தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Monday, September 16, 2013

தகவல் முறைமை - 7

சோதனை மேற்கொள்ளல் (System Testing)
வடிவமைக்கப்பட்ட முறைமையில் உள்ள குறிமுறை வழுக்கள்(Cording Errors), அமைப்பு வழுக்கள்(Designing errors) அல்லது தேவைக்குறைபாடகள்(Requirement Errors) போன்றன சோதனைக்குட்படுத்தப்படும்.
அமைப்புவழுக்கள் அல்லது தேவைக்குறைபாடுகள் என்பது நாம் வழங்கும் உள்ளீடுகளுக்கு ஏற்ப வருவிளைவு பெறப்படுகின்றனவா எனவும், முறைமையின் வினைத்திறன், நம்பகத்தன்மை, பாதுகாப்பு என்பனவும் செம்மை பார்க்கப் படுகின்றன.
ஒரு முறைமையானது 3 படிமுறைகளில் செம்மை பார்க்கப்படுகின்றது.
     1.   அலகுப் பரிசோதனை (Unit Testing)
     2.   முறைமை பரிசோதனை(System testing) / தொடர்புடைமைச் சோதனை(Integration Testing)
     3.   பாவனையாளர் அங்கிகரிப்பதற்கான சோதனை(Accepting Testing)
அலகுப் பரிசோதனை – முறைமையின் ஒவ்வரு கூறுகளுக்கும் தனித்தனியாக உள்ளீடுகளை வழங்கி வருவிளைவு செம்மை பார்க்கப்படும்
முறைமை பரிசோதனை – முறைமையின் கூறுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தப்பட்டு முறைமைக்குரிய செய்நிரல்கள் சரியான முறையில் செயல்படுத்தப்படுகின்றனவா என முறைமைக்கான உள்ளீடுகளை வழங்கி சோதனை மேற்கொள்ளல்.
பாவனையாளர் அங்கிகரிப்பதற்கான சோதனை – முறைமை வடிவமைப்பாளரினால் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் பயனாளரினால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளதா என்பது பற்றி சோதனையினைக் குறிக்கும்.

முறைமையினை செயற்படுத்தல் (System Implementation)
மூலமுறைமையில் இருந்த எல்லாத்தரவுகளும் புதிய கணினி முறைமைக்கு மாற்றம் செய்தலை இது குறிக்கும். இது பின்வரும் இருவழிகளில் மேற்கொள்ளப்படுகின்றது.
            1.   நேரடி அமுலாக்கம் (Direct implementation)
            2.   சமாந்தர அமுலாக்கம் ( Parallel Implementation)
நேரடி அமுலாக்கம் – பழயமுறைமை நிறுத்தப்பட்டு நிறுத்தப்பட்ட தினத்தில் இருந்தே கணினி மயப்படுத்தப்பட்ட முறைமை ஆரம்பிக்கப்படுதலைக்குறிக்கும்.

அனுகூலம் – செலவு குறைவு, நேரச்சிக்கனம்

பிரதிகூலம் – புதியமுறைமையில் கடினத்தன்மை ஏற்படும் பொழுது பழய முறைமைக்கு மாற முடியாது.
            புதியமுறைமைக்கு இயபாக்கம் அடைய ஏற்படும் காலதாமதம் வேலையில் கடினத்தன்மையினை உருவாக்கும்.
சமாந்தர அமுலாக்கம் – பழய முறைமையும், கணினிமயப்படுத்தப்பட்ட புதிய முறைமையும் ஒரேநேரத்தில் இயங்கும்.

அனுகூலம் – பழயமுறைமையில் பெற்றுக்கொள்ளப்பட்ட பெறுபேறுகளையும், புதிய கணினி மயப்படுத்தப்பட்ட முறைமையில் பெற்றுக்கொள்ளப்பட்ட பெறுபேறுகளையும் ஒப்பிட முடியும்.
             புதிய முறைமை ஆரம்ப கட்டத்திலேயே செயல் இழப்பின் அது நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்காது

பிரதிமூகூலம் – நிறுவனத்தின் ஒவ்வரு செயல்பாடுகளும் இருமுறை செய்ப்படுவதனால் மேலதிக வேலைச்சுமையும், நேர விரையமும் ஏற்படும்.
முறைமையினை பராமரித்தல்
          1.   முறைமைப் பயன்பாட்டில் இருக்கும் பொழுது முறைமையில் ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும்.
          2.   பயனாளரின் புதிய தேவைகளை இனம் கண்டு மாற்றங்களை செய்வதற்கும்.
          3. எதிர்காலத்தில் ஏற்படும் தொழில் நுட்ப மாற்றங்கள் காரணமாக முறைமையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் முறைமை பராமரிப்பு அவசியமாகும்.

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews