தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Thursday, December 11, 2014

உங்கள் செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தின் அளவு என்ன?

பயன்படுத்தப்பட்ட செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தை பிரித்தெடுப்பதன் மூலம் மின்னணுக் கழிவுகளில் இருந்து செல்வத்தை உருவாக்க முடியும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் சுற்றுச்சூழல் ஆணையர் ஜெனஸ் பொடோக்நிக் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.
உங்கள் செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தின் அளவு என்ன?


அதைத்தொடர்ந்து செல்பேசிகளில் இருந்து தங்கத்தை பிரித்தெடுப்பது தொடர்பான விவாதம் மின்னணு தொழில்நுட்பத் துறையில் மீண்டும் சூடுபிடிக்கத் துவங்கியிருக்கிறது.
சரி இந்த பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட் போன்களில் இருந்து எவ்வளவு தங்கத்தை பிரித்தெடுக்க முடியும்?
இது குறித்த பல்வேறு ஆய்வுகள், மதிப்பீடுகள் இருந்தாலும், பொதுவான மதிப்பீட்டின்படி ஒரு கைப்பையில் இருக்கும் உபயோகப்படுத்தப்பட்ட செல்லிடபேசிகளில் இருந்து ஒரு கிராம் தங்கத்தை பிரித்தெடுக்க முடியும் என்பதை பல்வேறு தொழில்நுட்ப ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.
மின்னணு கழிவுகள் குறித்த ஐநா மன்றத்தின் அறிக்கை ஒன்றில் 41 செல்லிடபேசிகளில் ஒரு கிராம் தங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் பிரஸ்ஸல்ஸில் இருக்கும் உமிகோர் என்கிற தொழில்நுட்ப நிறுவனம் வெறும் 35 செல்லிடபேசிகளில் இருந்தே கூட ஒரு கிராம் தங்கத்தை பிரித்தெடுக்க முடியும் என்று பிபிசியிடம் தெரிவித்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் கணக்குப்படி ஒரு டன் பயன்படுத்தப்பட்ட செல்லிட பேசிகளில் இருந்து 300 கிராம் தங்கத்தை பிரித்தெடுக்க முடியும்.
இந்த ஆய்வுகளின் அடிப்படையில் பேசிய ஜெனஸ் பொடோக்நிக், நிலத்தில் இருந்து தங்கத்தை பிரித்தெடுக்கும்போது ஒரு டன் தங்கத்தாதில் இருந்து ஒரே ஒரு கிராம் தங்கம் தான் பிரித்தெடுக்கப்படுவதாக தெரிவித்தவர் ஆனால் 41 ஸ்மார்ட் போன்களில் இருந்து நாம் அதே ஒரு கிராம் தங்கத்தை பிரித்தெடுக்க முடியும் என்று வாதிட்டார்.
அதாவது தங்கச்சுரங்கங்களில் சுமார் ஆயிரம் கிலோ தாதில் இருந்து ஒரு கிராம் தங்கத்தை பிரித்தெடுப்பதைவிட, வெறும் 41 ஸ்மார்ட் போன்களில் இருந்து அதே அளவான ஒரு கிராம் தங்கத்தை பிரித்தெடுப்பது எளிய செயல் என்பது அவரது வாதம்.
செல்பேசிகளில் இருந்து தங்கத்தை பிரித்தெடுப்பது லாபம் தருமா?
உங்கள் செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தின் அளவு என்ன?
இந்த கணக்கெல்லாம் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தை பிரித்து எடுக்க ஆகும் செலவை விட பிரித்தெடுக்கப்படும் தங்கத்தின் மதிப்பு அதிகம் இருந்தால் மட்டுமே இந்த மாதிரி செல்லிடபேசிகளில் இருந்து தங்கத்தை பிரித்து எடுக்கும் செயல் வர்த்தக ரீதியில் லாபம் ஈட்டும் தொழிலாக மாற முடியும்.
அந்த கோணத்தில் பார்த்தால், நம்மிடம் இருக்கும் ஒரு செல்பேசியில் இருந்து கிடைக்கும் தங்கத்தின் மதிப்பு என்பது சராசரியாக இன்றைய நிலையில் வெறும் நூறு (இந்திய) ரூபாய்க்கும் குறைவாக இருக்கிறது. இந்த நூறு ருபாய்க்கும் குறைவான மதிப்புள்ள தங்கத்தை பிரித்தெடுக்க ஆகும் செலவோ அதைவிட அதிகமாக இருக்கும் என்கிறார்கள் மின்னணு தொழில்நுட்ப வல்லுநர்கள். எனவே பயன்படுத்தப்பட்ட செல்பேசிகளில் இருந்து தங்கத்தை பிரித்தெடுப்பது வர்த்தக ரீதியில் லாபம் தரக்கூடிய தொழில் அல்ல என்கிறார்கள் இவர்கள்.
ஆனால் வேறு சில மின்னணு தொழில்நுட்ப வல்லுநர்களோ, தங்கத்தை பிரித்தெடுக்க ஆகும் செலவை விட, பிரித்தெடுக்கப்படும் தங்கத்தின் மதிப்பு கூடுதலாக இருக்கும் என்றும், இது லாபகரமான முயற்சியாகவே இருக்கும் என்றும் வாதாடுகிறார்கள்.
இந்த வாதப்பிரதிவாதங்கள் ஒரு புறம் இருக்க, இன்னொரு கணக்கு இதில் இருக்கும் வேறொரு சிக்கலை விளக்குகிறது. இன்றைய நிலையில் நிலத்தில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் ஏழறை டன் தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது. இதே அளவு தங்கத்தை நாம் பயன்படுத்தப்பட்ட செல்பேசிகளில் இருந்து எடுக்க வேண்டுமானால் ஒரு நாளைக்கு சாராசரியாக சுமார் 30 கோடி செல்பேசிகளை நாம் மறு சுழற்சி செய்யவேண்டும். அப்படி செய்தோமானால், உலகத்தில் தற்போது இருக்கும் சுமார் எழுநூறு கோடி செல்பேசிகளும் 23 நாட்களில் மறுசுழற்சி செய்து முடிந்துவிடும் என்கிறார்கள் மின்னணு விஞ்ஞானிகள்.


கட்டுரை: http://tamil.webdunia.com/

கணினித் தொழில்நுட்ப 'அடிமைத்தனத்துக்கு' சிகிச்சை அளிக்க புதிய மையம்

கணினித் தொழில் நுட்பம் வளர்ந்து வரும் உலகில், தொழில்நுட்பத்துக்கு மனிதர்கள் அடிமையாகிறார்களா? தொழில்நுட்பப் பயன்பாடு என்பது மனிதர்களின் சமூக, தனி மனித உறவுகளைப் பாதிக்கிறதா? கலாசார ரீதியாக கணினித் தொழில்நுட்பம் ஏற்படுத்துக்கும் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது?
கணினி யுகத்தில், நமது முன்னோர் காலத்தில் எவரும் கற்பனை செய்து பார்க்காத சில நவீன கண்டுபிடிப்புகள் நமது வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. ட்ரன்க் கால் வசதி மூலம் நீண்ட தொலைவில் இருந்த உறவினர் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தது அந்த காலம். ஸ்கைப் வசதி மூலம் கடல் கடந்து வாழும் உறவினர்களை நேரில் பார்த்தபடி பேசுவது இந்த காலம். தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், தொலைவு ஏற்படுத்தும் தடைகளைக் குறைத்ததுடன் , மனிதர்கள் உலக அளவில் தொடர்புகள் வைத்துக்கொள்ளவும் வழி வகுத்துள்ளன.
ஆனால் அசுர வேகத்தில் கடந்த இரு தசாப்தங்களில் வளர்ந்த கணினி மற்றும் இணையத் தொழில் நுட்பம் ஏற்படுத்திய சமூக மாற்றங்கள் சிந்திக்கத்தக்கவை.
குறிப்பாக இன்றைய சிறார்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் மிகவும் பாரிய அளவிலானவை.
கோடைகால விடுமுறை நாட்களில் திறந்த வெளியில் குழந்தைகள் பந்து விளையாடும் காலங்கள் மாறி தற்போது கணினியின் மோகத்தில் குழந்தைகள் ஆட்பட்டிருக்கிறார்கள்.
கணினி, தொலைபேசி போன்ற தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் குழந்தைகள் , இளைஞர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். சில சமயம் அந்த கண்டுபிடிப்புகள் மனிதர்களை தங்களின் அடிமைகளாக்கி விடுகின்றன. நவீன யுகத்தில், பதின்பருவ இளைஞர்கள், உடன் வாழும் குடும்பத்தினரிடம் நேரம் செலவிடுவதை குறைத்து, தொழில்நுட்பத்துடனே அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்றும் இது பெற்றோர்களுக்கு ஒரு பெரும் பிரச்சனை என்றும் கூறுகிறார் பெங்களூருவை சேர்ந்த ஒரு தாயார் புவனா.
இளைஞர்கள்தான் அளவிற்கு மீறி, இரவு பகல் என்று பார்க்காமல் தொழில் நுட்பத்துக்கு அடிமைப்பட்டு கிடப்பது ஒரு மருத்துவ ரீதியான பிரச்சனையென்று பெங்களூருவில் இருக்கும் தேசிய மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் அறிவியல் கழகத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தொழில் நுட்பத்திற்கு அடிமைப்பட்டிருப்போருக்கு சிகிச்சை அளிக்க ‘ஷட் கிளினிக்’ என்ற ‘தொழில்நுட்பத்தை ஆரோக்கியமாக பயன்படுத்த உதவும் சேவையை இந்த கழகம் சமீபத்தில் துவங்கியுள்ளது. தொழில்நுட்பத்திற்கு அடிமைப்பட்டிருப்போருக்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் மருத்துவமனை இதுவே என்பது குறிப்பிடதக்கது.
இந்த சிறப்பு மருத்துவமனையின் நிறுவனரும் மூத்த மருத்துவருமான டாக்டர் மனோஜ் ஷர்மா, அந்த மருத்துவமைக்கு சிகிச்சைக்கு வருபவர்களில் 13லிருந்து 19வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் என்று கூறுகிறார்.
தொழில் நுட்பத்தை அதிகமாக உபயோகப்படுத்தும் ஒருவர் அதற்கு அடிமையாக இருக்கிறார் என்பதை அவரது எந்த நடவடிக்கைகள் மூலம் கண்டறியமுடியும் என்றும், அவ்வாறு கண்டறியப்பட்டவர்களுக்கு எந்த விதமான சிகிச்சைகள் அளிக்கப்படும் என்று கேட்டதற்கு பதிலளித்த டாக்டர் மனோஜ் ஷர்மா.
"எத்தனை மணி நேரம் ஒருவர் கணினியில் செலவிடுகிறார், எத்தனை மணி நேரம் வரை செலவிடுவது ஆரோக்கியமானது என்பதை நாங்கள் அடுத்த ஆராய்ச்சியில் கண்டறியவுள்ளோம். எனினும் நமது புரிதலுக்காக சொல்ல வேண்டும் என்றால், இணையத்திலேயே இருக்க வேண்டும் என்ற அடங்கா ஆசை இருப்பவர்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்று கூறலாம். இணையத்தையோ அல்லது மற்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தும்போதோ தங்களின் கட்டுப்பாட்டை அவர்கள் இழக்கிறார்கள் என்றாலும் அவர்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்று கூறலாம். வெறும் பத்து நிமிடம் செலவிட நினைத்து இணையத்தில் சென்று மணிக் கணக்காக நேரம் செலவழிப்பவர்களும் இதில் அடங்குவர். எந்தத் தேவையும் இன்றி அவர்கள் இணையத்தில் நேரம் செலவிடுவதும் பிரச்சனைதான். இவர்களுக்கான சிகிச்சை முறையை நாங்கள் இன்னும் உருவாக்கி வருகிறோம். ஒருவரின் நடத்தைகள் அடிப்படையிலான சிகிச்சைகளை வழங்க முயற்சித்து வருகிறோம். ஊக்கத்தை மேம்படுத்துவதற்கான சிகிச்சையை அளிக்கிறோம்.

பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரிடமும் அவரின் பிரச்சனை குறித்து அறிவுரை அளிப்போம். இந்த அடிமைத்தனத்திலிருந்து வெளிவருவதற்கான முடிவையும் நடவடிக்கையையும் அவர்களே மேற்கொள்ளுமாறு அவர்களுக்கு பயிற்சி அளிப்போம். சலிப்பு தன்மை மிகுந்தவரகளுக்கு ஆர்வமான பொழுதுபோக்குகளை பழக உதவுவோம்" என்றார் டாக்டர் மனோஜ் ஷர்மா.


கட்டுரை: http://tamil.webdunia.com/

நாள் தோறும் கணினியில் பணிபுரிபவ ர்களுக்கு

நாள் தோறும் கணினியில் பணிபுரிபவர்கள் சில விசயங்களை கவனிப்பதில்லை. விசைப்பலகை மற்றும் மவுஸ் எப்படி உபயோகப்படுத்தவேண்டும் என்றும் தெரிவதில்லை. இதை சாதாரணமாக நினைத்தால் பின்னாளில் பெரிய ஆபத்தில் கொண்டு போய் விட்டு விடும். கார்பல்டன்னல் சிண்ட்ரோம் (Carpal tunnel Syndrome) என்ற நோய் இதனால் ஏற்படுகிறது தெரியுமா?
தவறாக பயன்படுத்துவதும் சரியாக பயன்படுத்துவதும்



http://teacherlibrariannp.wordpress.com/

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க



நமது கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம். அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல
கோப்புகள் இருக்கும். நமக்கே தெரியாமல் சிலர் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் காப்பி செய்து
கொள்ளவோ முடியும். இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது.

இந்த மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழ்க்கண்ட image "1" தோன்றும். இதில் Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் எதாவது Key தேர்வு செய்து கொள்க. உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என

ஏதாவது தேர்வு செய்து கொள்க.

தேர்வு செய்த பின் Activate என்ற பட்டனை அழுத்துக.பின் கீழ்க்கண்ட image 2 தோன்றும். இதில் OK கொடுத்த பின் நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்கவோ முடியாது.மேலும் கோப்பின் மேல் Right Click செய்து பார்த்தாலும் அனைத்து வசதிகளும்

முடக்கப்பட்டிருக்கும். image "3" உள்ள படத்தை பார்க்க.

உங்களுக்கு கோப்புகளை அழிக்க வேண்டுமானால் முன்பு தேர்வு செய்த key அழுத்தினால் போதும்.அதாவது முன்னர் Ctrl +B கொடுத்திருந்தால் அதை தற்போது அழுத்தினால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும்.

தற்போது நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட், பேஸ்ட் காப்பி மற்றும் அழிக்க முடியும்.

இந்த மென்பொருளை தரவிறக்க

https://www.dropbox.com/s/8mjxj7pzt2oshzw/Prevent.rar?dl=0



Transfer a Joomla site from localhost to your Live Server

joomla site இனை localhost  இல் இருந்து  Live Server க்கு மாற்றுவதற்கு 3 படிமுறைகள் பின்பற்றப்படும்

1. localhost இல் உள்ள குறிப்பிட்ட தளத்துக்கான சகல கோப்புக்களையும் உங்களது Live Server க்கு மாற்றுதல் (upload) வேண்டும்.

2. localhost உள்ள phpmyadmin பகுதிக்கு சென்று குறிப்பிட்ட database  உள்ள சகல table களையும் Export செய்தல் வேண்டும். பின்பு அதனை Live Server உள்ள phpmyadmin பகுதிக்கு சென்று குறிப்பிட்ட database  இன் சகல table களையும் import செய்தல் வேண்டும்.

3. configration.php file இனை open செய்து (வேண்டுமானல் குறிப்பிட்ட configration.php file இனை தரவிறக்கம் செய்து, notpad இல் திறந்து edit செய்து கொள்ள முடியும்.) அதில் live sever data base க்குரிய data base name, password, user name என்பவற்றினை சரியாக கொடுத்தல் வேண்டும்.

பின்வரும் video clip இனை பார்த்து பயன் பெறுக.


கட்டுரை: http://karaninfotech.blogspot.com/


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews