தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Thursday, March 13, 2014

மென்பொருள் இல்லாமல் கைத்தொலைபேசியில் Folder ஐ மறைக்க

உங்கள் கைத்தொலைபேசியில் உள்ள சில படங்கள் அல்லது வேறு ஏதும் ஆவணங்கள் போன்றவற்றை தேவையில்லாதவர்கள் பார்ப்பதை தடுக்கவேண்டுமென எண்ணுகின்றீர்களா? மென்பொருட்கள் எதுவுமின்றி மிக இலகுவான வழி உங்கள் தேடலுக்காக இப்பதிவினூடாக….
இதற்காக நீங்கள் JAVA Applications உள்ள எந்தவொரு கைத்தொலைபேசியையும் பயன்படுத்தலாம்.
கீழ் உள்ள படிமுறையைப் பின்பற்றவும்.

01) நீங்கள் எந்த Folder இல் உள்ள ஆவணங்களை பிறர் கண்களில் இருந்து மறைக்க வேண்டுமென எண்ணுகின்றீர்களோ அந்த Folder தெரிவு செய்யவும்.

02) இப்போ அந்த Folder க்கு உங்களுக்கு விரும்பிய பெயரில் Rename செய்யவும். இதன்போது இறுதியில் “ .jad “ என்றுவருமாறு Rename ஐக் கொடுக்கவும். (உதாரணமாக: Video.jad )

03) இப்போ அதே இடத்தில் (same directory) புதியதொரு Folder ஐ உருவாக்கி அதற்கு அதே பெயரில் ஆனால் பின்னாலே .jar என வருமாறு கொடுக்கவும். (உதாரணமாக: Video.jar )

04) அவ்வளவுந்தான்! உங்கள் தேவையான Folder மறைக்கப்பட்டு புதிதாகத் திறந்த New Folder மட்டும் தென்படும்.

இப்போ உங்கள் மொபைலில் உள்ள பிரத்தியேகமான ஆவணங்கள் பிறர் கண்ணில் படாமல் மறைக்கப்பட்டுவிடும்.

மீண்டும் அந்த ஆவணங்களை பார்க்கவேண்டுமெனின் நீங்கள் இரண்டாவதாக உருவாக்கிய New Folder ஐ (உதாரணமாக: Video.jar ) அழித்திவிடவேண்டியதுதான்.

இனிமேல் என்ன உங்கள் எண்ணம்போல்தான்….????

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews