தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Wednesday, December 17, 2014

மென்பொருள்களுக்கு பூட்டு போட

பாதுகாப்பாக கோப்புகளை வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், தங்களுடைய கணினிக்கு கடவுச்சொல் வைத்து பூட்டி வைத்திருப்பார்கள். மேலும் அந்த குறிப்பிட்ட கோப்புக்கும் கடவுச்சொல்லை கொண்டு பூட்டி வைத்திருப்பார்கள். எவ்வாறு கோப்பு மிக முக்கியம் என்று நினைத்து பாதுகாப்பாக வைத்திருக்கிறமோ அதே போன்று கணினியில் நிறுவப்பட்டு இருக்கும் மென்பொருள்களையும் மிகவும் பத்திரமாக வைக்க என்னுவோம். அதை எவ்வாறு பத்திரமாக வைக்க முடியும் என்று நினைப்பீர்கள். நம் கணினியில் நிறுவப்பட்டு இருக்கும் மென்பொருள்களை பிறர் பயன்படுத்தாதவாறு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைக்க முடியும். இதனால் நாம் மட்டுமே அந்த குறிப்பிட்ட மென்பொருளை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி 
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். மென்பொருளை கணினியில் நிறுவும் போதே முதன்மை கடவுச்சொல் கேட்கும் அதை உள்ளிட்டு மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும். பின் Password Door அப்ளிகேஷனை திறக்கவும்.
கணினியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்கள் அனைத்தும் பட்டியலிடப்படும். அந்த வரிசையில் நீங்கள் தேடும் மென்பொருள் இல்லையெனில் Browse Folder ஐகானை அழுத்தி மென்பொருளை தெரிவு செய்து கொள்ளவும்.

அடுத்து தோன்றும் விண்டோவில் விருப்ப தேர்வுகளை தெரிவு செய்து பின் OK பொத்தானை அழுத்தவும்.
அடுத்து தோன்றும் விண்டோவானது, பூட்டு போட்ட மென்பொருள்களை நீக்கவும், புதியதாக மென்பொருள்களை சேர்க்கவும் முடியும்.  கடவுச்சொல் கொண்டு பூட்டி வைத்த மென்பொருளை திறக்கும் போது மேலே தோன்றும் விண்டோ போல் தோன்றும் அதில் முதன்மை கடவுச்சொல்லை உள்ளிட்டு பின் திறந்து கொள்ள முடியும்.

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews