தகவல் முறைமை - 5
முறைமை விருத்தி வட்டம்(System Development Life Cycle - SDLC)
முறைமையினை கணினி மயப்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய படிமுறைகளை இது குறிக்கும். அவையாவன
1. பிரைச்சனையினை வரைவிலக்கணப்படுத்தல் (Problem Definition)
2. இயலுமை ஆய்வு (Feasibility Study)
3. முறைமை பகுப்பாய்வு செய்தல் (System Analysis)
4. முறைமை வடிவமைப்பு (System Design)
5. முறைமையினை விருத்தி செய்தல் (System Development)
6. சோதனை மேற்கொள்ளல் (System Testing)
7. முறைமையினை செயற்படுத்தல் (System Implementation)
8. முறைமையினை பராமரித்தல் (System Maintenance)
பிரைச்சனையினை வரைவிலக்கணப்படுத்தல் (Problem Definition)
முறைமையின் முகாமைத்துவ குழுவும், முறைமை விருத்தி குழுவும் இணைந்து முறைமையின் குறிக்கோள், உள்ளீடு, வருவிளைவு, செய்முறை, பாதுகாப்பு, முறைமையின் இடைமுகம் பற்றிய எளிய ஆவணத்தினை தயார் செய்தலைக்குறிக்கும்.
இயலுமை ஆய்வு (Feasibility Study)
முறைமையினை உருவாக்க தேவையான வளங்கள் உள்ளனவா, இப்புதிய முறைமையில் இருந்து பெறத்தக்க பொருளாதார அனுகூலங்கள் பற்றிய ஆய்வே இதுவாகும்.பின்வரும் 3 வகைகளில் இவை ஆய்வு செய்யப்படும்.
1. தொழினுட்ப இயலுமை – முறைமையினை உருவாக்க தேவையான தொழினுட்ப வழங்களைக் கொண்டுள்ளனவா என்பது பற்றி ஆராய்தல்.
2. செய்பணி இயலுமை - முறைமையினை இயக்க தேவையான மானுட, பௌதீக, நேரவளங்களைக் கொண்டுள்ளனவா என ஆராய்தல்.
3. பொருளாதார இயலுமை – முறைமையினை உருவாக்க தேவையான பொருளாதார வளங்கள் பற்றியும், செலவிடப்படும் பெறுமதிக்கு பொருத்தமான பயன்பாடு உள்ளனவா என்பது பற்றியும் ஆராயப்படும்.