தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Wednesday, July 17, 2013

கணினி வைரஸ்

குறிப்பிட்ட கணினி மென்பொருள் ஆனது கணினியின் செயல்பாட்டினை பாதிப்பதாகவோ அல்லது கணினியின் செயல்பாட்டில் தடங்கள் ஏற்படுத்துவதினை நோக்காக கொண்டிரிப்பின் அவ்வகையான மென்பொருட்கள் கணினி வைரஸ் எனப்படுகின்றது. இவை மனிதனாலேயே உருவாக்கப்படுகின்றன.
பண்புகள்:
  • இவை பொதுவாக தம்மைதாமே பிரதி செய்யக் கூடியவை.
  • எல்லா கணினி வைரஸ்களும் மனிதனாலேயே உருவாக்கப்படுகிறது.
  • இவை வன்தட்டில் (Hard disk)  உள்ள கோப்புக்களை (File) அழிக்கும் தன்மை உடையது.
  • நினைவகத்தினை பாதிப்படய செய்யக்கூடியது.
  • பொதுவாக இவை கணினி வலைப்பின்னல் ஊடாகவே பதிவிறக்கம் செய்யப்படுகிறது.
கணினி வைரஸ் பரவும் முறைகள்:
  • இலத்திரனியல் அஞ்சல் (e-mail)  மூலம்.
  • இணையத்தின் ஊடாக தகவல்களை பதிவிறக்கம்(down load) செய்யும்போது.
  • பாதுகாப்பற்ற துனை நினைவக(secondary storage)பாவனையின் போது. இவ்வகை நினைவகமாக CD, DVD, flash memory, floppy, … போன்றவற்றினை கூறலாம்.


பாதுகாத்தல்:
  • வைரஸ் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரல்களை (Anti virus )  நிறுவுதல்.
  • வைரஸ் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரல்களை குறிப்பிட்ட காள இடைவெளிகளில் புதுப்பித்தல் (Update)
  • துனை நினைவங்களை virus scan  செய்த பின் பயன்படுத்துதல்.
  • பாதுகாப்பற்ற துனை நினைவங்களை பயன்படுத்துதலை தவிர்தல்.
  • பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்புக்களை அல்லது தரவுகளை virus scan செய்தல்.
  • கணினியை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் virus scan செய்தல்.

Antivirus:
virus program  கள் கணினியில் பதிவிறக்கம் செய்யப்படுவதினை தடுக்கவும் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட virus program  களை கண்டுபிடித்து அழிப்பதுக்காகவும் உருவாக்கப்பட்ட கணினி மென்பொருட்கள் வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் ( Anti virus software) எனப்படும்.
Eg:
  • AVG anti virus
  •  MacAfee anti virus
  • Norton  anti virus
  • Avast
  • Hasper sky

Firewall :
கணினியை தாக்க இரு வகை விரோதிகள் உள்ளனர்
  • virus
  • hackers

hackers

கணினி பயனாலர்கள் பொதுவாக தமது கணினியை இணையத்தின் ஊடாக பயன்படுத்தும் பொழுது அவர்களை அறியாமலே அவர்களது கணினியில் உள்ள தரவுகளை, தகவல்களை, கோப்புக்களை கண்கானித்தல், திருடுதல், மாற்றம் செய்தல் Hacking எனப்படும்.இதனை  செய்பவர்கள் குறும்பர் (hackers) என அழைக்கப்படுவர். இதனை தடுப்பதுக்கு பயன் படும் மென்பொருட்கள் Firewall software   அழைக்கப்படும்.
Firewall software  க்கு உதாரணம்:
  • Norton internet security
  • MacAfee internet security
  • Avast internet security
  • Zone alarm security suit
  • Norman internet control

வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட கணினியின் இயல்புகள்

  • Program கணினியில் load ஆவதுக்கு அதிக நேரம் எடுக்கும்.
  • Hard disk  உள்ள free space  இன் அளவு வேகமாக குறைவடையும்.
  • floppy drive, pen drive  என்பன பாதுகாப்பான முறையில் remove  பண்ன முடியாமல் இருத்தல்.
  • தேவையற்ற file , folder  இனை அழிக்கும்போது அவை மீண்டும் தோன்றுதல்.
  •  கணினியில் தேவையற்ற out put  கள் தோன்றுதல். (message , sound )


பொதுவான கணினி வைரஸ்கள்

Boot sector virus:  
hard disk  உள்ள boot sector  இனை இவை பாதிக்கும்.
File virus:
application package  உள்ள file களை இவை பாதிப்பதுடன் அதனை செயல்படுத்தும் பொழுது ஏனைய பகுதிக்கும்பரவும்.
Macro virus:
இது பொதுவாக micro soft package  உள்ள கோப்புக்களை பாதிக்கும்.
Worm virus:
இவை தம்மை தாமேபெரிக்கி கொள்ளக்கூடிய மிக அபாய கரமான வைரஸ்கள் ஆகும்.
Trojan horse:
virus program  இனை ஒவ்வோரு பகுதிக்கும் எடுத்துச்செல்லக் கூடியது. Credit card number, pass word போன்றவற்றை இதனை உருவாக்கியவர் mail க்கு அனுப்பி வைக்ககூடியது. பயனுள்ள மென்பொருள் போல் காணப்பட்டாலும் இது ஒரு Hacking மென்பொருள் ஆகும். இவை பொதுவாக கணினிக்கு தீமை பயப்பது இல்லை.

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews