தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Saturday, February 22, 2014

ஆன்ட்ராய்ட் போன்/டேப்லேட்டில் ஃபைல் & ஃபோல்டர்களை மறைப்பது எப்படி ?

File Hide Expert

இன்று ஆன்ட்ராய்ட் போன் பயன்படுத்தும் பெரும்பாலோனோர் நமது அனைத்து தகவல்களையும் அதில் சேமித்து வைக்கின்றோம். அத்தோடு அவை பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் நினைக்கிறோம். இவற்றில் மிக முக்கியமானது நமது பர்சனல் ஃபைல் & ஃபோல்டர்கள்.
நாம் சேமித்து வைத்திருக்கும் நமது பர்சனல்  ஃபைல்/ஃபோல்டரை யாரேனும் பார்த்து மற்றவர்களுடன் பகிர்ந்து விட்டால் அது நமக்கு ஆபத்து தான். அப்படியான பர்சனல்  ஃபைல்/ஃபோல்டரை எப்படி உங்கள் போனில் மறைத்து வைப்பது என்று பார்ப்போம்.

1. முதலில் கூகுள் ப்ளே தளத்தில் File Hide Expert என்ற அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

2. இப்போது அதனை ஓபன் செய்தால் கீழே உள்ளது போல வரும்.
Screenshot_2014-01-29-10-27-32
3. இப்போது வலது மேல் மூலையில் உள்ள நீல நிற ஃபோல்டர் ஐகான் மீது கிளிக் செய்யவும். இப்போது கீழே உள்ளது போன்று ஃபோல்டர்களின் லிஸ்ட் உங்களுக்கு கிடைக்கும்.
Screenshot_2014-01-29-10-53-31
4. ஒவ்வொரு ஃபோல்டரின் வலது பக்கமும் ஒரு பிளஸ் சிம்பல் (+) இருக்கும். அதனை கிளிக் செய்தால் குறிப்பிட்ட ஃபோல்டர் மற்றும் அதற்குள் உள்ள ஃபைல்கள் மறைக்கப்பட்டுவிடும். நிறைய ஃபோல்டர்கள் மறைக்கப்பட வேண்டும் என்றால் அவற்றை ஒரே ஃபோல்டருக்குள் மூவ் செய்து கொள்ளலாம். மறைக்கப்பட்டவற்றின் லிஸ்ட் கீழே உள்ளது போன்று இருக்கும்.
Screenshot_2014-01-29-10-48-44

மறைக்கப்பட்ட ஃபைல்களுக்கு பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி?
என்னதான் நாம் ஃபைல்களை மறைத்து வைத்தாலும் யாரேனும் இந்த அப்ளிகேஷனை ஓபன் செய்து பார்த்தால் நாம் ஃபைல்களை மறைத்து வைத்துள்ளது தெரிந்துவிடும். அதை தடுக்க இந்த அப்ளிகேஷனுக்கு ஒரு பாஸ்வேர்ட் செட் செய்து விடலாம்.

1. அப்ளிகேஷனை திறந்து உங்கள் போன்/டேப்லெட்டில் ஆப்சன்ஸ்/மெனு பட்டனை கிளிக் செய்தால் செட்டிங்க்ஸ் மெனு கிடைக்கும். (ஆப்சன்ஸ்/மெனு பட்டன் என்பது ஹோம், பேக் பட்டன் இல்லாமல் மூன்றாவதாக இருப்பது. பெரும்பாலும் ஹோம்க்கு இடது புறம் இருக்கும்)
Screenshot_2014-01-29-10-39-36
2. இப்போது செட்டிங்க்ஸ் பகுதியில் Enable Password என்பதை கிளிக் செய்து, பின்னர் Change Password என்பதை கிளிக் செய்து உங்கள் பாஸ்வேர்டை தர வேண்டும்.
Screenshot_2014-01-29-10-40-22
3. அடுத்த முறை அப்ளிகேஷனை திறக்கும் போது பாஸ்வேர்ட் கேட்கும்.

Unhide செய்வது எப்படி ?
மறைக்கப்பட்ட ஃபைல்/ஃபோல்டரை நீங்கள் பார்க்க விரும்பினால் அவற்றை இந்த அப்ளிகேஷனின் மறைக்கப்பட்ட ஃபைல்/ஃபோல்டர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். அதை செய்ய மறைக்கப்பட்ட ஃபைல்/ஃபோல்டரின் வலது பக்கம் உள்ள எக்ஸ் சிம்பலை (X) கிளிக் செய்ய வேண்டும்.

தங்கள் பர்சனல் ஃபைல்களை பாதுகாப்பாக வைத்திருக்க நினைப்பவர்கள் கட்டாயம் இதை பயன்படுத்த வேண்டும்.

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews