தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Saturday, November 15, 2014

பென்ரைவை பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள் !!

பென்ரைவ் என்பது இப்பொழுது கணணி உபயோகிப்பவர்கள் அனைவரும் உபயோகித்து கொண்டு இருக்கும் ஒரு பொருளாகும். இதன் மூலம் நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொண்டு மற்றவர்களுக்கோ அல்லது வேறொரு கணணியில்பதியவோ உபயோகப் படுத்தப்படுகிறது. இந்த பென்ரைவ்களில் என்ன பிரச்சினை என்றால், இதில் எளிதில் வைரஸ் பரவும் பாதிப்பு உள்ளது. ஆகையால் நம் கணணிக்கும் வைரஸ் பரவி விடுகிறது. நம் பென்ரைவ் பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளன.

1. USB WRITE PROTECTOR
இந்த மென்பொருள் உங்களுடைய பென்ரைவ்களில் உள்ள கோப்புகளை மற்றவர்கள் படிக்க மட்டுமே அனுமதிக்கும். இந்த கோப்புகளை அவர்கள் திருத்துவதற்கு இந்த மென்பொருள் அனுமதிக்காது.

இதனால் உங்கள் பென்ரைவ் நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் பயப்படாமல் கொடுத்து அனுப்பலாம். மற்றும் வைரசினால் இந்த பென்ரைவ்களை கண்டறிய முடியவில்லை.

http://www.gaijin.at/dlusbwp.php இந்த லிங்கினூடாக மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள்

2. USB FIREWALL
பென்ரைவ் உபயோகிக்கும் பெரும்பாலானோர் உபயோகிக்கும் மென்பொருள். இது USB யில் இருந்து கணணிக்கு வைரஸ் பரவாமல் இருக்க பயன்படுகிறது. இதை DOWNLOAD செய்து இயக்கியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணணியின் பின்பக்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்.

ஏதேனும் வைரஸ் உங்கள் கணணியில் ஊடுருவ முயற்சிக்கும் போது இந்த மென்பொருள் நமக்கு எச்சரிக்கை கொடுக்கிறது.

http://www.net-studio.org/eng/usb-firewall.html இந்த லிங்கினூடாக மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள்

3. PANDA USB VACCINATION TOOL
பாண்டா நிறுவனம் வழங்கும் இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளை நம் கணணியில் நிறுவினால் பென்ரைவில் உள்ள autorun.inf கோப்பை முற்றிலுமாக தடைசெய்கிறது.

உங்கள் பென்ரைவில் தானே இயங்கும் வசதி தடுக்கப்படுவதால் வைரஸ் பரவும் வாய்ப்பு முற்றிலுமாக குறைகிறது. இந்த மென்பொருளுக்கு நமக்கு தேவையான சோட்கட் தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.

http://download.cnet.com/Panda-USB-Vaccine/3000-2239_4-10909938.html இந்த லிங்கினூடாக மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள்

4. USB GUARDIAN
இந்த மென்பொருள் உபயோகிக்க மிகவும் சுலபமானது. இதன் மூலம் பாதுகாப்பாக நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொள்ள முடியும். வைரஸ் பாதிக்கும் என்ற கவலையே வேண்டாம். இதன் மூலம் நமக்கு தேவையான கோப்பை நாம் lock செய்தும் வைத்து கொள்ளலாம்.

http://www.usb-guardian.com/ இந்த லிங்கினூடாக மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள்

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews