Ubuntuவில் மென்பொருள் உள்ளீடு செய்யும் முறை
Ubuntu வில் software center ஊடாக (applications -> Software center) இணைய இணைப்பின் ஊடாக (online) எமக்கு தேவையான மென்பொருட்கைள உள்ளீடு செய்ய முடியும்.
எமக்கு தேவையான மென்பொருட்களை தரவிறக்கம் செய்து எமக்கு தேவைப்படும்போது அதாவது இணைய இணைப்பு இல்லாத நிலையில் உள்ளீடு செய்யும் முறை.
Document என்ற பகுதியில் உள்ள vcdimager_0.7.23-4ubuntu2_i386, videocut_0.2.0-6_i386 என்ற இரு மென்பொருட்களையும் உள்ளீடு செய்யும் முறையினை நோக்குவோம்
Applications -> accessories -> Terminal என்ற பகுதிக்கு சென்று Terminal window வில்"ls" என்ற கட்டைளயினை தட்டச்சு செய்து enter key யினை தெரிவு செய்யவும். இங்குls ஆனது current directory யில் உள்ள கோப்புக்களை list செய்யும்.
அடுத்து "cd Documents/ "என்ற கட்டைளயினை தட்டச்சு செய்து enter key யினை தெரிவு செய்யவும். இங்கு cd என்பது change directory என பொருள்படும். அதாவது Documents என்ற directory க்கு செல்லல்.
பின்பு ls என்ற கட்டளையினை பிரையோகிக்கும் போது Document என்ற பகுதியில் உள்ள vcdimager_0.7.23-4ubuntu2_i386, videocut_0.2.0-6_i386 என்ற இரு மென்பொருட்களையும் list செய்யப்படுவைத அவதானிக்க முடியும்.
அடுத்து " sudo dpkg -i *.deb" என்ற கட்டைளயினை தட்டச்சு செய்து enter key யினை தெரிவு செய்ய Documents என்ற பகுதியில் உள்ள அனைத்து மென் பொருட்களும் உள்ளீட செய்யப்படும்.(administrator password வழங்க வேண்டும்) இங்கு * குறியீடு குறிப்பிட்ட directory யில் உள்ள கோப்புக்கள் அனைத்தையும் உள்ளீடு செய்வதை குறிக்கும். குறிப்பிட்ட ஒரு மென்பொருளினை உள்ளீடு செய்வதாயின் * பதிலாக அதன் பெயரினை வழங்குதல் வேண்டும்.
இவ்வாறு எமக்கு தேவையான மென்பொருட்களை தரவிறக்கம் செய்து உள்ளீடு செய்ய முடியும்.
0 comments:
Post a Comment