தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Tuesday, August 7, 2012

3D இன்ரநெட்





ஐ,பி,எம் .நிறுவனம் அதன் ஆய்வுப் பணிகளுக்காக புகழ் பெற்றது. ஒரு காலத்தில் கணினியோடு அறியப்பட்ட இந்நிறுவனம் ,கணினி யுகத்தில் அந்தப் பெருமையை இழந்துவிட்டாலும் ,தன்னுடைய ஆய்வு முயற்சிகள் மூலம் தொழில்நுட்ப உலகில் தன்னுடைய இடத்தை தக்கவைத்துக் கொண்டு இருக்கிறது.

ஆய்வுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஐ.பி.எம் .உலக மாற்றக் கூடிய 5 தொழில்நுட்பங்கள் பற்றி தன்னுடைய இணையதளத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

உடனடி மொழி பெயர்ப்பு சொப்ட்வேர் ,3டி இன்டர்நெட் ,மனதை அறியும் பொங்கல் என மிகவும் சுவாரஸ்யமான இந்து விபரிக்கிறது. இதில் முதலில் வருவது எங்கிருந்தாலும் சிகிச்சை பெறக்கூடிய வசதியாகும். வயர்லெஸ் தொழில்நுட்பம் மேம்பட்டு வருவதும் ,புகைப்படம் சார்ந்த தகவல்களை இன்ரநெட் மூலம் அனுப்பி வைப்பதும் ,மருத்துவ வசதியை பரவலாக்க உதவி செய்திருக்கிறது. 

வருங்காலத்தில் இந்த சேவை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்று ஐ.பி.எம் கருதுகிறது. இருந்த இடத்தில் இருந்தே மருத்துவர்கள் எங்கோ இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வயர்லெஸ் சார்ந்த தொழில்நுட்பம் கைகொடுக்கவுள்ளது. அமெரிக்கர்கள் நகரங்களிலிருந்து கிராமங்களை நோக்கி செல்வதாலும் ,ஏழை நாடுகளில் பெரும்பாலான மக்கள் மருத்துவ வசதி இல்லாத பகுதிகளில் வசிப்பதாலும் ,வயர்லெஸ் மூலம் மருத்துவ வசதி வழங்கும் சேவை முக்கியத்துவம் பெறுகிறது.

நீரிழிவு போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினசரி கண்காணிப்பு அவசியம் என்னும் நிலையில் ,வயர்லெஸ் மூலம் அவர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணிக்க முடியும் .அதே போல மருந்தின் செயற்பாடு அதன் பாதிப்பு ஆகிய விபரங்களையும் மருத்துவர்கள் தெரிந்து கொள்ள முடியும் .கிராமப்புறங்களில் உள்ள நோயாளிகளின் நிலை பற்றிய விபரங்கள் மற்றும் எக்ஸ்ரே படங்களை வயர்லெஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவர்களுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை பற்றி மருத்துவ நிபுணர்களோடு கலந்தாலோசிக்க முடியும் .

இரத்த அழுத்தம் ,நாடித்துடிப்பை பரிசோதிப்பது போன்ற செயல்களையும் மருத்துவர்கள் இருந்த இடத்திலிருந்தே மேற்கொள்ள முடியும் .மருத்துவத் துறையில் இது மகத்தான மாற்றங்களை கொண்டுவரும் என்றால் ,உடனடி மொழிபெயர்ப்பு சொப்ட்வேர் , வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் மற்றவர்களோடு சுலபமாக பேச உதவி செய்யும் .

தற்போது மொழிபெயர்ப்பு சொப்ட்வேர் புழக்கத்தில் இருந்தாலும் ,வருங்காலத்தில் இவற்றின் வேகம் மற்றும் செயல்திறன் பன்மடங்கு அதிகரித்து உடனுக்குடன் மொழி பெயர்க்கும் ஆற்றல் உண்டாகும் என்று கருதப்படுகிறது. 
இதே போல் இன்ரநெட் அதன் ஆரம்ப கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்லுமென்று கணிக்கப்பட்டுள்ளது. 

அதாவது இன்ரநெட் முப்பரிமான தன்மை கொண்ட 3டி இன்ரநெட் ஆக பரினமிக்குமேன்று எதிர்பாக்கப்படுகிறது. தற்போது இன்ரநெற்றில் தனி உலகத்தை உண்டாக்கியிருக்கும் செகன்ட்லைப் போன்ற வீடியோ கேம்கள் இந்த முப்பரிமாண இன்ரநெற்றுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்திருக்கிறது .

உடைகளை இன்ரநெற்றிலேயே அணிந்து பார்ப்பது போன்ற வசதிகள் முப்பரிமாண இன்ரநெற்றில் சாத்தியமாகலாம். 
இதே போல தண்ணீர் விநியோகத்திலும் புதுமையான வழிகள் கண்டறியப்பட உள்ளன. இன்ரநெற்றைப் பயன்படுத்தி ,தண்ணீர் வீணாவதைத் தடுக்கும் வகையில் மிகவும் மேம்பட்ட விநியோக முறைகள் உருவாக்கப் படவுள்ளன. நானோ தொழில்நுட்பம் உள்ளிட்ட அதிநவீன முறைகளை பயன்படுத்தி இவை உருவாக்கப்பட்டு வருகின்றன. ஐ.பி.எம் .குறிப்பிடும் மற்றொரு அதிசய தொழில்நுட்பம் மனதை அறியும் சக்தி கொண்ட பொங்கல் ஆகும் .ஜி.பி.எஸ் .தொழில்நுட்பத்தின் மூலம் பொங்கல் இருப்பிடத்தை அறிந்து கொள்ளும் சக்தி கொண்டதாக இருக்கிறது. எத்தன அடுத்தகட்டமாக இருப்பிடத்தை உணர்ந்து ,அதற்கேற்ப சேவைகளை இயக்கிக்கொள்ளும் ஆற்றல் கொண்ட பொங்கல் உருவாகலாம். 

உதாரணமாக ரெயில்வே நிலையம் அல்லது மாநாடு அறை போன்ற பலர் கூடியுள்ள இடங்களில் நுழையும் போது செல்போன் அதனை தானாக உணர்ந்து கொண்டு ,வொய்ஸ்மெயில் சேவையை இயக்கலாம். அதே போல நள்ளிரவு தாமதமாக வீட்டிற்கு திரும்பினால் செல்போன் அதனை உணர்ந்து கொண்டு பசியாற பீசாவுக்கு ஓடர் கொடுக்கலாம். இந்த தொழில்நுட்பங்களை பற்றியெல்லாம் ஐ.பி.எம் கட்டுரை விரிவாக பேசுகிறது.


                                     
                                    

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews