தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Monday, December 1, 2014

கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை அனுப்பும் ஹேக்கர்களிடமிருந்து(Hackers) தப்புவது எப்படி?

Microsoft Security Essentials Update Brings New Features And Resolves Issuesகம்ப்யூட்டர்களுக்கு கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை அனுப்பும் ஹேக்கர்கள்(Hackers) எனப்படுபவர்கள், எங்கே நுழைந்து தாக்க முடியும் என புரோகிராம்களில்(Program) உள்ள பலவீனமான குறியீடு வழிகளைக் கண்டு பிடித்து தங்கள் செயல்பாட்டினை மேற்கொள்வார்கள். எந்த வழியில் இவர்கள் நுழைகிறார்கள் என்று அறியும் வகையில், அந்த பலவீனமான இடங்கள் ஸீரோ டே வழிகள் என அழைக்கப்படுகின்றன.

அப்படிப்பட்ட ஒரு பலவீனத்தைப் பயன்படுத்தி மால்வேர் புரோகிராம் ஒன்றை சில ஹேக்கர்கள் அனுப்பியுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் எச்சரித்துள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் இந்த அத்துமீறல் நடந்துள்ளதாகத் தெரிகிறது.
 
இதன் மூலம் உள்ளே நுழையும் மால்வேர் புரோகிராம்கள்(Mal-ware Program) வழியாக, இதனை அனுப்பியவர்கள், அந்த கம்ப்யூட்டரையும், மற்ற வசதிகளையும் கெடுதல் விளைவிக்கும் செயல்களுக்குப் பயன்படுத்த முடியும். விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரையிலான அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் இயங்குகையில் இது நடைபெறுகிறது.

எந்த சந்தேகமும் இடம் கொள்ள முடியாதபடி, சில மின்னஞ்சல்கள் வருகின்றன. இவை நம் ஆர்வத்தைத் தூண்டும் சில காரணங்களைப் பயன்படுத்தி, லிங்க் ஒன்றைக் கொடுத்து அதில் உள்ள தளத்திற்குச் செல்லுமாறு தூண்டுகின்றன. லிங்க்கில் கிளிக் செய்துவிட்டால், குறிப்பிட்ட மால்வேர் புரோகிராம் தானாக, அந்த கம்ப்யூட்டரில் இறங்கி அமர்ந்து கொண்டு தன் நாச வேலையைத் தொடங்குகிறது. மால்வேர் புரோகிராமினை அனுப்பியவர்களுக்கும் தகவலைத் தருகிறது. அனுப்பியவர்கள், கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை(Operating system) தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைத்து, நாச வேலைகளில் ஈடுபட முடியும்.
 

எனவே, மைக்ரோசாப்ட்(Microsoft) வழங்கும் செக்யூரிட்டி அப்டேட் பைலை(security update files) உடனடியாக அனைவரும் பெற்று இன்ஸ்டால் செய்திட வேண்டும் என மற்ற ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்களும் கேட்டுக் கொண்டுள்ளன. நீங்களாக அப்டேட் செய்திட வேண்டுமென்றால், ஸ்டார்ட் அழுத்தி, ஆல் புரோகிராம்ஸ் தேர்ந்தெடுத்து, இதில் விண்டோஸ் அப்டேட் என்பதில் கிளிக் செய்து அப்டேட் செய்து கொள்ளலாம். அப்டேட் செய்யும்போது சிஸ்டம் இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டும்.
 

அப்டேட் பைலை தானாக தரவிறக்கம் செய்து, தாங்கள் விரும்பிய பின்னர் இன்ஸ்டால்(Install) செய்திடும்படி சிலர் செட் செய்து இருப்பார்கள். விண்டோஸ் அப்டேட் புரோகிராம்(Windows update program), அப்டேட் செய்திடவா என மஞ்சள் நிற பலூன்(Yellow Baloon) வழி கேட்கையில், உடனே இன்ஸ்டால் செய்திட வேண்டும்.

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews