தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Saturday, November 29, 2014

தொலைந்து போன MOBILE-லை மீட்டெடுக்க


Mobile Phone Thieves
உங்களுடைய Mobile Phone தொலைந்துவிட்டதா? அல்லது திருடிவிட்டார்களா? கவலையே வேண்டாம். மீண்டும் உங்கள் மொபைல் போன் உங்களுக்கே திரும்ப வரும்.
இதற்கு உங்கள் மொபைல்போனின் தனி அடையாள எண்ணை (IMEI) நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
IMEI என்பது International Mobile Equipment Identity
என்பதின் சுருக்கம் ஆகும்.
சரி. இந்த IMEI International Mobile Equipment Identity எண்ணை எப்படிக் கண்டறிவது.?
  • உங்கள் மொபைலில் *#06# என டைப்செய்திடுங்கள்
  • உடனே உங்களுடைய மொபைல்போனின் IMEI எண் திரையில் தோன்றும்.
  • அதை பாதுகாப்பாக ஒரு இடத்தில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • எப்போதாவது உங்கள் மொபைலை நீங்கள் இழக்க நேரிடும்போது இந்த எண் உங்களுக்கு உதவும். 
  • மேலும் தொலைந்து போன மொபைலை சட்டவிரோதமாக பயன்படுத்துபவர்களிடமிருந்தும் நம்மைப் பாதுகாக்க உதவும்.
  • IMEI எண் மொபைலை எப்படி கண்டுபிடிக்க உதவும்? அல்லது எப்படி பாதுகாக்க உதவும்?
  • உங்கள் மொபைல் தொலைந்துவிட்டால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும். அதற்குcop@vsnl.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
மின்னஞ்சலில் முக்கியமாக இருக்க வேண்டிய தகவல்கள்
  • பெயர்(NAME)
  • முகவரி(ADDRESS)
  • போன் என்ன மாடல்(MOBILE PHONE MODEL)
  • அந்த போனைத் தயாரித்த நிறுவனத்தின் பெயர்(MOBILE PHONE COMPANY)
  • கடைசியாக போன்செய்த எண்(LAST DIALED NUMBER)
  • உங்கள் மின்னஞ்சல் முகவரி(EMAIL ADDRESS)
  • எந்த தேதியில் தொலைந்து(LOST ON DATE)
  • போனின் அடையாள எண் (IMEI) 
ஆகிய தகவல்களை கட்டாயம் அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் தகவல்களைச் சேர்க்கலாம்.
Police Department -ன் திறன் வாய்ந்த GPRS and INTERNET இணைந்த வலுவானதொரு கட்டமைப்பின்(Strong Structure) மூலம் உங்கள் போனை யாராவது பயன்படுத்தும் பட்சத்தில் அந்நபர் இருக்கும் இடம், மற்றும் பயன்படுத்தும் நபரைக் கண்டுபிடித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள். உங்களுக்கும் இதுப் பற்றிய தகவல்களைத் தெரியப்படுத்துவார்கள்.
அதனால் நண்பர்களே முதலில் உங்களுடைய மொபைல் போனில் IMEI எண்ணை மறக்காமல் உங்கள் டயரி போன்ற ஏதாவதொன்றில் *#06# என்பதைக் கொடுத்து தோன்றும் எண்ணைக் குறித்துவைத்துக்கொள்ளுங்கள். உங்கள் விலையுயர்ந்தCostly Mobile Phone தொலைந்துபோனால் காவல்துறை உதவியுடன் மீண்டும் பெற அது வழிவகுக்கும். மீண்டும் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.

இத்தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!

அழித்த Bookmark திரும்பப் பெற




இன்டர்நெட் உலாவில் புக்மார்க்குகள் முக்கிய இடம் வகிக்கின்றன. நாம் அடிக்கடி செல்ல விரும்பும், முக்கிய தளம் எனக் கருதும் தளங்களுக்கான முகவரிகளைக் குறித்து வைப்பதே புக்மார்க்.

ஒவ்வொரு முறையும், தள முகவரியினை டைப் செய்திடாமல், இந்த புக்மார்க்குகளில் கிளிக் செய்து தளத்தினைப் பெறலாம். இவ்வளவு முக்கிய புக்மார்க்குகளைத் தவறுதலாக அழித்துவிட்டால் என்ன செய்வது? திரும்பப் பெறும் வழிகள் எவை? இங்கு பார்க்கலாம்.

குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களில் அழிக்கப்பட்ட, நீக்கப்பட்ட, புக்மார்க்குகளைத் திரும்பப்பெறும் வழிகள் தரப்பட்டுள்ளன. குரோம் பிரவுசரில் இது சற்று கடினமான வழியாக அமைக்கப்பட்டுள்ளது.

புக்மார்க்குகளுக்கான பேக் அப் பைல் சிறிய, மறைத்துவைக்கப்பட்ட பைலாக குரோம் பிரவுசரில் உள்ளது. இதனை நாமாகத்தான் தேடிக் கொண்டு வர வேண்டும். இந்த பைல் அடிக்கடி இதன் மேலாகவே எழுதப்படுகிறது.

பயர்பாக்ஸ் பிரவுசரில் இது மிக எளிது. பயர்பாக்ஸ் புக்மார்க் மேனேஜர் பிரிவில், அழிக்கப்பட்ட புக்மார்க்கினை உடனடியாக மீட்க ஒரு “undo” வசதி தரப்பட்டுள்ளது. பிரவுசரும் தானாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் புக்மார்க்குகளை பேக் அப் செய்கிறது.

இந்த பேக் அப் பைலைப் பல நாட்கள் பயர்பாக்ஸ் வைத்துக் காக்கிறது. இதனை எப்போது வேண்டுமானாலும், நாம் எளிதாக எடுத்துக் கொள்ளலாம். மறைக்கப் பட்ட போல்டர்களைத் தேடி அலைந்து தோண்டி எடுக்கும் வேலை எல்லாம் இதில் இல்லை.

குரோம் பிரவுசரின் புக்மார்க் மேனேஜரில் “undo” ஆப்ஷன் இல்லை . ஏதாவது முறையில் ஏடாகூடமாக, உங்கள் விரல் நழுவி புக்மார்க்குகள் உள்ள போல்டரை அழித்து விட்டால், அவற்றை மீட்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.

இதில் உள்ள export ஆப்ஷனைப் பயன்படுத்தி ஏற்கனவே இதன் பேக் அப்பினை நீங்கள் தயாரித்து வைத்திருந்தால், அவற்றை import செய்து மீண்டும் பெறலாம். ஆனால் இந்த பேக் அப்பிற்குப் பின்னால் ஏற்படுத்திய புக்மார்க்குகள் கிடைக்காது.

குரோம் பிரவுசர் உங்கள் புக்மார்க் பைலினை ஒரே ஒரு பேக் அப் பைலாக பராமரிக்கிறது. ஒவ்வொரு முறை குரோம் பிரவுசரை இயக்கும் போதும் அது, அந்த பேக் அப் பைலை மீண்டும் எழுதிக் கொள்கிறது. எனவே புக்மார்க் பைல் உள்ள போல்டரை அழித்துவிட்டால், குரோம் பிரவுசரை மூடக் கூடாது. மீண்டும் இயக்கக் கூடாது. அப்படி இயக்கினால், பேக் அப் பைலில், புக்மார்க்குகள் அழிக்கப்பட்ட நிலையில் எதுவும் திரும்பக் கிடைக்காது. அப்படியானால் என்ன செய்யலாம்? இங்கு பார்க்கலாம்.

விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறக்கவும். அதன் அட்ரஸ் பாரில் கீழ்க்காணும் முகவரியை டைப் செய்திடவும். இதில் NAME என்ற இடத்தில், உங்களின் விண்டோஸ் யூசர் அக்கவுண்ட் பெயரை எழுதவும்.

C:\Users\NAME\AppData\Local\Google\Chrome\User Data\Default இந்த போல்டரில் இரண்டு புக்மார்க் பைல் இருக்கும். அவை Bookmarks and Bookmarks.bak. இதில் இரண்டாவதாகத் தரப்பட்டுள்ளது (Bookmarks.bak) அண்மைக் காலத்திய பேக் அப் பைல். நீங்கள் இறுதியாக குரோம் பிரவுசரைத் திறந்த போது, பிரவுசரால் உருவாக்கப்பட்ட பேக் அப் பைல்.

இந்த போல்டரில் .bak என்ற எக்ஸ்டன்ஷன் பெயருடன் எந்த பைலும் இல்லாமல், Bookmarks என்ற பெயரில் இரண்டு பைல்கள் இருந்தால், பைல்களுக்கான துணைப் பெயர் மறைக்கப்படும் வகையில் செட் செய்யப்பட்டுள்ளது என்று பொருள்.


இந்தக் குழப்பத்தினை நீக்க, Organize மெனுவில் கிளிக் செய்திடவும். இதில் “Folder and search options.” என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். போல்டர் ஆப்ஷன்ஸ் விண்டோவில், View டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “Hide extensions for known file types” என்ற வரியில் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை எடுத்து விடவும்.

இப்போது, மேலே கூறப்பட்ட இரண்டு புக்மார்க் பைல்களில், இறுதியாக உருவாக்கப்பட்ட பேக் அப் பைல், அதற்கான எக்ஸ்டன்ஷன் பெயருடன் காட்டப்படும். இந்த பேக் அப் பைலை மீட்டுக் கொண்டு வர, குரோம் பிரவுசரின் அனைத்து விண்டோக்களையும் மூடவும். குரோம் பிரவுசர் மூடப்பட்ட நிலையில், Bookmarks பைலை அழிக்கவும்.

Bookmarks.bak என்ற பைலை Bookmarks என பெயர் மாற்றம் செய்திடவும். இனி மீண்டும் குரோம் பிரவுசரை இயக்கி னால், நீங்கள் அழித்த புக்மார்க் பைலைக் காணலாம். நீங்கள் இறுதியாக குரோம் பிரவுசரைத் திறந்து இயக்கியபோது உருவாக்கிய புக்மார்க்குகள் மட்டும் அங்கு கிடைக்காது.

தமிழில் சி லாங்குவேஜ்

கணிணி மொழி (computer language)
    இனி கணிணி லாங்குவேஜ் பற்றி இங்கு காண்போம். இந்த லாங்குவேஜ் முதலாம் தலைமுறை லாங்குவேஜ் (first generation language), இரண்டாம் தலைமுறை லாங்குவேஜ் (second generation language) மற்றும் மூன்றாம் தலைமுறை லாங்குவேஜ் (third generation language) என மூன்று வகைப்படும். 
Types of Languages:   
1)   முதலாம் தலைமுறை லாங்குவேஜ் (first generation language) அல்லது மெஷின் லாங்குவேஜ் (machine level language)
2)   ), இரண்டாம் தலைமுறை லாங்குவேஜ் (second generation language) அல்லது அசெம்ப்ளி லாங்குவேஜ் (assembly level language)
3)   மூன்றாம் தலைமுறை லாங்குவேஜ் (third generation language) அல்லது ஹை லெவல் லாங்குவேஜ் (high level language)
முதலாம் தலைமுறை லாங்குவேஜ் (first generation language) அல்லது மெஷின் லாங்குவேஜ் (machine level language)
     இந்த முதலாம் தலைமுறை லாங்குவேஜ் (first generation language) அல்லது மெஷின் லாங்குவேஜ் (machine level language) என்பது பைனரி (binary) எண் 0 அல்லது1 என்ற  முறையில் இருக்கும். இந்த முறை படிக்கவும் எழுதவும் மிகவும் கடினமான முறையாகும்.
     எடுத்துக்காட்டாக இம்முறையில் என்ற எண் 0001 என்று குறிப்பிடப்படும். என்ற எண் 0011 என்று குறிப்பிடப்படும். 02 என்பது 00000011 என்று குறிக்கப்படும். இதில் 0 1 போன்ற ஒவ்வொரு எண்ணும் ஒரு பிட் (bit) என்றழைக்கபடும்.   
     இரண்டாம் தலைமுறை லாங்குவேஜ் (second generation language) அல்லது அசெம்ப்ளி லாங்குவேஜ் (assembly level language)
     இந்த இரண்டாம் தலைமுறை லாங்குவேஜ் (second generation language) அல்லது அசெம்ப்ளி லாங்குவேஜ் (assembly level language) கட்டளைகளைகக் கொண்டு அமைக்கப்படும் லாங்குவேஜ் ஆகும். இந்த கட்டளைகள் மினேமோனிக்ஸ் (mnemonics’) என்று அழைக்கப்படும். இதனை executeசெய்யும்போது mnemonics ஆனது machine level language 0,1 ஆக மாற்றப்பட்டு செயல்ப்படுத்தபடும். இது போன்று கட்டளைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட லாங்குவேஜ் ப்ரோக்ராம் (program) என்று அழைக்கப்படும்.

 இதில் மினேமோனிக்ஸ் source program எனவும் machine language (0,1) ஆப்ஜெக்ட் (object) languageஎனவும் அழைக்கப்படும்.
     எடுத்துக்காட்டாக mov a,b , mul a,b  என்று இருக்கும்
மூன்றாம் தலைமுறை லாங்குவேஜ் (third generation language) அல்லது ஹை லெவல் லாங்குவேஜ் (high level language) என்பது ஆங்கில மொழி கட்டளைகளைகயும் குறியீட்டையும் (English language instructions and symbols) கொண்டு அமைக்கப்பட்ட ஒரு program ஆகும். இங்கு source program ஆனது compiler உதவியால் object program ஆக மாற்றப்பட்டு linker உதவியால் input (keyboard,mouse, etc..) மற்றும் output (monitor, printer, etc..) உடன் இணைக்கப்படும். இவையனைத்தும் compile time-ல் நடைபெறும். Execute time-ல் user- ரிடம் இருந்து input பெற்று output தருகிறது. தற்போது இந்த மூன்றாம் தலைமுறை லாங்குவேஜ் (third generation language) அல்லது ஹை லெவல் லாங்குவேஜ் (high level language) தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
கணிணி லாங்குவேஜ் பயிள்கையில் சி லாங்குவேஜ் என்பது அடிப்படையாகும். இனி சி லாங்குவேஜ் பற்றி காண்போம்.
சி லாங்குவேஜ் ஒரு அறிமுகம். (Introduction of c language)
C language ஆனது மூன்றாம் தலைமுறை கணிணி மொழியாகும். இது டென்னிஸ் ரிட்ச் (Dennis Ritchie) என்பவரால் 1970-ல் பெல் ஆய்வுக்கூடத்தில் (Bell Laboratories) கண்டுபிடிக்கப்பட்டது.
சி லாங்குவேஜ் – ல் பயன்படுத்தப்படும் எழுத்துக்கள், எண்கள் மற்றும் குறியீடுகள்.
1)   ஆங்கில எழுத்துக்கள் (alphabets) upper case (A – Z) மற்றும் Lower case (a – z)பயன்படுத்தபடுகின்றது.
2)   எண்கள் (நம்பர்ஸ்) (0 – 9) பயன்படுத்தப்படுகின்றது.
3)   மேலும் சில குறியீடுகளும் பயன்படுத்தப்படுகின்றது.
.


சி லாங்குவேஜ் ல் பயன்படுத்த்ப்படும் குறியீடுகளவான கீழே தரப்பட்டுள்ளது.
Ø  + (plus) பிளஸ்
Ø  - (minus) மைனஸ்
Ø (asterisk) அஸ்டெரிக்
Ø (forward slash) ஃபார்வார்டு ஷிலாஷ்
Ø % (percent / modulo) பர்சண்ட் / மாடுலோ  
Ø \ (back slash) பேக் ஷிலாஷ்
Ø (colon) கொலோன்
Ø ; (semicolon) சேமிகொலோன்
Ø . (dot / full stop) டாட் / ஃபுல் ஸ்டாப்
Ø  (single quote) சிங்கிள் குவோட்
Ø “ (double quote) டபுள் குவோட்
Ø & (ampersand) ஆம்பர்ஸண்ட்
Ø ! (exclamation) எக்ஷ்க்லமேசன்
Ø | (vertical bar / pipe symbol) வெர்டிகல் பார் / பைப் சிம்பல்
Ø < (lesser than) லெஸ்சர் தண்
Ø > (greater than) க்ரேட்டர் தண்
Ø + (equal) ஈக்வல்
Ø [ (open square bracket) ஓபன் ஸ்குயர் ப்ராக்கெட்
Ø ] (close square bracket) குளோஸ் ஸ்குயர் ப்ராக்கெட்
Ø ( (open parenthesis) ஓபன் பாரெந்தெசிஸ்
Ø ) (close parenthesis) குளோஸ் பாரெந்தெசிஸ்
Ø { (open brace)  ஓபன் பிரேஸ்
Ø } (close brace) குளோஸ் பிரேஸ்
Ø , (comma) கமா
Ø  _ (underscore) அண்டர் ஸ்கோர்
Identifier
     Identifier என்பது variable name எனவும் அழைக்கப்படும். நாம் நம்முடய data வை தற்க்காலிகமாக சேவ் செய்து வைக்க ஒரு மெமரி (memory) உருவாக்கப்பட்டு அதில் நம் data சேவ் செய்யப்படும். அந்த ஒவ்வொரு memory space க்கும் ஒரு தனி தனி பெயர் தரப்படும். எவ்வாறு ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பெயர் உள்ளதோ அதுபோல ஒவ்வொரு memory space க்கும் ஒரு தனி தனி பெயர் இருக்கும். அந்த பெயரைக்கொண்டுதான் நம் data வை எடுத்து பயன்படுத்த முடியும். இவ்வாறு ஒரு டேட்டாவை நாம் அடையாளம் (identification) காண இந்த பெயர் பயன்படுத்தப்படுவதால் இதற்க்கு identifier என்று பெயர். இந்த identifier name ஆக ஒரு ஆங்கில எழுத்து (single letter / character) முதல் 31 ஆங்கில எழுத்துக்கள் (31 letter / character) வரை பயன்படுத்தலாம். எழுத்து மட்டும் அல்ல எண்கள் மற்றும் _ (underscore) போன்றவற்றையும் கலந்து உபயோகபடுத்தலாம்.
எடுத்துக்காட்டாக name, name1, a, A, cus_name என பயன்படுத்தலாம்.
Identifier க்கான வரையறை (rules of identifier)
Ø  Identifier இன் முதல் எழுத்தானது ஆங்கில எழுத்தாக(character) மட்டுமே இருக்கவேண்டும். அது (capital or small letter) a – அல்லது A – என  எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
Ø  ஒதுக்கப்பட்ட (keywords or reserved words) வார்தைகளாக இருக்கவேக்கூடாது.  ஒதுக்கப்பட்ட (keywords or reserved words) வார்தைகள்
   என்றால் என்ன என்பதை கீழே காண்க.
Ø  Function name ஆக இருக்கவேக்கூடாது.
Ø  Symbolic constant ஆக இருக்ககூடாது. அதாவது pi, sigma போன்று                     இருக்கவேக்கூடாது.
ஒதுக்கப்பட்ட வார்தைகள் (keywords or reserved words)
     auto        break       case       char        const       continue     default           do         double      else        enum      extern      float        for              goto        if          int         long        register           return      short       signed     sizeof       static       struct       switch      typedef           union      unsigned    void        volatile      while
           மேற்க்கண்ட வார்த்தைகள் அனைத்தும் ஒதுக்கப்பட்ட வார்தைகள் (keywords or reserved words)ஆகும். இந்த வார்த்தைகளை identifier ஆக பயன்படுத்த முடியாது. மேலும் சி லாங்குவேஜ் ஆனது பெரிய மற்றும் சிறிய எழுத்துகளை தனித்தனியாக பிரித்துணரும் திறன் கொண்டது. எனவேkeywords அனைத்தும் சிறிய எழுதுகளிலேயே (lower case) இருக்க வேண்டும்.
Tokens
     சி லாங்குவேஜ் ஆனது எழுத்துக்கள் எண்கள் மற்றும் குறியீடுகளைக் கொண்டு அமைக்கப்படுவது என உங்களுக்கு தெரியும். இவை token எனப்படும். இதில் 6 வகையான tokenஉள்ளன. அவை
Ø  Keywords
Ø  Constants
Ø  Identifiers
Ø  String literals
Ø  Operators
Ø  Separators
   இதில் keyword மற்றும் identifiers என்றால் என்ன என்பதை நாம் அறிவோம். மற்றவற்றை கீழே காண்போம்.
Constant மாறிலி   
 Constant மாறிலி என்பது “இதனுடைய மதிப்பானது program execution time முழுவதும் மாறாமல் இருக்கும்”. இதையே மாறிலி constant என்கிறோம்.
   உதாரணமாக 1, 12,345, 30.40 போன்ற எண்களின் மதிப்பை மாற்ற முடியுமா? முடியாது. 1 இன் மதிப்பு எப்பவுமே ஒன்றுதான். 1இன் மதிப்பை 3 எனவோ அல்லது 5 எனவோ மாற்ற முடியுமா? முடியாதல்லவா? இது தான் constant மாறிலி எனப்படும்.
Types of constants (மாறிலியின் வகைகள்)
   பொதுவாக constant ஐ 2 ஆக பிரிக்கலாம்.
1) Numeric constant
2)   String or character constant


Numeric constant
 Numeric constant என்பது எண்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படுவது ஆகும்.
இந்த numeric constant ஐ 2 ஆக பிரிக்கலாம். அவை
1)   Integer constant
2)   Real or floating point constant
Integer Constant
     Integer constant என்பது முழு எண்களைக் கொண்டு அமைக்கப்படுவதாகும்.
எடுத்துக்காட்டாக 50 +100 -26 போன்றவையாகும்.
Real or floating point constant
     இது புள்ளி எண்களை (fractional numbers) கொண்டு அமைக்கப்படுவதாகும்.
எடுத்துக்காட்டாக 50.02 +356.32  -286.54  போன்றவையாகும்
Character constant
  இதில் எழுத்துக்கள் மற்றும் குறியீடுகள் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் சிங்கிள் குவோட் – குல் இருக்கும்.
எடுத்துக்காட்டாக ‘a’, ‘$’, ‘-‘ போன்றவையாகும்

புளுடூத் என பெயர் வரக் காரணம் என்ன?

புளுடூத் தொழில்நுட்பம் செயல்படும் விதத்திற்கும், இந்த பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.


நார்டிக் நாடுகள் என அழைக்கப்படும் டென்மார்க், ஸ்வீடன், நோர்வே மற்றும் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கினார்கள்.
இவர்களுக்கு சரித்திரத்தில் புகழ் பெற்ற டென்மார்க் அரசர்
மீது அசாத்திய மரியாதையும் பிரியமும் இருந்தது.


அந்த மன்னர் பெயர் ஹெரால்ட் புளுடூத். அவரின் நினைவாகவே இந்த தொழில் நுட்பத்திற்கு புளுடூத் எனப் பெயரிட்டனர்.

இவர் 900 ஆண்டில் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும், நோர்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்தார்.

பின்னர் கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார்.
986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார். நாடுகளை இணைத்தது, கிறித்தவ மதத்தினை அறிமுகப்படுத்தியது, நினைவுச் சின்னம் அமைத்தது போன்ற செயல்களால் புகழடைந்தார்

லேப்டாப்புகளின் (LAP-TOP) பேட்டரியை எவ்வாறு பராமரிப்பது?


Laptop-Battery-Life
லேப்டாப்புகள் வந்த பிறகு மேசை கணினிகளின் விற்பனை கணிசமாக குறைந்துவிட்டது. அந்த அளவிற்கு லேப்டாப்புகள் மக்களின் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த லேப்டாப்புகள் சிறப்பாக இயங்க வேண்டும் என்றால் அதன் பேட்டரி மிகுந்த சக்தியுடன் இருக்க வேண்டும். லேப்டாப்புகளின் பேட்டரியை எவ்வாறு பராமரிப்பது? என்பதற்கான சில வழிமுறைகளை
இங்கே காணலாம்.

1. அதிக பேட்டரி பேக்கப்புக்கு..
லேப்டாப்பின் திரைக்குதான் அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. எனவே கரண்ட் இல்லாமல் பேட்டரியில் லேப்டாப்பை இயக்கும்போது அதன் திரையின் பிரகாசத்தை குறைத்து வைத்துக்கொள்வது அதிக மின்சாரத்தை சேமிக்க முடியும். அதுபோல் லேப்டாப் ஸ்டான்பை மோடில் வைத்திருக்கும்போது, ப்ளூடூத் மற்றும் வைபை போன்ற இணைப்புகள் மற்றும் யுஎஸ்பி ப்ளாஷ் ட்ரைவ்கள் போன்ற இணைப்புகளை துண்டித்துவிடுவது நல்லது. மின் சிக்கனம் மட்டுமின்றி பேட்டரியின் ஆயுள் காலமும் அதிகரிக்கும்.

2.எப்போது சார்ஜ் செய்ய வேண்டும்..
நீண்ட நேரம் தொடர்ந்து லேப்டாப்பின் பேட்டரியை சார்ஜில் வைக்கக் கூடாது. குறிப்பாக பேட்டரி 15%க்கும் குறைவான சார்ஜ் இருக்கும் போது மட்டும் மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும். குறிப்பாக பேட்டரி முழு சார்ஜில் இருக்கும் போது அதை மீண்டும் சார்ஜில் வைத்தால் பேட்டரி மிக விரைவாக பலவீனமாகிவிடும்.

3.சார்ஜ் ஆகும்போது பேட்டரியை பொசுக்குன்னு கழற்றாதீங்க..
லேப்டாப் மின் இணைப்பில் இருக்கும் போது அதன் பேட்டரியை அகற்ற வேண்டாம். அதுபோல் பேட்டரி இல்லாமல் நீண்ட நேரம் லேப்டாப்பை மின் இணைப்பில் வைத்து இயக்க வேண்டாம். பேட்டரியை ரிசார்ஜ் செய்வது நல்லது.

4. பேட்டரியை மிதமான தட்பவெப்ப நிலையில் வைத்திருத்தல்:
2 ஒரு வாரத்துக்கு மேல் லேப்டாப்பில் வேலை இல்லை என்று தெரிந்தால் அல்லது துணை பேட்டரி இருந்தால் பேட்டரியின் சார்ஜ் அளவை 50%க்கும் குறைவாக வைத்து அதை மிதமான தட்பவெப்ப நிலையில் வைத்திருப்பது நல்லது. அதுபோல் லேப்டாப்பை நீண்ட நேரம் காரில் வைத்திருக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் அதிக நேரம் லைப்டாப்பை காரில் வைத்திருந்தால் விரைவில் லேப்டாப் சூடாகிவிடும்.

5. பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றுதல் மற்றும் குறைத்தல்:
பொதுவாக எல்லா லேப்டாப்புகளும் லித்தியம் பேட்டரிகளைக் கொண்டுள்ளன. எனவே பேட்டரியின் தன்மைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு நாளும் அதை முறையாக முழு சார்ஜில் வைத்திருப்பது, மற்றும் அதன் சார்ஜை 40 முதல் 50 சதவீதத்திற்கும் குறையாமல் வைத்திருப்பது நல்லது.

6. பேட்டரியை மாற்றுதல்:
பேட்டரியை தேவைக்கேற்ப சார்ஜில் வைத்திருப்பதால் காலப்போக்கில் பேட்டரியின் திறன் பலவீனமடையும். எல்லா எலக்ட்ரானிக் சாதனங்களிலும் இந்த யதார்த்தம் இருக்கிறது. பேட்டரி பலவீனமடையும் போது அது லேப்டாப்பின் ஆயுளையும் பலவீனப்படுத்தும். ஆக உண்மையிலேயே பேட்டரி பலவீனமடையும் போது புதிய பேட்டரியை மாற்றுவது நல்லது. அப்போது லேப்டாப்பின் ஆயுள் கெடாமல் இருக்கும்.

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews