தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Friday, December 5, 2014

Way2Sms விளம்பரங்கள் : மொபைலுக்கு இலவசமாக ரீசார்ஜ் செய்திடலாம்.


Way2Sms இணையதளம் இந்தியாவிற்குள்ளும் உலகளவிலும் இலவசமாக குறுஞ்செய்திகளை அனுப்ப பயன்படுகிறது. இதில் மின்னஞ்சல் சேவையும் தரப்படுகிறது. இங்கேயே ஜிமெயில் மற்றும் யாகூ சாட்டிங் செய்யவும் முடியும். இப்போது புதியதாக விளம்பர சேவை ஒன்றையும் கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் உங்கள் மொபைல் எண்ணுக்கு இலவசமாக விநாடியில் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். இதற்கு நீங்கள் Way2Sms கணக்கு ஒன்றைத் தொடங்கியாக வேண்டும். இது எளிமையான வேலை தான். Register செய்ய கிளிக் செய்யவும். 

Way2Sms நிறுவனம் இரண்டு வகையான விளம்பர சேவைகளை தற்போது வழங்கி வருகிறது.

1. Email Ads

இதில் விளம்பரங்கள் நமது நண்பர்களுக்கு ஈமெயில்
முறையில் அனுப்பப் படும். குறிப்பிட்ட விளம்பரங்கள் நமது டாஷ்போர்டு பகுதியில் காண்பிக்கப்படும். Send Email கொடுத்தால் ஏற்கனவே நாம் இணைத்திருக்கிற ஜிமெயில் கணக்கில் உள்ள நண்பர்களுக்கு செல்லும். ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே ஈமெயில் விளம்பரங்கள் அனுப்ப முடியும். இந்த விளம்பர ஈமெயில் உங்கள் பெயரில் தான் நண்பர்களுக்குப் போகும். அதிகபட்சம் இந்த விளம்பரத்தை 50 பேருக்குத் தான் அனுப்ப முடியும். இதனை யாராவது கிளிக் செய்தால் உங்களுக்கான பணம் உங்கள் கணக்கில் சேர்ந்து கொண்டே வரும்.
2. Social Ads

இந்த வகையிலான விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும். அதனை யாராவது கிளிக் செய்து பார்த்தால் குறிப்பிட்ட பணம் கிடைக்கும். Facebook, Twitter, Linked In இந்த மூன்று சமூக வலைத்தளங்களில் மட்டுமே பகிர முடியும். ஒரு நாளைக்கு இரண்டு விளம்பரங்கள் தரப்படும். அதுவும் ஒரு விளம்பரத்தை பகிர்ந்த பின்னர் இரண்டு மணி நேரம் விட்டு அடுத்த விளம்பரத்தைப் பகிர முடியும்.
Earnings Report :

நீங்கள் Way2Sms இல் நுழைந்தவுடனே வலது மேல்புறம் நமது கணக்கில் எவ்வளவு பணம் சேர்ந்திருக்கிறது என்று காட்டப்படும். குறைந்தபட்சமாக பத்து ருபாய் சேர்ந்தவுடனே நமது மொபைலுக்கு Recharge Now கிளிக் செய்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்தியாவில் உள்ள அனைத்து வகை மொபைல் கம்பெனிகளும் இதில் இருப்பதால் எந்த பிரச்சினையுமில்லை. மேலதிகமான வருமான ரிப்போர்ட்களைப் பார்க்க My Earnings பகுதியில் பார்க்கலாம்.
முக்கியமான விதிமுறைகள்: 

1. உங்கள் விளம்பரங்களை நீங்களே கிளிக் செய்யாதீர்கள்.
2. நண்பர்களை இதைக் கிளிக் செய்யுமாறு ஊக்குவிக்காதீர்கள்.
3. Way2Sms இல் கொடுத்துள்ள சமூக வலைத்தளங்களில் மட்டுமே பகிருங்கள். அதனை வேறு இடங்களில் தனியாகப் பகிரக்கூடாது. அதைப்போல தனியாக ஈமெயில்களை அதிகமாக அனுப்பலாம் என்று நினைக்காதீர்கள்.
4. விளம்பரங்களின் இணைப்பையும் (Link) கருத்தையும் (Content) மாற்றாதீர்கள்.
5. பிளாக்கிலோ இணையதளத்திலோ இணைப்பு தரக்கூடாது.

இணையதளம் : http://way2sms.com

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews