தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Wednesday, November 26, 2014

பேஸ்புக் - தொல்லை தரும் நண்பர்களைக் கட்டுப்படுத்த



பேஸ்புக் தளத்தில், நமக்கென அக்கவுண்ட் வைத்து, இயக்கத் தொடங்கிய சில வாரங்களிலேயே நம் நண்பர்கள் வட்டம் வேகமாக விரிவடையும். 

நான் என்னதான் நம் நண்பர்களை எடைபோட்டு தேர்ந்தெடுத்தாலும், ஒரு சிலர் தங்களுடைய செய்திப் பதிவுகள் (news feed) மூலம் நம்மை எரிச்சல் அடைய வைப்பார்கள். 

இவர்களிடமிருந்து நாம் ஆர்வம் காட்டாத செய்திப் பதிவுகள் அதிக எண்ணிக்கையில் கிடைக்கப் பெறுவோம். இதனால் எரிச்சல் அடைவது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த பதிவுகளை நிறுத்த முடியாமல் தவிப்போம்.

பேஸ்புக் தளம் தற்போது இதற்கு ஒரு தீர்வினைத் தந்துள்ளது. இந்தப் பிரிவில், உங்களுடைய செய்திப் பதிவு பக்கத்தில், கடந்த வாரத்தில் அதிகம் பதிவுகளைத் தந்த நண்பர்கள், பக்கங்கள் மற்றும் குழுக்கள் பட்டியலிடப்படும். 

இதில் யாரிடமிருந்து இத்தகைய பதிவுகளை நிறுத்த வேண்டுமோ, அவர்கள் பெயர் முன் ஒரு டிக் கிளிக் செய்து, அவர்கள் நம்மைப் பின் தொடர்ந்து வந்து செய்திப் பதிவுகளை இடுவதனை நிறுத்தலாம். 

இதனை நிறுத்திய பின்னரும், அவர்களுடன் தொடர்ந்து நீங்கள் நட்பாக இருக்கலாம். ஆனால், அவர்களிடமிருந்து நம்மை எரிச்சலடையச் செய்திடும் பதிவுகள், நிலைப்பாடுகள் நமக்கு வராது.

இதே பட்டியலில், கடந்த காலத்தில் நம்மைப் பின்பற்றி பதிவுகள் இடாமல் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களின் பெயர்களையும் காணலாம். நீங்கள் முடிவெடுக்கும் எந்த நேரத்திலும், இவர்களுக்கு உங்களைப் பின்பற்ற அனுமதி அளிக்கலாம்.

இந்த News feed settings பிரிவு மொபைல் சாதனங்களிலும், நம் டெஸ்க்டாப்பிலும் இப்போது கிடைக்கிறது. இதனைப் பெற "more" மெனு கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் மெனுவில், கீழாகச் செல்லவும். அங்கு "help & settings" என்ற பிரிவில், நீங்கள் இந்த வசதியினைப் பெறலாம்.

இதற்கிடையே, இன்னொரு வேலையையும் நீங்கள் மேற்கொள்ளலாம். குறிப்பிட்ட விரும்பத்தகாத நபரிடமிருந்து வரும் தகவல்களை மறைத்து வைக்கலாம். 

அந்த பதிவில், வலது மேல் மூலையில் உள்ள சிறிய அம்புக் குறியில் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், hide என்பதை அழுத்தி, தகவலை மறைக்கலாம். 

இவ்வாறு மறைக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட நபரிடமிருந்து வரும் தகவல் பதிவுகள் மறைக்கப்படும் மற்றும் குறைக்கப்படும்.

“ஒரு நண்பர் நம்மைப் பின் தொடர அனுமதி அளிப்பதுவும், அனுமதியை நிறுத்துவதும் இனி உங்கள் கைகளில் உள்ளது” என்று இது குறித்து பேஸ்புக் நிர்வாகி க்ரெய்க் மர்ரா தன் வலைப்பதிவில் (http://newsroom.fb.com/news/2014/11/news-feed-fyi-more-ways-to-control-what-you-see-in-your-news-feed/) தெரிவித்துள்ளார். 

இந்த செட்டிங்ஸ் இயக்குவது பற்றிய காணொளி விளக்கக் காட்சியையும் காணலாம். 

அண்மையில் இன்னொரு சமூக இணைய தளமான, ட்விட்டர் தளத்தில், இதே போன்ற தகவல்களை மறைக்கும் வசதி தரப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேஸ்புக் தளமும் இந்த வசதியைத் தந்துள்ளது.


கணினியில் எளிதாக தமிழில் தட்டச்சு செய்ய பயனுள்ள மென்பொருள்


image
இந்த மென்பொருள் Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi,
Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு
செய்ய வகைசெய்கின்றது.
மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான
பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.

இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel,
MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை
செய்கின்றது.
வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை
 நிறுவ முடியும்.
தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள்
 மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.

ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று
தமிழில் பார்க்கும் வசதி.
ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.


NHM Writer எவ்வாறு டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி?

NHM Writer என்ற மென்பொருளை கீழ் உள்ள இணையத்தளத்தில் இருந்து
 டவுன்லோட் செய்யவும்.
எவ்வாறு டவுன்லோட் செய்வது திரை விளக்கப்படம்.

Click here to download NHM Writer



உங்கள் கணினியில் டவுன்லோட் செய்த கோப்புவை (File) இன்ஸ்டால் செய்ய (NHMWriterSetup1511.exe) என்ற கோப்புவை இரண்டு முறை கிளிக் செய்து ரன்
செய்யவும்.
பின்னர் கீழ் தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

முதல் படி (Step 1) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

image
2ஆம் படி (Step 2) 

 இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை
கிளிக் செய்யவும்.

image
3ஆம் படி (Step 3) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

image
4ஆம் படி (Step 4) இதில் தமிழ் மொழியை தேர்வு செய்து பின்னர் Next என்ற
பட்டனை கிளிக் செய்யவும்.

image
5ஆம் படி (Step 5) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

image
6ஆம் படி (Step 6) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்

image
பின்னர் மென்பொருள் கணினியில் இன்ஸ்டால் செய்யப்படும்.

image
NHM Writer யை எவ்வாறு பயன்படுத்துவது?

NHM Writer பயன்படுத்த கணினியின் கீழ் பகுதியில் உள்ள Toolbar ரில் வலது
மூலையில் மணி போன்ற ஓர் குறியீடு (Icon) தெரிந்தால் NHM Writer தற்போது
இயங்கி கொண்டுள்ளது என்று அர்த்தம். இதன் மூலம் NHM Writer ரை நீங்கள்
பயன்படுத்த முடியும்.

image

தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு தேர்வு செய்வது?

நான் முன்பே கூறியது போல் நீங்கள் விரும்பும் தமிழ் தட்டச்சு பலகையை
தேர்வு செய்ய மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள்
 மவுசை வைத்து இடது (Left) பட்டனை கிளிக் செய்தால், திரைவிளக்கப்படத்தில்
உள்ள மெனு தெரியும். அதில் நீங்கள் விரும்பிய தமிழ் தட்டச்சு பலகையை
தேர்வு
செய்யவும்.

image
தேர்வு செய்த பின்னர் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யமுடியும்.
மேலும் எளிதாக தமிழில் தட்டச்சு தேர்வு, செய்ய Alt Key மற்றும் 4 என்ற
எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

தமிழ் தட்டச்சுவிலிருந்து ஆங்கில மொழி தட்டச்சு பலகைக்கு மாற்ற, Alt Key
மற்றும் 0 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

செட்டிங்கை எவ்வாறு மாற்றுவது?

NHM Writer செட்டிங்கை மாற்ற மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில்
 (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.
image
அதில் செட்டிங் என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள
 திரைவிளக்கப்படம் தெரியும். அதில் நீங்கள் உங்கள் தட்டச்சு பலகைக்கு
 மாற்ற உதவும் Alt Key மற்றும் எண்னை மாற்ற விரும்பினால் மாற்றிக்
கொள்ளலாம்.

image
தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு அறிந்து கொள்வது?

முதன் முதலில் தமிழில் தட்டச்சு செய்ய எந்தெந்த தமிழ் எழுத்து, தட்டச்சு
பலகையில் எந்தெந்த பொத்தானில் உள்ளது? என்பதை அறிவது அவசியம்.
ஆகவே தான் உங்களுக்கு உதவியாக நீங்கள் தட்டச்சு செய்யும் போது உங்கள்
 கண் முன் அந்த தட்டச்சு பலகையின் விளக்கப்படம் கொண்டுவர NHM Writer
உதவி புரிகின்றது. அதற்கு நீங்கள், மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை
 (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் போதும். திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.
image
அதில் On-Screen Keyboard என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.

image
நீங்கள் இதை வைத்து தட்டச்சு செய்யும் எழுத்து எங்கு உள்ளது என்பதை
எளிதில் பார்த்து தட்டச்சு செய்ய முடியும்.
யா,ய்,யூ,யி,யீ போன்ற எழுத்துக்களை எவ்வாறு தட்டச்சு செய்வது?
எனக்கு தெரிந்தவரை தமிழில் தட்டச்சு செய்பவர்கள் ஆரம்பத்தில்
பிரச்சனையாக கருதுவது மேற் குறிப்பிட்ட தமிழ் எழுத்துக்களை தான்.
அவற்றை தட்டச்சு செய்ய NHM Writer, Key Previewஎன்ற எளிய வழியை
ஏற்படுத்தி உள்ளது.
Key Preview என்ற திரையை பார்க்க மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை
 (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.

image
அதில் Key Preview என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்

image
உதாரணமாக நீங்கள் a என்ற ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் அதற்கு
 ”ய” என்ற தழிழ் எழுத்து உங்கள் திரையில் விழும். நீங்கள் அந்த ”ய” என்ற
தழிழ் எழுத்தை ”ய்” என்றோ, அல்லது ”யா” என்றோ மாற்ற விரும்பினால் "a;"
 அல்லது ah என்று தட்டச்சு செய்ய வேண்டும். உங்களுக்கு உதவியாக கீழ்
 உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.

image

நீங்கள் இதை பார்த்து, எந்த ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் என்ன தமிழ்
 எழுத்து வரும் என்பதை நன்றாக அறிந்து செய்ய முடியும்.


இனி உங்கள் தமிழ் தட்டச்சு, தமிழை போலவே இனிதாக இருக்கும்! வளர்க
 இனிய தமிழ் மற்றும் இணைய தமிழ்!!!

உங்கள் படங்களை நீங்களே மெருகேற்ற, வடிவமைக்க, வெட்ட, மாற்றம் செய்யும் எளிய வழிமுறைகள்


பதிவெழுதி ஒருவார காலத்திற்கும் மேலாகிவிட்டது அல்லவா? வேலை பளுவின் காரணமாக பதிவெதுவும் எழுத இயலவில்லை என்பதை முதலில் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்..

நண்பர்களே..! நாம் நம்முடைய புகைப்படங்களை விதவிதமாக டிசைன் செய்ய ஆசைப்பட்டிருப்போம். அல்லது இணையத்தில் உள்ள படங்களைப் போன்று நம்முடைய படங்களையும் அவ்வாறு மாற்றம் செய்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் எப்போதாவது உங்களுக்குத் தோன்றியிருக்கும். ஏன்? எனக்கும் கூட அவ்வாறான எண்ணங்கள் அவ்வப்போது வந்து போவதுண்டு...
 
ஆசை இருக்கிறது.. ஆனால் அவ்வாறு புகைப்படங்களை மாற்றம் செய்வதற்குரிய வழிமுறைகள் தெரியாது.. என்ன செய்ய? 

