தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Saturday, July 27, 2013

கணினியின் அடிப்படை-4

உள்ளீட்டுச் சாதனங்கள்
(Input Device)

தரவுகளையும் நிகழ்ச்சித்திட்ட அறிவுறுத்தல்களையும் கணினியினுள் உள்ளீடு செய்வதற்க்கு பயன்படும் சாதனங்கள் யாவும் உள்ளீட்டுச் சாதனங்கள் என அழைக்கப் படுகின்றன.
சில உள்ளீட்டுச்சாதனங்கள் :
1. விசைப்பலகை(Keyboard)
2. சுட்டி(Mouse)
3. நுணுக்குப்பன்னி(Microphone)
4. வருடி(Scanner)
5. ஒளிப்பேனை(Light pen)
6. பட்டைக்குறி வாசிப்பான்(Bar code reader)
7. இயக்கப்பிடி(Joystick)
8. இலக்கமுறைக் கமறா(Digital camera)
9. வலைக் கமரா(Web camera) 

வெளியீட்டுச்சாதனங்கள்
(Output device)

கணினியினால் செயல்லடுத்தப்பட்ட(Processing) பெறுபேறுகளைப் பாவனையாளருக்கு வழங்கப் பயன்படும் சாதனங்கள் யாவும் வெளியீட்டுச் சாதனங்கள் என அழைக்கப்படுகின்றன.
சில வெளியீட்டுச்சாதனங்கள் :
1. Monitor
2. Printer
3. Speaker
4. Projector 

மையச்செயற்பாட்டுத் தொகுதி
(Micro processor)

கணினியின் மூளை அல்லது இதயம் என இது அழைக்கப்படுகின்றது. இதன்மூலம் கணித(Arithmetic), மற்றும் தர்க்கரீதியான(Logical) தீர்வுகளை எடுப்பதுடன், கணினியின் சகல பாகங்களையும் கட்டுப்படுத்துகின்றது(Control).
 நமது பாவனையில் உள்ள சில Micro processor  :
1. Intel
2. AMD



கணினியின் நினைவகம்
(Computer Memory)
தரவுகள், தகவல்கள், அறிவுறுத்தல்கள் போன்றவற்றை சேமித்துவைக்கப் பயன்படும் கணினியின் பகுதி நினைவகம் (Memory) என அழைக்கப்படுகின்றது. கணினிகள் இலத்திரனியல் முறையில் தரவுகளைச் சேமிக்கின்றன. இது இருவகைப்படும்
1.  பிரதான நினைவகம். (Main Memory/Internal Storage)
  •  பதுக்கு நினைவகம் - Cash Memory
  • தற்போக்கு அணுகு நினைவகம் - Random Access Memory(RAM)
    வாசிப்பதற்கும் பதிவதற்குமான நினைவகமாகும். இங்கு கணினியானது Off ஆகும்போது இந்த நினைவகத்தில் பதிந்துவைத்திருந்தவை யாவும் அழிந்துவிடும். இதனால் இதனை அழிதகு நினைவகம்(Volatile Memory) எனவும் அழைப்பர்.
  • வாசிப்பு மட்டும் நினைவகம் - Read Only Memory(ROM)
    இந்நினைவகத்தில் பதிந்துள்ளவற்றை வாசிக்கமட்டுமே முடியும். இதிலுள்ளவற்றை அழிக்கவோ அல்லது மாற்றம் செய்யவோ முடியாது. இதனால் இதனை அழிதகா நினைவகம் (non Volatile Memory)எனவும் அழைப்பர்.
2. துனை நினைவகம்.(Secondary Storage/External Storage/Baking Storage )
  • வன்தட்டு (Hard Disk)
  • இறுவெட்டு (Compact Disk - CD)
  • பளிச்சீட்டு நினைவகம் (Flash Memory)
  • Digital Versatile Disk - DVD

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews