தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Thursday, November 27, 2014

iPhone, iPad, iPod களிலும் பிளாக்கர் தளங்களைப் பயன்படுத்தப் பயன்படும் மென்பொருள்...




Blogger.. ஓர் அற்புதமான தளம்.. இன்று உலகளவில் தமிழில் வலைப்பூக்கள் வளர இது மிகப் பெரிய காரணமாக இருந்து வருகிறது. எண்ணங்களை ஏட்டில் அச்சிட முடியாத எத்தனையோ பேர் இன்று இணையம் மூலம் இந்த பிளாக்கர் எனும் அற்புதமான தளத்தின் மூலம் வலைப்பூக்களை உருவாக்கி தங்களின் எண்ணங்களை பகிர்ந்து வருகின்றனர்.

பிளாக்கர் தளத்தின்(Blogger site) மூலம் உருவாக்கும் வலைப்பூக்களை கணினியில் இருந்துதான் மேம்படுத்திக்கொண்டிருக்கிறோம்(update). இதுவரைக்கும் இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது. இனி நீங்கள் உங்கள் கையில் வைத்திருக்கும் iPhone, iPad, iPod எதுவாக இருந்தாலும் உங்கள் வலைப்பூவை அதிலிருந்தே நிர்வகிக்கலாம். மேன்படுத்தலாம். 

ஆப்பிள்(APPLE ) நிறுவனத்தார் உருவாக்கி வெளியிட்ட ஐபோன்கள் முதல் அனைத்து ஐபோன்களிலும் உங்கள் வலைப்பூவை உருவாக்கி, தினமும் உங்கள் பதிவுகளை எழுதி வெளியிடலாம்.

இனி நீங்கள் உங்கள் கையில் வைத்திருக்கும் iPhone, iPad, iPod போன்ற எதுவாக இருந்தாலும் இந்த மென்பொருளை பாவிப்பதன் மூலமாக உங்கள் வலைப்பூவை எளிதாக கையாள முடியும்.
இந்த மென்பொருளில் உள்ள வசதிகள் ஒரு சில:

1. உங்கள் கணக்கில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வலைப்பூக்களையும் கையாளும் வசதி.
2. படங்களை அப்லோட் செய்யும் வசதி(UPload Images)
3. லேபிள்களை சேர்க்கும் வசதி, (Add Label)
4. உங்கள் இருப்பிடம் பற்றிய தகவல்களை சேர்க்கும் வசதி. (Facility to add your location information)
5. பதிவுகளை பதிவேற்றும் வசதி.(write post)
6. பதிவேற்றிய பதிவுகளை வெளியிடும் வசதி.(Publish Post)
7. பதிவேற்றிய பதிவுகளை சேமிக்கும் வசதி. (Draft Post)
8. சேமித்த பதிவுகளை மீண்டும் வெளியிடும் வசதி..(Publish Draft post)

இந்த வசதிகளை அனைத்தையும் உள்ளடக்கிய உங்கள் iPhone, iPad, iPod பயன்படுத்தக்கூடிய வகையில் அமைந்த இந்தச் சிறப்பு மென்பொருளைத்  மென்பொருளைத் தரவிறக்க:
குறிப்பு: இந்த மென்பொருள் உங்கள் iPhone, iPad மற்றும் iPod களில் இயங்க iOS 3.1.3 இயங்குதளம் அல்லது அதற்கு பின் வந்த புதிய இயங்குதளம் இருக்க வேண்டும்.  

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews