தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Thursday, March 13, 2014

உங்களது கணணியில் சேமித்து வைத்திருக்கும் தகவல்களை மற்றவர்களிடமிருந்து எளிதில் மறைக்கலாம்.

உங்களது கணணியில் சேமித்து வைத்திருக்கும் தகவல்களை மற்றவர்களிடமிருந்து எளிதில் மறைக்கலாம்.
இச்செயலை மேற்கொள்ள பல்வேறு சிறிய அப்ளிகேஷன் புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றை தேர்ட் பார்ட்டி புரோகிராம் என அழைக்கிறார்கள். இவற்றைப் பயன்படுத்துவது நூறு சதவிகிதம் பாதுகாப்பு எனச் சொல்ல முடியாது.
எனவே விண்டோஸ் இயக்கம் தரும் பாதுகா
ப்பு வழியை இங்கு காணலாம். இதற்கு கீழ்க்காணும் வழிகளை பின்பற்ற வேண்டும்
.
1. முதலில் உங்கள் கணணியில் நீங்கள் Administratorஆக லொகின் செய்திருக்க வேண்டும்.
2. இனிமேல் மறைத்து வைக்க வேண்டிய தகவல் உள்ள கோப்புகள் அனைத்தையும் ஒரு புதிய கோப்பறையில் போட வேண்டும். எடுத்துக்காட்டாக  D ட்ரைவில் Data என ஒரு கோப்பறையை உருவாக்கலாம்.
3. அதன் பின் Start பட்டனை அழுத்தி ரன் பாக்ஸில் CMD என டைப் செய்திடவும். பின் Ok அழுத்த உங்களுக்கு டாஸ் இயக்க கட்டளைப் புள்ளி(command prompt) கிடைக்கும்.
4. இங்கு நீங்கள் மறைத்து வைக்க வேண்டிய கோப்பறையின், அதற்கான பாத் உடன் பின்வருமாறு டைப் செய்திட வேண்டும். உதாரணமாக attrib+s+h D:Data என இருக்க வேண்டும். இதன்பின் உங்கள் கோப்பறை மறைக்கப்படும். உடனே நீங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து சோதித்துக் கொள்ளலாம்.
மறைத்து வைத்துள்ள கோப்பறைகள் என்றாவது ஒருநாள் அல்லது ஒருநேரம் இதனை வெளியே தெரியும் படி வைக்க எண்ணலாம் அல்லது மேலும் சில கோப்புகளை இதன் பின் மறைத்து வைக்க எண்ணி இந்த கோப்பறையில் போட்டு வைக்க திட்டமிடலாம். அப்போது attrib s h D:Data என டைப் செய்திட வேண்டும்.

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews