தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Sunday, November 9, 2014

ஷ்பெக்கி-speccy ஓர் அறிமுகம்


ஷ்பெக்கி(Speccy) என்பது system பற்றிய information யைத்தரும் ஒரு மென்பொருள். இதன் மூலம் எமது system த்தில் உள்ள அனைத்துத் தகவல்களையும் அறிய முடியும்.

                  து பைரிபோம்(Piriform) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இதன் வழமையான மேன்பொருட்களைப்போலவே சிறப்பானது. இதன் சிறப்பம்சம் யாதெனில் இது விண்டோஸ் வழமையாகத்தரும் system பற்றிய தகவல்களுக்கு மேலதிகமாக வன்பொருட்களை உருவாக்கிய நிறுவனம் போன்ற பல தகவல்களைத்தரக்கூடியது.


                   இது தரும் சில தகவல்கள் வன்பொருட்களின் tag குகளில் இருந்தாலும் சிலகாலங்களில் இல்லாமல் போகலாம். அப்போது இந்த மென்பொருள் உதவும் எனலாம்.

          இது பற்றி மேலதிகமான தகவல்களை அறிய அல்லது பதிவிறக்கம் செய்ய பைரிபோம் இணையத்தளத்தை அணுகவும்.  

குறிப்பில்நினைவகம்

            குறிப்பில்நினைவகம்அல்லது RAM   என்பது கணனியின் உயிர் நாடிகளிலொன்று. இது கணனியின் தற்காலிக தகவல் சேமிப்பு நிலையமாகத் தொழிற்படுகின்றது. இதன் நினைவகக் கொள்ளளவு கூடக்கூட கணனியின் செயற்பாட்டுத்திறனும் அதிகரிக்கும்.


     குறிப்பில்நினைவக வகைகள்: 
1. Synchronous dynamic random access memory(SDRAM)
இது பழைய மற்றும் காலாவதியான குறிப்பில்நினைவகங்களில் பயன்பட்டது.இது ஒவ்வொரு clock cycle க்கும் ஒருமுறை data வை process பண்ணும் திறனுடையது. இது PC133, PC100, PC66 என வகைப்படுத்தப்படும். இங்கு 133, 100, 66 என்னும் இலக்கங்கள் clock speed ஐ MHz இல் குறிக்கின்றன.


2. Double data rate Synchronous dynamic random access memory (DDR SDRAM)
இது சுருக்கமாக DRAMஅல்லது DDR RAM  எனவும் அழைக்கப்படும். ஒவ்வொரு clock cycle க்கும் இருமுறை data வை process பண்ணும் திறனுடையது.இது DDR200/PC1600, DDR266/PC2100, DDR333/PC2700 or DDR400/PC3200 எனவகைப்படுத்தப்படும். இங்கு 200, 266, 333, 400 என்பவை இந்த நினைவகம் support பண்ணக்கூடிய அதியுச்ச clock speed ஐயும், 1600, 2100, 2700, 3200 என்பவை இந்த நினைவகத்தின் அதிஉச்ச பரிமாற்ற வேகத்தையும் குறிக்கும்.இது 184 pinகளையுடையது. 


3. DDR2 RAM
இது 240 pin களையுடையது. இதன் அதிஉச்ச processing speed 800MHz(DDR2 800/PC6400). 


3. DDR3 RAM (double data rate type three synchronous dynamic random access memory)
இது மிகவும் புதிய குறிப்பில்நினைவக வகை. இது இதற்கு முந்திய எந்தவொரு நினைவக வகையுடனும் நேரடியாகத் தொடர்புபடாதது. இது பற்றிய மேலதிக தகவல்களுக்கு விக்கிபீடியாவைஅணுகவும். 

வைரசுகளை உங்கள் கணனியிலிருந்து களைய

                
      

ன்று வைரசுகளைக்களைய பல மென்பொருட்கள் உள்ளன. ஆயினும் அனைத்திலும் எதோ சிறு குறைகள் இருக்கும்.ஏனெனில் வைரசுகள் நாள்தோறும் புதுப்பொலிவுடன் வலம்வருகின்றன.இதே வேகத்தில் இவற்றைக்களைவது கடினம். ஆகவே வைரசுகளை களைய மனுவல்(Manual) முறைகளைப் பின்பற்றுவது சாலச்சிறந்தது.


        தற்கு பின்வரும் வரைமுறையைப் பின்பற்றுக:

Step1: உங்கள் கணனியில் command prompt (CMD)யை திறக்கவும்.அதற்கு,
விண்டோஸ் விஸ்தாவில் அல்லது செவினில் 
Start ------------>Type cmd -----------------------> Press Enter
                             Or
Start ---------------> Accessories ------------------->command prompt
விண்டோஸ் எக்ஸ்பியில்
Start -------------------> Run ----------------------> Type cmd --------------> Press Enter
                             Or
Start ---------------> Accessories ------------------->command prompt

Step2: உங்கள் கணனியில் பரிசோதிக்கவேண்டிய பகுதியை பின்வருமாறு தட்டச்சு செய்யவும்:
உதாரணமாக drive Hயை பரிசோதிக்க,
Type H: then press enter

Step3: பின் dir/as என தட்டச்சு செய்யவும்:
இங்கு as என்பது all system filesயைக் குறிக்கும்.
உங்கள் flashdriveஇல் நீங்களாக சேமிக்கும் systemfilesயைத்தவிர வேறு systemfiles இருப்பதற்கான நிகழ்தகவு மிகக்குறைவு அல்லது இல்லை எனலாம்.

Step4: பின் dir/ah என தட்டச்சு செய்யவும்:
இங்கு ah என்பது all hidden filesயைக் குறிக்கும்.

Step5: பின் attrib -s -h என தட்டச்சு செய்யவும்:
இது எல்லா system மற்றும் hiddenஇன் இயங்கும் தகவை இல்லாமலாக்கும்.


Step6: ன் del "file name" மூலம் அல்லது குறித்த drive இனுள் நுழைவதன் மூலம் அழிக்கலாம்.


N.B: Most viruses are found in C:\(the OS drive), c:\windows, C:\windows\system32 & Root of other drives both internal & external drives. Search here for viruses. Becareful when searching in OS drive because there is a risk of deleting operating system files.

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews