தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Saturday, December 13, 2014

PDF to Word Converter

PDF file களை word file ஆக மாற்றுவதற்கான சிறந்த மென்பொருள் ஆக able2doc என்ற மென்பொருள் காணப்படுகின்றது. இதன் மூலம் PDF file இனை open செய்து edit menu வில் எமக்கு தேவையான பக்கங்களை தெரிவு செய்து Microsoft word file ஆக மிக விரைவாக convert செய்ய முடியும்.


தமிழ் font இல் அமைந்த PDF file இனை மாற்றம் செய்தபின் குறித்த font இனை தெரிவு செய்தல் அவசியம்.
இதனை தரவிறக்கம் செய்ய 
 able2doc with key

Ubuntuவில் மென்பொருள் உள்ளீடு செய்யும் முறை

Ubuntu வில் software center ஊடாக (applications -> Software center) இணைய இணைப்பின் ஊடாக (online) எமக்கு தேவையான மென்பொருட்கைள உள்ளீடு செய்ய முடியும்.
எமக்கு தேவையான மென்பொருட்களை தரவிறக்கம் செய்து எமக்கு தேவைப்படும்போது அதாவது இணைய இணைப்பு இல்லாத நிலையில் உள்ளீடு செய்யும் முறை.

Document என்ற பகுதியில் உள்ள vcdimager_0.7.23-4ubuntu2_i386, videocut_0.2.0-6_i386 என்ற இரு மென்பொருட்களையும் உள்ளீடு செய்யும் முறையினை நோக்குவோம்
Applications -> accessories -> Terminal என்ற பகுதிக்கு சென்று Terminal window வில்"ls" என்ற கட்டைளயினை தட்டச்சு செய்து enter key யினை தெரிவு செய்யவும். இங்குls ஆனது current directory யில் உள்ள கோப்புக்களை list செய்யும்.




அடுத்து "cd Documents/ "என்ற கட்டைளயினை தட்டச்சு செய்து enter key யினை தெரிவு செய்யவும். இங்கு cd என்பது change directory என பொருள்படும். அதாவது Documents என்ற directory க்கு செல்லல்.

பின்பு ls என்ற கட்டளையினை பிரையோகிக்கும் போது Document என்ற பகுதியில் உள்ள vcdimager_0.7.23-4ubuntu2_i386, videocut_0.2.0-6_i386 என்ற இரு மென்பொருட்களையும் list செய்யப்படுவைத அவதானிக்க முடியும்.

அடுத்து " sudo dpkg -i *.deb" என்ற கட்டைளயினை தட்டச்சு செய்து enter key யினை தெரிவு செய்ய Documents என்ற பகுதியில் உள்ள அனைத்து மென் பொருட்களும் உள்ளீட செய்யப்படும்.(administrator password வழங்க வேண்டும்) இங்கு * குறியீடு குறிப்பிட்ட directory யில் உள்ள கோப்புக்கள் அனைத்தையும் உள்ளீடு செய்வதை குறிக்கும். குறிப்பிட்ட ஒரு மென்பொருளினை உள்ளீடு செய்வதாயின் * பதிலாக அதன் பெயரினை வழங்குதல் வேண்டும்.


 இவ்வாறு எமக்கு தேவையான மென்பொருட்களை தரவிறக்கம் செய்து உள்ளீடு செய்ய முடியும்.

Joomla - beginnersguide



Joomla(என்பது இணையத்தளத்தினை உருவாக்குவதற்கான ஒரு web base application package ஆகும்.  இதனை பயன் படுத்துவதற்கு HTML / PHP  போன்ற இணையத்தள அபிவிருத்தியுடன் தொடர்பு பட்ட மொழிகள் பற்றிய அறிவு இல்லாமலே உங்களினால் ஒரு இணையத்தளத்தினை உருவாக்கி கொள்ள முடியும். 

அத்துடன் இதன் விசேடம் என்னவெனில் உமக்குத்தேவையான வடிவில் Joomla தளத்துக்கான Templates களை தரவிறக்கம் செய்தோ அல்லது Artister என்ற பிறிதொரு application package பயன்படுத்தி Templatesஉருவாக்கியோ Joomla வில் Instal செய்ய முடியும். அத்துடன் பல வகையான Plugins/Extension  களை பயன்படுத்தி இணையத்தளத்தினை மேலும் விரிவாக்க முடியும் (Eg - forums, Blogs, Wiki, Photo Calgary). இது ஒரு Open source application ஆக இருப்பதனால் இதனை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். 



இதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான ஒரு பயனுள்ள  நூலினை தரவிறக்கம் செய்வதற்கான சுட்டி.
Joomla1.7 - beginnersguide

உங்கள் விஞ்ஞான அறிவை விரிவாக்கம் செய்ய சிறந்த இணையத்தளங்கள்.

புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள், விஞ்ஞான போதனை வளங்கள், விஞ்ஞான ஆராச்சிகள் போன்ற செய்திகளை அறிய ஆர்வம் கொண்டவர்களுக்கான சிறந்த இணையத்தளங்கள்

1. Proceedings of the National Academy of Sciences (PNAS) of the USA

2. American Association for the Advancement of Science (AAAS)
 ( இத் தளத்தில் குழந்தைகள் முதல் பெரியர்கள் வரையிலான பாடக்குறிப்புக்கள், பாடக்கரிவிகள் போன்றவற்றை காணலாம். )

3. ScienceStage.com (இதில் பல videos, Audios கோப்புக்களை கொண்டுள்ளது.)

4.ScienceDaily (இதில் 65,000 research articles, 15,000 images, 2,500 encyclopedia entries, 1,500 book reviews, and hundreds of education videos போன்றவற்றை இலவசமாக காணலாம்)

5.Science News
6.New York Times Science News
7.NOVA
8.HowStuffWorks
9.National Public Radio (NPR)
10.Public Library of Science (PLoS)
11.BioMed Central
12.Science.gov
13.National Geographic – Science and Space
14. Understanding Science
15. Science News for Kids
16. Science Made Simple
17. Cool Science
18.Union of Concerned Scientists (UCS)

பாடசாலைக் கலைத் திட்டத்தில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்குப் பொருத்தமான தேசிய தொழில் தகைமைச் சான்றிதழ் (NVQ) மட்டம்.

கல்வி அமைச்சின் தகவல் மற்றும் 
தொடர்பாடல் தொழினுட்பக் கிளை, 
இளைஞர் அலுவல் மற்றும் திறமை 
அபிவிருத்தி அமைச்சும் இணைந்து 
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப 
பாடத்தைக் கற்கும் மாணவர்க்காக அவர்களின்
 தகைமை மற்றும் தொழில் திறமைக்கு 
உரிய தேசிய தொழில் தகைமைச் 
சான்றிதழ் (NVQ) மட்டம் 2 அல்லது 3 
வழங்குவதற்கான புரிந்துணர்வு 
உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்ச்சி கல்வி 
அமைச்சர் கௌரவ பந்துல குணவர்தனா, 
இளைஞர் அலுவல் மற்றும் திறமை அபிவிருத்தி அமைச்சர் 
கௌரவ டலஸ் அழகப்பெருமா, மேற்கபு மாகாண முதலமைச்சர் கௌரவ 
பிரசன்ன ரணதுங்க, கல்வி, இளைஞர் அலுவல் மற்றும் திறமை 
அபிவிருத்தி கண்காணிப்பு பா. உ. கௌரவ மோகன்லால் கிரேரு, கல்வி 
அமைச்சின் செயலாளர் திரு கோட்டாபய ராஜபக்ஷ, இளைஞர் அலுவல் 
மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு ஏ. ஆர். தேசபிரிய, 
தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அபேரத்ன 
பண்டா உட்பட இரண்டு அமைச்சுக்களின் அலுவலர்கள் மற்றும் அவற்றின் 
கீழ்வரும் நிறுவனங்களின் முக்கியத்தர்களின் பங்குபற்றுதலுடன் 2012-12-18
 ம் திகதி இளைஞர் அலுவல் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் கேட்ரே
 கூடத்தில் இடம் பெற்றது.

இதற்கேற்ப தகவல் தொழினுட்ப பாடத்தைக் கற்கும் பாடசாலை மாவர்க

ளுக்காக கீழ்க் குறிப்பிட்டுள்ளவாறு தேசிய தொழில் தகைமை திறன் 
(NVQ) மட்டம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் :   

க. பொ. த. (சா.த.) தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப பாடத்தில் 
சித்தி பெற்ற சகல மாவணர்களுக்கும் NVQ 2 ம் மட்டம் வழங்கப்படுவ
துடன் இந்த மாணவர்களை மதிப்பீட்டுக்கு உட்படுத்தி அதில் சிறப்புத் 
திறமை காட்டும் மாணவர்களுக்கு NVQ 3 ம் மட்டம் வழங்குதல்.

க. பொ. த. (உ.த.)  பொதுத் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப 
பாடத்தில் சித்தி பெற்ற சகல மாவணர்களுக்கும் NVQ 2 ம் மட்டம் 
வழங்கப்படுவதுடன் இந்த மாணவர்களை மதிப்பீட்டுக்கு உட்படுத்தி 
அதில் சிறப்புத் திறமை காட்டும் மாணவர்களுக்கு NVQ 3 ம் மட்டம் வழங்குதல்.

க. பொ. த. (உ.த.) தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப பாடத்தில் 
சித்தி பெற்ற சகல மாவணர்களுக்கும் NVQ 3 ம் மட்டம் வழங்கப்ப
டுவதுடன் இந்த மாணவர்களை மதிப்பீட்டுக்கு உட்படுத்தி அதில் 
சிறப்புத் திறமை காட்டும் மாணவர்களுக்கு NVQ 4 ம் மட்டம் வழங்குதல்

ஆரம்பத்தில் NVQ கலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் 
மாவட்டத்துக்கு ஒன்று என்ற அடிப்படையல் பாடசாலையிலோ 
வலயத்திலோ மாகாணத்திலோ கணினி ஆய்வு கூடங்களைத் தெரிவு 
செய்தல்.

பாடசாலை தகவல் தொழினுட்ப மையம் - NVQ 2 ம் மட்டத்திற்கான 
பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.

வலய தகவல் தொழினுட்ப மையம் - NVQ 3 ம் மட்டத்திற்கான பாடத்
திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.வலய தகவல் தொழினுட்ப மையம் - 
NVQ 3 ம் மட்டத்திற்கான பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.மாகாண 
தகவல் 
தொழினுட்ப மையம் - NVQ 4 ம் மட்டத்திற்கான பாடத்திட்டத்தை நடை
முறைப்படுத்தல்

http://www.moe.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=558:-nvq-&catid=1:latest&Itemid=258&lang=ta

'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி எண் : +94 112 785141-50 . மின்னஞ்சல்: info@moe.gov.lk

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews