தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Thursday, December 18, 2014

பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்




பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்  தொடர்பில் இன்றும் பலருக்கு புரியாத ஒன்றாகவே இருக்கிறது. இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் பற்றியும், இதற்கு பயன்படும் மென்பொருட்கள் பற்றியும், இதில் உள்ள குறைபாடுகள் பற்றியும் குறிப்பிடுகிறேன்.
நீங்களும் முயற்சித்து பாருங்கள்.
பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்க வேண்டிய தேவை என்ன?

தொலைக்காட்சி, மேடை போன்ற இடங்களில் பாடகர்கள் பாடும் Live நிகழ்ச்சிகளில் பயன்படுத்த.
பின்னணி இசை எவ்வாறு பெறப்படுகிறது  ?
பொதுவாக TV நிகழ்சிகளில் பாடகருக்கான நிகழ்சிகளில். ஆனால் இங்கு திரைக்கு அருகில்/ பின்னால் ஒரு Music Group நின்று music, real time இல் இசைப்பார்கள். இதில் ஒரு சில பிழைகள் வர வாய்ப்பு உள்ளது. உயர் தர நிகழ்சிகளில் Studio இல் வைத்து தனியாக  record செய்த Background music இல் தான் பாடுவார்கள். இவ்வாறன தனி இசைகளை கடைகளில் பெற முடியும்.  ஒரு போதும் இவ்வாறான சந்தர்ப்பங்களில்  software மூலம் பாடலில் இருந்து இசையை பிரித்து எடுப்பது இல்லை.
Karaoke Software என்றால் என்ன?
சாதாரண மக்கள் – பாடுவதில் ஆர்வம் உள்ளவர்கள், உள்ளூர் இடங்களில் சிறு நிகழ்வுகளில் பாடுபவர்கள்  தமக்கான பின்னணி இசையை நிஜ பாடலில் இருந்து பிரித்து எடுக்க பயன்படும் மென்பொருள்.
Karaoke Software இன் திறன் என்ன?
Karaoke software மூலம் ஒருபோதும் 100% இசையை வேறாக்க முடியாது . அதுவும் இன்றைய நவீன  Music composing method இல் உருவான பாடல்களில் அறவே சாத்தியம் இல்லை. ஏன் என்றால் பல பின்னணி பாடகர்கள், தொடர்ந்து மாறுபடும் குரல்கள் , இசைகள், சடுதியான ஏற்ற தாழ்வுகள்… இப்படி ஏராளம். நீங்கள் Karaoke மென்பொருட்கள் மூலம் ஆரம்ப கால கருப்பு வெள்ளை படங்களில் உள்ள பாடல்களை ஓரளவு துல்லியமாக பிரித்து எடுக்கலாம்.
Karaoke Software இன் அடிப்படை  என்ன?
இவை தானாக அல்லது நீங்களாக மனித குரல், பாடல் என தெரிவு செய்யும் போது அதற்கு உரிய Frequency, வீச்சம் , பண்பு ஆகியவற்றை கொண்ட ஏனைய பகுதிகளையும் அந்த பாடல் முழுவதும் எடுக்கின்றன. இதுவே நாம் கேட்கும் போது பிரிக்கப்பட்ட வடிவமாக கேட்கிறது.
சில Karaoke Softwares
Karaoke Software என்று இணையத்தில் தேடினால் ஏராளமான மென்பொருட்கள் கிடைக்கும். அத்தனையும் பயனற்றவை. பொதுவாக எந்த Audio editing software மூலமும் மிகுந்த பிரயத்தனத்தில் ஓரளவு இசையை பிரிக்கலாம். பொதுவாக அறியப்பட்ட சில Softwares.
Sony Sound Forge Pro 10:
இது Audio editing software. ஆனால் இதில் நேரடியாக என வழியும் இசையை பிரிக்க இல்லை. நீங்களாக தான் முயற்சிக்க வேண்டும். 400$ மதிப்புள்ள இது Torrent இலும் கிடைக்கிறது. சாதாரணமானவர்கள் இதை பயன்படுத்துவது மிக கடினம்.
Adobe Audition CS6:
இதன் CS5  இல் தான் Avatar திரைப்பட இறுதி Audio editing செய்யப்பட்டது. அந்தளவிற்கு மிக பிரபலமானது.  ஒலியை வைத்து என்ன எல்லாம் செய்யலாமோ அதெல்லாம் இதில் உள்ளது. ஆனால் மேலுள்ளதை போன்று இதுவும் நேரடியாக Karaoke க்கு என்று எந்த வசதியும் இல்லை. நீங்களாக தான் முயற்சிக்க வேண்டும்.
மேலே சொன்ன இரெண்டும் karaoke க்கான மென்பொருட்கள் அல்ல. முன்னணி ஆடியோ எடிங் softwares.
இதுவே எவ்வித இடைஞ்சலும் இன்றி அனைவராலும் மிக இலகுவாக பயன்படுத்த கூடிய ஒரே ஒரு Karaoke software. ஒரு சில buttons மூலம் பாடல்களில் இசை, குரல் இரண்டையும் பிரித்து எடுக்கலாம்.
AV Music Morpher Gold 5
இதில் எப்போது உயர் ரக பாடல்களை பயன்படுத்தி ஓரளவு தரமான இசையை பெறலாம். இதும் கட்டண மென்பொருள் தான். Trial  இலவசம்  இதனுடன் Easy DJ mixer இலவசமாக கிடைக்கிறது. பெயருக்கு ஏற்றால் போல theme gold கலரில் நன்றாக இருக்கிறது,
Home Page: musicmorpher.com
Download: Cloud (10 MB) or Direct
இதன் Trail இல் முழுவதுமாக பாடல்களை பிரிக்க முடியாது. ஒன்றில் பணம் கொடுத்து வாங்க வேண்டும் . அல்லது crack செய்ய வேண்டும்.
விரும்பினால் கீழே crack இனை பெற்று பயன்படுத்துங்கள்.
music_morpher_gold_crack_ONLY: Cloud (61 KB)

கணிணியில் இயங்கும் மென்பொருள்களை யாரும் பார்க்காமல் மறைக்க


கணிணியை பொதுவான இடங்களில் பயன்படுத்தும் பலரும் சந்திக்கின்ற பிரச்சினை, நாம் திறந்து வைத்திருக்கும் மென்பொருள்களை யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயம் வருவது தான். அலுவலகத்தில் பெரும்பாலானோர்க்கு இந்த பயம் இருக்கும். ஏனெனில் வேலைகளுக்கிடையே நம்மவர்கள் பதிவு எழுதுவது, டுவிட்டர் பயன்படுத்துவது, வீடியோ பார்ப்பது போன்ற வேறு செயல்களைச் செய்வது வழக்கமான ஒன்று. திடிரென்று மேனேஜர் அல்லது வேறு ஆட்கள் வந்து விட்டால் அப்படியே அந்த புரோகிராம்களை சாத்தி மூடுவதைத் தவிர வேறு வழியில்லை. அதனால் இணையத்தில் நாம் செய்து கொண்டிருந்த வேலையும் அப்படியே போய் விடும்.

யாராவது வரும் போது சட்டென்று தேவையில்லாத மென்பொருள்களை மறைத்து வைத்து விட்டால் அவர்கள் சென்ற பின்னர் மறுபடியும் திறந்து கொள்கிற மாதிரி
வசதியுடைய மென்பொருள்கள் இரண்டைப் பார்ப்போம். இந்த மென்பொருள்களை நாம் சிறிது நேரம் வெளியே செல்லும் போதும் போட்டு விட்டுச் செல்ல்லாம். எந்த மென்பொருளும் யார் கண்களுக்கும் புலப்படாதிருக்கும்; Task Bar இல் கூட உட்கார்ந்திருக்காது. அதே போல சிலர் புத்திசாலியாய் ALT+TAB பட்டன்களை அழுத்துவதன் மூலம் தற்போது திறந்து வைத்திருக்கிற புரோகிராம்களைப் பார்க்கலாம். இதில் அந்த வேலையும் நடக்காது.

1. NCS WinVisible

இந்த மென்பொருளில் ஒரு குறுக்கு விசையை (Shortcut Key) அழுத்துவதன் மூலம் அனைத்து மென்பொருள்களையும் இந்த மென்பொருள் உட்பட ஒரே விநாடியில் மூட முடியும். முன்னரே வேண்டாத புரோகிராம்களைத் ( யாரும் பார்க்க்கூடாத) தேர்வு செய்து கொள்ள வேண்டும். இதில் ஒவ்வொரு மென்பொருளாகவும் மறைக்க முடியும்.
இதன் Settings பகுதியில் சென்று Hot keys இல் உங்களுக்குப் பிடித்த குறுக்கு விசையை அமைத்துக் கொள்ளலாம். மேலும் இந்த மென்பொருள் எப்போதும் Hidden லேயே இருக்கும்படியும் செய்யலாம். Settings-> General -> Behaviour பகுதியில் இருக்கும் மூன்று அமைப்புகளையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
Automatically check new processes,
Remember the processes I checked,
Hide Application and Tray icon

தரவிறக்கச்சுட்டி : Download WinVisible

2. Hide It

எளிமையான நிறுவத் தேவையில்லாத மென்பொருள் இது. டெஸ்க்டாப்பில் இருக்கும் ஐகான்களைக் கூட இது மறைக்கும். Task bar இல் இருக்கும் இதனைத் திறந்து எளிமையாக ஒரே கிளிக்கில் ஒவ்வொரு மென்பொருளாக அல்லது அனைத்து மென்பொருளையும் விநாடியில் மறைக்கலாம்.
இதன் இன்னொரு வசதி என்னவென்றால் தேவையான புரோகிராம்களை மறைத்து விட்டு இந்த மென்பொருளையும் Exit கொடுத்து மூடி விடலாம். பிறகு கொஞ்ச நேரம் கழித்து இந்த மென்பொருளைத் திறந்து மறைந்துள்ள புரோகிராம்களைத் திறந்து கொள்ளலாம்.

தரவிறக்கச்சுட்டி: Download HideIt

இந்த இரண்டு மென்பொருள்களில் எது உங்களுக்குப் பிடிக்கிறதோ அதைப் பயன்படுத்தி அலுவலகத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருக்கலாம். எல்லோருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

உங்கள் COMPUTER-இல் மற்றவர்கள் ஒரு சில புரோகிராம்களை மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும்?

உங்கள் கணினி நீங்கள் மட்டுமின்றி பலரும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தால், மற்றவர்கள் ஒரு சில புரோகிராம்களை மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும் என விரும்பினால், விண்டோஸ் 7 இயங்குதளம் இதற்கான வழிகளைத் தருகிறது. இதற்கு ஒரு தீர்வாக குறிப்பிட்ட புரோகிராம்களை மட்டுமே மற்றவர்கள் கையாளும் வகையில் அமைக்கலாம். (உங்களிடம் இருப்பது விண்டோஸ் 7 ஹோம் பதிப்பு என்றால்
இதனைச் செயல்படுத்த முடியாது.)
விண்டோஸ் ஸ்டார்ட் மெனு செல்லுங்கள். அங்கு gpedit.msc என டைப் செய்திடவும். பின்னர் எண்டர் அழுத்துங்கள். இங்கு கிடைக்கும் யூசர் கான்ஃபிகரேஷன் பட்டியலில் அட்மினிஸ்ட்ரேடிவ் டெம்ப்லேட்ஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது ஒரு புதிய பட்டியல் கிடைக்கும். இதில் சிஸ்டம் என்ற கோப்பறையில் கிளிக் செய்திடவும். இனி வலது பக்கம் இருக்கும் பிரிவில் கீழாகச் சென்று ரன் ஒன்லி ஸ்பெசிஃபைட் விண்டோஸ் அப்ளிகேஷன் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இங்கு எனேபிள்ட் என்று உள்ள ரேடியோ பட்டனில் செக் செய்திடவும். அடுத்து ஆப்ஷன் தலைப்பில் உள்ள ஷோ என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது ஷோ டயலாக் பாக்ஸ் கிடைக்கும். மற்ற பயனாளர்களுக்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க ஒவ்வொரு வரியிலும் அப்ளிகேஷன் பெயர்களை அமைத்து பின்னர் ஓ.கே பட்டனைக் கிளிக் செய்திடவும். எடுத்துக்காட்டாக ஒருவருக்கு பயர்பாக்ஸ் பிரவுசர் இயக்கும் அனுமதி வழங்க, ஒரு வரியில் ஃபயர்ஃபாக்ஸ்.இ.எக்ஸ்.இ என எழுதவும். பிற பயனாளர்கள் இது போல அனுமதி வழங்கப்படாத புரோகிராம்களை இயக்க முற்செய்தால் இந்த புரோகிராம் இயங்க தடை அமைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி கிடைக்கும்.

கணினியில் டிரைவ்வை(Drive) மறைக்க வேண்டுமா?

கணினியில் பிறர் பார்க்கமுடியாதவாறு டிரைவ்வை(Drive) மறைக்க வேண்டுமா?

எமது கணனியில் உள்ள Driveகளில் உள்ள fileகளை மற்றவர்கள் பார்க்காதவாறு அந்த Driveவையே மறைத்து வைத்துக் கொள்ளலாம்.

வழிமுறை -1

1) ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்து ஸ்டார்ட் ரன் என்பதை தேர்வு செய்யவும்.
2) இப்பொழுது ரன் பாக்ஸ்-ல் cmd என்று டைப் செய்து எண்டர் அழுத்தவும்.
(கமாண்ட் பிராம்ட் (command prompt) வரும்).
3) இப்பொழுது diskpart என்று டைப் செய்து எண்டர் அழுத்தவும்.
4) இப்பொழுது list volume என்று டைப் செய்து எண்டர் அழுத்தவும்.
5) இப்பொழுது கணினியில் உள்ள அனைத்து தகவல்கள் வரும் இது பற்றி ஒன்றும் யோசிக்க வேண்டியது இல்லை நீங்கள்
செய்யவேண்டியது உங்களுக்கு எந்த டிரைவ் மறைக்க விரும்புகிறீர்களோ அந்த டிரைவ்-ன் எழுத்தை உள்ளீடவும் உதாரணமாக: volume F என்றால் Select Volume F என்று உள்ளீட்டு எண்டர் அழுத்தவும்
6) இப்பொழுது இதன் கீழே Volume 0 is the selected volume என்று வரும்
remove letter F என்று உள்ளீட்டு எண்டர் அழுத்தவும்.இப்பொழுது கணினியை ரீ ஸ்டார்ட் செய்யவும் இப்பொழுது டிரைவ் மறைந்திருக்கும்.
மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர முன் கூறியபடியே முதல் நான்கு நிலைகளையும் செய்து Select Volume F என்று உள்ளீட்டு எண்டர் அழுத்தவும்
அடுத்து assign letter F என்று உள்ளீடவும்
இப்பொழுது கணினியை ரீ ஸ்டார்ட் செய்யவும் மறைந்திருந்த டிரைவ் மீண்டும் கணினியில் இருக்கும்

பின்குறிப்பு :இதனால் உங்கள் கணினியில் உள்ள தகவல்கள் இழக்கபடுவதில்லை

வழிமுறை -2

1) ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்து ரன் கமாண்ட் தேர்வு செய்யவும்
2) ரன் கமாண்டில் regedit என்று டைப் செய்யவும் (இப்பொழுது ரிஜிஸ்டரி எடிட்டர் திறக்கும்)
3) இதில் தாங்கள் செல்லவேண்டிய பகுதி HKEY_CURRENT_USERSoftwareMicrosoftWindowsCurrentVersionPoliciesExplorer
4) Explorer-கிளிக் செய்தவுடன் இதன் வலப்புறம் ஒரு சிறிய விண்டோ தோன்றும்
5) இதில் ஏதேங்கிலும் ஒரு வெற்று இடத்தில் வலது கிளிக் செய்து New என்பதனை தேர்வு செய்து DWORD Value என்பதை தேர்வு செய்யவும் பின்னர் அதை Rename செய்து NoDrives என்று பெயரிடவும்

Drive Value
A: 1
B: 2
C: 4
D: 8
E: 16
F: 32
G:64
H:128
I:256
J:512
K:1024
Z: 33554432
இப்படியாக கூடி கூடி போகும்

6) தங்களுக்கு எந்த டிரைவ் மறைக்க விரும்புகிறீர்களோ அந்த எண்னை NoDrives கிளிக் செய்து Modify என்பதை செலக்ட் செய்து C டிரைவ் என்றால் 4 என்று உள்ளீட்டு, Decimal என்பதை செலக்ட் செய்து OK கொடுக்கவும் (கணினியை ரீ ஸ்டார்ட் செய்யவும் டிரைவ் மறைந்து போயிருக்கும்)

மீண்டும் மறைத்த டிரைவ் வரவைப்பதற்கு முதல் 5 நிலைகள் சென்று தாங்கள் உண்டாக்கிய NoDrive என்பதை டெலீட் செய்துவிடவும் (கணினியை ரீ ஸ்டார்ட் செய்யவும் டிரைவ் மீண்டும் வரும்)

கணணியில் கோப்புகளை முழுவதுமாக நீக்குவதற்கு

கணணியில் இருக்கும் தனிப்பட்ட கோப்புக்களை மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக பல நடைமுறைகளை பயன்படுத்துவீர்கள்.

எனினும் தனிப்பட்ட கோப்புக்களின் பயன்பாடு முடிந்தவுடன் அவற்றை கணணியிலிருந்து ரீக்கவர் செய்ய முடியாதவாறு முழுவதுமாக நீக்கிவிட விரும்புவீர்கள்.

FileWing என்ற மென்பொருள் இதையே செய்கின்றது. இந்த மென்பொருள் மூலம் நீங்கள் ஏற்கனவே அழித்துவிட்ட கோப்புக்களை ரீகவர் செய்வதுடன் அவற்றை முழுவதுமாக அழித்தும் விடலாம்.

FileWing ஐ முதல் முறை பயன்படுத்த தொடங்கும் போது unlock code ஐ பெற்றுக்கொள்வதற்காக மின்னஞ்சல் முகவரி தரவேண்டும்.

பின்னர் டிஸ்க்கை ஸ்கான் செய்ய அல்லது கோப்புக்களை, டிரைவ்களை அழிப்பதற்கென இரு ஆப்ஸன்கள் காட்டும்.

முற்றுமுழுதாக கணணியில் கோப்புக்களை நீக்கிவிட Quick Deletion இலிருந்து shredding method ஐ தெரிவு செய்ய வேண்டும்.

GOST, DoD (E), DOD(ECE), Bruce Schneider, VSITR மற்றும் Peter Gutmann போன்ற முறைகளில் கோப்புக்களை நீக்கலாம். தெரிவு செய்த பின்னர் Delete Files ஐ அழுத்துங்கள்.

கணணியிலிருந்து வழமையான முறையில் அழிக்கப்பட்டும் கோப்புக்களை ரீகவர் செய்யவதற்கு ஸ்கான் டிஸ்க்ட் ஆப்ஸனை தந்து பின்னர் ரீகவர் செய்யப்பட வேண்டிய இடத்தையும் தெரிவு செய்யுங்கள்.

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews