

இலவச ஸ்பைவேர் புரோகிராம்கள் கிடைக்கும் தள முகவரிகள் கீழே தரப்படுகின்றன.

1. அட் அவேர் பிரீ (AdAware Free):http://www.lavasoft. com/ products/ad_ aware_free.php

2.ஸ்பைஸ்பாட் சர்ச் அண்ட் டெஸ்ட்ராய் (Spyspot Search & Destroy): http://www.safernetworking.org/en/ spybotsd/index.html

3. விண்டோஸ் டிபண்டர் (Windows Defender) http://www. microsoft. com/windows /products /winfamily/ defender/ default.mspx மேலே கூறப்பட்டுள்ள பலவகை இலவச புரோகிராம்களை டவுண்லோட் செய்திடும் முன், அவை குறித்து அந்த தளங்கள் தரும் குறிப்புகளைப் படிக்கவும். உங்கள் தேவைகளுக்கு எந்த புரோகிராம் உதவுமோ, உங்களிடம் உள்ள கம்ப்யூட்டரின் வடிவமைப்பிற்கு எது உகந்ததாக இருக்குமோ, அதனை டவுண்லோட் செய்திடவும்.




06. அற்றைப்படுத்துதல்(Updating)
கம்ப்யூட்டரைப் பாதுகாக்கும் புரோகிராம்கள் அனைத்தையும் அவ்வப்போது அன்றைய புதுப்பிக்கப்பட்ட வழிகளைக் கொண்டு அப்டேட் செய்திட வேண்டும். பொதுவாக இத்தகைய புரோகிராம்கள், உங்கள் கம்ப்யூட்டர் இணையத்தில் இணைக்கப்பட்டவுடன், தாமாகவே அவற்றின் தாய் தளம் சென்று, அற்றைப் படுத்தலுக்கான கோப்புகள் இருந்தால், சில உங்களுக்கு தகவல் தந்து, அனுமதி கேட்டு அப்டேட் செய்திடும். சில புரோகிராம்கள் தாங்களாகவே அப்டேட் செய்திடும். இதில் எது உங்களுக்குச் சரி எனத் தோன்றுகிறதோ, அதன்படி அவற்றை அமைத்து இயக்கலாம்.




07.ராம் நினைவகத் திறன் கூட்டல்
கம்ப்யூட்டர் இயக்கத்தில் மையமாக இயங்குவது ராம் மெமரி (RAM Memory) எனப்படும் நினைவகமாகும். இங்கு தான் நம் அப்ளிகேஷன் புரோகிராம்கள், நாம் தயாரிக்கும் பைல்கள் தங்கி இயங்குகின்றன.

நாம் கம்ப்யூட்டர் வாங்கும் போது போதுமானதாகத் தோன்றும் இவை, நாளுக்கு நாள் வரும் புதிய சாப்ட்வேர் தொகுப்புகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறும். இதனால் கம்ப்யூட்டர் இயக்கத்தின் வேகம் குறையும். எனவே, இந்த மெமரியின் கொள்ளளவினை அதிகப்படுத்த வேண்டும்.

உங்கள் கம்ப்யூட்டரில் என்ன வகை ராம் உள்ளது என்று கண்டறிந்து, எப்படிப்பட்ட ராம் மெமரி சிப்பை வாங்கினால், கம்ப்யூட்டரின் மதர்போர்டில் இணைக்க முடியும் என்று அறிந்து, அதனை வாங்கி இணைக்கவும்.




08. கோப்புகள் பாதுகாப்பு
கம்ப்யூட்டர்கள் எந்த நேரத்திலும் செயல் இழந்து முடங்கிப் போகும் என்பதால், நாம் அவற்றில் உருவாக்கும் முக்கிய கோப்புகளுக்கு, உபரி நகல் ஒன்று உருவாக்கி, அவற்றைப் பாதுகாப்பாக பதிந்து வைக்க வேண்டும். சிடி, டிவிடி, பிளாஷ் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க்கின் இன்னொரு ட்ரைவ் எனப் பலவகைகளில் இந்த செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.




09. தூய்மைப்படுத்தல்
இப்போதெல்லாம், மூடிய குளிரூட்டப்பட்ட அறைகளில் மட்டுமே கம்ப்யூட்டர் இயக்கப்படுவதில்லை. சாலை ஓரங்களில் இயங்கும் பலசரக்கு கடைகளில் பாருங்கள். கிலோ கணக்கில் பறக்கும் தூசுகளுக்கு நடுவே தான் இவை இயக்கப்படுகின்றன.

வீடுகளிலும் தூசுகளுக்கு நடுவே தான் இவை இயங்குகின்றன. எனவே எந்த அளவிற்கு தூசு அதிகமோ, அவ்வளவு குறைந்த நாட்கள் இடைவெளியில், கம்ப்யூட்டரைத் தொடர்ந்து சுத்தப்படுத்த வேண்டும். கீ போர்டு, சிபியு, மதர்போர்டு உள்ள டவர், மவுஸ், ஸ்கேனர், பிரிண்டர் என அனைத்தையும் சுத்தப்படுத்த வேண்டும்.




10. தொடர் மின் வழங்கல்
மின்சாரம் அடிக்கடி நிறுத்தப்படுவதால், கம்ப்யூட்டர்களின் இயக்கம் திடீரென நின்று போகும். இது கெடுதலை விளைவிக்கும். எனவே நல்ல யு.பி.எஸ். ஒன்றுடன் இணைத்து மட்டுமே கம்ப்யூட்டரை இயக்க வேண்டும்.

கம்ப்யூட்டர்களின் இயக்கத்தை எப்போதும் முறைப்படி நிறுத்த வேண்டும். அவசரமாக செல்ல வேண்டும் என்பதற்காக, அதற்கு மின் இணைப்பு தரும் சுவிட்ச் ஆப் செய்யக் கூடாது.

Sunday, August 19, 2012

பிளாக்கர் : தளத்தில் ஓடும் எழுத்துக்களை அழகாகக் காட்ட




HTML_Tamil_Marquee_style_letters

நமது இணைய தளத்திலோ அல்லது ப்ளாக்-கிலோ பலரையும் கவரும் படி ஓடும் எழுத்துக்களை கொண்டு வந்திருப்போம் ....

இந்த எழுத்துக்களை ஹச்.டி.எம்.எலில் marquee என்னும் tag -ஐ கொண்டு
இது போன்ற எழுத்துகளை நாம் கொண்டு வர முடியும் ..


வலது பபுறத்தில் இருந்து இடது புறத்திற்கு ...மற்றும் இடது புட்டத்தில் இருந்து வலது புறத்திற்கும் .... மேலே இருந்து கீழும் ...கீழிருந்து மேலும் கொண்டு வருவதை அனைவரும் அறிந்திருப்பீர்கள் ..

இன்று நாம் பார்க்க போவது ஓடும் எழுத்துக்களை அழகாக எப்படி காட்டலாம்

என்று ....

முதலில் சாதாரணமாக எப்படி கொண்டு வருவது என்று பார்போம் .

எழுத்துக்கள் இடது புறத்தில் இருந்து வந்து வலதுபுறத்தில் நின்று விடும் ..

இது Slide வகை : 

left
">Your slide-in text goes hereleft- என்பதற்கு பதிலாக right ---- up--- down என்றெல்லாம் கொடுத்தால் அதற்கேற்ப மேலும் ,கீழும் ,முன்னும் ,பின்னும் வரும் ..

Your slide-in text goes hereஇது ஓடிக்கொண்டே இருக்கும் 

Your scrolling text goes here


Your scrolling text goes here

அடுத்த வகை இரு புறமும் முட்டி கொண்டே இருக்கும் ..


Your bouncing text goes here
Your bouncing text goes here

இனி .... அழகாக காட்ட ..


நண்பர்கள் இந்த தளத்தை தொடர கிளிக் செய்யவும் இங்கே .
நண்பர்கள் இந்த தளத்தை தொடர கிளிக் செய்யவும் இங்கே.

தேவையான இடத்தில் கீழே உள்ள கோடிங்கை PASTE செய்யவும் ...









நண்பர்களே இந்த தளத்தை தொடர   இங்கே .


கிளிக் செய்யவும்  links.

பச்சை நிறத்தில் வருவதற்கு :


நண்பர்கள் இந்த தளத்தை தொடர கிளிக் செய்யவும் இங்கே .
நண்பர்கள் இந்த தளத்தை தொடர கிளிக் செய்யவும் இங்கே.

தேவையான இடத்தில் கீழே உள்ள கோடிங்கை PASTE செய்யவும் ...





நண்பர்கள் இந்த தளத்தை தொடர கிளிக் செய்யவும்  இங்கே .


நண்பர்கள் இந்த தளத்தை தொடர கிளிக் செய்யவும் இங்கே.





நண்பர்கள் இந்த தளத்தை தொடர கிளிக் செய்யவும் இங்கே .
நண்பர்கள் இந்த தளத்தை தொடர கிளிக் செய்யவும் இங்கே.
இந்த (மேலே) நிறத்தில் வருவதற்கு :






நண்பர்கள் இந்த தளத்தை தொடர கிளிக் செய்யவும்  இங்கே .


நண்பர்கள் இந்த தளத்தை தொடர கிளிக் செய்யவும் இங்கே.




மேலும் இந்த MARQUEE பயன்கள் :

--- இந்த தொட்டவுடன் நின்று விடும் ..

----600PX ; அளவு அகலம் கொண்டது ..

நன்றி .....

சமூகத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள் ..

சந்தேகம் இருந்தால் கண்டிப்பாக கேட்கவும் ...

Tuesday, August 14, 2012

உங்கள் கணினியின் மெமரியை அதிகரிக்க ஓர் இலவச மென்பொருள்-Free Memory Improve Master







நம் கணினியின் வேகத்தை நிர்ணயிப்பதில் நம்முடைய கணினியின் Ram முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் கணினியில் ஒரே நேரத்தில் பல எண்ணற்ற வேலைகளை செய்து கொண்டு இருப்போம். ஒரு பக்கம் அலுவலக வேலை பார்ப்போம், இன்னொரு விண்டோவில் நம்முடைய வலைப்பதிவை பார்த்து கொண்டிருப்போம். அப்படி செய்து கொண்டு இருக்கும் போது நம் கணினியின் வேகம் மெமரி அதிகமாக உபயோக படுத்தப்படும். நம் கணினியும் வேகம் குறைந்து காணப்படும். இந்த குறைகளை தீர்க்கவே இந்த பதிவு.

http://www.box.net/shared/05v35tvo0q இந்த முகவரியினூடாக சென்று இந்த மென்பொருளை Download செய்யுங்கள். இந்த மென்பொருளை நீங்கள் Install செய்து விட்டால் போதும். உங்கள் கணினியில் நீங்கள் எத்தனை ப்ரோக்ராம் ஒரே நேரத்தில் இயங்கினாலும் அதன் மெமரியை கட்டு படுத்தி உங்கள் கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும்.
டவுன் லோட் செய்தவுடன் எமக்கு வந்திருக்கும் free-mim என்ற Setup பைல் வந்திருக்கும். அதை இரண்டு முறை கிளிக் செய்து மென்பொருளை Install செய்து கொள்ளுங்கள். மென்பொருளை Install செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

                             



இதில் நான் மேலே குறிப்பிட்டு காட்டி இருக்கும் இடத்தில் இந்த மென்பொருளின் வசதிகள் இருக்கும். இதில் ஐந்து வகையான பிரிவுகள் நமக்கு தெரியும்.
  • Information Overview
  • Memory Optimization
  • System Tuneup
  • Process Management
  • Configuration and Settings - என்ற பிரிவுகள் காணப்படும்.

Information Overview : 

இந்த பட்டினி கிளிக் செய்தவுடன் எமக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.

                             


இந்த பிரிவில் நம் கணினி இப்பொழுது எவ்வளவு மெமரி உபயோக படுத்தபடுகிறது என்ற விவரம் இதில் நமக்கு தெரியும். இந்த விண்டோவில் உங்களுக்கு கீழே Good என்ற இது போல செய்தி வந்தால் உங்களுடைய கணினி போதிய அளவு மெமரி காலியாக உள்ளது என்று அர்த்தம்.

Memory Optimization 
இந்த பிரிவில் சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

                            
  • இந்த விண்டோவில் Fast Free, Deep Compress என்ற இரு வசதிகள் இருக்கும் இவை இரண்டுமே நம் கணினியின் மெமரியை கட்டு படுத்த உதவும் வசதிகளாகும்.
  • இதில் உள்ள Fast Free என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழே ஒரு மெசேஜ் விண்டோ வரும்.
  • அதில் உங்களுடைய கணினி இதற்கு முன்னர் எவ்வளவு மெமரியை உபயோகித்தது. இப்பொழுது இந்த மென்பொருள் எவ்வளவு மெமரியை கட்டு படுத்தி உள்ளது என்ற விவரம் வரும்.
                                
  • இதை நீங்கள் ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டியதில்லை ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் அது தானாகவே இயங்கி நம் கணினியின் மெமரியை கட்டுபடுத்தும்.
  • இடைவெளி நேரத்தை மாற்ற விரும்பினால் அதற்கு கீழே உள்ள Auto Free every என்ற இடத்தில் உங்களுடைய நேரத்தை தேர்வு செய்து Save செய்து விடுங்கள்.
  • அடுத்து உள்ள மூன்று பிரிவுகளும் மென்பொருளின் அமைப்பை சரிசெய்வதற்கும் , நம் கணினியில் எந்த பைல்கள் எவ்வளவு மெமரியை உபயோகித்து கொள்கிறது போன்ற தகவல்கள். கண்டிப்பாக உங்கள் கணினி முன்பை விட வேகமாக இயலும்.

Monday, August 13, 2012

கணினியில் ஏற்படும் சிக்கலுக்கு உதவி கேட்கும் முன் ....




                                   


கணினி ஒன்றை வைத்துக் கொண்டு இயக்குவது நமக்கு மகிழ்ச்சியையும் ,ஏன் சில வேளைகளில் பெருமையையும் தரும் விசயமாகும் . அனால் பிரச்சனை ஏற்படுகையில் ,சிஸ்ரம் கிராஷ் ஆகையில் நாம் கணினி கொடுத்த நிறுவனத்திடம் ,அல்லது ஆண்டு பராமரிப்பினை ஏற்றுக் கொண்ட அமைப்பிடம் ஆலோசனை கேட்டு செயற்பட வேண்டியுள்ளது. 

கணினி இயக்கத்திற்கான ஆலோசனை அல்லது தீர்வினைத் தருபவர்கள் கூடுமானவரை நம்மிடம் கணினி இயங்கிய விதம் ,எந்த நிலையில் பிரச்சினை வந்தது அல்லது வருகிறது, போன்ற கூடுதல் தகவல்களை போநோலையே கேட்டு தீர்வு வழங்க முயற்சிப்பார்கள். நம்மால் பல வேளைகளில் அவர்கள் கேட்கும் தகவல்களை உடனே தர இயலாது. அல்லது சரியாக விளக்கம் சொல்ல முடியாமல் தவிப்போம் .எனவே கணினி சிக்கல் குறித்து ,சார்ந்த நிறுவனத்திற்கு தொலைபேசியில் தகவல் தரும் முன் நாம் எப்படித் தயார் செய்து கொள்ள வேண்டும் எனப் பார்ப்போம். இதன் மூலம் நமக்கும் கணினிபராமரிப்பு நிறுவனத்திற்கும் இடையே பிரச்சனைகள் வராமல் தவிர்க்கலாம். 
  1. பிரச்சினை குறித்து போன் செய்திடும் முன் ,சிக்கல் குறித்து எவ்வளவு தகவலை கைவசம் வைத்துக்கொள்ள முடியுமோ ,அவ்வளவு தகவல் களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும். உங்கள் கணினியின் சீரியல் எண்.இது சி பி யு வின் பின்னால் ஒட்டப்பட்டிருக்கும் சிறிய லேபிளில் இருக்கும் .மேலும் நீங்கள் பயன்படுத்தும் அப்ளிகேசன் புரோக்கிராமின் சீரியல் எண்கள் அல்லது புராடக்ட் எண்களும் கைவசம் இருப்பது நல்லது. இவற்றைத் தெரிவிப்பதன் மூலம் ,நிறுவனத்தில் உள்ள டெக்னீசியன்கள் ,பிரச்சனைகளின் தன்மையை எளிதாக உணர்ந்து தீர்வுகளைத் தர இயலும்.விண்டோஸ் ஒப்பரேடிங் சிஸ்ரம் பயன்படுத்துவதாக இருந்தால் ,எந்த சிரம் ,எந்த பதிப்பு என்ற தகவல்களும் தேவைப் படலாம் . நீங்கள் ஏதேனும் வன்பொருள் அல்லது மென்பொருள் தொகுப்புக்களை பயன்படுத்துகையில் பிரச்சனை ஏற்பட்டது என்றால் ,உண்மையான தரவுகளை தரவும் எதையும் மறப்பது சரியல்ல. நீங்கள் பெற்ற எரர் மெசேஜ் என்ன?. இதனை தெளிவாக நீங்கள் தர வேண்டும். பூசி மெழுகுவது போல சொல்லக் கூடாது. எனவே இத்தகைய எரர் மெசேஜ் கிடைக்கையில் அதனை அப்படியே திரையில் வைத்தபடி எழுதி வைக்கவும். அல்லது அதனை பிரின்ட் ஸ்கிரீன் கீ அழுத்தி பட பைலாக அமைத்து கஸ்ரமர் கேர் இமெயில் இருப்பின் அனுப்பலாம். அல்லது அவற்றை அப்படியே படித்து சொல்லலாம். பிரச்சனையைத் தீர்க்க நீங்கலாக என்ன ஸ்ரெப் எடுத்தீர்கள் என்று அவர்களிடம் மறைக்காமல் சொல்லவும்.
  2. குறைதீர்க்கும் பிரிவிற்கு -போன் செய்யும் முன் அவசரத்தில் படபடப்பில் பேச வேண்டாம். அல்லது நீங்கள் வேறு வேலையில் மும்முரத்தில் இருக்கும் போது பேச வேண்டாம் .எனவே முழுமையாக உங்களால் கவனம் செலுத்தி பேச முடியும் என்றாலே போன் செய்திடவும். 
  3. எந்த நிலையிலும் எதிர் முனையில் பேசுபவர்களைக் கேலி செய்வதோ அவர்கள் இயலாதவர்கள் என்றோ பேச வேண்டாம். சில நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் இது போல பேசினால் ,தொலைபேசியை அப்படியே எந்த பதிலும் கூறாமல் வைத்து விடுங்கள் என்று கூறி விடுவார்கள். எனவே எதிர்முனையில் பதில் அளிப்பவர் நாள் முழுதும் இது போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் பணியில் உள்ளவர் எனவே நமக்கு உள்ள பிரச்சனையை நன்கு உணர்ந்து கொள்ளும் சூழ்நிலையில் உள்ளவர் என்ற அடிப்படையில் பேசவும். 
  4. யார் பேசினார்கள், என்ன பிரச்சனை என்ற விபரங்களையெல்லாம் பதிந்து வைக்குமாறு குறை தீர்க்கும் மையத்தில் பணிபுரிபவர்களுக்கு ஆலோசனை தரப்பட்டிருக்கும். மேலும் குறை கூறும் அழைப்பு உங்களிடமிருந்து தானா என்பதை உறுதிப்படுத்த உங்ககள் பெயர் , தொலைபேசி எண் ,இமெயில் முகவரி ஆகியவற்றைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வார்கள்.ஏனென்றால் யார் வேண்டுமானாலும் அவர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லவா?.எனவே இந்த தகவல்களை முழுமையாகக் கூறவும் .
  5. குறை தீர்க்கும் மையத்தில் இருப்பவர்கள் ,கணினி குறித்து ஒன்றுமே தெரியாதவர்கள் முதல் வல்லுனர்கள் வரையிலானவர்களுடன் தொடர்பு கொள்பவர்களாக இருப்பார்கள் எனவே கணினி குறித்து என்ன தெரியுமோ ,அதனை மட்டும் தெரிவிக்கவும் .எல்லாம் தெரிந்த மாதிரியோ காட்ட முயற்சிக்க வேண்டாம். 
  6. மையத்தில் உள்ள வல்லுனர்கள் கூறுவதைப் பொறுமையாகக் கேட்கவும். அதுதான் எனக்குத் தெரியுமே என்று அறிவாளிக் கொமடிஎல்லாம் தவிர்த்துவிடுங்கள். அவர்கள் சொல்வதை நன்றாகக் கேட்டுக் கொண்டால் ,நிறைய பயனுள்ள தகவல்கள் கிடைக்கும். 
  7. தேவையற்ற தகவலைக் கேட்டு தொந்தரவு செய்திட வேண்டாம். ஒரு கீ கழன்று விடுவது போல் உள்ளது. இந்த சொப்ட்வயர் டிஸ்கவுண்டில் கிடைக்குமா என்பது போன்ற தகவல்களுக்கெல்லாம் அவர்கள் பதில் கூற மாட்டார்கள்.மேலும் உங்களைப் போல பிரச்சனைக்குள்ளானவர்கள் பலர் அவர்களிடம் வழி கேட்க காத்திருப்பார்கள். 
  8. உங்களுடன் பேசத் தொடங்கும் நபர் ,முதலில் தன் பெயரைக் குறிப்பிட்டே பேசுவார். அவரின் பெயரை அவரிடமே கூறி ,அது சரியானதா என்று உறுதி செய்து ,பெயரை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மீண்டும் தொடர்பான தகவல் கிடைக்க இது வழி வகுக்கும். 

Saturday, August 11, 2012

Cookies என்றால் என்ன?

பல வினாக்கள் கொண்ட ஒரு இணையதளத்தைப் பார்வையிடுகிறீர்கள். முதல் வினா முதல் பக்கத்திலும் இரண்டாவது மூன்றாவது வினாக்கள் அடுத்தடுத்த பக்கங்களிலுமுள்ளதாக வைத்துக் கொள்வோம்.
இரண்டாவது பக்கதிற்குச் செல்லும்போது முதல் பக்கத்தில் இருந்த கேள்விக்கான விடையைத் தெரிவு செய்தவரே இரண்டாம் பக்கத்தை தற்போது பார்வையிடுகிறார் என்பதை அந்த இணைய தளம் சேமிக்கப்பட்டுள்ள வெப் செர்வர் அறிந்து கொள்கிறது.
இவ்வாறு பல இணைய பக்கங்களிலுள்ள கேள்விகளுக்கு பதிலளித்த பின்னர் கடைசியாக அனைத்து விடைகளுக்குமான புள்ளிகளை மொத்தமாக சொல்லி விடுகிறது அந்த இணைய தளம். இது எவ்வாறு சாத்தியம்?
மேற் சொன்ன செயற்பாட்டின் போது வெப் சேர்வருக்கு உதவுகிறது நமது கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் ஒரு சின்னஞ் சிறிய டெக்ஸ்ட் பைல். இதனையே குக்கீ எனப்படுகிறது.
சில இணைய தளங்களைப் பார்வையிடும்போது அந்த வெப் சேர்வர் ஒரு குக்கீ பைலை உமது கணினியின் ஹாட் டிஸ்கில் சேமித்து விடுகிறது. இதன் மூலம் அந்த குக்கீ பைலுக்குரிய நபர் நீங்கள் தான் என்பதை சேர்வர் நினைவில் கொள்ளும்.
இங்கு குக்கீ பைல் ஒரு அடையாள அட்டை போல் செயல்படுகிறது. மீண்டும் ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட தளத்தைப் பார்வையிடும்போது உங்கள் வெப் பிரவுசர் அந்த குக்கீயை சேர்வருக்கு அனுப்பி விடுகிறது.
இதன் மூலம் வெப் செர்வர் அந்த இணைய தளத்தில் நுளைந்திருப்பது முன்னர் வந்து போகும் நபர்தான் என்பதை உறுதிப் படுத்திக் கொள்வதோடு அந்த இணைய தளத்தில் எந்த ஒரு பக்கத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாலும் உங்களை சேர்வர் இனங காணும்
முன்னர் பார்வையிட்ட ஒரு இணைய தளத்தை மறுபடியும் பார்வையிடும்போது குக்கீஸ் நமக்கு உதவுகின்றன. உதாரணமாக ஒரு பயனர் பெயரை குக்கீ பைலாக நமது கணினியில் சேமித்தவுடன் அந்த பயனருக்குரிய பாஸ்வர்ட், இமெயில் முகவரி, தற்போதைய தேர்வுகள் போன்ற வேறு விவரங்களை சேர்வரில் உள்ள தரவுத் தளத்தில் பதியப்பட்டு விடும்..
அந்த குக்கீயில் பதியப்பட்ட பயனர் பெயரைக் கொண்டு அவரின் பாஸ்வர்டை மறுபடியும் டைப் செய்யாமலேயே அவர் பற்றிய விவரங்கள அறிந்து கொள்கிறது, இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட இணைய தளத்திற்குள் ஒருவரின் செயற்பாட்டை அறிந்து கொள்ளவும் நேரத்தை சேமிக்கவும் முடியுமாயுள்ளது.
அவ்வாறே இணையம் மூலம் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போதும் (online shopping) அந்த தளங்கள் உங்களைப் பற்றிய விவரங்களை குக்கீஸில் போட்டு விடுகிறது. இதன் மூலம் அந்த தளங்களை மறுபடியும் பார்வையிடும்போது உங்கள் பெயர் விவரங்களை மறுபடியும் வழங்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
குக்கீஸ் இனையத்தில் உங்கள் செயற்பாட்டை அவதானிக்கவே உருவாக்கப்படுகின்றன.. ஒரு குக்கீயை உருவாக்கும்போது அவ்விணைய தளத்தின் பெயரும் அந்த குக்கீயில் பதிவாகிவிடும். . அதன் மூலம் அந்த குக்கீயைத் திறந்து பார்க்க அவ்விணைய தளத்திற்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும்.
ஏனைய தளங்களால் அந்த குக்கீயைப் பார்வையிட முடியாது.
சில இணைய தளங்கள் வியாபார நோக்கம் கொண்ட நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்ந்து அவர்களின் குக்கீகளை நமது கணினியில் சேமித்து விடும். இவை மூன்றாம் தரப்பு குக்கீ (Third party cookies) எனப்படும்.
இதன் மூலம் அவ்வியாபார நோககம் கொண்ட நிறுவனங்கள் தங்கள் குக்கீகளை பயன்படுத்துவோரின் இணைய் செயற்பாட்டை அவதானிப்பதோடு அவர்களை இணையத்தில் பின் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
அதாவது நீங்கள் எவ்வாறான இணைய பயனர், உங்கள் விருப்பு என்ன, எவ்வகையான பொருட்களை இணையத்தின் வ்ழியே கொள்வனவு செய்கிறீர்கள போன்ற விவரங்களைப் பெற்றுக் கொள்ளும்.
எடுத்துக் காட்டாக ஒரு இணைய் தளத்திலிருந்து ஒரு டிஜிட்டல் கேமராவை வாங்கி விடுகிறீர்கள். அப்போது குக்கீயைப் பகிர்ந்து கொள்ளும் வேறு நிறுவன இணைய தளங்களும் கேமரா போன்ற வேறு இலத்திரனியல் சாதனங்களை உங்களுக்கு விற்பனை செய்ய முயலும்.
ஒரு இணைய தளத்தில் இமெயில் முகவரியை வழங்கும் போது அதன் சக நிறுவனங்களும் அதனை அறிந்து கொண்டு நீங்கள் கேட்காமலேயே உங்களுக்கு வேண்டாத குப்பை அஞ்சல்களையெல்லாம் உங்களுக்கு அனுப்பி விடும். உங்களைப் பற்றி இவர்கள எப்படி அறிந்து கொண்டார்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்.
குக்கீஸ் என்பவை மிகச் சிறிய டெக்ஸ்ட் பைல்களே. இவை .txt எனும் பைல் நீட்டிப்பைக் கொண்டிருக்கும். அது ஹாட் டிஸ்கில் சேமிக்கப்பட் டிருக்கும். விண்டோஸில் குக்கீ பைல்கள் c - சீ ட்ரைவில் Documents and Settings போல்டரில் உள்ள பயனர் கணக்கிற்குரிய Cookies போல்டரில் சேமிக்கப்பட்டிருக்கும்.
எனினும் இவற்றால் கணினிக்கு எந்த வித பாதிப்பம் ஏற்படாது. இவை வெறும் டெக்ஸ்ட் பைல்களேயன்றி .இதன் மூலம் வைரஸை கணினியில் பரவச் செய்திட முடியாது. நீங்கள் ஒரு இணைய தளத்தில் வழங்கிய தகவல்களை அந்த இணைய தளம் மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்து கொள்ளாதவரை குக்கீஸால் எந்த வித பாதிப்பும் இல்லை.
இணைய தளங்கள் உங்களைப் பற்றிய விவரங்களை நினைவில் வைத்திருக்க குக்கீஸ் உதவுவதால், உங்கள் கணினியை உபயோகிக்கும் வேறொரு நபரால் நீங்கள் ஏற்கனவே பார்வையிட்ட இணைய தளங்களைப் பர்வையிட வழி கிடைத்து விடுகிறது.
குக்கீஸ் மேல் உங்களுக்கு நம்பிக்கையில்லையானால் அதனை அனுமதிக்காது விடலாம் அல்லது குக்கீஸ் எனும் வசதியை வெப் பிரவுசரிலிருந்து முடக்கி விடலாம். எனினும் இவ்வாறு செய்வதால் வேறு சில வசதிகளைப் பெற முடியாது போய்விடும்.
சிலர் தங்கள் கணினியில் பதிவாகியிருக்கும் குக்கீஸை அவ்வவப்போது அழித்து விடுவதும் உண்டு. இவ்வாறு அழிப்பது சில வேளை சிக்கலை ஏற்படுத்தவும் கூடும். ஏனெனில் சில தளங்கள் குக்கீஸ் இல்லாது தமது தளத்தை அணுக விடாது..
அனேகமான வெப் பிரவுசர்களில் குக்கீஸைக் கட்டுப் படுத்துவத்ற்கன வசதியுள்ளது., இதன் மூலம் குறிப்பிட்ட சில பாதுகாப்பான இணைய தளங்களிலிருந்து மட்டும் குக்கீஸை அனுமதிக்கலாம்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் குக்கீகளை எவ்வாறு தடுப்பது?
இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் Tools மெனுவில் Internet Options தெரிவு செய்யுங்கள். அங்கு Privacy டேபின் கீழ் ஸ்லைடர் கொண்டு குக்கீ அளவினைக் கட்டுப்படுத்தலாம்.
Block All Cookies, High, Medium High, Medium, Low, Accept All cookies என ஆறு தெரிவுகள் இருக்கும். (Block All Cookies) தெரிவு செய்வதால் அனைத்து குக்கீகளையும் தடுக்க முடியும்.. இத்தகைய செயலமைப்பால், எந்தவொரு இணைய தளமும் கணிணிக்குள், குக்கீகளை உட்புகுத்தி சேமிக்க இயலாது.
அனைத்து குக்கீகளையும் தடுத்தால், மிகுதியான இணைய தளங்களை பார்வையிடுவதை தடுக்க நேரிடும்.. அடுத்த இரண்டு நிலைப்பாடுகளான, உயர்வு (High), மிதமான உயர்வு (Medium High), ஆகியவை மிக்க பொருத்தமானவையாகும். மேலும் ஒரு குறிப்பிட்ட தளத்திற்கான குக்கீயை மட்டும் தடுக்கவும் இயலும்.
பழைய குக்கீகளை நீக்கல்
முன்பு ஹாட்டிஸ்கில் சேமிக்கப்பட்ட குக்கீகளை அகற்றும் வரை அவற்றைப் படிக்க இயலும். அனைத்து குக்கீகளையும் அகற்றுவதற்கு, இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் Tools மெனுவில், Internet Options தேர்ந்தெடுக்கவும்.
General டேபின் கீழ் Temporary Internet Files பகுதியில், Delete Cookies என்பதை தேர்ந்தெடுத்து ஓகே சொல்லி விடுங்கள்

Wednesday, August 8, 2012

பிளாக்கர் : அழகான கலர் கலரான மெனு பார்கள் ( வலைப்பூக்களுக்கு )




Colormenusபிளாக்கர் தளங்களில் ஆரம்பித்த உடனே சாதாரணமாகவே அவர்கள் டெம்ப்ளேட் ..., விட்ஜெட் , மெனு பார்கள் , மேலும் அந்த வார்ப்புருகளை நமக்கேற்ற படிக்க அமைக்க வார்ப்புரு வடிவமைப்பான் நமக்கு இலவசமாக

வழங்கி மேலும் நமக்கான இலவச எத்தனை இடுகைகள் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம் என்ற சுதந்திரத்தையும் கூகிளின் பிளாக்கர் தளம் வழங்குகிறது ,.மேலும் நமக்கு சாதாரணமாக உள்ள வார்ப்புரு பிடிக்கவில்லை
தனிபயன் வார்ப்புருவை பயன்படுத்தி கொள்ளலாம் .. இதில் நாம் கஷ்டம் டெம்ப்ளேட் நிறுவி இருந்தாலும் சில விட்ஜெட் ,சில மூன்றாம் தரப்பு குறியீடுகளை பிளாக்கர் டெம்ப்ளேட்-டோடு இணைப்போம் ..

இன்று நாம் பார்க்க போவது பிளாக்கர் தளத்திற்கு தேவையான அல்லது அழகான மெனு பார்கள் ..

கீழே வரும் சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் இது போன்ற மெனு பார்களை பெறலாம் ..

ஒரே படியில் இணைக்க :


DESIGN- ADD A GEDJET - HTML & JAVA SCRIPT தேர்வு செய்து அங்கு PASTE செய்யவும்













  • LINK HERE
  • ">TEXT HERE


  • http://nasalab4.blogspot.in/
  • ">பிளாக்கர்
  • http://nasalab4.blogspot.in/
  • ">HTML
  • http://nasalab4.blogspot.in/
  • ">INTERNET
  • ALL POST

  • LINK HERE
  • ">TEXT HERE





    குறிப்பு : LINK HERE மற்றும் TEXT HERE என்னும் இடத்தில் லிங்க்-கையும்

    டெக்ஸ்ட் -டையும் கொடுத்து விட வேண்டியது தான் ..

    மேலும் பகுதிகள் தேவைப்பட்டால்

  • LINK HERE
  • ">TEXT HERE

    இந்த கோடிங்கை என்பதற்கு முன்னே இணைத்து கொள்ளவும்


    சரி எப்படி இருக்கும் இந்த வகையான மெனு பார்கள் :





    மெனு பார் பிடித்திருந்தால் உங்கள் வலைப்பதிவில் (வலைப்பூ ) இணைத்து கொள்ளுங்கள்
    Read more at http://mjmrimsi1.blogspot.com/2013/03/blog-post_7632.html#32hb064L54vBXfb2.99

    Tuesday, August 7, 2012

    பழுதான சிடி/டிவிடியிலிருந்து ஆடியோ மற்றும் வீடியோவை மீட்க இலவச மென்பொருள்

    இரண்டாம் நிலை சேமிப்புச்சாதனமான சிடி/டிவிடி என்பது நம்மிடம் உள்ள கோப்புகளை, படங்களை ஏனைய தகவல்களைப் பதிந்து வைக்க சிறந்த ஒன்றாகும். ஆனால் எதில் தான் சிக்கல் இல்லை? பதிந்த சிடிக்களை பத்திரமாக வைத்திருப்பது தான் பெரிய தலைவலி. சில நேரம் ஒரே இடத்தில் வைத்திருந்தால் கூட எப்படியாவது பழுதாவதற்கு வாய்ப்புகள் அதிகம் தான். சிடியின் தகவல் எழுதப்பட்ட பகுதியில் ஏதேனும் கோடுகள், சிராய்ப்புகள் (scratches) பட்டு நமது தகவல்கள் காணாமல் போய்விடும்.

    ஆனால் முக்கியமான தகவல்கள் ஏதேனும் இருப்பின் பழுதடைந்த சிடியிலிருந்து தகவல்களை ஒரளவாக நல்ல நிலையில் எடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும். ஏற்கனவே எழுதிய பதிவொன்றில்
    பழுதான சிடி/டிவிடியிலிருந்து தகவல்களைப் பிரித்தெடுக்க இலவச மென்பொருள்கள்
    பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

    அதைப்போல பழுதான சிடியிலிருந்து வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகளை மட்டும் பிரித்தெடுக்கும் இலவச மென்பொருள் தான் Get My videos Back . இந்த மென்பொருள் சிறப்பான முறையில் பெரும்பாலான தகவல்களை மீட்டுத்தருகிறது. (Recovering data) இதன் மூலம் வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகளை பழுதானவற்றிலிருந்து கணிணிக்கு சேமித்துக் கொள்ளலாம்.

    Source என்பதில் பழுதான சிடியுள்ள இடத்தையும் Target என்பதில் எங்கு சேமிக்கப்பட வேண்டும் என்பதையும் தேர்வு செய்து Open start என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும். தகவல்களை மீட்டெடுக்கும் போது அதன் காப்பி செய்யும் செயல்பாட்டை நமக்கு காட்டுகிறது.

    இந்த மென்பொருள் ஒரு கட்டற்ற சுதந்திர மென்பொருளாகும் (Open source). Avi, mkv, mp3 போன்ற முக்கிய வீடியோ வகைகளை இந்த மென்பொருள் ஆதரிக்கின்றது.


    தரவிறக்கச்சுட்டி : Download Get My Videos Ba

    3D இன்ரநெட்





    ஐ,பி,எம் .நிறுவனம் அதன் ஆய்வுப் பணிகளுக்காக புகழ் பெற்றது. ஒரு காலத்தில் கணினியோடு அறியப்பட்ட இந்நிறுவனம் ,கணினி யுகத்தில் அந்தப் பெருமையை இழந்துவிட்டாலும் ,தன்னுடைய ஆய்வு முயற்சிகள் மூலம் தொழில்நுட்ப உலகில் தன்னுடைய இடத்தை தக்கவைத்துக் கொண்டு இருக்கிறது.

    ஆய்வுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஐ.பி.எம் .உலக மாற்றக் கூடிய 5 தொழில்நுட்பங்கள் பற்றி தன்னுடைய இணையதளத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

    உடனடி மொழி பெயர்ப்பு சொப்ட்வேர் ,3டி இன்டர்நெட் ,மனதை அறியும் பொங்கல் என மிகவும் சுவாரஸ்யமான இந்து விபரிக்கிறது. இதில் முதலில் வருவது எங்கிருந்தாலும் சிகிச்சை பெறக்கூடிய வசதியாகும். வயர்லெஸ் தொழில்நுட்பம் மேம்பட்டு வருவதும் ,புகைப்படம் சார்ந்த தகவல்களை இன்ரநெட் மூலம் அனுப்பி வைப்பதும் ,மருத்துவ வசதியை பரவலாக்க உதவி செய்திருக்கிறது. 

    வருங்காலத்தில் இந்த சேவை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்று ஐ.பி.எம் கருதுகிறது. இருந்த இடத்தில் இருந்தே மருத்துவர்கள் எங்கோ இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வயர்லெஸ் சார்ந்த தொழில்நுட்பம் கைகொடுக்கவுள்ளது. அமெரிக்கர்கள் நகரங்களிலிருந்து கிராமங்களை நோக்கி செல்வதாலும் ,ஏழை நாடுகளில் பெரும்பாலான மக்கள் மருத்துவ வசதி இல்லாத பகுதிகளில் வசிப்பதாலும் ,வயர்லெஸ் மூலம் மருத்துவ வசதி வழங்கும் சேவை முக்கியத்துவம் பெறுகிறது.

    நீரிழிவு போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினசரி கண்காணிப்பு அவசியம் என்னும் நிலையில் ,வயர்லெஸ் மூலம் அவர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணிக்க முடியும் .அதே போல மருந்தின் செயற்பாடு அதன் பாதிப்பு ஆகிய விபரங்களையும் மருத்துவர்கள் தெரிந்து கொள்ள முடியும் .கிராமப்புறங்களில் உள்ள நோயாளிகளின் நிலை பற்றிய விபரங்கள் மற்றும் எக்ஸ்ரே படங்களை வயர்லெஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவர்களுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை பற்றி மருத்துவ நிபுணர்களோடு கலந்தாலோசிக்க முடியும் .

    இரத்த அழுத்தம் ,நாடித்துடிப்பை பரிசோதிப்பது போன்ற செயல்களையும் மருத்துவர்கள் இருந்த இடத்திலிருந்தே மேற்கொள்ள முடியும் .மருத்துவத் துறையில் இது மகத்தான மாற்றங்களை கொண்டுவரும் என்றால் ,உடனடி மொழிபெயர்ப்பு சொப்ட்வேர் , வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் மற்றவர்களோடு சுலபமாக பேச உதவி செய்யும் .

    தற்போது மொழிபெயர்ப்பு சொப்ட்வேர் புழக்கத்தில் இருந்தாலும் ,வருங்காலத்தில் இவற்றின் வேகம் மற்றும் செயல்திறன் பன்மடங்கு அதிகரித்து உடனுக்குடன் மொழி பெயர்க்கும் ஆற்றல் உண்டாகும் என்று கருதப்படுகிறது. 
    இதே போல் இன்ரநெட் அதன் ஆரம்ப கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்லுமென்று கணிக்கப்பட்டுள்ளது. 

    அதாவது இன்ரநெட் முப்பரிமான தன்மை கொண்ட 3டி இன்ரநெட் ஆக பரினமிக்குமேன்று எதிர்பாக்கப்படுகிறது. தற்போது இன்ரநெற்றில் தனி உலகத்தை உண்டாக்கியிருக்கும் செகன்ட்லைப் போன்ற வீடியோ கேம்கள் இந்த முப்பரிமாண இன்ரநெற்றுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்திருக்கிறது .

    உடைகளை இன்ரநெற்றிலேயே அணிந்து பார்ப்பது போன்ற வசதிகள் முப்பரிமாண இன்ரநெற்றில் சாத்தியமாகலாம். 
    இதே போல தண்ணீர் விநியோகத்திலும் புதுமையான வழிகள் கண்டறியப்பட உள்ளன. இன்ரநெற்றைப் பயன்படுத்தி ,தண்ணீர் வீணாவதைத் தடுக்கும் வகையில் மிகவும் மேம்பட்ட விநியோக முறைகள் உருவாக்கப் படவுள்ளன. நானோ தொழில்நுட்பம் உள்ளிட்ட அதிநவீன முறைகளை பயன்படுத்தி இவை உருவாக்கப்பட்டு வருகின்றன. ஐ.பி.எம் .குறிப்பிடும் மற்றொரு அதிசய தொழில்நுட்பம் மனதை அறியும் சக்தி கொண்ட பொங்கல் ஆகும் .ஜி.பி.எஸ் .தொழில்நுட்பத்தின் மூலம் பொங்கல் இருப்பிடத்தை அறிந்து கொள்ளும் சக்தி கொண்டதாக இருக்கிறது. எத்தன அடுத்தகட்டமாக இருப்பிடத்தை உணர்ந்து ,அதற்கேற்ப சேவைகளை இயக்கிக்கொள்ளும் ஆற்றல் கொண்ட பொங்கல் உருவாகலாம். 

    உதாரணமாக ரெயில்வே நிலையம் அல்லது மாநாடு அறை போன்ற பலர் கூடியுள்ள இடங்களில் நுழையும் போது செல்போன் அதனை தானாக உணர்ந்து கொண்டு ,வொய்ஸ்மெயில் சேவையை இயக்கலாம். அதே போல நள்ளிரவு தாமதமாக வீட்டிற்கு திரும்பினால் செல்போன் அதனை உணர்ந்து கொண்டு பசியாற பீசாவுக்கு ஓடர் கொடுக்கலாம். இந்த தொழில்நுட்பங்களை பற்றியெல்லாம் ஐ.பி.எம் கட்டுரை விரிவாக பேசுகிறது.


                                         
                                        

    Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

    சொயற்படுத்துங்கள்

    Blog Archive

    Total Pageviews