இதோ இதற்கு ஒரு தீர்வு...

புகைப்படங்களை உருவாக்குவதற்கும், உருவாக்கியவற்றை நம் விருப்பப்படி மாற்றியமைக்கவும் பல இணையத்தளங்கள் உள்ளன.சிலவற்றின் ஃபார்மட்டினை மாற்ற முயற்சிப்போம். சிலவற்றின் இயல்புகளைச் செறிவாக அமைக்க எண்ணுவோம். புகைப்படங்களில் உள்ள தேவையற்ற பிக்ஸெல்களை(Delete Unwanted pixels) நீக்க திட்டமிடுவோம்.

படங்களைத் தலைகீழாகவோ, சில சிறிய துண்டுகளாகவோ மாற்றி அவற்றிற்கு புதிய வடிவம் தரவும் சிலர் விரும்புவார்கள். 


இந்த ஆசைகளை நிறைவேற்றும் வகையில் 
Image Splitter(இமெஜ் ஃபில்டர்) என்ற இணையத்தளம் செயல்படுகிறது.

படங்களை மாற்றம் செய்யும் முறைகள்(Edit, convert, Split, Crop your images): 

இந்த தளத்திற்குச் சென்றவுடன் நாம் எந்த படத்தில் மேலே சொன்ன மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகிறோமோ, அந்த பட கோப்பை பதிவேற்றம்(Image) செய்திட வேண்டும்.

கோப்பின் அளவு 20MB க்கு மிகாமல் இருக்க வேண்டும் பின்னர், என்ன வகையான செயல்பாட்டினை மேற்கொள்ள விரும்புகிறோமோ, அதற்கான பட்டனைக் கிளிக் செய்தால், உடன் அந்த செயல் மேற்கொள்ளப்பட்டு படம் உங்களுக்கு தரவிறக்கம் செய்திடக் கிடைக்கும். இதனை நாம் தேர்ந்தெடுக்கும் டைரக்டரியில்(Directory) சேமித்துப் பயன்படுத்தலாம்.
 

இந்த தளத்தின் மூலம் jpeg, jpg, bmp, png, gif, ico ஆகிய ஃபார்மட்கள் கையாளப்படுகின்றன. ஃபார்மட்கள் மாற்றுவதில் மட்டுமின்றி, படங்களின் அளவுகளை மாற்றுகையிலும், நெட்டு மற்றும் குறுக்காகப் படங்களை வெட்டிப் பெறுவதிலும் கூட உங்களுக்கு எந்த ஃபார்மட்டில் தேவையோ அந்த ஃபார்மட்டில் கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.
 

படம் ஒன்றை ரீசைஸ்(Resize) செய்வதற்கு எந்த அளவில் புதிய சைஸ் இருக்க வேண்டுமோ அந்த அளவினை கொடுத்தால் போதும்.
 

அளவுகளைத் கொடுத்தப் பின் Resize image என்ற பட்டனில் Click செய்தால் அந்த அளவிற்கான படம் கிடைக்கும். இதில் சிறப்பு என்னவெனில் நீங்கள் அகலத்தினை 50 பிக்ஸெல்(5Pixel) அளவிற்கு மாற்றினால் அதற்கேற்ற வகையில் நீளம் சரி செய்யப்பட்டு படம்(Photo) கிடைக்கும்.
 

மேலும் நாம் தரும் வரையறைகளின் படி ஒரு படத்தை மிகச் சரியாக வெட்டிப் பல கோப்புகளாக இந்த தளம் தருகிறது. பட கோப்பு(Image file) ஒன்றை பதிவேற்றம் செய்துவிட்டு, எத்தனை நெட்டு வரிசை(Coloumn) மற்றும் படுக்கை வரிசை(Rows)என கொடுத்தால் போதும். உடன் ஒரு மாற்றம் செய்யப்பட்ட கோப்பானது Zip File தரவிறக்க கிடைக்கும். 


அதனை விரித்து பல துண்டுகளாக அழகாக இவற்றைப் பெறலாம். எடுத்துக்காட்டாக நான்கு சம துண்டுகளாக ஒரு படம் வெட்டப்பட வேண்டும் என்றால், 2 படுக்கை வரிசை(row) மற்றும் 2 நெட்டு வரிசை(coloumns) எனத் தர வேண்டும். நான்கு சரியான துண்டுகளாகக் கிடைக்கும்.
 

இதற்குப் பதிலாக 4 நெட்டு துண்டுகளாக வேண்டும் எனில், 1 row மற்றும் 4 columns எனக் கொடுக்க வேண்டும். இதில் என்ன சிறப்பு எனில் படங்கள் வெட்டப்பட்ட பின்னர் எப்படி காட்சி அளிக்கும் என முன் தோற்றக்காட்சி (Preview)காட்டப்படுகிறது. அதனைப் பார்த்த பின்னர் நமக்கு சரி என்றால் வெட்டுவதற்கு Ok என்பதைச் சொடுக்கலாம். 


இதே போல படங்களின் அளவினைச்(Image Size) சரி செய்திடலாம். மேலே குறிப்பிட்ட வேலைகளை மிக நேர்த்தியாக, கச்சிதமாக இந்த தளத்தில் மேற்கொள்ளலாம். எந்த இச் செயல்களை அனைத்தும் செய்து முடிக்க எந்த ஒரு மென்பொருளையும் தரவிறக்கம் செய்ய வேண்டியதில்லை. அனைத்து வேலைகளுமே இத்தளத்திலேயே செய்து முடிக்கலாம். நீங்களும் முயற்சி செய்யுங்களேன்...!
 

இலவச மென்பொருட்களின் நந்தவனம்...


வணக்கம் நண்பர்களே..! மென்பொருள்கள் என்ற வார்த்தை இப்போது தமிழில் பிரபலம்.. அதுவும் இலவச மென்பொருள் என்றாலே இன்னும் கூடுதல் பிரபலமாகிய வார்த்தை.. யார் ஒருவர் கூகிளில் தேடினாலும் ஆங்கிலத்தில் Free software for... என்றும், தமிழில் இலவச மென்பொருள்.. என்றும் தேடியே  தங்களுக்குத் தேவையான மென்பொருள்களை தேடித் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி மகிழ்கின்றனர்..

அவ்வாறான தளங்களில் மிகச் சிறப்பானதொரு தளமாக என் கண்ணில் பட்டதுதான் இந்த File Hippo தளம்.. இதில் அடங்கியுள்ள மெனபொருட்கள்ஏராளம்..


ஏராளம்.. அது நமக்கு கிடைப்பதோ... தாராளம்.. தாரளம்...
 

மிக எளிதாக  இத்தளத்தில் நமக்கு வேண்டிய மென்பொருட்களைத் தேடிப் பெறலாம்..
 

ஒரு மென்பொருளைப் பற்றித் தேடி பெறும்போது, அதன் தொடர்புடைய மென்பொருட்களையும், அந்த மென்பொருட்களின் சமீபத்திய புதுப்பித்தலையும் காட்டுவதோடு, மென்பொருள்களின் ஆரம்ப பதிப்புகளையும் பட்டியலிட்டு காட்டுகிறது. 


popular software list in filehippo website
உதாரணமாக நான் என்னுடைய VLC மென்பொருளை மேன்படுத்துவதற்காக தேடியபோது.. அந்த மென்பொருளின் முந்தைய பதிப்புகளையும் அட்டவணைப்படுத்தி காட்டியபோது எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.. உடனே இந்தப் பதிவை எழுத ஆரம்பித்துவிட்டேன்..

இத்தளம் மென்பொருட்களின் சுரங்கம் என்றால் அது மிகையாகாது. 


இத்தளத்தில் drivers, networks and administrators, file sharing, browsers and plugins, cd and dvd tools, system tuning firewall and security,Developer Tools, Drivers, Office and News, Photos and Images, Compression and Backup, File Transfer, Desktop, System Tuning, Messaging and Chat, என்பன போன்ற தலைப்புகளில் உங்களுக்கு வேண்டிய மென்பொருட்களை அட்டவணைப்படுத்தி கொடுக்கிறார்கள். 



இத்தளத்தின் முகவரி: FILEHIPPO.COM

இந்த வசதி மட்டுமா? ஒவ்வொரு மென்பொருளின் புதிய அப்டேட்களையும் தவறாமல் அறிவித்துவிடுகிறார்கள்.  


மேலும் ஒரு கூடுதல் தகவல்களாக ஃபைல் ஹிப்போ தளத்தில் இதுவரைக்கும் அதிகம் பயனாளர்களால் தரவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்களையும் வரிசைப்படுத்திக் காட்டுகிறது..
 

இதிலுள்ள அனைத்து மென்பொருட்களையும் இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்பெறலாம் என்பது கூடுதல் வசதி..
 

இந்த பயனுள்ள தளத்தை தங்களுக்கும் அறிமுகம் செய்து வைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி.. உங்களுக்கு எப்படி?


கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும்



கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் அது இயங்கத் தொடங்கும் முன்பாகவே கம்ப்யூட்டர் முடங்கிப் போகலாம். ஆனால் முடங்கிப் போவது அனைத்து நேரங்களிலும் நடக்காது. இங்கு சில வழக்கமான எர்ரர் செய்திகளும், அவற்றிற்கான காரணங்களும் இங்கு தரப்படுகின்றன.

1. மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது: இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள், ராம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனைத்தையும் சரி பார்க்கவும்.

2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது: ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக்கலாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியுள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் இவை சற்று இடம் பெயர்ந்திருக்கலாம்.

3. மூன்று பீப் ஒன்று நீளமாக, இரண்டு குறைவாக: இந்த ஒலி கிடைத்தால் டிஸ்பிளே கார்டில் பிரச்னை. இந்த கார்டை ஒரு முறை எடுத்து திரும்ப பொருத்தவும். பிரச்னை தொடர்ந்தால் இதனை மாற்ற வேண்டியதிருக்கும்.

4. மூன்று நீளமான பீப் ஒலி, சம கால இடைவெளியில்: பயாஸ் அல்லது ராம் செட்டிங்ஸ் பிரச்சினை. ராம் சிப் மற்றும் பயாஸ் செட்டிங்ஸ் செக் செய்திடவும்.

5. தொடர்ந்த பீப் ஒலி: கீ போர்டு பிரச்சினை. எடுத்துக் காட்டாக உங்கள் விரல்கள் ஏதேனும் தொடர்ந்து ஒரு கீயை அழுத்திக் கொண்டிருக்கலாம்; அல்லது ஏற்கனவே அழுத்தப்பட்ட கீ, தூசி அல்லது வேறு பிரச்சினையால், மேலே எழாமல் அழுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கலாம்.

6. பிளாப்பி டிஸ்க்/ சி.டி.டிரைவின் எல்.இ.டி. விளக்கு தொடர்ந்து எரிகிறது: டேட்டா கேபிள் மாட்டியதில் சிக்கல் உள்ளது. கேபிள் முறுக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.

7. மானிட்டர் திரையில் எந்த டிஸ்பிளேயும் இல்லை: ஹார்ட் டிஸ்க் கேபிள் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது. சரியாகப் பொருத்தவும். அதில் உள்ள சிகப்பு மார்க் பவர் சப்ளையைப் பார்த்து இருக்க வேண்டும்.

8. பவர் எல்.இ.டி. எரியவில்லை: மெயின் பவர் வரும் வயர் சரியாகப் பொருந்தி உள்ளதா எனப் பார்க்கவும். எஸ்.எம்.பி.எஸ். சரியாக வேலை செய்கிறதா எனச் சோதிக்கவும். மதர் போர்டுக்கான இணைப்பும் சரியாக இருக்க வேண்டும்.

9. CMOS Error என்று செய்தி வருகிறது: மதர் போர்டில் உள்ள 3 வோல்ட் பேட்டரியினை மாற்றவும். அதன் ஒரிஜினல் செட்டிங்ஸை நீங்களே கொண்டு வரவும். இதற்கு கம்ப்யூட்டருடன் தரப்பட்ட சீமாஸ் செட் அப் சார்ட் பார்க்கவும்.

10. HDD Error or Hard Disk Failure என்று செய்தி வருகிறது. பவர் தரும் கேபிள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். ஒரு முறை எடுத்து, இணைக்கும் இடத்தில் உள்ள தூசியினை நீக்கிப் பொருத்திப் பார்க்கவும்.

ஹார்ட் டிஸ்க் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதனை உறுதி செய்திடவும். ஹார்ட் டிஸ்க்கிற்கான டேட்டா கேபிளையும் ஒரு முறை எடுத்து, சுத்தம் செய்து மீண்டும் இணைக்கவும். சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் பாராமீட்டர்கள் சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளதா எனச் சோதனை செய்திடவும். அல்லது செட்டிங் பார்ட்டிஷனை சோதனை செய்திடவும். இதற்கு எப்டிஸ்க் (FDisk) கட்டளை கொடுத்து பின் ட்ரேக் 0 ஆக பார்மட் செய்திடவும்.

11. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது: எஸ்.எம்.பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு. மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர் காட்டப்படும்.

12. மானிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது: டிஸ்பிளே கார்டு சரியாகப் பொருத்தப் பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ் புரோகிராம் உள்ளே புகுந்தும் இந்த வேலையைச் செய்திடலாம். அல்லது வீடியோ மெமரியில் பிரச்சினை இருக்கலாம்.

13. திரைக் காட்சி அதிர்கிறது: மானிட்டரைச் சுற்றி ஏதேனும் காந்த அல்லது ரேடியோ அலைகள் உருவாகலாம்.

14. சி.பி.யு. கேபினட்டில் லேசாக ஷாக் அடிக்கிறது: கம்ப்யூட்டருக்கான மின் இணைப்பின் எர்த் இணைப்பு சரியில்லாமல் இருக்கலாம். எனவே மெயின் பவர் கேபிளைச் சோதிக்கவும்.

15. Non System Disk Error: ஹார்ட் டிஸ்க்கிற்கான சீமாஸ் செட் அப்பில் தவறு இருக்கலாம். ஹார்ட் டிஸ்க்கில் பார்ட்டிஷன் உருவாக் கப்படாமல் இருக்கலாம். ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் பார்மட் செய்யப்படாமல் இருக்கலாம்.

16. Missing Operating System: சிஸ்டம் இயக்குவதற்கான பைல்கள் இல்லாமல் இருக்கலாம்.

17. Missing Command Interpretor: Command.com பைல் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். அல்லது அழிக்கப்பட்டிருக்கலாம்.

18. IO Error: சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் எந்த வகை என்று தரப்பட்டிருப்பது சரியாக இல்லை. பார்மட்டிங் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் சரியானதல்ல.

19. Divide Over Flow எர்ரர் மெசேஜ்: சில டைரக்டரிகள் அல்லது பைல்கள் கிராஷ் ஆகி இருக்கலாம். CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி அவற்றைச் சரி செய்திடவும்.

20. செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து சத்தம் வருகிறது: சீரான மின்சாரம் தரப்படவில்லை. கேபிள்கள் சரியாகப் பொருத்தப்படவில்லை. ஹார்ட் டிஸ்க்குகளில் ஙு கனக்டர் கேபிள் பொருத்தப்பட்டிருந்தால் எடுத்துவிட்டு சரியானகேபிளைப் பொருத்தவும். ஹார்ட் டிஸ்க் பலவீனமாக இருக்க வேண்டும். அல்லது பெரும் அளவில் பேட் செக்டார்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.

21. ஹார்ட் டிஸ்க் ப்ராசஸ் செய்கையில் முடங்கி நிற்கிறது: CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி பேட் செக்டார்களைச் சோத னை செய்திடவும். நிறைய இருந்தால் மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடவும்.

22. Hard Disk Not Detected: பவர் கனெக்டர்களைச் சோதனை செய்திடவும். டேட்டா கேபிள்களைச் சரி பார்க்கவும். ஜம்ப்பர்களைச் சோதனை செய்திடவும்.

23. ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் காட்டப்படவில்லை: ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், தற்போதுள்ள மதர்போர்டுடன் இணைந்து போகவில்லை.

24. MMX/DLL FILE MISSING: இந்த பைல்கள் பவர் திடீரென நின்று போனதால் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். எனவே இந்த பைல்களை வேறு ஒரு கம்ப்யூட்டரிலிருந்து காப்பி செய்து இதற்கு மாற்றவும்.

பொதுவாக கம்ப்யூட்டர் இயங்காமல் நின்று போய்விட்டால்,உடனே ஒரு பதற்றம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று பல்வேறு விதமாக நாமாகவே எண்ணிக் கொள்வோம்.


அத்தகைய பதற்றத்தைத் தணிக்கவே இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது. எனவே பிரச்சினையின் தன்மையைப் புரிந்து கொண்டு,உங்களால் கம்ப்யூட்டர் கேபினைத் திறந்து சரி செய்ய முடியவில்லை என்றால் அதற்கான டெக்னீஷியனை அழைத்து சரி செய்திடவும்.

விண்வெளி விந்தைகள்


விண்வெளியில் அதிக சக்தி வாய்ந்த கருந்துளைகள் உள்ளன. இவை தங்களுக்கருகில் இருக்கும் அனைத்தையும் உள்ளிழுத்து கொள்ளும் ஆற்றல் பெற்றவை. தற்போது அத்தகைய கருந்துளைகளில் ஒன்று நட்சத்திரம் ஒன்றை சிதறடித்து பின் தனக்குள்ளே உள் வாங்கிய அரிய நிகழ்ச்சியை வானியலாளர்கள் முதன் முறையாக கண்டறிந்துள்ளனர். பூமியிலிருந்து 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில்
நடந்துள்ள இது போன்ற நிகழ்வு இதற்கு முன்பு கண்டறியப்படாதது. பொதுவாக கருந்துளைகளின் மையம் சூரியனைப்போன்று 100 கோடி மடங்கு அதிக வலிமை கொண்டதாக இருக்கும். தற்போது நடைபெற்ற
நிகழ்வில், கருந்துளையானது தன்னிடமிருந்து 3.9 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்த நட்சத்திரத்தை, அதிக சக்தி வாய்ந்த காஸ்மிக் ஜெட் எனப்படும் தனிப்பட்ட சக்தியால் சிதறடித்து பின் தன்னுள் இழுத்து கொண்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஒளி வெள்ளம் அதனை படம் பிடித்த நாசாவின் ஸ்விப்ட் தொலைநோக்கிக்கு அடுத்த ஒரு வடருடத்திற்கு தேவையான ஒளியை வழங்குமளவிற்கு பிரமாண்டமாய் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விண்வெளியில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து எக்ஸ் கதிர்களின் அலைவீச்சு அடிக்கடி நிகழ்ந்து வந்ததையும் ஸ்விப்ட் தொலைநோக்கி அவ்வப்போது நாசாவிற்கு தெரிவித்து வந்தது. அதனை தொடர்ந்து ஆராய்ந்ததில் இந்த அரிய நிகழ்வு தற்போது உலகிற்கு தெரிய வந்துள்ளது. மற்றும் நட்சத்திர மண்டலத்தில் 100 மில்லியன் வருடங்களுக்கு ஒரு முறை இது போன்ற நிகழ்வு நடைபெறும் என பென்சில்வேனியா மாநில பல்கலைகழகம் மற்றும் ஹார்வேர்டு ஸ்மித்சோனியன் வானியல் அமைப்பு ஆகிய குழுவை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூக தளங்களில் நன்னடத்தை வழிகள்

 
இன்டர்நெட் பயன்படுத்தும் அனைவரும் ஏதேனும் ஒரு சமூக வலைத்தளத்தில் தங்களைப் பதிந்து வைத்து, நண்பர்களைத் தேடித் தங்கள் உறவினை வலுப்படுத்தி வருகின்றனர். இவற்றின் மூலம் அனைவரும் பயன்பெறுகின்றனர்.

உலக அளவில் தங்கள் நண்பர்கள் வட்டத்தை விரிவாக்கி, கருத்துக்களையும், தனி நபர் எண்ணங்களையும் பரிமாறிக் கொள்கின்றனர். இதனையே வழியாகக் கொண்டு, தனிநபர் சுதந்திரத்தில் தலையீடுவோரும் இங்கே காணப்படுகின்றனர்.

இவர்களிடம் நாம் பாதுகாப்பாக இயங்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் மற்றவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து நாம் இயங்க வேண்டியுள்ளது. இதற்கென நாம் சில அடிப்படை கோட்பாடுகளைக் கடைப்பிடித்தால் அது அனைவருக்கும் நலம் அளிக்கும். அவற்றை இங்கு காணலாம்.


1. உணர்வு பகிர்தலில் கட்டுப்பாடு:

என்னதான் நம் நண்பர்களுடன் நம் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொண்டாலும், சிலவற்றை நம்முடனே வைத்துக் கொள்வதுதான் நாகரிகமானது. ஒரு சிலர் வேண்டும் என்றே, உண்மைக்கு மாறான தகவல்களை, வெளிப்படுத்துகின்றனர்.

நம் உடல்நலக் குறைவு, பாலியல் ரீதியான பிரச்னைகள், மற்றவரை இன்னலுக்குள்ளாக்கும் காதல் பிரச்னைகளை மற்றவர் அறியத் தருவது நம்மைப் பற்றிய அருவருப்பைத்தான் ஏற்படுத்தும். எனவே உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் பிறர் அறியத் தர வேண்டாமே.


2. சமூக தளம் உங்கள் பிரச்சார மேடை அல்ல:

இணையத்தில் உருவாக்கப் பட்டிருக்கும் சமூகத் தளங்கள், நம் கருத்துக்களை வெளிப்படுத்தவும் தரப்பட்டிருக்கும் ஓர் இடம் தான். ஆனால், அதனையே நம் பிரச்சார மேடையாக்கி, எப்போதும் நான் எண்ணுவதே, என் கொள்கைகளே, கருத்துக்களே சரி என்ற அளவில் இயங்குவது தவறானதாகும்.

உங்கள் ஒழுக்க, அரசியல் கோட்பாடுகளை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்கள் அவற்றைப் பின்பற்ற வேண்டும் அல்லது அதற்காக உங்களைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் வெளியிடுவது தவறு.


3.குற்றச்சாட்டுக்கான மேடையா இது?:

சிலர் நுகர்வோர் பிரச்னைகளுக்கான மேடையாக சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதுவும் தவறு. ஒன்றிரண்டு பொதுவான பிரச்னைகளை தெரிவிக்கலாம். ஆனால், தொடர்ந்து ஒருவருக்கு அல்லது நிறுவனத்திற்கு எதிரான கருத்துக்களை, அவர்களின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் வெளியிடுவது கூடாது.


4. நீங்கள் என்ன செய்தி ஏஜென்சியா? :

இணையத்தில் இப்போது சுடச் சுட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கையில், அல்லது நடந்து முடிந்த சில நொடிகளில் அது குறித்த தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால், ஒரு சிலர் தங்களுக்குத்தான் முதலில் தெரிந்ததாகக் காட்டிக் கொண்டு அவை பற்றி தகவல்களைத் தெரிவிக்கின்றனர்.

இதற்கென இருக்கும் நியூஸ் ஏஜென்சிகள் அவற்றைப் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் ஏன் நேரத்தையும், வலைத் தளங்களின் இடத்தையும் வீணடிக்கிறீர்கள்.


5.மேற்கோள்கள் தேவையா?:

சிலர் ஐன்ஸ்டீன் சொன்னது, ஷேக்ஸ்பியர் நாயகர்கள் கூறியது என எதனையாவது மேற்கோள் காட்டிக் கொண்டே இருப்பார்கள். தொடர்பற்று இருக்கும் இவை தேவையா? நீங்கள் உங்களைப் பெரிய குருவாக எண்ணுவதனை நிறுத்திக் கொள்ளலாமே.


6. வீணான பெருமை வேண்டாமே!:

சிலர் தங்கள் நண்பர்கள் வட்டம் மிகப் பெரிது என்பதைக் காட்டுவதற்காக, தினந்தோறும் தொடர்பு அற்ற பலருக்கு மெசேஜ் அனுப்புவார்கள். இதனால் என்ன நேரப் போகிறது. உண்மையிலேயே நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய நிலை இருந்தால் மட்டுமே நண்பர்களின் வட்டத்தை விரிதாக்குங்கள். நட்பு வட்டத்தில் உள்ளவர்களிடம் ஆரோக்கியமான உறவினைப் பலப்படுத்துங்கள்.


7.உங்களுக்கு தகவல், மற்றவருக்கு குப்பை?:

சில தகவல்கள் உங்களுக்கு மட்டுமே தொடர்புடையதாக இருக்கும். மற்றவருக்கு அது கிஞ்சித்தும் பயன்படாததாக இருக்கலாம். அவற்றை அனைவருக்கும் அனுப்புவதனை நிறுத்தவும். ஏனென்றால், சமூக வலைத் தளம் உங்களின் பிரைவேட் டயரி அல்ல.


8. முகம் சுழிக்கும் படங்கள் தேவையா?:

என்ன ஏது என்று பார்க்காமல், சிலர் தாங்கள் ரசிக்கும் படங்களைப் பதிக்கின்றனர். மத ரீதியாக சிலர் மனதை அவை புண்படுத்தலாம். நாகரிக அடிப்படையில் சில ஒத்துக் கொள்ளக் கூடாததாக இருக்கலாம். எனவே தேவையற்ற படங்களை வெளியிட வேண்டாமே. அதே போல உங்களின் தோழர்கள் மற்றும் தோழியர்களின் படங்களை வெளியிடுவது மிகப் பெருந் தவறல்லவா. அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையினை பாழ்படுத்த வேண்டாமே.

MS ஆப்பிஸ் டாக்குமெண்ட்களை Tap வடிவில் திறக்க

எம்.எஸ் ஆப்பிஸ் பதிப்புகளான வேர்ட், எக்சல், பவர் பாயிண்ட் போன்ற பதிப்புகளை சாதாரணமாக பயன்படுத்தும் போது, ஒவ்வொறு பதிப்பினை பயன்படுத்தும் போது தனித்தனியே திறந்து பயன்படுத்துவோம். உதாரணமாக வேர்ட் பதிப்பில் இரண்டு கோப்புகளை உருவாக்க வேண்டுமெனில் தனித்தனியே ஒப்பன் செய்து உருவாக்குவோம். இதற்கு பதிலாய் ஒரே பதிப்பில் இருந்து கொண்டே பல்வேறு கோப்புகளை உருவாக்க முடியும்.  சாதாரணமாக ஆப்பிஸ் கோப்புகளை கையாளும் போது அதனை நாம் தனித்தனியாக மட்டுமே ஒப்பன் செய்து பயன்படுத்துவோம். அதற்கு பதிலாக உலாவிகளில்(Browser) போன்று ஒவ்வொரு கோப்புகளையும் டேப் வடிவில் திறக்க முடியும். இதற்கு Office Tap என்னும் சிறிய மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி


மென்பொருளை இணையத்தின் உதவியுடன் கணினியில் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்து நம் விருப்பபடி மாற்றங்கள் செய்து கொள்ள முடியும்.



நமக்கு ஏற்றபடி மாற்றங்களை செய்து கொள்ள முடியும். மேலும் இந்த மென்பொருள் எம்.எஸ் ஆப்பிஸ் தொகுப்புகளான 2003,2007 மற்றும் 2010 ஆகிய தொகுப்புகளை ஆதரிக்க கூடியது ஆகும். மேலும் இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் மூலம் வேர்ட், எக்சல் மற்றும் பவர்பாயிண்ட் போன்ற கோப்புகளையும் டேப் வடிவில் திறக்க முடியும்.

ஆப்பரேட்டிங் சிஸ்டம் - சில அடிப்படைகள்


விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் நம் அன்றாடப் பணிகளில் கலந்து, நம்மோடு இணைந்த இக்காலத்தில், அதன் பல இயக்கச் சொற்களை அப்படியே ஆங்கிலத்திலேயே நாம் புழங்கி வருகிறோம். அவற்றில் சிலவற்றின் முழுச் செயல்பாட்டினை இங்கு காணலாம்.


1. Abort (அபார்ட்):

ஒரு புரோகிராம் அல்லது செயல்பாட்டினை, அது இயற்கையாக முடிவதற்கு முன்னரே நிறுத்துவதனை அபார்ட் என்கிறோம். இதனை நாமாகவும் நிறுத்தலாம்; தானாக கம்ப்யூட்டரில் சிக்கல் ஏற்பட்டும் நிறுத்தப்படலாம்.

எடுத்துக் காட்டாக, பிரிண்ட் கட்டளை கொடுத்த பின்னர், நாம் விரும்பினால், அச்சிடுவதனை அபார்ட் செய்திட, புரோகிராமே வழி கொடுக்கிறது. எதனையேனும் தேடச் சொல்லி, கட்டளை கொடுத்து, கம்ப்யூட்டர் தேடி, முடிவுகளைப் பட்டியலிடுகையில், நமக்குத் தேவையான தகவல் கிடைத்தால், செயல்பாட்டினை அபார்ட் செய்திட வழி கிடைக்கிறது. இதனை crash என்பதனுடன் ஒப்பிடலாம். கிராஷ் ஏற்படுகையில், சிஸ்டம் முழுமையும், ஆப்பரேட்டிங் சிஸ்டம் உட்பட, முடங்கிப் போய் நின்று விடுகிறது.


2. Batch File (பேட்ச் பைல்):

வரிசையாக அல்லது குழுவாக அமைக்கப்பட்ட கட்டளைகளின் தொகுப்பு. இந்த கட்டளைகளை அப்படியே மொத்தமாக, இவை உள்ள பைலை இயக்கிச் செயல்படுத்தலாம். எடுத்துக் காட்டாக, டாஸ் அடிப்படையில் இயங்கும் சிஸ்டத்தில், சிஸ்டம் தானாக, AUTOEXEC.BAT என்ற பைலை இயக்கும். இதில் டாஸ் இயக்கம் தொடக்கத்தில் இயங்குவதற்குத் தேவையான கட்டளைகள் இருக்கும். சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள், பேட்ச் பைல் என்பதற்குப் பதிலாக command file அல்லது shell script எனப் பயன்படுத்துகின்றனர்.


3. BIOS (பயாஸ்):

இதனை பைஓ.எஸ். என அழைக்க வேண்டும். ஆனால் பயாஸ் என அழைக்கப்படுவதே பழக்கமாகிவிட்டது. டிஸ்க்கில் உள்ள எந்த புரோகிராமோடும் தொடர்பு கொள்ளாமல், ஒரு கம்ப்யூட்டர் என்ன செய்திட வேண்டும் என அமைக்கப்பட்டு, கம்ப்யூட்டரிலேயே பதிந்து தரப்படும் ஒரு புரோகிராம். ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரின் பயாஸ் புரோகிராமில், கீ போர்டு, டிஸ்பிளே ஸ்கிரீன், டிஸ்க் ட்ரைவ்கள், சீரியல் தொடர்புகள் மற்றும் இது போன்ற பல சில்லரை செயல்பாடுகளை மேற்கொள்ள இந்த புரோகிராமில் கட்டளைகள் இருக்கும்.

இந்த பயாஸ் புரோகிராம் ஒரு சிப்பில் பதிந்து தரப்பட்டிருக்கும். இதனால், டிஸ்க் ட்ரைவ் கெட்டுப் போனாலும், கம்ப்யூட்டருக்கு இந்த தொடக்க நிலை புரோகிராம் கிடைக்கும். இதனால் கம்ப்யூட்டர் ஒன்று, தானாக இயங்க வழி கிடைக்கிறது. மெமரி சிப்பைக் காட்டிலும், RAM வேகமாக இயங்கும் என்பதால், பல கம்ப்யூட்டர்களில், பயாஸ் ROMலிருந்து RAMக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து இயங்கும்படி அமைக்கப்படும். இதனை ஆங்கிலத்தில் shadowing என அழைக்கிறோம்.

இப்போது வரும் கம்ப்யூட்டர்களில் flash BIOS என அமைக்கப்பட்டுக் கிடைக்கிறது. அதாவது பயாஸ் புரோகிராம் பிளாஷ் மெமரியில் பதியப்பட்டு இயக்கப்படுகிறது. இதனால், தேவைப்படுகையில், இதனை அப்டேட் செய்து கொள்ளலாம். பொதுவாக BIOS என்பது அனைத்துக் கம்ப்யூட்டர்களிலும் இப்படித்தான் இருக்க வேண்டும் என பொதுவான வரைமுறையுடன் அமைக்கப்படுகிறது.

BIOS புரோகிராமில் பல வகையான பதிப்புகள் இருந்தாலும், அடிப்படையில் அவை ஒரே கட்டமைப்பைக் கொண்டுள்ளன. கூடுதலாக ஏதேனும் டாஸ் கட்டளைகள் தரப்பட வேண்டும் என்றால், அவை சாப்ட்வேர் மூலம் இணைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டரில் இணைத்துச் செயல்படுத்தும் ப்ளக் அண்ட் ப்ளே சாதனங்களைக் கையாளும் புரோகிராம்களை PnP BIOS அல்லது PnPaware BIOS என அழைக்கின்றனர்.


Clean boot (கிளீன் பூட்):

மிகக் குறைந்த எண்ணிக்கையிலான புரோகிராம்களுடன், ஒரு கம்ப்யூட்டரை இயக்குவதற்கு Clean boot என்று பெயர். பொதுவாக, கம்ப்யூட்டர் ஒன்றை இயக்குகையில், இயக்குபவருக்கான, கம்ப்யூட்டிங் சூழ்நிலையை உருவாக்க, பல பைல்களும், புரோகிராம்களும், ட்ரைவிலிருந்து எடுக்கப்பட்டு, இயக்கப்படும். செய்யப்படுகையில், இந்த கூடுதல் புரோகிராம்கள் அனைத்தும் இல்லாமல், ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குவதற்குத் தேவையானவை மட்டும் இயக்கப்படும்.


இவ்வாறு இயக்குவது, கம்ப்யூட்டர் செயல்பாட்டில் உள்ள பிரச்னைகளை அறிய உதவும். இவ்வாறு இயக்கியபின், டயாக்னாஸ்டிக் டெஸ்ட் எனப்படும் சோதனையை மேற்கொள்ளலாம். இந்த சோதனையில், வழக்கமாக கம்ப்யூட்டர் இயங்கத் தேவையான ஓட்டத்தில் எங்கே பிரச்னை உள்ளது என அறியலாம்.

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews