எப்4கீ – ரிபீட் செயல்பாடு
எப் 4 கீயைப் பற்றி இந்த பகுதியில் ஏற்கனவே எழுதி இருந்தாலும், அண்மையில் ட்ராயிங் டூல்ஸ்களுடன் இதனைப் பயன் படுத்திப் பார்க்கையில் புதிய அனுபவம் ஒன்று கிடைத்தது. எனவே அதனுடன் சேர்த்து, மீண்டும் எப்4 கீ குறித்த தகவல்கள் அனைத்தையும் இங்கு தருகிறேன்.
அடிப்படையில் F4 கீ நம் நேரத்தை மிச்சப்படுத்தும் ஒரு அருமையான வசதியாகும். இந்த கீயை அழுத்தும் முன் எந்த செயல்பாட்டினை மேற்கொண்டோமோ, அது அப்படியே மீண்டும் மேற்கொள்ளப்படும். எடுத்துக்காட்டாக எக்ஸெல் புரோகிராமினை எடுத்துக் கொள்வோம். இதில் நீங்கள் உருவாக்கும் ஒர்க் ஷீட்டில், இன்ஸெர்ட் வழியைப் பயன்படுத்தி ஒரு நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசையினை இணைப்பதாக வைத்துக் கொள்வோம். இது நடத்தி முடித்தவுடன், மீண்டும் எந்த வரிசையில் கர்சரை வைத்து F4 கீயை அழுத்தினாலும், முன்பு எந்த வரிசையை கூடுதலாக உருவாக்கினோமோ அதே போல இன்னொரு வரிசை சேர்க்கப்படும். அதிக எண்ணிக்கை யில் வரிசைகள் சேர்க்கப்பட வேண்டுமாயின். F4 கீயை அழுத்த அழுத்த அவை சேர்க்கப்படும். சொற்களை போல்ட், அன்டர்லைன், சாய்வு என எந்த பார்மட்டிங் செய்தாலும், அதே செயல்பாடு F4 கீயை அழுத்தும்போது மேற்கொள்ளப்படும்.
எம்.எஸ். வேர்டிலும் இதே செயல்பாட்டை எதிர்நோக்கலாம். கலர் மாற்றுதல், லைன் ஸ்பேஸ் மாற்றுதல் என எந்த செயல்பாட்டிற்கும் கூடுதலாக மேற்கொள்ள F4 கீயைப் பயன்படுத்தலாம். இனி ட்ராயிங் டூல்ஸ் இணைந்து இந்த கீயைப் பயன்படுத்தும் முறையைப் பார்க்கலாம். ட்ராயிங் டூல்ஸ்களைப் பயன் படுத்திப் புதிதாக வரைந்த ஒரு உருவத்தினை மீண்டும் கிடைக்க F4 கீயைப் பயன்படுத்தலாம். கலர் பில் செய்வதில் நாம் மேற்கொள்ளும் மாற்றம், கோடுகளின் அளவை மாற்றுதல், வண்ணங்களை மாற்றுதல் என எந்தச் செயல்பாட்டினையும் மீண்டும் மேற்கொள்ள F4 கீ பயன்படுகிறது.
இவை அனைத்திலும் நாம் முக்கியமாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது ஒன்று. நாம் இந்த கீயை அழுத்தும் முன் எந்த செயல்பாட்டினை மேற்கொண்டோமோ, அதனை மட்டுமே இந்த கீ மேற்கொள்ளும்.
0 comments:
Post a Comment