தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Thursday, November 27, 2014

கூகுள் தேடுதலில் கால வரையறை




இன்று தகவல் தேடுதலுக்குப் பலரும் பயன்படுத்துவது கூகுள் தேடல் தளத்தைத்தான். நம் தேடலும், கூகுள் தரும் முடிவுகளும் ஆச்சரியத்தை அளித்தாலும், சில வேளைகளில் நாம் தேடும் வகையில் தகவல் கிடைக்காது.

தேவையற்ற தகவல்கள் வந்து குவிக்கப்பட்டிருக்கும். நாம் அண்மையில் 20 நாட்களுக்குள் வந்த தகவல்களைத் தேடுவோம். ஆனால், கூகுள் எப்போதோ, சில மாதங்களுக்கு, ஆண்டு களுக்கு முன்னர் வந்த தகவல்களையும் காட்டும்.

இவ்வாறு இல்லாமல், குறிப்பிட்ட நாட்களுக்குள் இணையத்தில் பதித்த தகவல்களை மட்டும் காட்டுமாறு நாம் கூகுளுக்கு ஆணையிடலாம்.

1. முதலில் நாம் தேடும் தேடல் சொல் அல்லது சொற்களை கூகுள் சர்ச் பீல்டில் அல்லது டூல் பாரில் அமைக்க வேண்டும்.

2. முடிவுகளுக்கான பட்டியல் காட்டப்படும். இதில் இடது பக்கப் பிரிவில் உள்ள Show search tools என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கால வரையறைகளை அமைக்கும் வகையில் சில ஆப்ஷன்ஸ் விரிக்கபடும்.

3. இதில் “Any time” என்பது மாறா நிலையில் அமைக்கப்பட்டிருக்கும். இதன் கீழாக “Past hour,” “Past 24 hours,” “Past 2 days,” என தொடர்ந்து பல ஆப்ஷன்ஸ் கிடைக்கும்.

4. இதன் கீழாக Custom range என்பதில் கிளிக் செய்திடவும்.

5. உடனே காலண்டர் ஒன்று காட்டப்படும். இதில் எந்த நாளிலிருந்து பதிக்கப்பட்ட தகவல் வேண்டும் என்பதை “From” பீல்டில் அமைப்பதன் மூலம் வரையறை செய்திடலாம்.

6. நீங்கள் பீல்டை காலியாக விட்டு விட்டால், இன்று வரை பதிக்கப்பட்ட தகவல்கள் கிடைக்கும். இல்லை எனில் இங்கும் நாள் ஒன்றைக் குறிப்பிடலாம்.

7. அடுத்து, Search என்பதில் கிளிக் செய்தால், நாம் குறிப்பிட்ட கால வரையறைக்குள் பதியப்பட்ட தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

இது நமக்கு மிகவும் உதவும் ஒரு தேடல் வசதி. இதன் மூலம் நாம் விரும்பும் வகையில் முடிவுகளைப் பெறலாம்.

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews