தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Thursday, March 13, 2014

உங்களது சொந்த தகவல்கள் இணையத்தில் பரவியிருப்பதால் கவலையா? இணையத்திலிருந்து ஒழிந்துகொள்வது எப்படி எனத் தெரிந்துகொள்வோம்!

இணையத்தளத்தில் உங்களது சொந்த தகல்களை கொடுத்துவிட்டு அதனால் ஏற்படுகின்ற பிரச்சினைகளால் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறீர்களா?
உங்களுக்காவே ஒரு இணையத்தள நிறுவனம் பெரும் கைங்கரியம் ஒன்றைச் செய்துள்ளது.
இன்று எம்மில் பலரின் உண்மையான சொந்தத் தகவல்கள் இணையத்தில் கிடைக்கின்றன. தனி மனித தரவுகளை உளவு பார்ப்பதற்கு இவை துணைபோகின்றன. இது பெரும் அசௌகரிகத்தை ஏற்படுத்துகின்றது.
தனி மனித தகவல் திருட்டுக்காகவே இன்று பல இணையத்தளங்கள் உலவுகின்றன.
இதனால் தற்போது பலருக்கும் தாங்கள் தரவேற்றிய சொந்த தகல்களை நீக்கி இணையத்திலிருந்து ஒழிந்திருக்க விரும்புகின்றனர்.
இந்நிலையில் எவ்வாறு இணையத்திலிருந்து ஒழிந்துகொள்வது என ‘WhoIsHostigThis’ என்ற இணையத்தளம் 9 படிமுறை வழிகளைக் கூறியுள்ளது.
1. முதன்மையான சமூக வலைத்தளங்களை செயலிழக்கச் செய்தல் – பேஸ்புக், டுவிட்டர், லிங்ட்இன், கூகுள்பிளஸ்

2. வேறு ஏதாவது உங்கள் சமூக வலைத்தள கணக்குகளை மறந்துபோயிருக்க வாய்ப்புண்டு அதனை தேடி செயலிழக்கச் செய்தல் – மைஸ்பேஸ், பெபோ என பல கணக்குகள்
 
3. செயலிழகச்செய்ய முடியாத கணக்குகளில் பெயர் உள்ளிட்ட பிழையான தரவுகளைத் தரவேற்றம் செய்தல்.
 
4. சந்தாதார ஈ-மெய்லகள் அனைத்தையும் நிறுத்துதல் – நியூஸ்லெட்டர், விளம்பரங்கள், ப்ரொமோஷன்ஸ் போன்றவற்றை அன்சப்ஸ்க்ரைப் செய்தல்

5. தேடு பொறிகளில் உங்களுடன் தொடர்புடைய தகவல்களை நீக்குதல் – தேடுபொறிகளிடம் (Search Engines) இதற்கான வேண்டுகோளை விடுக்க முடியும். கூகுளில் இதற்கான டூல் உள்ளது.

6. இணையத்தளங்களிலுள்ள தகவல்களை குறித்த இணையத்தளங்களின் இயக்குநர்களிடம் கேட்டு அகற்றலாம். இதனை இணைய இயக்குநர்களே மேற்கொள்ள முடியும். இது சற்றே விவாதத்துக்குரியதாக அமையலாம்.

7. தரவுகளை விற்பனை செய்யும் இணைய நிறுவனங்களிடம் உங்களது தரவுகள் இருக்கும் பட்சத்தில் அதனை அவர்களிடத்தில் அழிக்கமாறு கேட்க வேண்டும்.

8. தொலைபேசி தரவுப் புத்தகம் மற்றும் இணைய தரவுக் கோப்பிலிருந்து உங்களது தரவுளை நீக்க கோருதல்.

9. உங்களது ஈ-மெய்ல் தேவைகள் அனைத்தும் முடிந்தவுடன் உங்களது ஈ-மெய்ல் கணக்குகள் அனைத்தையும் மூடுதல்.

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews