தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Saturday, November 15, 2014

உங்கள் கணினியை சுலபமாக Auto Backup எடுக்க- Free Software

நாம் பெரும்பாலும் உபயோகபடுத்தும் கணினியில் C டிரைவ் தான் அதிகமாக உபயோகிப்போம். இந்த டிரைவில் தான் நம் கணினியின் மென்பொருட்கள் நிருவபட்டிருக்கும். ஆகையால் பிரச்சினையும் இந்த டிரைவில் தான் அதிகமாக வரும். ஆகவே நம்முடைய டேட்டாவை பாதுக்காக்க Backup எடுத்து வைத்து கொள்வோம். ஒரு இலவச மென்பொருளை பயன்படுத்தி இந்த வேலையை எளிதாக செய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இதில் இன்னொரு சிறந்த வசதி என்னவென்றால் நம்முடைய டேட்டா தானாகவே(automatic) எடுக்கும் வசதி.


கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு வரும் exe பைலை இயக்கி உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
இன்ஸ்டால் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.


இந்த பக்கத்தில் இந்த மென்பொருளை பற்றிய அனைத்து செய்திகளும் விரிவாக கொடுக்க பட்டு உள்ளன. உங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுத்து பார்த்து கொள்ளவும்.
Backup என்பதை க்ளிக் செய்யவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

அடுத்து வரும் விண்டோவில் நீங்கள் Backup எடுக்க விரும்பும் folder அல்லது files களை Addfolder பட்டனை உபயோகித்து சேர்த்து கொள்ளுங்கள்.
நீங்கள் ஒட்டுமொத்தமாக Full Drive கூட தேர்வு செய்து கொள்ளலாம்.


அடுத்து Next க்ளிக் செய்தால் உங்களுக்கு வரும் விண்டோவில் நீங்கள் உங்கள் backup பைலுக்கு Password போட நினைத்தால் போட்டு கொள்ளலாம்.
Next அழுத்தினால் வரும் விண்டோவில் நீங்கள் Backup எடுக்கும் நேரம் ஆகியவைகளை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து Save என்பதை க்ளிக் செய்து வரும் சப் மெனுவில் Save and Run கொடுத்தால் உங்கள் பைல் Backup ஆகி விடும்.
நீங்கள் டைம் செட் செய்திருந்தால் அந்த நேரத்திற்கு உங்கள் பைல் தானாகவே Backup ஆகி விடும்.

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews