தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Thursday, December 18, 2014

கணணியில் கோப்புகளை முழுவதுமாக நீக்குவதற்கு

கணணியில் இருக்கும் தனிப்பட்ட கோப்புக்களை மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக பல நடைமுறைகளை பயன்படுத்துவீர்கள்.

எனினும் தனிப்பட்ட கோப்புக்களின் பயன்பாடு முடிந்தவுடன் அவற்றை கணணியிலிருந்து ரீக்கவர் செய்ய முடியாதவாறு முழுவதுமாக நீக்கிவிட விரும்புவீர்கள்.

FileWing என்ற மென்பொருள் இதையே செய்கின்றது. இந்த மென்பொருள் மூலம் நீங்கள் ஏற்கனவே அழித்துவிட்ட கோப்புக்களை ரீகவர் செய்வதுடன் அவற்றை முழுவதுமாக அழித்தும் விடலாம்.

FileWing ஐ முதல் முறை பயன்படுத்த தொடங்கும் போது unlock code ஐ பெற்றுக்கொள்வதற்காக மின்னஞ்சல் முகவரி தரவேண்டும்.

பின்னர் டிஸ்க்கை ஸ்கான் செய்ய அல்லது கோப்புக்களை, டிரைவ்களை அழிப்பதற்கென இரு ஆப்ஸன்கள் காட்டும்.

முற்றுமுழுதாக கணணியில் கோப்புக்களை நீக்கிவிட Quick Deletion இலிருந்து shredding method ஐ தெரிவு செய்ய வேண்டும்.

GOST, DoD (E), DOD(ECE), Bruce Schneider, VSITR மற்றும் Peter Gutmann போன்ற முறைகளில் கோப்புக்களை நீக்கலாம். தெரிவு செய்த பின்னர் Delete Files ஐ அழுத்துங்கள்.

கணணியிலிருந்து வழமையான முறையில் அழிக்கப்பட்டும் கோப்புக்களை ரீகவர் செய்யவதற்கு ஸ்கான் டிஸ்க்ட் ஆப்ஸனை தந்து பின்னர் ரீகவர் செய்யப்பட வேண்டிய இடத்தையும் தெரிவு செய்யுங்கள்.

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews