பாடசாலைக் கலைத் திட்டத்தில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்குப் பொருத்தமான தேசிய தொழில் தகைமைச் சான்றிதழ் (NVQ) மட்டம்.
கல்வி அமைச்சின் தகவல் மற்றும்
தொடர்பாடல் தொழினுட்பக் கிளை, இளைஞர் அலுவல் மற்றும் திறமை அபிவிருத்தி அமைச்சும் இணைந்து தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப பாடத்தைக் கற்கும் மாணவர்க்காக அவர்களின் தகைமை மற்றும் தொழில் திறமைக்கு உரிய தேசிய தொழில் தகைமைச் சான்றிதழ் (NVQ) மட்டம் 2 அல்லது 3 வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்ச்சி கல்வி அமைச்சர் கௌரவ பந்துல குணவர்தனா, இளைஞர் அலுவல் மற்றும் திறமை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ டலஸ் அழகப்பெருமா, மேற்கபு மாகாண முதலமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க, கல்வி, இளைஞர் அலுவல் மற்றும் திறமை அபிவிருத்தி கண்காணிப்பு பா. உ. கௌரவ மோகன்லால் கிரேரு, கல்வி அமைச்சின் செயலாளர் திரு கோட்டாபய ராஜபக்ஷ, இளைஞர் அலுவல் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு ஏ. ஆர். தேசபிரிய, தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அபேரத்ன பண்டா உட்பட இரண்டு அமைச்சுக்களின் அலுவலர்கள் மற்றும் அவற்றின் கீழ்வரும் நிறுவனங்களின் முக்கியத்தர்களின் பங்குபற்றுதலுடன் 2012-12-18 ம் திகதி இளைஞர் அலுவல் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் கேட்ரே கூடத்தில் இடம் பெற்றது. இதற்கேற்ப தகவல் தொழினுட்ப பாடத்தைக் கற்கும் பாடசாலை மாவர்க ளுக்காக கீழ்க் குறிப்பிட்டுள்ளவாறு தேசிய தொழில் தகைமை திறன் (NVQ) மட்டம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் : க. பொ. த. (சா.த.) தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப பாடத்தில் சித்தி பெற்ற சகல மாவணர்களுக்கும் NVQ 2 ம் மட்டம் வழங்கப்படுவ துடன் இந்த மாணவர்களை மதிப்பீட்டுக்கு உட்படுத்தி அதில் சிறப்புத் திறமை காட்டும் மாணவர்களுக்கு NVQ 3 ம் மட்டம் வழங்குதல். க. பொ. த. (உ.த.) பொதுத் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப பாடத்தில் சித்தி பெற்ற சகல மாவணர்களுக்கும் NVQ 2 ம் மட்டம் வழங்கப்படுவதுடன் இந்த மாணவர்களை மதிப்பீட்டுக்கு உட்படுத்தி அதில் சிறப்புத் திறமை காட்டும் மாணவர்களுக்கு NVQ 3 ம் மட்டம் வழங்குதல். க. பொ. த. (உ.த.) தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப பாடத்தில் சித்தி பெற்ற சகல மாவணர்களுக்கும் NVQ 3 ம் மட்டம் வழங்கப்ப டுவதுடன் இந்த மாணவர்களை மதிப்பீட்டுக்கு உட்படுத்தி அதில் சிறப்புத் திறமை காட்டும் மாணவர்களுக்கு NVQ 4 ம் மட்டம் வழங்குதல் ஆரம்பத்தில் NVQ கலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் மாவட்டத்துக்கு ஒன்று என்ற அடிப்படையல் பாடசாலையிலோ வலயத்திலோ மாகாணத்திலோ கணினி ஆய்வு கூடங்களைத் தெரிவு செய்தல். பாடசாலை தகவல் தொழினுட்ப மையம் - NVQ 2 ம் மட்டத்திற்கான பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல். வலய தகவல் தொழினுட்ப மையம் - NVQ 3 ம் மட்டத்திற்கான பாடத் திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.வலய தகவல் தொழினுட்ப மையம் - NVQ 3 ம் மட்டத்திற்கான பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.மாகாண தகவல் தொழினுட்ப மையம் - NVQ 4 ம் மட்டத்திற்கான பாடத்திட்டத்தை நடை முறைப்படுத்தல் http://www.moe.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=558:-nvq-&catid=1:latest&Itemid=258&lang=ta 'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை. தொலைபேசி எண் : +94 112 785141-50 . மின்னஞ்சல்: info@moe.gov.lk |
0 comments:
Post a Comment