தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Tuesday, November 18, 2014

மென்பொருளை முறையாக கணணியில் இருந்து நீக்குதல்

நாம் கணணியில் install பண்ணிய ப்ரோக்ராமைமுறையாக அகற்றுவதற்கு control panel இல் இருக்கும் Add or Remove Programs ஐ பயன்படுத்துகிறோம். ஆனால் நாம் uninstall செய்யும் போது நாம் uninstall செய்யும் program முழுமையாக கணணியில் இருந்து நீக்கப்படுவதில்லை. அந்த ப்ரோக்ராமின் சில Folder கள் மற்றும் அதன் Registry value போன்ற சில தேவையற்ற தகவல்கள் கணணியில் சேமிக்கப்படுகிறது. இவ்வாறு தேவையற்ற File களால் கணணியில் வேகம் நாளடைவில் குறைவடைகின்றது.                          
இவ்வாறன File களையும் Registry value க்களையும் நாம் தேடித் தேடி அழிப்பது என்பது முடியாத காரியமாகும். அதற்காக உள்ளது தான் Total Uninstall என்ற மென்பொருள்.



Total Uninstall ஐ நம் கணணியில் install பண்ணிவிட்டால் நம் கணணியில் நாம் install பண்ணியிருக்கும் மென்பொருட்களை வரிசையாகக் காட்டும். அதில் நாம் Uninstall செய்ய வேண்டிய மென்பொருளை Click பண்ணியவுடன் Total Uninstall ஆனது முதலில் Analyze பண்ணும். (Analyze பண்ணி முடிந்தவுடன்) பின் மேல் இருக்கும்

Unnistall என்ற button ஐ click செய்தால் தானாகவே System Restore point ஐ
create பண்ணி unnistall ஆகும். நாம் uninstall செய்த மென்பொருளுடன் தொடர்புடைய
அனைத்து தேவையற்ற File களையும் அழித்து கணணியை சுத்தம் செய்கிறது. 


Download from here: .........தள முகவரி : 
http://www.martau.com/

இமேஜ்களை ஐகானாக மாற்றம் செய்ய

நாம் பார்க்கும் படங்களை நமக்கு விருப்பமான ஒன்றுக்கு சூட்ட நினைப்போம், மேலும் விண்டோஸில் பல்வேறு வித ஐகான்கள் உள்ளன. விண்டோஸ் ஐகான்கள் அனைதும் (.ICO) என்ற பைல் பார்மெட்டில் மட்டுமே இருக்கும்.
நமக்கு ஒரு படத்தினை பிடித்துவிடும் அதனை நமது கணினியில் ( My Computer,
My Document, Recycle Bin ) போன்ற எதாவது ஒன்றுக்கு சூட்ட நினைப்போம் ஆனால் அந்த பைல் பார்மெட்டானது jpg, gif போன்ற பைல் பார்மெட்டுகளில் இருக்கும் இதனை நமது விருப்பபடி (.ICO) பார்மெட்டாக மாற்ற முடியும். இதற்கு Imagicon என்னும் மென்பொருள் உதவுகிறது.




 
alt

alt
இந்த மென்பொருளின் உதவியுடன் படங்களை .ICO பைலாக மாற்றிக்கொள்ள முடியும். முதலில் நாம் .ICO பைலாக மாற்ற .BMP பைலாக இருக்க வேண்டும். இதற்கு நம்முடைய படத்தை Paint-ல் ஒப்பன் செய்து Save as செய்யும் போது .bmp என்ற பைல் பார்மெட்டி Save செய்து கொள்ள வேண்டும்.
 

உங்கள் கணினி Registry Clean செய்ய Wise Registry Cleaner மென்பொருள்


 நாம் கணினியில் சில மென்பொருட்களை இன்ஸ்டால் செய்திருப்போம். நாளடைவில் அது வேண்டாமென்று Uninstall செய்து விடுவோம். ஆனால் அப்படி செய்யும் போது சில தேவையில்லாத பைல்கள் நம் Registry லேயே தங்கிவிடும்.  இதனால் தான் நம் கணினி மிகவும் மந்தமாக  வேலை செய்யும்.
இந்த பைல்களை அழித்தாலே நம் கணினியின் வேகத்தை கண்டிப்பாக  கூட்ட முடியும் என்பதில் ஐயமில்லை. இதுவரை இந்த வேலைக்கு நான் வேறொரு நிறுவனத்தின் மென்பொருள் உபயோகித்து வந்தேன் ஆனால் இந்த மென்பொருள் அதைவிட நன்றாக உள்ளது. ஆதலால் இந்த Sofware அனைவருக்கும் உபயோக படும் என்று பதிவிடுகிறேன். 

இந்த மென்பொருளை தரவிறக்க கீழே உள்ள டவுன்லோட் BUTTON ஐ  அழுத்தவும்.
 
DOWNLOAD செய்தவுடன் உங்களுக்கு வரும் WDCfree என்ற setup பைலை RUN செய்து  இன்ஸ்டால் செய்து கொள்ளவும். உங்களுக்கு இரண்டு shortcut keys வந்திருக்கும். அதில் Clear with 1 click  என்பதை டபுள் கிளிக் செய்தாலே உங்கள் கணினியின் registry SCAN ஆகி அதில் உள்ள தேவையில்லாத பைல்கள் ஸ்கேன் ஆகி தானாகவே பைல்களை delete செய்து விண்டோவும் CLOSE ஆகிவிடும். 
   
இந்த வேலைகளை Manual ஆக செய்ய வேண்டுமானால் Wise Registry Cleaner என்ற Shortcut KEYயை DOUBLE CLICK செய்து இயக்கி இடது பக்க மூலையில் மேலே உள்ள Scan என்ற பட்டனை அழுத்தினால் உங்களுடைய கணினி SCAN ஆகி 
வந்ததும் நான்காவதாக உள்ள Fix என்ற  பட்டனை அழுத்தி உங்கள் கணினியை CLEAN செய்து கொள்ளுங்கள்.
 முன்னர் உங்கள் கணினி இயங்கியதற்கும் இப்பொழுது இயங்குவதற்கும் நிறைய மாற்றங்கள் கண்டிப்பாக தெரியும்.நன்றி வணக்கம் .

பேஸ்புக்கில் புகைப்படங்களை வீடியோவாக மாற்றம் செய்வதற்கு


 சமூக இணையதளமான பேஸ்புக்கில் ஏராளமான புகைப்படங்கள் தினந்தோறும் பகிரப்படுகிறது.
நீங்கள் சுற்றுலா செல்லும் போது எடுத்த புகைப்படங்கள், வாழ்த்து அட்டைகள், அழகான இயற்கை காட்சிகள் என ஒவ்வொருவரும் விதவிதமான புகைப்படங்களை உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறீர்கள். 

 
இவைகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து அட்டகாசமான பேக்ரவுண்ட் மியுசிக்குடன் கூடிய வீடியோவாக உருவாக்கலாம்.
இதற்கு முதலில் http://www.timelinemoviemaker.com/ தளத்திற்கு செல்லவும். அதன் பின் தோன்றும் விண்டோவில் Make your Movie என்ற பட்டனை அழுத்தவும்.
இந்த பட்டனை அழுத்தியவுடன் பேஸ்புக் permission கேட்கும் Allow கொடுக்கவும்.
பிறகு உங்களுடைய Timeline movie தயாராகும். உங்களுடைய கணக்கில் உள்ள புகைப்படங்களை ஒட்டுமொத்தமாக சேர்த்து வீடியோ தயாரிக்கும்.
உங்கள் கணக்கில் குறிப்பிட்ட அளவு புகைப்படங்கள் இல்லை என்றால் புகைப்படத்தை சேருங்கள் என்ற அறிவிப்பை வெளியிடும்.
முடிவில் உங்களுடைய வீடியோ தயாராகிவிடும். இந்த வீடியோவில் உள்ள பின்னணி இசையை உங்கள் விருப்பத்திற்கு மாற்றி கொள்ளலாம். 
இப்பொழுது உங்களுக்கு பிடித்த மாதிரி வீடியோவாக உருவாக்கியதும் Share என்ற பட்டனை அழுத்தி அந்த வீடியோவை உங்கள் கணக்கில் பகிருங்கள்.

வைரஸ் தாக்கிய Pen drive ல் இருந்து பைல்களை மீட்டெடுக்க



தற்பொழுது தகவல்களை சேமிக்க பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்க பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓபன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது காலியாக இருக்கும் ஆனால் properties சென்று பார்த்தால்பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தகவல்  ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.


இதற்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுக்கலாம்.
1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD ==> Enter கொடுக்கவும்.
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம் அதற்க்கு நீங்கள் E: என கொடுத்து Enterஅழுத்தவும்.
5) attrib -s -h /s /d *.* என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும் உங்களின் விண்டோ இது போல இருக்க வேண்டும்.

  • நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
  • சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.

Facebook உரையாடலை ரெக்கார்டு செய்வது எப்படி?

Facebook சமூக வலைப்பின்னல் நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. Facebook இல் நண்பர்களுடன் அல்லது உறவினர்களுடன் chat செய்யும் பொழுது, அந்த முழு உரையாடலையும், ஆவணபடுத்த விரும்பி அவற்றை Record செய்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் உபயோகிக்க நெருப்பு நரி (FireFox) உலாவியில் Facebook Chat History Manager எனும் நீட்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 



(231,784 பயனாளர்கள் உபயோகிக்கும் இந்த நீட்சியின் தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)


இந்த நீட்சியை தரவிறக்கி உங்கள் நெருப்பு நரி உலாவியில் பதிந்து கொண்ட பிறகு, முதலாவதாக செய்ய வேண்டியது.. Tools menu விற்கு சென்று Facebook Chat Manager மற்றும் Get Facebook ID ஐ க்ளிக் செய்யுங்கள்.


இப்பொழுது திறக்கும் வசன பெட்டியில் Facebook -இல் லாகின் செய்து, Allow என்ற பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.

அடுத்து உங்கள் Facebook இன் ID ஒரு வசனப் பெட்டியில் தோன்றும், இதனை தேர்வு செய்து காப்பி செய்து கொள்ளுங்கள்.



மறுபடியும் Tools - Facbook Chat Manager - Create Account க்ளிக் செய்யுங்கள்.


அடுத்து திறக்கும் வசனப் பெட்டியில், ஏற்கனவே காப்பி செய்து வைத்திருக்கும் Facebook ID ஐ பேஸ்ட் செய்து, உங்களுக்கான பயனர் கணக்கு ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.



இனி Facebook இல் உங்கள் உரையாடல்கள் (Chat) அனைத்தும் பதிவு செய்யப்படும். இனி பிறகு உங்களுக்கு இந்த உரையாடல்கள் தேவைப்படும் பொழுது, Tools - Facebook Chat Manager -View History க்ளிக் செய்வதன் மூலமாகவோ அல்லது Ctrl+Alt+F கீகளை அழுத்துவதன் மூலமாகவோ, சேமிக்கப்பட்ட அனைத்து உரையாடல்களையும் பட்டியலில் காண முடியும்.

சிறார்களின் இணையப்பாவனை​யை கண்காணிக்க சிறந்த மென்பொருள்

தேவையில்லாமல் வரும் படங்களை தடைசெய்வதோடு அல்லாமல் கம்யுட்டரில் அதிக நேரம் Games விளையாடுவதையும் Chat செய்து பொழுதினை கழிப்பதையும் தடுக்கலாம்.சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். இதுவும் 4 எம்.பி. கொள்ளளவு தான்.இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யும் சமயம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும்.


இந்த சாப்ட்வேருக்கான பாஸ்வேர்ட் இது. நீங்கள் கொடுக்கும் பாஸ்வேர்டை கவனமாக குறித்து வைத்துக்கொள்ளவும. பின்னர் நீங்கள் இந்த சாபட்வேரை ஓப்பன் செய்யும் சமயம் அந்த பாஸ்வேர்டை கொடுத்தால்தான் ஓப்பன் ஆகும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நம்மைதான் யாரும் கவனிக்கவி்ல்லையே – நாம் தவறு செய்யலாம் என நினைக்கலாம். ஆனால் இறைவன் அதை கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றான். அதுபோல இந்த சாப்ட்வேரை நிறுவிய பின டாக்ஸ்பாரில் ஒற்றைகண்ணுடன் கழுகு உங்கள் கம்யுட்டரின் நடவடிக்கைகளை கவனித்துகொண்டு இருக்கும்.அது ஆபாச தளங்கள் வந்தால் அதை தடை செய்துவிடும்.குழந்தைகள் என்ன செய்கிறார்களோ என்கின்ற பதட்டம் அடையாமல் நாம் மற்ற வேலைகளை பார்த்துகொண்டுஇருக்கலாம். டாக்ஸ்பாரில் உள்ள ஒற்றை கண்ணை கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் ஏற்கனவே நீங்கள்கொடுத்த பாஸ்வேரட் கொடுத்து உள் நுழையவும்.
இப்போது மீண்டும் டாக்ஸ்பாரில் அந்த கண்ணை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் Settings and options கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள செட்டிங்ஸ் ஏதும் மாற்றாதீர்கள். இதுதான் ஆபாச படங்களை தடை செய்யும் செட்டிங்ஸ்.அடுத்துள்ள டேப்புகளில் தேவைப்பட்டால் தேவையானதை தேர்வு செய்துகொள்ளுங்கள். இறுதியில் ஓ.கே. தாருங்கள்.
அடுத்துள்ளது சாட்…இதில் நீங்கள் உங்கள் குழந்தைகள் சாட் செய்யும் நேரத்தை சேட் செய்துகொள்ளலாம். அந்த நேரம் மட்டும் சாட் வேலை செய்யும்.
இதைப்போலவே விளையாட்டை யும் தேவையான நேரம் கொடுத்து மற்ற நேரங்களை தடை செய்துவிடுங்கள்.
நீங்கள் வேலைக்கு செல்பவராக இருக்கலாம். வெளியில் செல்ல நேரலாம். அவ்வாறான நேரங்களில் குழந்தைகள் கம்யுட்டரில் அமரும் நேர்த்தை செட் செய்துவிடலாம். அந்த நேரம் கடந்துவிட்டால் கம்யுட்டர் வேலை செய்யாது.
குழந்தைகளும் சரி – நாமும் சரி..தொடரந்து மானிட்டரையே பார்த்துக்கொண்டிருந்தால் கண் என்ன ஆவது. அதற்கும் இதில் கண்ணை காப்பதற்கான வழி வைத்துள்ளார்கள். எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை கம்யுட்டர் ஆப் ஆகி பின்னர் எவ்வளவு நேரத்திற்கு பின் ஆன் ஆக வேண்டும் என செட் செய்துவிட்டால் நாம் மறந்துவிட்டாலும் கீழ்கண்ட விண்டோ தோன்றி கம்யுட்டர் ஆப் ஆகிவிடும்.
இவ்வளவு தடைகளும் தேவையானல் வைத்துக்கொள்ளலாம் தேவையில்லையென்றால் எடுத்துவிடலாம்.

பேஸ்புக்கில் உங்களை Tag செய்து இம்சை செய்கிறார்களா?

Power Starக்கு அடுத்த படியாக ஆனந்தத் தொல்லை தரும் உங்களின் Facebook நண்பர்கள் புகைப்படங்களில் உங்களை டேக் (கோர்த்து விடுவது) செய்வார்கள். அது உங்களின் Profile Timelineஇல் வரும்.
பல நேரங்களில் உங்களுக்கு கடுப்பேத்தும் புகைப்படங்களாகவே அவை இருக்கும்.
மேல் வலது மூலையில் இருக்கும் காவிழ்ந்த முக்கோணத்தை சொடுக்கவும்.
பின்னர் Privacy Settings எனும் தொடுப்பை சொடுக்கவும்.
பின்னர் பின் வரும் படிகளை செயல்படுதுங்கள்.
Step 1:

Step 2:



Step 3:


இப்போது எவரேனும் உங்களை Tag செய்தால் உங்களின் அனுமதி இல்லாமல் அது உங்களின் Profile Timelineஇல் தெரியாது.

கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள்

வணக்கம் நண்பர்களே,இலவச மென்பொருள்களில் மிகவும் பாதுக்காப்பான,இலகுவான மற்றும் எளிமையான, நன்றாக வேலைசெய்யக்கூடிய பல பயனுள்ள மென்பொருள்களை இணையத்தில் பார்த்து, பயன்படுத்தியதை இங்கே உங்களுக்கு அறிமுகம் செய்து வருகிறேன்.
அவ்வரிசையில் மேலும் ஒரு சிறப்பான இலவச மென்பொருள்தான் Gsplit 3.0.1பெரிய கோப்புகளை , சிறு சிறு துண்டுகளாக பிரிக்க உதவுகின்றது.


இதற்கு முன் ,Winrar பயன்படுத்தி பெரிய கோப்புகளை ,சிறு துண்டுகளாக பிரித்து வந்தேன்.சிறிய கோப்புகளை பிரிக்கும்போது எந்த பிரச்னையும் இல்லை.ஆனால் ஒருசமயம் 3GB உள்ள கோப்பினை பிரிக்கும்படி வந்தது,அப்போது Winrar எடுத்து கொண்ட நேரம் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல்...அதே கோப்பினை பிரிக்க Gsplit எடுத்துக்கொண்ட நேரம் 90 நொடிகள் மட்டுமே. ஏறக்குறைய 50 மடங்கு வேகமாக Gsplit செயல்படுகின்றது.(Winrar -ஐ விட).இந்த இலவச மென்பொருளை நிறுவத் தேவை இல்லை.உங்களுக்கு வேண்டியவாறு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மென்பொருளை தரவிறக்கி Unzip செய்து கொள்ளுங்கள்.இந்த மென்பொருளை எப்படி பயன்படுத்துவது என்று விளக்கி உள்ளேன். பிரித்த கோப்பினை இணைக்க அதிலயே ஒரு .exe உருவாக்கப்படும்.அதை கிளிக் செய்தால் போதும் ,மீண்டும் பிரித்த கோப்புகள் தானாகவே இணைந்து விடும் .



அதன் முகப்பு :

பிரிக்கும் முறை 1 (Normal)
பிரிக்கும் முறை 2 (Express)

பிரிக்கும் முறை 1 (Normal):
படிகள் :
படி 1 :
கோப்பினை தேர்வு செய்யுங்கள்... 

படி 2:
பிரித்த கோப்பினை சேமிக்க வேண்டிய இடத்தினை தேர்வு செய்யுங்கள்... 
படி 3:
எவ்வளவு KB ,MB or GB என்பதனை தேர்வு செய்யுங்கள். 


 
அல்லது Predefined பட்டனை கிளிக் செய்து தேர்வு செய்யுங்கள் .

படி 4:
பிரிக்கும் வேகத்தை தேர்வு செய்யுங்கள்... 

இப்பொழுது Split பட்டனை கிளிக் செய்யுங்கள் அவ்வளவுதான்.
2.பிரிக்கும் முறை 2 (Express) :
Express என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்... 



pen drive இன் ஒரு பகுதிக்கு Password கொடுப்பது எப்படி

கணணிப் பயன்பாட்டாளர்களிடையே Pen drive வைப் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. என்ற நிலைஉருவாக்கி விட்டது ஆனால் அந்த Pen drive நம் கையில் இருக்கும் மட்டும் தான்அதில் இருக்கும் தகவலுக்குப் பாதுகாப்பு நாம் அதை எங்காவது மறந்து போய்விட்டு விட்டோம் என்றால் Pen drive எடுக்கும் எவரும் நமது Pen drive வில் 
இருக்கும் தகவலை பார்கவோ அல்லது அதை Copy பண்ணி எடுக்கவோ முடியும். 


இதற்காக தற்போது imation போன்ற சில Pen drive தயாரிக்கும் நிறுவனங்கள் தாம் தயாரிக்கும் Pen drive க்கு Password போட்டு பாதுகாக்கக் கூடியவாறு அதனுடன் 
சிறிய மென்பொருளையும் இணைத்து தருகிறார்கள் ஆனால் அந்த மென்பொருட்களை இந்த 
வகை Pen drive களுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடிகிறது.

அப்ப மற்றவர்கள் என்ன பண்ண............... ? 
ஆமாம் அவர்களுக்காக உள்ள மென்பொருள் தான் Rohos Mini Drive இதன் முலம் Pen driveவின் ஒரு பகுதியை தனியாக Patition பண்ணி அந்த பகுதிக்கு Password கொடுக்க 
முடியும். 
                                        
செயற்படுத்தும் முறை

முதலில் கீழ் உள்ள சுட்டியில் இருந்து மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளவும்.அந்த மென்பொருளை உங்கள் கணணியில் install பண்ணவும்.
மென்பொருளைத் தரவிறக்க : http://www.rohos.com/rohos_mini.exe

Pen drive கணணியில் இணைத்து விட்டு install பண்ணிய அந்த மென்பொருளை இயக்கவும்.

அதில் Setup USB key என்பதை Click செய்தவுடன் உங்கள் Pen drive பற்றிய தகவலை காட்டும் அதன் கீழ் Password கேட்பார்கள் .

அந்த தகவல் சரியாயில் அதில் நீங்கள் கொடுக்க விரும்பும் Password டைக் கொடுத்துவிட்டு Create disk ஐ கிளிக் செய்யவும்.
( அந்த தகவலில் ஏதேனும் பிழையிருப்பின் Change என்பதை கிளிக் செய்து தகவலை
மாற்றலாம் )

அது தானகவே உங்கள் Pen drive இன் ஒரு பகுதிக்கு Password போட்டு விடும் பின் உங்கள் pen drive ஐ கணணியில் இருந்து நீக்கிவிட்டு மீண்டும் இணைக்கவும்.

பின் கணணியில் இணைத்தவுடன் Pen drive வில் இருக்கும் Rohos mini.exe என்பதை Double click செய்து உங்கள் password கொடுத்து விட்டு My computer ஐ open பண்ணிப் பார்த்தால் புது Drive ஒன்று இருக்கும். அந்த Drive தான் நீங்கள் password கொடுத்திருக்கும் drive. 


அதனுள் நீங்கள் பாதுகாக்க வேண்டிய File போட்டு வைத்துவிட வேண்டியது தான் மீண்டும்அந்தPassword போட்ட drive ஐ மூடுவதற்கு படத்தில் உள்ளது போல் உங்கள் taskbar இல் இருக்கும் அந்த Icon ஐ Right click செய்து Disconnect என்பதை Click செய்யவும்.
                                 
இந்த Password போட்ட Pen drive வைப் பயன்படுத்துவதிற்கு இந்தமென்பொருள் கணணியில் install பண்ணி இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பது அதன் சிறப்பாகும்.

மேலதிக விபரங்களுக்கு : http://www.rohos.com/products/rohos-mini-drive/

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews