தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Friday, November 21, 2014

விண்டோசில் கோப்பறைகளை பல்வேறு வண்ணத்தில் மாற்றுவதற்கு

விண்டோசில் உள்ள கோப்பறைகளை எளிதில் அடையாளம் கண்டறியும் வகையில் பல்வேறு விதமான வண்ணங்களில் மாற்றலாம்.
இதற்கு முதலில் Folder Colorizer என்ற லிங்கில் கிளிக் செய்து 1.28MB அளவுடையை சிறிய மென்பொருளை உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளவும்.


இதன் பிறகு Free Activation என்ற விண்டோ வந்தால் உங்கள் மின்னஞ்சலை கொடுத்து Register செய்து கொள்ளவும். அங்கு உள்ள டிக் மார்க் எடுத்து விடவும். 
இதன் பிறகு நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு Verification Linkஅனுப்புவார்கள், அதை கிளிக் செய்து இந்த மென்பொருளை இலவசமாக ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். ஆக்டிவேட் செய்யாவிட்டாலும் இந்த மென்பொருளை உபயோகிக்க முடியும். 
கோப்பறைகளை வெவ்வேறு நிறங்களில் மாற்ற: 
நீங்கள் நிறத்தை மாற்ற விரும்பும் கோப்பறை மீது ரைட் கிளிக் செய்து Colorize என்பதில் உங்களுக்கு தேவையான நிறத்தை கிளிக் செய்தால் போதும் சில வினாடிகளில் உங்களுடைய  கோப்பறை அந்த நிறத்திற்கு மாறிவிடும்.
இதிலுள்ள நிறங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் Colors என்பதை கிளிக் செய்து உங்களுக்கு வேண்டிய நிறத்தை நீங்களே உருவாக்கி கொள்ளலாம். 
இது போன்று உங்களுக்கு தேவையான நிறத்தை தெரிவு செய்து கோப்பறையில் வைத்து அழகாக மாற்றலாம். 
விண்டோசில் நிறத்தை மாற்றிய கோப்பறைகளை மீண்டும் பழைய வடிவில் கொண்டு வர அந்த கோப்பறை மீது ரைட் கிளிக் செய்து Colorize! ==> Restore Original Color என்பதை கொடுத்தால் பழைய நிறம் திரும்பவும் வந்துவிடும்.

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews