தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Saturday, February 22, 2014

Android போனில் Call Record செய்வது எப்படி?

Call Record செய்வது என்பது இன்று பல வழிகளில் பயன்படக்கூடிய ஒன்று. பல பிரச்சினைகளுக்காக Customer Care போன்றவற்றில் பேசும் போது இது நமக்கு கட்டாயம் தேவை. Android போன்களை பயன்படுத்துவர்களுக்கு அதில் Call Record செய்ய முடியவில்லையே என்ற குறை இருக்கும்.  அந்த குறையை போக்க நாம் சில Application களை பயன்படுத்தலாம். 

1. RMC: Advance Call Recorder
RMC Advance Call Recorder
இந்த Application உங்களின் அனைத்து Incoming மற்றும் Outcoming Call களையும் Record செய்து உங்கள் Memory Card – இல் Save செய்திடும். இதன் Record Quality நீங்கள் Loud Speaker பயன்படுத்தும் போது அதிகமாக இருக்கும். Record ஆனவற்றை எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம். விரும்பினால் Drop Box, Google Drive போன்றவற்றுடன் Sync செய்து கொள்ளலாம். அதே போல Manual Record வசதியும் இதில் உள்ளது.
தரவிறக்க - RMC: Advance Call Recorder

2. Call Recorder
Call Recorder
இதுவும் மேலே சொன்னது போலவே உங்களின் அனைத்து Incoming மற்றும் Outcoming Call களையும் Record செய்து உங்கள் Memory Card – இல் Save செய்திடும். இதில் உள்ள சிறப்பம்சம் ரெகார்ட் ஆனவற்றை நீங்கள் Lock செய்து கொள்ளலாம்.
தரவிறக்க - Call Recorder

3. Automatic Call Recorder
Automatic Call Recorder
இந்த Application மூலம் குறிப்பிட்ட Contact Call களை மட்டும் Record செய்யலாம். இதனால் எல்லாவற்றையும் Record செய்து Save ஆகும் ஆகும் வேலை இருக்காது. Ignore contacts என்ற வசதி மூலம் எந்த Contact Call எல்லாம் Record ஆகவேண்டாம் என்று நாம் செட் செய்து விடலாம்.
தரவிறக்க - Automatic Call Recorder

பின்குறிப்பு: உங்கள் போனில் உள்ள Microphone மூலமே ரெகார்ட் ஆவதால் Loudspeaker – இல் பேசினால் தெளிவாக ரெகார்ட் ஆகும்.

ஆன்ட்ராய்ட் போன்/டேப்லேட்டில் ஃபைல் & ஃபோல்டர்களை மறைப்பது எப்படி ?

File Hide Expert

இன்று ஆன்ட்ராய்ட் போன் பயன்படுத்தும் பெரும்பாலோனோர் நமது அனைத்து தகவல்களையும் அதில் சேமித்து வைக்கின்றோம். அத்தோடு அவை பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் நினைக்கிறோம். இவற்றில் மிக முக்கியமானது நமது பர்சனல் ஃபைல் & ஃபோல்டர்கள்.
நாம் சேமித்து வைத்திருக்கும் நமது பர்சனல்  ஃபைல்/ஃபோல்டரை யாரேனும் பார்த்து மற்றவர்களுடன் பகிர்ந்து விட்டால் அது நமக்கு ஆபத்து தான். அப்படியான பர்சனல்  ஃபைல்/ஃபோல்டரை எப்படி உங்கள் போனில் மறைத்து வைப்பது என்று பார்ப்போம்.

1. முதலில் கூகுள் ப்ளே தளத்தில் File Hide Expert என்ற அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

2. இப்போது அதனை ஓபன் செய்தால் கீழே உள்ளது போல வரும்.
Screenshot_2014-01-29-10-27-32
3. இப்போது வலது மேல் மூலையில் உள்ள நீல நிற ஃபோல்டர் ஐகான் மீது கிளிக் செய்யவும். இப்போது கீழே உள்ளது போன்று ஃபோல்டர்களின் லிஸ்ட் உங்களுக்கு கிடைக்கும்.
Screenshot_2014-01-29-10-53-31
4. ஒவ்வொரு ஃபோல்டரின் வலது பக்கமும் ஒரு பிளஸ் சிம்பல் (+) இருக்கும். அதனை கிளிக் செய்தால் குறிப்பிட்ட ஃபோல்டர் மற்றும் அதற்குள் உள்ள ஃபைல்கள் மறைக்கப்பட்டுவிடும். நிறைய ஃபோல்டர்கள் மறைக்கப்பட வேண்டும் என்றால் அவற்றை ஒரே ஃபோல்டருக்குள் மூவ் செய்து கொள்ளலாம். மறைக்கப்பட்டவற்றின் லிஸ்ட் கீழே உள்ளது போன்று இருக்கும்.
Screenshot_2014-01-29-10-48-44

மறைக்கப்பட்ட ஃபைல்களுக்கு பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி?
என்னதான் நாம் ஃபைல்களை மறைத்து வைத்தாலும் யாரேனும் இந்த அப்ளிகேஷனை ஓபன் செய்து பார்த்தால் நாம் ஃபைல்களை மறைத்து வைத்துள்ளது தெரிந்துவிடும். அதை தடுக்க இந்த அப்ளிகேஷனுக்கு ஒரு பாஸ்வேர்ட் செட் செய்து விடலாம்.

1. அப்ளிகேஷனை திறந்து உங்கள் போன்/டேப்லெட்டில் ஆப்சன்ஸ்/மெனு பட்டனை கிளிக் செய்தால் செட்டிங்க்ஸ் மெனு கிடைக்கும். (ஆப்சன்ஸ்/மெனு பட்டன் என்பது ஹோம், பேக் பட்டன் இல்லாமல் மூன்றாவதாக இருப்பது. பெரும்பாலும் ஹோம்க்கு இடது புறம் இருக்கும்)
Screenshot_2014-01-29-10-39-36
2. இப்போது செட்டிங்க்ஸ் பகுதியில் Enable Password என்பதை கிளிக் செய்து, பின்னர் Change Password என்பதை கிளிக் செய்து உங்கள் பாஸ்வேர்டை தர வேண்டும்.
Screenshot_2014-01-29-10-40-22
3. அடுத்த முறை அப்ளிகேஷனை திறக்கும் போது பாஸ்வேர்ட் கேட்கும்.

Unhide செய்வது எப்படி ?
மறைக்கப்பட்ட ஃபைல்/ஃபோல்டரை நீங்கள் பார்க்க விரும்பினால் அவற்றை இந்த அப்ளிகேஷனின் மறைக்கப்பட்ட ஃபைல்/ஃபோல்டர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். அதை செய்ய மறைக்கப்பட்ட ஃபைல்/ஃபோல்டரின் வலது பக்கம் உள்ள எக்ஸ் சிம்பலை (X) கிளிக் செய்ய வேண்டும்.

தங்கள் பர்சனல் ஃபைல்களை பாதுகாப்பாக வைத்திருக்க நினைப்பவர்கள் கட்டாயம் இதை பயன்படுத்த வேண்டும்.

Youtube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

Youtube ஐ நாம் இணையத்தின் டிவி என்று சொல்லலாம். மிகப் பிரபலமான இந்த தளத்தில் கிடைக்காத வீடியோக்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவ்வளவு வீடியோக்கள் உள்ளன. ஒரு நிமிடத்தில் சராசரியாக 48 மணிநேர வீடியோ Youtube தளத்தில் Upload செய்யப்படுகிறது. இதை ஒரு டிவி சேனல் என்று வைத்தால் இந்தியாவில் அதிகம் பேரால் பார்க்கப்படும் பத்தாவது மிகப் பெரிய சேனல் இது. இவ்வளவு பெரிய தளத்தில் சாதாரணமானவர்களும் பணம் சம்பாதிக்க முடியும் என்றால் நம்புவீர்களா? அது தான் உண்மை.  எப்படி என்று பார்ப்போம்.

Charlie bit my finger என்ற வீடியோவை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இரண்டு சிறுவர்கள் இருக்கும் இந்த வீடியோ சேனல் பல கோடிகளை சம்பாதித்து உள்ளது. இதே போல நிறைய பேர் உள்ளார்கள். Digital Inspiration தளத்தின் நிர்வாகி அமித் அகர்வால் சேனல் இது Labnol. இவர் இந்தியாவின் மிகப் பெரிய Tech Blogger. தனது தளம் மட்டும் இன்றி Youtube மூலமும் இவர் வருமானம் பெறுகிறார்.

தனி நபர்கள் மட்டும் இன்றி தொலைக்காட்சி நிறுவனங்கள், மற்ற நிறுவனங்கள் பலவும் Youtube மூலம் பணம் சம்பாதிக்கின்றன. விஜய் தொலைக்காட்சியின் சேனல். STARVIJAY

முதலில் இதற்கு என்ன தேவை என்று சொல்லி விடுகிறேன். 
நடிக்க தெரிய வேண்டும். அவ்வளவு தான். உடன் ஒரு கேமரா இருந்தால் போதும்.

எப்படி சம்பாதிப்பது

Step – 1
ஒரு கேமரா எடுங்கள், உங்களுக்கு விருப்பமானதை எல்லாம் படம் பிடிங்கள். நாய்குட்டி, பூனை குட்டி, உங்கள் குழந்தை செய்யும் சேட்டை, உங்கள் மனைவி செய்யும் சமையலை எப்படி என்ற குறிப்போடு, மிமிக்ரி, நடனம், பாட்டு, இசை என எது வேண்டும் என்றாலும்.

Step – 2 
இப்போது எடுத்த வீடியோவை உங்கள் கணினியில் Movie Maker போன்ற வீடியோ எடிட்டிங் மென்பொருளில் போட்டு மெருகேற்ற வேண்டும். ஒன்றும் பெரிய விசயமில்லை, தேவை இல்லாத இடங்களை நீக்க போகிறீர்கள். பின்னணியில் குரல் சேர்க்க வேண்டும் என்றால்  ரெகார்ட் செய்து அதையும் சேருங்கள்.

ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், “வீடியோவை பார்க்கும் படி எடிட் செய்யுங்கள்”

Step – 3 
இப்போது Youtube தளத்துக்கு செல்லுங்கள். உங்கள் ஜிமெயில் கணக்கை கொண்டு நுழைந்து Upload என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் வீடியோவை Upload செய்யுங்கள்.

Step – 4
இப்போது உங்கள் வீடியோ குறித்த தகவல்களை தர வேண்டும். எளிதில் கவரும் வண்ணம் ஆங்கிலத்தில் தலைப்பு வையுங்கள், வீடியோவில் என்ன உள்ளது என Description பகுதியில் சொல்லுங்கள். Tags பகுதில் வீடியோவை தேடுதலுக்கு எளிதாக வார்த்தைகளாக கொடுக்க வேண்டும். எப்படி Tags கொடுப்பது என்று Youtube கொஞ்சம் ரகசியங்கள் என்ற பதிவில் சொல்லி உள்ளேன்.

இப்போது “Public” என்று தெரிவு செய்து Save செய்து விடுங்கள்.

Step – 5 
முதல் நான்கு ஸ்டெப்களை தொடர்ந்து செய்து கொண்டே வாருங்கள்.

Step – 6 
உங்கள் வீடியோக்களுக்கு நிறைய views வந்தால் அல்லது உங்கள் வீடியோ உங்களுக்கு சொந்தமான வீடியோ என்றால் Youtube உங்களுக்கு கீழே உள்ளது போல ”Invitation to earn revenue from your YouTube videos” என்று  ஒரு மின்னஞ்சல் அனுப்பும்.


அதில் உள்ள லிங்க்கில் சென்று உங்கள் தகவல்களை நீங்கள் தரவேண்டும்.
அந்த லிங்க் - YouTube Partner Program: Interest Form
இப்போது Youtube உங்கள் வீடியோக்களை சோதிக்கும், நிறைய வீடியோக்கள் இருக்க வேண்டும், நிறைய பேர் பார்க்க வேண்டும். இதை தான் Youtube எதிர்பார்க்கும். எல்லாம் சரியாக இருப்பின் உங்களுக்கு Partner என்ற அந்தஸ்து வழங்கப்படும்.

பலருக்கு இது நிராகரிக்கப் படலாம்.மீண்டும் Apply செய்ய இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் வீடியோ upload செய்யாமல் இருக்காதீர்கள். தொடர்ந்து உங்கள் வேலையை செய்யுங்கள். இரண்டு மாதத்துக்கு பின் இன்னும் அதிக Video, Views உடன் மீண்டும் Apply செய்யுங்கள்.

இடையில் உங்களுக்கு Adsense கணக்கு இருந்தால் அதன் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் Youtube வழங்கும். [என் லெவல் இது தான்]. இதில் வீடியோ Upload செய்த உடன் Monetize My Video என்பதை கொடுக்க வேண்டும். இப்போது உங்கள் வீடியோ குறிப்பிட்ட சில நாட்களுக்கு Review செய்யப்படும். வீடியோ உங்களுடையது என்று Youtube உறுதி செய்த உடன், Monetized என்று ஆகி விடும்.

Parter, Adsense இரண்டுக்கும் உள்ள வித்தியாசம். Adsense கணக்கு மூலம் வரும் Earning, Partner ஐ விட குறைவாக இருக்கும். [Partner கணக்குக்கு 1000 Views க்கு 2.50$ என்று சொல்லப்படுகிறது]

இதில் Adsense கணக்கை சேர்க்க, நீங்கள் Youtube கணக்கில் நுழைந்த உடன், Youtube இதை கேட்கும். கேட்கவில்லை என்றால் காத்திருக்கவும்.
இரண்டில் எது உங்களுக்கு கிடைத்தாலும், உங்கள் வீடியோவுக்கு Youtube இரண்டு வகையான விளம்பரங்களை காட்டும்

Overlay in-video ads  - வீடியோவின் கீழே வரும் குட்டி விளம்பரம்
TrueView in-stream ads – வீடியோவுக்கு முன் வரும் சில நொடி விளம்பர வீடியோ 
நீங்கள் எவ்வளவு வீடியோ upload செய்கிறீர்கள் என்பதை பொறுத்து தான் உங்களுக்கு பணம் கிடைக்கும். மிகக் குறைந்த வீடியோ என்றால் அதற்கேற்ப தான் வருமானமும்.

எந்த மாதிரி வீடியோக்களை Upload செய்யலாம்
சமையல் குறிப்புகள், தொழில்நுட்ப விஷயங்கள், திரை விமர்சனங்கள், வீடியோ டுடோரியல்கள், அழகு குறிப்புகள், மிமிக்ரி, சுற்றுலா தள வீடியோக்கள், பாடல்கள், இசைக் கோர்வைகள், வீடியோ ப்ளாக்கிங், அனிமேஷன் முயற்சிகள். போன்றவை.

கொஞ்சம் ஆங்கில அறிவு இருந்தால் இன்னும் அதிகமாக வருமானம் பெற முடியும். தமிழும் கூட பயன்படுத்தலாம்.

ஆனால் சினிமா வீடியோ, பாடல் எதையும் நீங்கள் இதில் பயன்படுத்த முடியாது. வீடியோவானது முழுக்க முழுக்க உங்களுடையதாக உங்களால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

வீடியோவுக்கு எந்த காரணம் கொண்டும் Youtube தரும் Audio swap வசதியை பயன்படுத்தாதீர்கள். அந்த ஆடியோக்களை பயன்படுத்தினால் அதில் வரும் விளம்பரம் மூலம் வரும் வருமானம் உங்களுக்கு வராது.

உங்கள் முயற்சிகளை பொறுத்து தான் இது ஈமு கோழியா அல்லது, பொன் முட்டை இடும் வாத்தா என்பது தெரிய வரும். 
Youtube குறித்த மற்ற கேள்விகளை கீழே கேளுங்கள். பதில் சொல்கிறேன்.

இலவசமாக Call மற்றும் Message செய்ய உதவும் Line Application


Line
ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பெரும்பாலான நபர்கள் இலவச Message அல்லது Call செய்யும் Application களை பயன்படுத்துவார்கள். பெரும்பாலான Application கள் இவற்றில் ஏதேனும் ஒரு வசதியை மட்டுமே பயனர்களுக்கு வழங்கும். அப்படி இல்லாமல் இரண்டையும் தரும் ஒரு பயனுள்ள Application பற்றி இன்று பார்ப்போம்.

Line என்ற இந்த Application மூலம் உலகம் முழுவதும் உள்ள நண்பர்களுடன் நீங்கள் பேசலாம் அல்லது இலவசமாக மெசேஜ் செய்யலாம். எந்தவிதமான ஒரு லிமிட்டேஷனும் இல்லாமல் 24 மணி நேரமும் இதை செய்யும் வசதியை Line Application உங்களுக்கு வழங்குகிறது. உலகம் முழுவதும் 15 கோடி பயனர்கள் இந்த Application ஐ பயன்படுத்தி வருகிறார்கள்.

free call and message

நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபர் Offline – இல் உள்ளார் என்றால் நீங்கள் விஷயத்தை பேசி ரெகார்ட் செய்து அனுப்பலாம். வீடியோ/ஆடியோ என இரண்டு வகையிலும் செய்ய முடியும்.

இது எல்லா Smartphone க்கும் உள்ளது. அத்தோடு Windows மற்றும் Mac கணினிகளிலும் இதை நீங்கள் பயன்படுத்த முடியும்.  உங்கள் போனில் இதை இன்ஸ்டால் செய்யும் போது உங்கள் மின்னஞ்சல் முகவரி மூலமும் Register செய்து கொண்டால் உங்கள் கணினியில் இருந்தே நண்பர்களுக்கு call செய்யலாம்.

இவற்றோடு புதிய Status, Photos போன்றவற்றை Timeline என்ற பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம். இந்த பகுதி Social Network போல இயங்கும்.
இதற்கெல்லாம் ஒரே தேவை உங்கள் நீங்களும் உங்கள் நண்பரும் Line – ஐ பயன்படுத்த வேண்டும். அத்தோடு இணைய இணைப்பு இருக்க வேண்டும்.
சிறப்பம்சங்கள்: 
  • இலவசமாக Call செய்யும் வசதி. 
  • மிக வேகமான செயல்பாடு. ஒரு சில நொடிகளில் Call/Message சென்றடைகிறது.
  • Chat மூலம் படங்கள், ஆடியோ, வீடியோ அனுப்பும் வசதி
  • Group Chat வசதி
  • கணினிகளிலும் இயங்கும் வசதி
  • முழுக்க முழுக்க இலவசம்.
voice and video message

Android பயனர்கள்: 
முதலில் Line Application பக்கத்திற்கு செல்லுங்கள். அதில் Install என்பதை கிளிக் செய்யுங்கள். ஏற்கனவே Google Play தளத்தில் உங்கள் ஜிமெயில் ஐடி மூலம் Sign in ஆகி இருந்தால் அடுத்தும் Install என்று கொடுக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் போனில் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியை இங்கே கொடுத்து Sign in செய்து பின்னர் இன்ஸ்டால் என்பதை கிளிக் செய்யுங்கள்.  இப்போது உங்கள் போனில் GPRS/Wifi – ஐ Enable செய்தால் App தானாக Download ஆகிவிடும். உங்கள் மொபைலில் இன்ஸ்டால் ஆன பிறகு உங்கள் நம்பர் கொடுத்து உங்கள் Line கணக்கை தொடங்கி விடலாம். நீங்கள் விரும்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரி மூலமும் Register செய்து கொள்ளலாம்.

Windows Phone, iPhone, Blackberry மற்றும் Nokia Asha பயனர்கள்:
உங்கள் போனில் App Market சென்று Line என்று தேடி டவுன்லோட் செய்யுங்கள் பின்னர் உங்கள் மொபைல் நம்பர் கொடுத்து Register செய்யுங்கள்.
தரவிறக்க:
  • மொபைல்
    • Android [**Android பயனர்கள்இந்த இணைப்பில் கிளிக் செய்து வரும் பக்கத்தில் Install என்பதை கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் போனில் GPRS/Wifi - ஐ Enable செய்து தானாக Download செய்யலாம்**]
    • iPhone
    • Windows Phone 8
    • Blackberry
    • Nokia Asha
டவுன்லோட் செய்து பயன்படுத்துபவர்கள் More >> Add Friends மூலம் புதிய நண்பர்களை சேர்க்கலாம். என்னை சேர்க்க Search By ID என்பதில் prabukrishna என்று தேடுங்கள்.

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews