தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Friday, December 12, 2014

Hard Disk ஐ பாதுகாக்க Check Disk செய்யுங்கள்


உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள்
hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும்.
மனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய்ய முடியும். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தான் check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும்.
இதன் மூலம் உங்கள் Hard Disk இன் Critical நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால்உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது.
இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம். கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆனால் இதை செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப்யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து கொள்ளுங்கள்.
எப்படி செய்வது எனக் காண்போம் வாருங்கள்.
1.My Computer உள்ளே நுழைந்து C Drive மீது Right Click செய்து Properties செல்லவும்.
2.அடுத்து வரும் குட்டி விண்டோவில் Tools என்ற Tab ஐ தெரிவு செய்யவும். இதில் Error Check என்பதில் “Check Now” என்பது இருக்கும். அதை கிளிக் செய்யவும். இதற்கு அடுத்து கீழே உள்ள விண்டோ வரும்.
3.இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரி செய்து விடும். இரண்டாவது ஒன்று உங்கள் Disk இன் Bad Sector களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தால் Check Disk க்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன்று. நேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம்.
4.இப்போது கிளிக் செய்து விட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும்.
உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டுள்ளது எனவே இதனை இப்போது செய்ய முடியாது எனச் சொல்லி, அடுத்த முறை கம்ப்யூட்டர் Start ஆகும் போது செய்யவா எனக் கேட்கும். அதற்கு வட்டமிடப்பட்டுள்ளதை கொடுத்து விடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் ஆரம்பிக்கும்.
5.இந்த வேலை முடியும் வரை கம்ப்யூட்டர் OFF ஆகக் கூடாது எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள்.மோசமான பகுதிகளை கம்ப்யூட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும், இதனால் பிரச்சினை எதுவும் இல்லை. இது முடிந்தவுடன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விடும். உங்கள் Hard Disk குறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பிக்கப் படும்.
6.மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக்கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் C ட்ரைவை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட்ரைவ் ) Check Disk க்கு உள்ளாக்குவதுதான் Hard Disk க்கு பயனுள்ளது.
உங்கள் Hard Disk ஐ பரமரிப்பது உங்கள் கடமை. எனவே முதலில் chkdsk (check Disk )செய்யுங்கள். உங்கள் Hard Disk ஐ காப்பாற்றுங்கள்.

கம்ப்யூட்டரின் இறுதி மூச்சு


உங்கள் கம்ப்யூட்டர் அடுத்த சில மணி நேரத்தில் முடங்கிப் போவதைப் போல இயக்கத்தினைக் காட்டு கிறதா? உடனே பதற்றம் அடைய வேண்டாம். இந்த நிலை ஏற்படுவதற்கான பொதுவான பிரச்னை களையும் அவற்றிற்கான தீர்வுகளையும் இங்கு காண்போம்.


பொதுவாக, கம்ப்யூட்டர் இயக்கம் எந்த நேரமும் முன் அறிவிப்பின்றி தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் என்பது நாம் தெரிந்து கொள்ளவேண்டிய
ஓர் உண்மை. எந்த நேரத்திலும் இது நிகழும் என்பதால், அதனை எந்த நேரத்திலும் நாம் எதிர்பார்க்கவும் வேண்டும்.

உங்கள் சிஸ்டத்தில் தான் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று மற்றவர்கள் கூறுவது மிகவும் சகஜமாகிவிட்டது. முதலில் வேகமாக இயங்கிய கம்ப்யூட்டர், இப்போது மிகவும் குறைவான வேகத்தில் இயங்குகிறது, அடிக்கடி நீல நிறத்தில் திரையில் எச்சரிக்கை செய்தி கிடைக்கிறது, சிபியு கேபினிலிருந்து பிளாஸ்டிக் சற்று கருகியது போல வாசனை வருகிறது, சிறிய கிரைண்டர் ஓடுவது போல சத்தம் வருகிறது போன்ற பேச்சுக்கள் எல்லாம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் குறை கூறும் குற்றச்சாட்டுக்களே. இவற்றை எப்படி எதிர் கொள்ளலாம் அல்லது ஆய்வு செய்திடலாம் என்று பார்ப்போம்.

இவை அனைத்திற்கும் இதுதான் தீர்வு என எதனையும் உறுதியாக எழுதித் தந்துவிட முடியாது. ஏனென்றால், ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் அது இயங்கும் சுற்றுப்புறச் சூழ்நிலை, உள்ளாகப் பதிக்கப்பட்ட அப்ளிகேஷன் புரோகிராம்கள், ஹார்ட் ட்ரைவின் தன்மை இவற்றைப் பொறுத்தே இந்த பிரச்னைகள் ஏற்படும். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

நாம் சந்தேகிக்கும் வகையில், சிபியு கேபினிலிருந்து சத்தம் வருகிறது என்றால், நிச்சயமாய் ஐந்து வாரங்களிலோ அல்லது ஐந்து நிமிடங்களிலோ ஹார்ட் ட்ரைவ் இயக்கத்தினை நிறுத்தப் போகிறது என்பதன் அடையாளமே அது. எனவே அது போன்ற சூழ்நிலையில், உங்கள் பைல்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எந்த ட்ரைவினை உங்கள் கம்ப்யூட்டரில் பொருத்தலாம் என்பதனை அறிந்து, அதனை எங்கு வாங்கலாம் என்பதனை முடிவு செய்திடுங்கள்.

சில வேளைகளில், நாம் எந்த புரோகிராமின் ஐகான் மீது கிளிக் செய்தாலும், அது இயங்க, வழக்கத்திற்கு மாறாக, சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதற்கும் பல காரணங்கள் உண்டு. உங்கள் ராம் மெமரியில் பிரச்னை இருக்கலாம்;

ஒரே நேரத்தில் பல புரோகிராம்களை நீங்கள் திறந்து வைத்து இயக்கலாம். அல்லது நீங்கள் அறியாமலேயே, பல புரோகிராம்கள் திறக்கப்பட்டு பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கலாம். ரன் விண்டோவில் msconfig என டைப் செய்து கிடைக்கும் விண்டோவில், start up என்ற டேப்பினைத் தேர்ந்தெடுத்து கிடைக்கும் பட்டியலைப் பார்க்கவும்.

இதில் உங்களுக்குத் தேவைப்படாத சில புரோகிராம்கள் இருக்கலாம். சிலவற்றின் பெயர்கள் நீங்கள் இதுவரை கேள்விப்படாதவையாக இருக்கலாம். அவை குறித்து கூகுள் தேடல் மூலம், எத்தகைய பயன் தரும் புரோகிராம்கள் அவை என அறிந்து கொள்ளவும்.

அவை உறுதியாக நீங்கள் பயன்படுத்தாத புரோகிராம்கள் எனில், அவற்றிற்கு எதிரே உள்ள சிறிய கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிட்டு, Apply என்பதில் கிளிக் செய்து பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இந்த மாற்றத்தினை இயக்க, நீங்கள் ரீபூட் செய்திட வேண்டிய திருக்கும்.

இன்னொரு பிரச்னை ட்ரைவர் புரோகிராம் களால் ஏற்படும். தேவையற்ற அல்லது ஒருங்கிணைந்து செயலாற்றாத ட்ரைவர் புரோகிராம்கள் இவ்வாறு புரோகிராம் இயக்கத்தினைக் கொண்டு வராது. எனவே குறிப்பிட்ட புரோகிராமிற்கான அப்டேட் செய்யப்பட்ட ட்ரைவர் புரோகிராமினை டவுண்லோட் செய்திடவும்.

சில வேளைகளில், கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடுகையில், மற்றவர்கள் கம்ப்யூட்டரில் லாக் இன் செய்துள்ளார்கள் (‘Other People Are Logged On to This Computer’); எனவே மூட வேண்டியது அவசியமா? என்ற கேள்வியுடன் ஒரு கட்டம் கிடைக்கும். உங்கள் கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட யூசர் அக்கவுண்ட் இருக்கலாம்;

இன்னொருவர் கம்ப்யூட்டரைப் பயன் படுத்தி, தன் பணியை முடித்த பின்னர், லாக் ஆப் செய்திடாமல் விட்டுவிட்டுச் சென்றிருக்கலாம். அந்நிலையில், நீங்கள் பயன் படுத்தி ஷட் டவுண்ட் செய்திட்டால், இந்த செய்தி கிடைக்கும். யூசர் அக்கவுண்ட்ஸ் சென்று, யார் அக்கவுண்ட் பயன்பாட்டில் உள்ளது என அறிந்து, அதனையும் சேர்த்து லாக் ஆப் செய்திடவும்.

கம்ப்யூட்டர் பூட் ஆகும் வேளையில் பீப் ஒலிகளை வெளிப்படுத்தி இயங்காமல் நின்றுவிடும். ஒவ்வொரு வகை பீப் ஒலியும் ஒருவகையான சிக்கலைக் காட்டுகிறது. மவுஸ், கீ போர்ட், வீடியோ கார்ட், ஹார்ட் ட்ரைவ் இணைப்பு என எதில் வேண்டு மானாலும் பிரச்னை இருக்கலாம்.

இந்த பீப் ஒலி கேட்க முடியாத வகையில் ஸ்பீக்கரில் பிரச்னை இருந்தால், உங்கள் நிலை சிக்கல் தான். ஒவ்வொன்றாக, நீங்கள் சரி செய்து பார்க்க வேண்டும். இது போன்ற பிரச்னைகளில், கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள, உள்ளே இணைப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள கேபிள்களை நீக்கி மீண்டும் இணைத்தாலே போதும்.

கேபிள்களை இணைத்த கையோடு, கனெக்டர்கள் சரியாகப் பொருந்தி உள்ளனவா என்று பார்க்கவும். சரியான முறையில் பொருத்தாமல், அதிக அழுத்தம் கொடுத்திருந்தால், கனெக்டர்களில் உள்ள பின்கள் வளைந்திருக்க சந்தர்ப்பம் உண்டு. அதனைச் சரி செய்திடவும்.

கிராஷ் ஆகாமலேயே, புளு ஸ்கிரீன் தோன்றாமலேயே, உங்கள் கம்ப்யூட்டர் ரீபூட் ஆகிறதா? சிஸ்டம் கேபின் அதிக சூடு ஆகிறது என்று பொருள். சிபியு மேலாக உள்ள சிறிய மின் விசிறி நன்றாகச் சுழல்கிறதா எனச் சோதனை செய்திடவும். மற்ற மின்விசிறிகளையும் சோதனை செய்துவிட்டு, அவற்றைச் சுத்தம் செய்திடவும்.

சில வேளைகளில், நீங்கள் என்ன டைப் செய்தாலும், அந்த கட்டளை, சிபியுவிற்குச் செல்லாது. கீபோர்டில் இருந்து எந்த சிக்னலும் அனுப்பப்படாத நிலையை இது குறிக்கிறது. உங்கள் கீ போர்ட் யு.எஸ்.பி. கீ போர்டாக இருந்தால், உங்கள் பயாஸ் செட்டிங்ஸ், அதனை இயக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளதா எனப் பார்க்கவும்.

பழைய PS/2 கீ போர்டு எனில், விண்டோஸ் டிவைஸ் மேனேஜர் சென்று, அதனை அன் இன்ஸ்டால் செய்து, கம்ப்யூட்டரை இயக்கவும். கம்ப்யூட்டர் தானாக, அதனை உணர்ந்து இயக்கத்திற்கு எடுத்துக் கொள்ளும்.

சிபியு கேபினிலிருந்து வழக்கத்திற்கு மாறான ஸ்மெல் வருகிறதா? கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் சக்தியை நிறுத்தி, எந்த பகுதியிலிருந்து இந்த வாசனை வருகிறது எனப் பார்த்து, அந்தப் பகுதியை மாற்றி, புதியதாக ஒன்றைப் பொருத்துவதே இதனைச் சரிப்படுத்தும் வழியாகும்.


இன்னும் நம்மால் அறியமுடியாத பிரச்னைகள் இருந்தால், அது அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பினால் கூட இருக் கலாம். குறிப்பிட்ட அந்த தொகுப்பினை ரீ இன்ஸ்டால் செய்வதே இந்த சிக்கலிலிருந்து உங்கள் கம்ப்யூட்டரை விடுவிக்கும்.

முழுமையான இணையத்தள வசதிக்கு ஏற்ற மொபைல் பிரவுசர் அறிமுகம்



பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது. இணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது.

இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு. ஸ்கைபயர் கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று
ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன.

யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன. மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது.

ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்சம்.


தமிழர்களாகிய நமக்கு ஸ்கைபெயரில் சிறப்பம்சம் என்னவெனில் தமிழ் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. பொதுவாக ஒபேரா மினி தவிர மற்ற மொபைல் உலாவிகளில் தமிழ் இணைய தளங்களை பார்க்க முடியாது.

ஒபேரா மினி இணைய உலாவியில் தமிழ் தளங்களை காண சிறிய மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் ஸ்கைபயர் இணைய உலாவியில் எந்த மாற்றமும் செய்ய தேவை இல்லை.

நீங்கள் மொபைல் போனில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக சோதித்து பார்க்க வேண்டிய இணைய உலாவி ஸ்கைபயர். இது நிச்சம் உங்களை கவரும். ஸ்கைபயரின் இணையதளம்.

உங்கள் கணினியில் தரவிறக்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள். தரவிறக்கிய பின் உங்கள் மொபைலுக்கு மாற்றி நிறுவி கொள்ளுங்கள்.


நேரடியான உங்கள் மொபைலில் இருந்து ஸ்கைபயரை தரவிறக்க உங்கள் மொபைலில் இருந்து m.skyfire.comஇந்த முகவரியை அணுகுங்கள். உங்கள் மொபைலுக்கு ஏற்ற பதிப்பு தரவிறக்கப்பட்டு நிறுவப்படும்.

டுவிட்டர் குறும்பதிவுகளை முற்றிலுமான அழித்து விடுவதற்கு

உங்களது டுவிட்டர் பக்கத்தில் உள்ள அனைத்து குறும்பதிவுகளையும் நீக்கி விட்டு மீண்டும் புதிதாக தொடங்க முடியும்.
இதற்கு டிவிட் வைப் என்ற இணையத்தளம் உதவி புரிகிறது. இந்த தளம் டுவிட்டர் பக்கத்தில் உள்ள குறும்பதிவுகள் அனைத்தையும் நீக்கி தருகிறது.

இதற்கு பதிலாக டுவிட்டர் கணக்கையே நீக்கி விடலாமே என்று கேட்கலாம். நீக்கலாம் தான், ஆனால் டிவிட்டர் கணக்கில் வெளியில் இருந்து முற்றிலுமாக வெளியேறிவிட முடிவு செய்யும் போது தான் இது சரியாக 
இருக்கும்.
காரணம் டுவிட்டர் கணக்கை நீக்கியவுடன் டுவிட்டரில் நமது அடையாளத்தை இழந்து விடுவோம். மீண்டும் நுழைய நினைத்தால் புதிய பெயரில் தான் கணக்கை தொடங்க வேண்டும். அத்துடன் ஏற்கனவே பெற்றிருந்த டுவிட்டர் தொடர்புகளை இழந்து விடுவோம்.
டிவிட் வைப் சேவையை பயன்ப‌டுத்தும் போது டுவிட்டர் கணக்கை இழக்க மாட்டோம். குறும்பதிவுகளை மட்டுமே நீக்குவோம், அதே பெயரில் நாம் தொடர்ந்து குறும்பதிவு செய்யலாம், பின்தொடர்பாளர்களையும் இழக்காமல் இருக்கலாம்.
இணையதள முகவரி

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews