தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Wednesday, January 29, 2014

இரண்டு கணினிகளை இணைப்பது எப்படி?

தற்போது நாம் முன்னொருபோதும் இல்லாதவாறு ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்த ஓர் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எமது அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாக கணினிகள் மாறி விட்டதைத் தொடந்து மக்களுக்கியேயான தொடர்பாடல் முறைகளும் மாறியிருப்பதைக் காண் கிறோம்..
 
இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளை ஒன்றோடொன்று இணைக்கப் பட்டிருப்பின் அதனை ஒரு கணினி வலையமைப்பு (Computer Network) எனப்படும். கணினிகளை ஒன்றோடொன்று இணைப்பதிலும் பல்வேறு முறைகள் பயன் பாட்டிலுள்ளன. வலையமைப்பின் அளவைப் பொருத்து இந்த ஒவ்வொரு முறையும் அதற்கேயுரிய சாதக பாதகங்களையும் கொண்டுள்ளன.
எந்த வகையிலான கணினி வலையமைப்பை உருவாக்கும் போதும் சில அடிப்படை விடயங்களைக் கருத்தில் கொள்ள் வேண்டியுள்ளது, உதாரணமாக் வலையமைப்பு உருவாக்கப் போவது கம்பியூடா (wired) அல்லது கம்பியில்லாமலா (wireless) என்பது. அதேபோன்று ஒரு வலையமைப்பில் முகிய பங்காற்றுவது ப்ரொட்டகோல் (Protocol) எனப்படும் தொடர்பாடல் விதி முறைகளாகும். இரு வேறு பட்ட கணினிகள் தொடர்பாடும் போது இணைப்பு மொழியாக் இந்த ப்ரொட்ட்கோல் தொழிற்படுகிறது. தற்போது கணினி வலையமைப்பில் TCP/IP எனும் தொடர்பாடல் விதிமுறையே பயன் பாட்டிலுள்ள்து.. இந்த விதி முறையே உலகலாவிய கணினி வலையமைப்பான இணையத்திலும் பயன் படுத்தப்படுகிறது.
 
பைல் மற்றும் வளங்களைப் பாரிமாறிக் கொள்ளும் வசதி, மின்னஞ்சல், கணினி வழி உரையாடல், பேஸ் புக் போன்ற சோஷியல் நெட் வொர்க் (Social Networking) சேவைகள் போன்றன் இன்றைய கணினிகளால் இணைந்து விட்ட உலகின் வியக்கத் தக்க பயன்பாடுகளாக்ப் பரபரப்பாகப் பேச்ப்படுகிறது. உலகம் முழுதுமுள்ள கணினிகளின் வலையமைப்பே இதனைச் சாத்தியமாக்கியது.
இனி விடயத்திற்கு வருவோம். வீட்டிலோ அலுவலகத்திலோ கணினிகளை ஓர் அறையின் மூலையில் வெளியுலக் தொடர்பேதுமில்லால் (Stand alone) தனியாக வைத்துப் பாவிக்கும் காலம் எப்போதோ மலையேறி விட்டது இருப்பது இரண்டே இரண்டு கணினிகளாயினும் அவற்றை ஒன்றோடொன்று இணைத்துப் பயன் படுத்துவதில் பல அனுகூலங்கள் உள்ளன. இரண்டு கணினிகளை இணைத்து ஒரு சிறிய கணினி வலயமைப்பை உருவாக்க ஒன்றுக்கு மேற்பட்ட வழி முறைகளும் உள்ளன. அவற்றுள் அதிக செலவில்லாமல் இணைக்கக் கூடியது க்ரொஸ் ஒவர் (cross-over) கேபல் கொண்டு இணைப்பதாகும். அதன் மூலம் இரண்டு கணினிகளுக்கிடையே பைல்களைப் பரிமாறிக் கொள்ளவும் இணைய இணைப்பு மற்றும் ப்ரிண்டர்களை பகிர்ந்து கொள்ளவும் முடியும்..இணைய இணைப்பைப் பகிர்ந்து கொள்வதாயின் ஒரு கணினியில் இரண்டு நெட்வர்க் கார்டுகளை (Network Interface Card) பொருத்த வேண்டி யிருக்கும். ஒரு கார்டை ப்ரோட்பேண்ட் (Broadband) இணைப்புக்கான ரூட்டரிலும் (Router) மற்றொரு கார்ட் அடுத்த கணினியை இணைக்கவும் பயன் படுத்தப்படும்.
 
ப்ரோட்பேண்ட் இணைய இணைப்பைப் ப்கிர வேண்டிய அவசியமில்லை அல்லது நீங்கள் பயன் படுத்துவது டயல் அப் (Dial up) இணைப்பு எனின் ஒரு கணீனியில் இரண்டு நெட்வர்க் கார்டுகள் தேவைப் படாது.. இரண்டு கணினிகளை இணைப்பது பைல்களைப் பரிமாற மட்டுமே எனின் இரண்டு கணினிக்ளிலும் ஒவ்வொரு நெட்வர்க் கார்ட்இருந்தாலே போதுமானது
.
எனினும் இவ்வாறு இரண்டு கணினிகளை இணைக்கும் போது சில வரையறைகளும் உள்ள்ன என்பதைக் கவனத்திற் கொள்ள் வேண்டும். உதாரணமாக் இணைய இணைப்பையோ அல்லது ப்ரிண்டரையோ பகிர்ந்து கொள்ளும் போது இரண்டு கணிகளும் இயக்க நிலையிலேயே இருக்க வேண்டும் என்பதையும் மறந்து விடாதீர்கள்,.
 
இடையில் ஹப் (Hub) , ஸ்விச் (Switch) போன்ற வேறு எந்த சாதனங்களும் இல்லாமல் நெட்வர்க் கார்ட் ஊடாக மட்டுமே இணைப்பதற்கு இரண்டு கணினிகளையும் விசேட cross-over கேபல் பயன் படுத்தப்படுகிறது.. இந்த க்ரொஸ் ஓவர் கேபல் வழமையான (Ethernet) ஈதர்நெட் கேபலிலிருந்து வேறுபட்டது. இத்னை நாமாகவே த்யாரித்துக் கொள்ளவும் முடியும்.
 
இரண்டு கணினிகளையும் கேபல் கொண்டு இணைத்து விட்டால் மாத்திரம் அவற்றிற்கிடையே தொடர்பாடலை மேற் கொள்ள் முடியாது. அடுத்த வேலையாக இரண்டு கணினிகளிலும் ஐபி முகவரிகளை கீழுள்ளவாறு மாற்றியமைக்க வேண்டும்.
 
விண்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளத்தில் முதல் கணினியில் Start → Settings ஊடாக Network Connections தெரிவு செய்யுங்கள். அப்போது திறக்கும் விண்டோவில் Local Area Network என்பதன் கீழ் நெட்வர்க் கார்டுக்குரிய ஐக்கனை மஞ்சள் நிறத்தில் விழிப்புக் குறியுடனும் “Limited or No Connectivity” எனும் செய்தியுடனும் காண்பிக்கும். அதாவது கணினிகளுக்கிடையே தொடர்பாடலை மேற் கொள்ள இரண்டு கணினிகளும் இன்னும் தயாராயில்லை என்பதையே இது காட்டுகிறது
 
அடுத்து அந்த ஐக்கன் மீது ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவிலிருந்து Properties தெரிவு செய்யுங்கள்., அப்போது தோன்றும் Local Area Connection Properties டயலொக் பொக்ஸில் General டேபின் கீழ் Internet Protocol (TCP/IP) என்பதைத் தெரிவு செய்து அதன் கீழுள்ள் Properties பட்டனில் க்ளிக் செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் Use the following IP address என்பதைத் தெரிவு செய்து கீழுள்ள்வாறு அதன் ஐபி முகவரியை மற்றியமையுங்கள்..
 
முதல் கணினியில் (PC-1) ஐபி முகவரியாக 192.168.0.1 எனவும் இரண்டாவது கணினியில் (PC-2) 192.168.0.2 எனவும் வழங்குங்கள். இப்போது இரண்டு கணினிகளையும் இணைத்தாயிற்று, இதனை உறுதி செய்து கொள்ள வேண்டுமானால் மறு படியும் Start → Settings ஊடாக Network Connections தெரிவு செய்ய் வரும் விண்டோவில் நெட்வர்க் கார்டுக்குரிய ஐக்கனில் ம்ஞ்சல் நிற விழிப்புக் குறி மறைந்திருப்பதைக் காணலாம். சில வேளை அந்த ஐக்கன் மேல் பூட்டு வடிவில் ஒரு ஐக்கன் இருப்பதை அவதானித்தால் Firewall இயக்க நிலையிலுள்ளது என்பதையே காட்டுகிறது. அவ்வாறிருந்தால் பைல் பரிமாறம் செய்வதை விண்டொஸ் அனுமதிக்காது. அதனை இடப்பக்கம் Network Task என்பதன் கீழ் Change Windows Firewall Settings என்பதைக் க்ளிக், செய்து தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளுங்கள்.. தற்போது இந்த சிறிய வலையமைப்பில் பைல், போல்டர் மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடியதாயிருக்கும்.
IP Address: 192.168.0.1
Subnet Mask: 255.255.255.0
Default Gateway: 192.168.0.1
Preferred DNS Server: 192.168.0.1
படங்கள் பிரசுரமாகுமாயிருந்தால்
நிழற் படுத்தப் பட்ட பகுதி அவசியமில்லை இரண்டாவது கணினியிலும் கீழே காட்டியுள்ளது போன்று ஐபி முகவரியை மாற்றி அமையுங்கள்.
IP Address: 192.168.0.2
Subnet Mask: 255.255.255.0
Default Gateway: 192.168.0.1
Preferred DNS Server: 192.168.0.1
 
 
அதி வேக ப்ரோடபேண்ட் இணைய இணைப்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமாயின் இரண்டு கணினிகளிலும் ஐபி முகவரியை மாற்றியமைக்கும் இடத்தில் “Obtain an IP address automatically” என்பதைத் தெரிவு செய்ய் வேண்டும்.
எனினும் அதிவேக இணைய இணைப்பை இரண்டு கணினிகளுக்கிடையே பகிர்ந்து கொள்ள வேண்டுமாயின் நேரடியாக் க்ரொஸ் ஓவர் கேபல் கொண்டு இணைப்பதை விட இடையில் இரண்டு அல்லது நான்கு போர்டுக்ள் (Ports) கொண்ட ரூட்டர் மூலம் இணைப்பதே சிறந்த வழி முறையாகும். எனினும் அதற்கு க்ரொஸ் ஓவர் கேபலை விட செலவு சற்று அதிகமாயிருக்கும். .என்பதை நினைவில் கொள்ளவும்.

Team Viewer என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி

உங்கள் கணினியில் அமர்ந்து கொண்டே எங்கோ இருக்கும் உங்கள் நண்பரின் கணினியை இயக்க முடியுமா? முடியும் என்ற வார்த்தையை பதிலாய் சொல்லுவதை விட. Team Viewer என்று பதில் சொல்லலாம். ஆம் Remote Control வசதியை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் Team Viewer மென்பொருள் பற்றி இன்று காண்போம்.


Team Viewer என்றால் என்ன? 

மேலே சொன்னது போல உங்கள் நண்பரின் கணினி அல்லது உங்கள் வீட்டு/அலுவக கணினி போன்றவற்றை நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே இணைய இணைப்பின் மூலம் இயக்க வைக்கும் மென்பொருள் தான் இது. Remote Control வசதி மூலம் குறிப்பிட்ட கணினியில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் சரி செய்ய முடியும், அந்தக் கணினியில் உள்ள மென்பொருட்களை இயக்க முடியும். 
இதை தரவிறக்க இங்கே செல்லவும். Team Viewer 7.0. இப்போது இதை இன்ஸ்டால் செய்து கொள்ளவும். இன்ஸ்டால் செய்யும் போது Non-Commercial Use என்பதை தெரிவு செய்யவும். 
எப்படி இதை பயன்படுத்துவது?

Install செய்த நண்பர்கள் உங்கள் கணினியில் Team Viewer-ஐ ஓபன் செய்யவும்.


மேலே படத்தில் உள்ளது போல உங்களுக்கென ID & Password கொடுக்கப்பட்டு இருக்கும். அதை நீங்கள் உங்கள் நண்பருக்கு தந்தால் அவர் இணைய இணைப்பில் உள்ள உங்கள் கணினியை, இணைய இணைப்பு உள்ள அவரது கணினியில் இருந்து Access செய்ய இயலும்.

நீங்கள் Access செய்ய வேண்டும் என்றாலும் உங்கள் நண்பரின் இந்த தகவல்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் நண்பர் கணினியின் Id தெரிந்தால் அதை Partner ID என்ற இடத்தில் கொடுத்து Connect To Partner என்று கொடுக்க வேண்டும். இப்போது வரும் குட்டி விண்டோவில் அவரது Password-ஐ தர வேண்டும். இப்போது உங்கள் நண்பரின் கணினி உங்கள் கண் முன் விரியும்.

நான் Remote Control வசதி மூலம் Access செய்த கணினியின் Screenshot களை கீழே இணைத்துள்ளேன்.

நண்பரின் கணினியில்
கற்போம் தளம்

நண்பரின் My Computer பகுதி
இதில் இரண்டு வசதிகள் உள்ளன என்று சொல்லி இருந்தேன்.  இரண்டாவது File Transfer என்பது File களை Transfer செய்ய என்றும் சொல்லி இருந்தேன். இந்த File Transfer வசதி மூலம் நீங்கள் Access செய்யும் கணினியில் இருக்கும், உங்களுக்கு/அவருக்கு தேவைப்படும் File களை நீங்கள்/அவர் நேரடியாக உங்கள்/அவர் கணினிக்கு எடுத்துக் கொள்ளமுடியும். 

இதன் Screen Shot கீழே உள்ளது.

நண்பரின் கணினியில் இருந்து எனக்கு File Transfer
உங்கள் தனிப்பட பயன்பாடுகளுக்கு இது இலவசம். உங்கள் password ஐ மாற்ற Teamviewer ஓபன் செய்து Refresh போன்ற பட்டன் (Password க்கு அடுத்து) கிளிக் செய்து வைக்கலாம்.  சில நேரங்களில் நீங்களே தொடர்பு கொள்ள வேண்டி இருக்கலாம். மாறும் Password வேண்டாம் நினைவில் உள்ள மாதிரி நீங்களே வைத்து கொள்ள அதே பட்டனில் Set Predefined Password என்பதில் இதை நீங்கள் செய்யலாம். 
இனி உங்கள் கணினியில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்கள் நண்பரை ஒருவரை இதன் மூலமே செயல்பட வைக்க முடியும். 
இதில் முக்கியமான விஷயம் உங்கள் கணினியை உங்கள் நண்பர் Access செய்யும் போது அதை நீங்கள் பார்க்க முடியும். அவர் ஓபன் செய்யும் ஒவ்வொன்றும் உங்கள் கணினி திரையில் தெரியும். எனவே பாதுகாப்பு பற்றி கவலைப் பட தேவை இல்லை. இருப்பினும் நம்பிக்கையான நபரை மட்டும் இது போன்ற செயல்களை செய்ய அனுமதியுங்கள். இதே போலவே File Transfer க்கும். 
இதில் மீட்டிங் என்ற வசதியும் உள்ளது, 25 பேர் வரை இதில் இணைந்து ஒரே நேரத்தில் Video Conference போல செயல்பட முடியும். இதைப் பற்றி பின்னர் பகிர்கிறேன்.

Pen Drive வை RAMஆக பயன்படுத்துவதற்கு !


நமது கணணிகளில் சில வேலை போதுமான அளவு RAM காணப்படாமல் இருக்கலாம். மேலதிகமாக RAM ஒன்றை பொறுத்துவதனால் அவற்றின் விலை மிக அதிகமானதாகவே இருக்கின்றன. அதேவேளை பென்டிரைவ்களின் விலை குறைவானதே.
முதலில் Windows Xp யில் எவ்வாறு பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தி கணணியின் performanceயை அதிகரிக்கலாம்.

முதலில் பென்டிரைவ் ஒன்றை(குறைந்தது 1GB) USB port வழியாக பொறுத்துங்கள்.



1. பின் My Computer ல் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள்.

2. அதிலுள்ள Advanced பகுதியில் Performance இல் உள்ள Settings பொத்தானை அழுத்துங்கள்.

3. அதன் பின் தோன்றும் வின்டோவில் Advanced பகுதியில் Change பொத்தானை Click செய்து பென்டிரைவ்வை தெரிவு செய்து கொள்ளுங்கள்.

4. பின் Custom Size என்பதை Click செய்து பயன்படுத்த வேண்டிய அளவை டைப் செய்யுங்கள். (Initial மற்றும் Max எனும் இரு பிரிவிலும் ஒரே அளவை வழங்குங்கள்).

5. பின்னர் Set செய்து உங்கள் கணணியை Restart செய்யுங்கள் அல்லது ReadyBoost அல்லது eboostr மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின் பென்டிரைவ்வை பொறுத்தி eboostr control pannel இல் பென்டிரைவ்வை add செய்து பயன்படுத்தலாம். (Restart செய்தல் கட்டாயமானதே)

6. Windows 7 யில் பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தலாம். உங்கள் கணணி 256GB RAM கொண்டிருந்தால் 8 ReadyBoost Devices களை ஒவ்வொன்றும் 32GB கொள்ளவை உடை பென்டிரைவ்களாக பயன்படுத்தலாம். எனவே Windows 7 இல் மொத்தமாக 256GB RAM வரைக்கும் பயன்படுத்தலாம்.

உங்கள் பென்டிரைவ்வில் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள்.

அதில் ReadyBoost பகுதியில் Use This Device ஐ தெரிவு செய்யுங்கள்.

Space to reserve for system speed என்ற இடத்தில் கூட்டி விடவும்.
இப்போது Apply செய்து விடுங்கள், உங்கள் பென்டிரைவ்வின் Performance உயர்ந்துவிடும்.

Trial Verion Software யை நிரந்தரமாக்க ........

 இந்த பதிவு ஒரு trial period சாப்ட்வேர் எப்படி hack செய்து முழு பயன்பாட்டிற்கு மாற்றுவது பற்றியது. பொதுவாகவே நாம் பல முறை இந்த பிரச்சனையை எதிகொண்டு இருப்போம். சில சாப்ட்வேர்கலை டவுன்லோட் செய்து பின் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு அந்த சாப்ட்வேர்ஐ பணம்கொடுத்து வாங்க சொல்ற தொந்தரவு இருக்கும் . இல்லனா அந்த சாப்ட்வேர்ஐ நாம பயன்படுத்த முடியாது . இங்க நான் சொல்றது பணம் கொடுத்து வாங்காமல் trial period சாப்ட்வேர்ஐ பல காலம் நாம யூஸ் பண்றதுக்கான வழிமுறைகள் பற்றியது . இது நெறையபேருக்கு உபயோகப்படும்னு நினைக்கிறேன் ;-)
இதுக்கு முன்னாடி இது போன்ற software கள் இயங்கும் விதத்தை பற்றி தெரிந்து கொள்வோம் . பிறகு அந்த வழி முறையை சொல்கிறேன் .

பொதுவாகவே அனைத்து trail version software களும் முதல் முறை install செய்கும் போது சில முக்கிய தகவல்கள் (Installed Date and Time, installed path) விண்டோஸ் ரிஜிஸ்ட்றிஇல் பதிவுசெய்ய படுகிறது. இது ஒவ்வொரு முறையும் நாம் run செய்யும் போதும் நமது Computer இன் date , time உடன் விண்டோஸ் ரிஜிஸ்ட்றிஇல் பதிவுசெய்யப்பட date , time சரி பார்க்கப்படுகிறது . இப்படிதான் குறிப்பிட்ட நாட்கள் முடிவடைந்ததும் நாம் பணம் செலுத்தி அந்த சாப்ட்வேர்ஐ வாங்கினால் ஒழிய அதை run செய்ய முடியாது . நம் system date setting மாற்றினால் கூட இந்த பிரச்சனை இருப்பது இதனால் தான்.


இதற்கான தீர்வு :-

RunAsDate என்ற மென்பொருள் பயன்பாடு நாம் குறிப்பிடுகிற date,time setting இல் programமை run செய்யும். இது நமது system date,time settingஐ எவ்விதத்திலும் பாதிக்காது. நாம் குறிப்பிடுகிற softwareஇன் date,time settingஐ மட்டுமே மாற்றி அமைக்கும். RunAsDate கொண்டு Trial Softwareஐ hack செய்யும் போது கீழ் கண்ட குறிப்புகளை கவனத்தில் கொண்டு செயல்படும் போது வெற்றிகரமாக நம்மால் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் trail version softwareஐ பயன்படுத்த முடியும் .

1. எப்போதுமே trial software instal செய்யும் போது Date and Time குறித்துவைத்துக்கொள்ளுங்கள் .

2. trial period முடியும் நேரத்தில் RunAsDateஐ run செய்து கொள்ளுங்கள்.

3. trial period முடிந்த பிறகு RunAsDateஐ run செய்வதை தவிர்க்கவும் .

4.ஒரு நாள் முன்னதாக RunAsDateஐ run செய்து பயன்படுத்தினால் பலகாலம் ட்ரயல் வெர்சன் softwareஐ உபயோகிக்க நம்மால் முடியும். உதரணத்திற்கு trial period may 25 2009 முடியுதுனா நீங்க may 24th அன்னிக்கே RunAsDateஐ run செய்து கொள்ளுங்கள்.

Pen Driveவில் உள்ளவற்றை இரகசியமாக Copy செய்ய வேண்டுமா?


உங்கள் நண்பர்களின் Pen Drive இல் உள்ள கோப்புகளையோ அல்லது உங்களுக்கு தெரியாதவர்களின் USB Drive இலுள்ள கோப்புகளையோ அவர்கள் அறியாமலே திருடுவதற்கு Hidden File Copire என்ற மென்பொருள் உதவுகிறது.
அவர்கள் உங்கள் கணணியில் தங்கள் USBDriveஐ பயன்படுத்தும் போது அவர்களது USB Driveஇல் உள்ள கோப்புகள் அனைத்தும் அவர்களுக்கு தெரியாமலே உங்களது கணணியில் கொப்பி செய்யப்பட்டு விடும்.
ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவுமே இருக்காது. இந்த மென்பொருள் மூலம் கொப்பி செய்யப்படும் கோப்புகள் C:WINDOWSsysbackup என்ற இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்

கம்ப்யூட்டர் திரையை "டிவி"யில் காண......

டிஜிட்டல் சாதனங்களை இணைத்துச் செயல்படுத்துவது இப்போது பரவலாகப் பரவி வருகிறது. டிவி மூலம் இன்டர்நெட் இணைப்பு ஏற்படுத்திப் பார்ப்பது, கம்ப்யூட்டர்களில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளில் சிலவற்றை மேற்கொள்வதும் தொடங்கிப் பரவி வருகிறது.

இவர்களின் சந்தேகம் அனைத்தும் எவ்வகை கம்ப்யூட்டர், எந்த வகை டிவிக்களுடன் இணைக்கலாம் என்பதில் தொடங்கி, அதற்கான கேபிள்கள் எப்படி பெறலாம் என்பதுதான். அவற்றைச் சற்று விரிவாக இங்கு காணலாம்.
கம்ப்யூட்டருடன் எல்.சி.டி., எல்.இ.டி. மற்றும் பழைய வகை சி.ஆர்.டி. ட்யூப் கொண்ட டிவிக்களுடன் இணைக்கலாம். இந்த டிவிக்களில் இவற்றை இணைப்பதற்கான தொழில் நுட்பமும், அதற்கான போர்ட்களும் இருக்க வேண்டும். பொதுவாக வண்ணத் திரை கொண்ட டிவிக்களில் இணைக்கலாம். ஆனால் போர்ட் வசதி இருக்க வேண்டும். அந்த போர்ட்கள் எவை எனக் காணலாம்.

 
1.எச்.டி.எம்.ஐ. (HDMI):

புதிதாய் வரும் சி.ஆர்.டி. டிவிக்களில், இந்த HDMI போர்ட் தரப்படுகிறது. இதன் வழியாக, அதற்கான சரியான கேபிள்களை வாங்கி, டிவியுடன் இணைக்கலாம். கம்ப்யூட்டரிலும் இந்த போர்ட் இருக்க வேண்டும். டிவி ரிமோட் அல்லது டிவியில், HDMI இன்புட் சேனலைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம்.


2. டி.வி.ஐ. (DVI):

இதற்கான அடுத்த பெஸ்ட் கனக்ஷன் வகை DVI ஆகும். இதன் மூலம் இணைக்கப்படும்போதும், நல்ல டிஜிட்டல் இமேஜ் கிடைக்கும். இது பொதுவாக, பெர்சனல் கம்ப்யூட்டரில் காணப்படும். டி.வி.ஐ. கேபிள் ஒன்றின் மூலம் இரண்டையும் இணைக்கலாம். டிவியில் இந்த போர்ட் இல்லாமல் HDMI மட்டும் உள்ளது என்றால், DVI to HDMI கன்வர்டர் கேபிள் ஒன்றைப் பயன்படுத்தலாம்.


3. வி.ஜி.ஏ. (VGA):

இப்போது வரும் சி.ஆர்.டி. டெலிவிஷன்களிலும், மற்றும் அனைத்து வகைக் கம்ப்யூட்டர்களிலும், பொதுவாகத் தரப்படும் இணைப்பு வகை இது. அதே போல, விஜிஏ கேபிள்களும் குறைந்த விலையில் எளிதாகக் கிடைக்கும். ஒரு முனையை கம்ப்யூட்டரிலும், இன்னொன்றை டிவியிலும், ஜஸ்ட் லைக் தட் இணைத்துப் பார்க்கலாம். டிவி அல்லது ரிமோட்டில் அதற்கான சேனல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதனை மறக்க வேண்டாம்.


4. எஸ்-வீடியோ (Svideo):

இதனை இறுதித் தேர்வாகவே வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இதன் மூலம் கிடைக்கும் காட்சி அவ்வளவு சிறப்பாக இருக்காது. பொதுவாக இந்த வகை இணைப்பு சி.ஆர்.டி. டெலிவிஷன் மற்றும் கம்ப்யூட்டர் களில் கிடைக்கும். கம்ப்யூட்டரில் உள்ள எஸ்-வீடியோ போர்ட்டில் கேபிளின் ஒரு முனையை இணைத்து, மற்றொரு முனையை வீடியோ இன் என்று இருக்கும் மஞ்சள் நிற இன்புட் சாக்கெட்டில் இணைக்க வேண்டும். பின்னர், இதற்கான சரியான சேனலை, டிவியில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஒரு சின்ன விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். DVI, VGA அல்லது SVideo என்ற வகையில் இணைப்பினை ஏற்படுத்துகையில், படங்கள் மட்டுமே டிவியில் கிடைக்கும். ஒலி உங்கள் கம்ப்யூட்டர் ஸ்பீக்கரில் கிடைக்கும் ஒலி மட்டுமே இருக்கும். ஏனென்றால் இந்த கேபிள்கள், இமேஜ் மட்டுமே கடத்திச் செல்லும்.
ஆனால் HDMI கேபிள் இணைப்பில், இந்த குறை இல்லை. டிவியில், ஒலி வேண்டும் என்றால், தனியே, 3.5 மிமீ மினி ஸ்டீரியோ மேல் ஜாக் ஒரு புறமும், ஆர்.சி.ஏ. மேல் கேபிள் இன்னொரு புறமும் கொண்ட தனி கேபிள் கொண்டு இணைக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் இவை தேவைப்படும் நீளத்தில் கிடைக்கின்றன.
இவ்வாறு இணைத்த பின்னர், சில லேப்டாப்களில், கட்டளை வழியாக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பொதுவாக, அனைத்து லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும் இந்த கட்டளை Fn + F8 கீகளை அழுத்தி அமைப்பதாகவே இருக்கும். இல்லை எனில், குறிப்பிட்ட லேப்டாப்பின் மேனுவலைப் பார்த்து அறிந்து கொள்ளவும். அதே போல, கம்ப்யூட்டரின் ரெசல்யூசனையும் மாற்ற வேண்டியதிருக்கலாம்.

Memory card களின் வகைகளும், பயன்பாடும்.!!

இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் மெமரி கார்டுகளைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது என்றே எண்ணுகிறேன். இத்தகைய மெமரி கார்டுகள் இல்லாத எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களே இல்லை எனலாம்.

கேமராக்கள், கைப்பேசிகள், கேன்டிகேம் (handycam) உட்பட இன்று பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான மின்னணு நுகர்வோர் சாதனங்களில் இந்த சேமிப்பு அட்டை (Memory-cards) உள்ளன.

ஒரு மெமரி கார்டு வாங்கும்போது அதன் விலை மற்றும் திறனை அவசியம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஒரு சில மெமரி கார்டுகள் ஒரு குறிப்பிட்ட வகையை மட்டுமே ஆதரிக்கும் வகையில் உள்ளது.  இந்த மெமரி கார்டுகளின் வகைகளைப்பற்றியும், அதன் பயன்பாடுகளைப் பற்றியும் பார்க்கலாம்.
காம்பாக்ட் ஃபிளாஷ் (Compact Flash (CF)


scan_disck_2.0_memory_card

காம்பேக்ட்ஃப்ளாஷ் டிஜிட்டல் நினைவகம் பொதுவாக அனைத்து கேமரா வகைகளிலும் பயன்படுத்தபடுகிறது.  இது அதிக  டிஜிட்டல் கேமராக்கள் இணக்கத்தன்மையை கொண்டுள்ளது. காம்பேக்ட்ஃப்ளாஷ் இரண்டு வகைகளில் உள்ளன.  முதல் வகை  மெலிதானது. இரண்டாம் வகை சற்றே தடிமனானது.  இரண்டாம் வகை காம்பேக்ட்ஃப்ளாஷ் பொதுவாக 512MB அல்லது 1GB உயர் திறன் கொண்டது.

Fuji and Olympus SmartMedia Card

இவை ஜூலை 2002ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த வகை கார்டுகள் fuji மற்றும் Olympus என்பவர்கள் இருவரும் சேர்ந்து கண்டுபிடித்ததால் இதற்கு இப்பெயர் வந்தது. 

FujiFilm_smart_media_card

இந்த வகை மெமரி கார்டும் டிஜிட்டல் கேமராக்களில் உபயோகிக்கிறார்கள்  இது Olympus மற்றும் Fuji ஆகியோரால் கண்டுபிடிக்கபட்டது.

Secure Digital Card (SD card) & SDHC  memory கார்டுகள்:

இப்பொழுது இந்த வகை கார்டுகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. டிஜிட்டல் கேமராக்களில் பயன்படுத்தப்படுகின்றன. இது அனைத்துவிதமான கேமராக்களையும் ஆதரிப்பதால் எல்லவகையான கேமராக்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.  2007 -ம் வருடம் இத்தகைய மெமரிகார்டுகள் வெளியிடப்பட்டு விற்பனை வந்தது.


இது இரண்டாம் தலைமுறை மல்டிமீடியா கார்டு ஆகும். இதன் பிறகு SD mini என்ற கார்டும், Micro என்ற மெமரி கார்டுகளும் வெளியிடப்பட்டன. இது நவீன மொபைல்களில் பயன்படுத்தக்கூடியவனாக இருக்கிறது.

scan_disc_8GB_memory_care
scan_disk_4GB_memory_card


32GB_Micro_SD_hd_card
Memory Sticks:



sony_64gb_momory_stick

ony_memory_stick_pro

scan_disk_memory_stick_pro_duo

வளைவான மேற்பரப்பினைக் கொண்ட புதிய டேப்லட் அறிமுகம் (Galaxy Tab Round)

டேப்லட் மற்றும் ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் தொடர்ச்சியாக பல புரட்சிகளை ஏற்படுத்திவரும் சம்சுங் நிறுவனமானது தற்போது வளை மேற்பரப்பினைக் கொண்ட டேப்லட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன்படி 8.4 அங்குல அளவுடைய தொடுதிரையினையும், Snapdragon 800 and Exynos 5 Octa Processor, 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளதுடன் சேமிப்பு நினைவகமாக 16 அல்லது 32GB கொள்ளளவினை கொண்டதாக காணப்படுகின்றது.
இவற்றுடன் Android 4.4 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளதுடன் இதன் பெறுமதியானது 1000 டொலர்கள் வரை இருக்கலாம் என கொரிய நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
- See more at: http://www.spottamil.net/Samsung-to-Launch-an-8.4-Galaxy-Tab-Round#sthash.PUAztjyg.dpuf

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews