தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Saturday, November 1, 2014

சேதமடைந்த கோப்புகளை மீட்டெடுக்க

சில முக்கியமான கோப்புகளை மிகவும் கவனமாக பாதுகாப்போடு வைத்திருப்போம். சில நேரங்களில் அந்த கோப்புகள் பழுதடைந்து விடும். அவ்வாறு பழுதடைந்த கோப்புகளை மீட்டெடுப்பது என்றால் சாதாரண விஷயம் அல்ல. அலுவல் சம்பந்தப்பட்ட கோப்புகள் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது போர்ட்டபிள் டிவைஸ் பெண்ட்ரைவ், சீடி/டிவீடி மற்றும் ப்ளாஷ் ட்ரைவ்களில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்து செல்வோம். இவ்வாறு கோப்புகளை இடமாற்றம் செய்யும் சேதமடைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு சேதமடையும் கோப்புகளை மீட்டெடுக்க File Repair என்னும் மென்பொருள் உதவுகிறது.

மென்பொருளை தரவிறக்கம் சுட்டி 



மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் எந்த கோப்பினை மீட்டெடுக்க வேண்டுமோ அதை தேர்வு செய்யவும். பின் Start Repair என்னும் பொத்தானை அழுத்தி இழந்த கோப்பினை மீண்டும் பெற முடியும். இந்த மென்பொருளின் மூலமாக சேதமடைந்த பல்வேறு பைல் பார்மெட்டுடைய கோப்புகளை மீட்டெடுக்க முடியும்.


    corrupted Word documents (.doc, .docx, .docm, .rtf)
    corrupted Excel spreadsheets (.xls, .xla, .xlsx)
    corrupted Zip or RAR archives (.zip, .rar)
    corrupted videos (.avi, .mp4, .mov, .flv, .wmv, .asf, .mpg)
    corrupted JPEG, GIF, TIFF, BMP, PNG or RAW images (.jpg,      .jpeg, .gif, .tiff, .bmp, .png)
    corrupted PDF documents (.pdf)
    corrupted Access databases (.mdb, .mde, .accdb, .accde)
    corrupted PowerPoint presentations (.ppt, .pps, .pptx)
    corrupted music (.mp3, .wav) 



மேலே குறிப்பிட்ட பைல் பார்மெட்டுடைய சேதமடைந்த பைல்களை மீட்டெடுத்து கொள்ள முடியும்.

உங்களது படங்களை எழுத்துகளாக மாற்றுவதற்கு

குறிப்பிட்ட பக்கத்தை நீங்கள் இணையத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில் அதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தையும் type செய்தாக வேண்டும் அல்லது அந்த நூலை ஓர் படமாக ஸ்கேன் செய்து வெளியிடலாம்.

ஆனால் OCR என்னும் தொழில்நுட்பம் மூலம் நீங்கள் எந்த ஒரு கோப்பை / படத்தை எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க முடியும்(இதனை image to text converter என்றும் கூறுவர்).

OCR மென்பொருள் கீழ்க்கண்ட வசதிகளை உங்களுக்கு வழங்குகிறது

1. நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பல்வேறு விதமான கோப்புகளை(தாள், PDF கோப்புகள், டிஜிட்டல் புகைப்படங்கள்) எளிதாக கையாள மற்றும் திருத்த முடியும், மேலும் திருத்தப்பட ஆவணங்களை எளிதாக மாற்றவும் அனுமதிக்கிறது.

2. மீண்டும் மீண்டும் தட்டச்சு செய்ய பல மணி நேரம் ஆகும் ஆவணங்களை ஒரு நொடியில் உருமாற்றி விடும் வல்லமை படைத்தது.

3. எந்த நிலையில் இருக்கும் ஆவணங்களையும் 23% முதல் 99% வரை தரத்தை உயர்த்தும் வாதிகள் உள்ளது.

4. 200% தொடக்க வேகம்.

5. ஐபோன், 2 மெகாபிக்சல் தொலைபேசி கேமராக்கள் போன்றவற்றுடனும் எளிதாக வேலை செய்யக் கூடியது மற்றும் அமேசான் கின்டெல் ஆதரவு.

6. OCR Scanner பெரும் நன்மைகளை தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு மென்பொருள். நீங்கள் எந்த விதமான ஸ்கேநேர் மூலமும் இந்த மென்பொருளை எளிதாக உபயோகிக்கலாம்.
தரவிறக்க  சுட்டி 

கட்டண மென்பொருட்களை இலவசமாக தரவிறக்குவது எப்படி?

எங்கள் எல்லோரிடமும் கணினி இருக்கும். ஆனால் எங்கள் தேவைக்கேற்ற மென்பொருட்கள் எல்லோரிடமும் இருக்குமா? மென்பொருட்களை அவற்றிற்குரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளவேண்டியிருப்பதால் பலர் பல மென்பொருட்களை உபயோகப்படுத்தாமலேயே விடுகிறார்கள்.
மென்பொருட்கள் மாத்திரமன்றி கணினி விளையாட்டுக்களும் இந்த வகைக்குள்ளேயே அடங்கும். இவ்வாறு அல்லாமல் எந்த கட்டண மென்பொருளையும் பணம் செலுத்தாமல் இலவசமாக பெற்றுக்கொள்ளமுடியுமா? ஆம். அதற்கு உதவி செய்கிறது Torrent என்ற முறை.
Torrent மூலம் எவற்றை தரவிறக்கம் செய்யலாம்?
Torrent மூலம் உங்களுக்கு தேவையான எதனையும் தரவிறக்கிக்கொள்ளலாம். Movies, Videos, TV Programs மற்றும் அனைத்து இயங்குதளங்களுக்குமான (Windows, Mac, Linux) மென்பொருட்கள், Games, அனைத்து தொலைபேசிகளுக்குமான மென்பொருட்கள் (iOS, Android) , Audio, E books, Photos என அனைத்துமே Torrent இல் இலவசமாக கிடைக்கும்.
Torrent மூலம் எப்படி இலவசமாக தரவிறக்கம் செய்வது?
இதற்கு முதலில் Torrent File களை தரவிறக்கம் செய்யக்கூடிய மென்பொருள் ஒன்றை தரவிறக்கி நிறுவவேண்டும். Bittorent அல்லது Utorrent இதற்கு பொருத்தமான மென்பொருள். இவற்றில் ஏதாவது ஒன்றை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். அடுத்து தரவிறக்கவேண்டிய மென்பொருளிற்கான Torrent file ஐ தரவிறக்கவேண்டும்.
இணையத்தில் Torrent தளங்கள் ஏராளமாக இருக்கின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றிற்கு செல்வதன் மூலம் தரவிறக்கலாம். அல்லது http://torrentz.eu/ என்ற தளத்திற்கு செல்லுங்கள். இது ஒரு Torrent தேடுபொறியாகும். இதில் சென்று உங்களுக்கு தேவையானவற்றை ரைப் செய்து தேடுங்கள்.
தேடியதும், நீங்கள் தேடிய மென்பொருள் என்னென்ன வகைகளில் உள்ளது என்று காண்பிக்கும். உதாரணமாக Windows 7 என்று தேடினால் windows 7 இல் உள்ள Business, Home Premium, Ultimate போன்ற version களை காண்பிக்கும்.
அதில் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்ததும், அதற்குரிய Torrent இணைப்பு எந்தெந்த தளங்களில் உள்ளது என்று பட்டியல்படுத்தும். விரும்பிய தளம் ஒன்றை கிளிக் செய்து சென்று அதில் உள்ள Torrent File ஐ தரவிறக்கிக்கொள்ளவேண்டும். இதன் அளவு Kb அளவுள்ள மிகச்சிறிய File ஆக இருக்கும்.
இதை தரவிறக்கிய பின்னர் Open செய்யுங்கள். இப்போது Bittorent மென்பொருளுடன் நீங்கள் தரவிறக்கவேண்டிய மென்பொருள் தரவிறங்க ஆரம்பிக்கும்.

மென்பொருள் Serial, Keygen இலகுவாக பெறுவது எப்படி ?



இது கொஞ்சம் வித்தியாசமான பதிவு தான். எப்படி திருடுவது என்பது  விலை உயந்த மென்பொருட்களை எப்படி இலவசமாக பயன்படுத்தலாம் .சட்டரீதியாக மென்பொருட்களை எவரும் பணம் கொடுத்து வாங்குவது கிடையாது. காரணம் இணையத்தில் பரவிகிடக்கின்ற திருட்டுகள். இலகுவாக எந்த மென்பொருளுக்கும் உரிய Activation Key இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்த செயற்பாடு சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளபடாதவை, இருந்தும் இதை தடுக்க எந்தவொரு வழியும் தற்சமயம் கிடையாது. என்ன செய்வது நானும் இந்த முறையைத்தான் பின்பற்றி ஒரு திருட்டு வழி முறையை கற்றுத்தர போகிறேன்
  • முதலாவதாக கூகிள் இணையதளத்திற்கு செல்லுங்கள் - Google.com
  •     பின்னர் கூகிள் தேடலில் “94fbr” இடைவெளிவிட்டு மென்பொருள்  பெயரை எழுதுங்கள். உதாரணமாக 94fbr windows 8
  •     அதன் பிறகு கூகிள் keygen’s உரிய பட்டியலை காட்டும்.
அவ்வளவு தான் இனி எல்லாமே இலவசம் நீங்க விரும்பியதை தரவிறக்கி  கொள்ளலாம் ...

கணணியில் தகவல்களை மறைத்து வைப்பதற்கு


உங்களது கணணியில் சேமித்து வைத்திருக்கும் தகவல்களை மற்றவர்களிடமிருந்து எளிதில் மறைக்கலாம்.

இச்செயலை மேற்கொள்ள பல்வேறு சிறிய அப்ளிகேஷன் புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றை தேர்ட் பார்ட்டி புரோகிராம் என அழைக்கிறார்கள். இவற்றைப் பயன்படுத்துவது நூறு சதவிகிதம் பாதுகாப்பு எனச் சொல்ல முடியாது.



எனவே விண்டோஸ் இயக்கம் தரும் பாதுகாப்பு வழியை இங்கு காணலாம். இதற்கு கீழ்க்காணும் வழிகளை பின்பற்ற வேண்டும்.
1. முதலில் உங்கள் கணணியில் நீங்கள் Administratorஆக லொகின் செய்திருக்க வேண்டும்.
2. இனிமேல் மறைத்து வைக்க வேண்டிய தகவல் உள்ள கோப்புகள் அனைத்தையும் ஒரு புதிய கோப்பறையில் போட வேண்டும். எடுத்துக்காட்டாக  D ட்ரைவில் Data என ஒரு கோப்பறையை உருவாக்கலாம்.
3. அதன் பின் Start பட்டனை அழுத்தி ரன் பாக்ஸில் CMD என டைப் செய்திடவும். பின் Ok அழுத்த உங்களுக்கு டாஸ் இயக்க கட்டளைப் புள்ளி(command prompt) கிடைக்கும்.
4. இங்கு நீங்கள் மறைத்து வைக்க வேண்டிய கோப்பறையின், அதற்கான பாத் உடன் பின்வருமாறு டைப் செய்திட வேண்டும். உதாரணமாக attrib+s+h D:Data என இருக்க வேண்டும். இதன்பின் உங்கள் கோப்பறை மறைக்கப்படும். உடனே நீங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து சோதித்துக் கொள்ளலாம்.
மறைத்து வைத்துள்ள கோப்பறைகள் என்றாவது ஒருநாள் அல்லது ஒருநேரம் இதனை வெளியே தெரியும் படி வைக்க எண்ணலாம் அல்லது மேலும் சில கோப்புகளை இதன் பின் மறைத்து வைக்க எண்ணி இந்த கோப்பறையில் போட்டு வைக்க திட்டமிடலாம். அப்போது attrib s h D:Data என டைப் செய்திட வேண்டும்

சாதாரண வீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்றம் செய்வதற்கு

வீடியோ கோப்புகளை ஒரு போர்மட்டில் இருந்து வேறு வகையான போர்மட்டுக்கு மாற்றுவதற்கு ஏராளமான மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன.

ஆனால் தற்போது நம்மிடம் உள்ள சாதாரண இரு பரிமாண(2D) படங்களையும், வீடியோக்களையும் மிக எளிதாக முப்பரிமாண(3D) வீடியோக்களாக மாற்றலாம்.

இதற்கு ஒரு மென்பொருள் துணை புரிகிறது. இந்த மென்பொருள் மிக எளிதான முறையில் வீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்றி தருகிறது.
எனினும் இந்த மென்பொருள் இயங்குவதற்கு ஏற்புடைய சாதனம் தேவை. உதாரணாமக 3D தொலைக்காட்சி, LG முப்பரிமாண தொலைபேசி, NDS போன்ற சாதனங்களிலேயே இவ் முப்பரிமாணத் தன்மையை பார்வையிட முடியும்.
முப்பரிமாண கணணி மொனிட்டர் திரையினை கொண்டவர்கள் இலகுவாக youtube இல் தரவேற்றி பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும் இதன் மூலம் உங்களுக்கு தேவையான போர்மட்டுக்களிலும் மாற்றிக் கொள்ளலாம்.
 TO DOWNLOAD  (Arc Soft Media Converter)

கணிபொறிக்கு தேவையான அணைத்து டிரைவர்களும் ஒரே இடத்தில் கிடைக்கிறது

நாம் எந்த ஒரு வன்பொருள் ( Hardware ) சாதனங்களை வாங்கினாலும் கூடவே அதற்கூறிய Driver Cd அல்லது Dvd தருவார்கள்.

சில சமயங்களில் நம் Driver Cd (or) Dvd அடிபட்டு விடும் அல்லது தொலைந்து போகக்கூடிய வாய்பு நிறைய உள்ளது.அந்த சமயங்களில் நாம் நமக்கு தேவைப்படும் Driver Cd (or) Dvd-யை எங்கு சென்று வாங்குவது?யாரிடம் கேட்பது?


இந்த கவலையை விட்டு விடுங்கள் இந்த இணையத்தளம் நமக்கு தேவையான அணைத்து Driver Cd (or) Dvd-களையும் தருகிறார்கள்,இங்கு சென்று நாம் நமக்கு தேவையான Driver Cd (or) Dvd-களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இங்கு

* PrinterDrivers

* Cdrom Dreivers

* Modem Drivers

* Sound Drivers

* Mouse Drivers

* Monitor Drivers etc.........

அணைத்து Company சாதனங்களும்(Driver) கிடைக்கிறது.பழைய சாதனகளுக்கும் டிரைவர்கள் உள்ளன.

உங்களுக்கு தேவையான Driver Cd (or) Dvd-களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தள முகவரி http://members.driverguide.com/index.php

வாசித்தால் நிச்சயமாக உங்களால் நம்ப முடியாது… அதிசயம். ஆனால் உண்மை..

10445491_840211482664574_2238093476483188812_nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு ’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான நிகழ்வுகளை இங்கு பார்ப்போமா?
முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்-
1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.
2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
3. இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.
4. இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள்.
5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன்)
6. ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடைவெளி.
7. இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வால்டு 1939.
8. இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
9. பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர் நோக்கி ஓடினான்.
10. லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.
இன்னொரு சம்பவம் Life பத்திரிக்கையில் வெளியான உண்மை சம்பவம். இதனை வாரன் வீவர் என்ற கணித அறிஞர் தன் புத்தகம் ஒன்றிலும் குறிப்பிடுகிறார். அமெரிக்காவில் நெப்ராஸ்கா என்ற மாநிலத்தில் உள்ள Beatrice என்ற சிறிய நகரில் உள்ள ஒரு சர்ச்சில் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி 15 பாடகர்கள் சேர்ந்து கூட்டாக சரியாக காலை 07.20 மணிக்குப் பாடுவதாக இருந்தது. ஆனால் அத்தனை பேரும் வேறு வேறு காரணங்களுக்கு சர்ச்சிற்கு வர அதிக தாமதமாகி விட்டது. ஒருத்தி ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் ஆழ்ந்து போய் கிளம்பத் தாமதமானது. இன்னொருத்தி கணிதப்பாடம் எழுதி முடித்துக் கிளம்பத் தாமதமானது. ஒருவருக்குக் காரை ஸ்டார்ட் செய்வதில் பிரச்சினை…இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம். இவர்கள் சரியான நேரத்திற்குள் வந்து சேராததே இவர்களைக் காப்பாற்றியது என்பது தான் அதிசயச் செய்தி. காலை சரியாக 07.25 க்கு வெடிகுண்டு வெடித்ததில் சர்ச் தரை மட்டமாகியது.
1900 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இத்தாலிய அரசர் உம்பர்டோ (King Umberto I) மோன்ஸா என்ற நகரில் ஒரு பெரிய ஓட்டலில் உணருந்தச் சென்ற போது அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த ஓட்டல் உரிமையாளர் அசப்பில் அவரைப் போலவே இருந்தது தான். அவரிடம் பேசிய போது மேலும் பல ஆச்சரியங்கள் அவருக்குக் காத்திருந்தன. அந்த ஓட்டல் உரிமையாளர் பெயரும் உம்பர்ட்டோ. இருவர் மனைவியர் பெயரும் மார்கரிட்டா. அந்த மன்னர் முடிசூட்டிய அதே நாளில் தான் அந்த ஓட்டல் உரிமையாளர் அந்த ஓட்டலைத் துவக்கினார். இருவர் பிறந்ததும் ஒரே நாள் 14-03-1844. ஆச்சரியத்தோடு அந்த ஓட்டல் அதிபருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்ற மன்னர் ஒரு மாதம் கழித்து 29-07-1900 அன்று அந்த ஓட்டல் உரிமையாளர் ஒரு துப்பாக்கி சூட்டில் சற்று முன் தான் காலமானார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டார். சில மணி நேரங்களில் மன்னரும் ஒரு வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டார்.
ஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவன் 1883 ஆம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்துக் கொண்டான். அந்தக் காதலி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள அவளுடைய சகோதரர் கடும் கோபமடைந்து சீக்லேண்டைத் தேடிக் கண்டுபிடித்து சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அதிர்ஷ்டவசமாக சீக்லேண்ட் சாகவில்லை. அந்தத் துப்பாக்கிக் குண்டு முகத்தை உராய்சிக் கொண்டு சென்று அங்கிருந்த மரத்தில் சென்று பதிந்தது. சில வருடங்கள் கழித்து அந்தப் பெரிய மரத்தை வெட்டி விட சீக்லேண்ட் நினைத்தான். ஆனால் அதை அவ்வளவு சுலபமாக வெட்டி விட முடியவில்லை. எனவே டைனமைட் குச்சிகளை வைத்து மரத்தைப் பிளக்க நினைத்தான். அப்படிச் செய்கையில் அந்த மரம் சுக்கு நூறாகி வெடிக்கையில் அந்தக் குண்டு சீக்லேண்டின் தலையில் பாய்ந்து அந்த இடத்திலேயே சீக்லேண்ட் மரணம் அடைந்தான். பல வருடங்கள் கழித்தும் அந்தக் குண்டு பழி தீர்த்துக் கொண்டது போல அல்லவா இருக்கிறது. இந்த இரு சம்பவங்களும் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.
Ohioவில் பிறந்த இரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான குறிப்புகள் 1980 ஜனவரி மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் வெளி வந்துள்ளன. இருவரும் பிறந்தவுடனேயே பிரிக்கப்பட்டு இருவேறு தொலைதூரக் குடும்பங்களுக்குத் தத்துத் தரப்பட்டனர். இருகுடும்பங்களும் ஒன்றிற்கு ஒன்று தெரியாமலேயே குழந்தைகளுக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டனர். இருவரும் சட்ட அமலாக்கப் பிரிவில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இருவருக்குமே பல திறமைகள் ஒன்றாகவே இருந்தன. இருவரும் லிண்டா என்ற பெயருடைய பெண்களையே முதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருமே தங்கள் மகன்களுக்கு ஜேம்ஸ் ஆலன் என்ற பெயரையே இட்டனர். இங்கே சின்ன வித்தியாசம் சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் James Alan என்றும் இன்னொருவர் James Allan என்று ஒரு l எழுத்து சேர்த்தும் பெயர் வைத்தனர். இருவரும் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பெட்டி (Betty) என்ற பெயருடைய பெண்களை. இருவரும் தங்கள் நாயிற்கு Toy என்ற பெயரையே வைத்திருந்தனர். நாற்பதாண்டு காலம் கழிந்து இணந்த அந்த இரட்டையர் தங்களை அறியாமல் தங்கள் வாழ்க்கைகளில் இருந்த ஒற்றுமையை எண்ணி அதிசயித்தனர்.
மேஜர் சம்மர்ஃபோர்டு என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிக்கும் மின்னலுக்கும் இருந்த தொடர்பு ஆச்சரியமானது. அவர் முதல் உலகப்போர் சமயத்தில் குதிரையில் இருந்து போர் புரிந்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி இடுப்பிற்கு கீழ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின் அவர் ஓரளவு குணமாகி கனடா நாட்டில் குடி பெயர்ந்தார். அங்கு ஆறாண்டு காலம் கழித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது மறுபடியும் மின்னலால் தாக்கப்பட்டார். வலது பக்கம் பக்கவாதம் அவரைப் பாதித்தது. மறுபடி குணமடைந்த அவர் உள்ளூர் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்த போது மின்னலால் தாக்கப்பட்டு உடம்பு முழுவதும் செயல் இழந்தார். அது நடந்து இரண்டாண்டுகளில் மரணம் அடைந்தார். இறந்த பின்னும் அவரை மின்னல் விடுவதாக இல்லை. நான்காண்டுகள் கழிந்து அவருடைய கல்லறை மின்னலால் தாக்கப்பட்டு சிதிலமாகியது.
இந்த நிகழ்ச்சிகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன அல்லவா? இவற்றை எல்லாம் தற்செயல் என்று கண்டிப்பாக நாம் நினைத்து விட முடியாது. இந்த சம்பவங்களைப் படிக்கையில் அவற்றில் முன்பே தீர்மானிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட ஒரு அம்சம் இருக்கிறது என்றல்லவா தோன்றுகிறது. ஏன், எதற்கு என்பது விளங்கா விட்டாலும் கூட அந்த ஏதோ ஒரு ‘விதி’யை நம்மால் மறுக்க முடிவதில்லை அல்லவா?

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews