மடிக்கணணி பேட்டரியின் நேரத்தை அதிகரிக்க
அனேகமாக தற்போது அதிகமானவர்கள் மடிக்கணணி பயன்படுத்துபவர்களாக இருப்பீர்கள். நீங்கள் உங்கள் மடிக்கணணியின் Battery Life பற்றி கவலைப்படுகிறீர்கள் என்றால் அதை அதிகரிக்க சில வழிமுறைகளை பின்பற்றலாம்.
Ubuntu ஐ பயன்படுத்துங்கள்: அதாவது நீங்கள் Ubuntu பயன்படுத்தினால் Memory இன் தலையில் கட்டப்படும் வேலைப்பளு குறைக்கப்படும். இதனால் உங்கள் Battery மற்ற OS பயன்படுத்திய போது பயன்பட்டதை விட குறைவாகவே Ubuntu பயன்படுத்தும் போது செலவாகும்.
Wireless சாதனங்கள்: உங்களுக்கே தெரியும் Wireless சாதன பாவனை எப்படி Battery இன் வாழ்கையை குறைக்கும் என்று. இதில் முக்கிய அறிவுரை என்ன வென்றால் Battery ஆனது Charge இல் இருக்கும் போது Wi-fi மற்றும் Bluetooth என்பன பாவனையில் இல்லாத போது அவற்றை off செய்யவும்.
திரை விளைவுகளை சரி செய்தல்: Battery கொஞ்சம் அதிக நேரம் வேலை செய்யணும் என்றால் திரையின் Brightness ஐ உங்கள் வசதிக்கு ஏற்ற படி குறைத்துக் கொள்ளுங்கள்.
USB மற்றும் CD/DVD: இவையும் Wireless போல தான் இவ்வாறான சாதனங்கள் பாவனையில் இல்லாத போது அவற்றை துண்டித்து விடுதல் நல்லது. மேலும் i-POD ஐ மடிக்கணணியில் Charge போடுவது ஒரு சரியில்லாத வேலை தான்.
கொஞ்சம் அதிகமான RAM: குறிப்பாக சொல்லபோனால் RAM இன் தொழில்பாடு மிகையானால் அது தற்காலிக விளைவாக உங்கள் Hard Disk இன் வேலையை அதிகரிக்கும். அதுவும் உங்கள் Battery ஐ குறைக்கலாம். எனவே கொஞ்சம் அதிகமான RAM போட்டால் உங்கள் Battery கொஞ்சம் கூட வேலை செய்யும்.
Background applications: உங்கள் கணனியில் Background Apps கள் CPU இன் வேலைப்பளுவை அதிகரிக்கும். குறிப்பாக Messengers, Clock Apps போன்றன. இவை தேவையில்லாத நேரங்களில் நிறுத்தி விடப்படுவது சிறந்தது.
Battery ஐ charge இல் போடும் நேரம்: Battery எந்நேரமும் Charge இல் போடுவது ஒரு தவறான வேலை. Battery இல் உள்ள இலத்திரன்கள் ஒழுங்காக ஓடுவதை நிச்சயப்படுத்த நீங்கள் தூங்கும் போது வாரத்தில் ஒரு முறையாவது Charge இல் இருந்து துண்டித்து விடுங்கள்.
|