தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Tuesday, December 9, 2014

வரவு – செலவு கணக்கு… கைகொடுக்கும் ஃபைனான்ஷியல் ஆப்ஸ்!

தினசரி நாம் செய்யும் செலவு களைக் குறித்து வைக்கும் பழக்கம் இன்றைக்கு பெரும்பாலா னவர்களுக்குக் கிடையாது. இதனால் என்னதான் நாம் சம்பாதித்தாலும், மாத கடைசியில் சம்பளம் அத்தனை யும் எப்படி செலவானது, எதற்காக எவ்வளவு செய்தோம் என்று தெரியாமல் முழிப்போம். நம் தினப்படி செலவுகளை யாராவது குறித்து வைத்துச் சொன்னால் நன்றாக இருக்குமே! அதனோடு நாம் சேமிக்க வேண்டிய தொகை என்ன, கட்ட வேண்டிய கடன் எவ்வளவு என்பதையெல்லாம் கண்டுபிடித்துச் சொன்னால் நன்றாக இருக்குமே என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா? இந்த மாதிரியான ஒரு வேலையைத்தான் இன்றைய பல ஃபைனான்ஷியல் ஆப்ஸ்கள் செய்கின்றன. அவற்றுள் ஒரு சில ஆஃப்ஸ்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.

மை பட்ஜெட் புக்!
Rating   4.6
இந்த ஆப்ஸ் ஒருவரது செலவு மற்றும் வருமானம் ஆகியவற்றைப் பதிவு செய்து, அதன் மூலம் அவரது நிதித் திட்டமிடலுக்கு உதவுகிறது. இதில் உங்களின் வருமானம் மற்றும் தினசரி செலவை பதிவு செய்துவந்தாலே போதும்; இந்த மாதத்தில் உங்கள் செலவு எப்படி இருக்கும், நீங்கள் இன்னமும் எவ்வளவு தொகையைச் சேமிக்க வேண்டும் என்பது போன்ற விவரங்களை இந்த ஆப்ஸ் தானாகவே திரட்டி, திட்டம் போட்டுத் தந்துவிடும். அதற்கேற்ப உங்கள் செலவுகளை நீங்கள் மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
இந்த ஆப்ஸைப் பயன்படுத்த இன்டர்நெட் வசதி தேவையில்லை. இதனை ஆங்கிலம் உள்பட 11 மொழிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த நாட்டின் பணமாக இருந்தாலும், அதற்கேற்ப இந்த பட்ஜெட் புக் சரியான திட்டமிடலைச் செய்யும் திறன்கொண்டதாக இருக்கிறது.
இதில் நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கையும் இணைத்துக் கொள்ளலாம் என்பதால் அதிகப் பாதுகாப்புடன் இந்த ஆப்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உங்கள் வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் தினசரி செலவுகள் ஆகியவற்றை எக்ஸ்எல் படிவங்களாகத் தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் உள்ளது.
இந்த ஆப்ஸை கூகுள் ப்ளே ஸ்டோரில் வாங்கலாம். இந்த ஆப்ஸின் விலை 212 ரூபாய் மட்டுமே. புதிய அப்டேட்களும் அடிக்கடி இலவசமாகவே கிடைக்கின்றன. 5-க்கு 4.6 ரிவியூ பெற்றிருக்கும் இந்த ஆப்ஸ் நிதித் திட்டமிடலுக்கான சிறந்த ஆப்ஸாக உள்ளதாக இதைப் பயன்படுத்துபவர்கள் சொல்கிறார்கள். இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்துள்ளனர். இதன் கடைசி அப்டேட் ஆகஸ்ட் 2014-ல் வெளிவந்துள்ளது.
ஃபைனான்ஷியல் கால்குலேட்டர்!
Rating 4.3 
சிலர் மூன்று, நான்கு இடங்களில் கடன் வாங்கியிருப்பார்கள். எவ்வளவு அசல் கட்டியிருக்கிறோம், எவ்வளவு தொகை கடன் பாக்கியுள்ளது, இஎம்ஐ தொகை இந்த மாதம் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதெல்லாம் தெரியாமலே மாய்ந்து மாய்ந்து கடனைக் கட்டிக் கொண்டிருப்பார்கள்.  இந்தப் பிரச்னையைத் தீர்க்க இப்போது பல ஆப்ஸ்கள் ஸ்மார்ட் போன்களில் வரத் துவங்கிவிட்டன. ஃபைனான்ஷியல் கால்குலேட்டர் எனும் இந்த ஆப்ஸ் ஒருவரது அனைத்து ஃபைனான்ஷியல் கணக்குகளையும் கணக்கிட்டுச் சொல்லும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் நமது முதலீடுகளில் இருந்து நமக்கு வரவேண்டிய தொகை மற்றும் நாம் வாங்கியுள்ள கடனுக்குச் செலுத்த வேண்டிய வட்டி ஆகியவற்றுக்கான தகவல்களை அளித்தால் அதுவே கணக்கிட்டுச் சொல்லிவிடுகிறது.
இந்த ஆப்ஸ் கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த ஆப்ஸ் 5-க்கு 4.3 ரிவியூ பெற்றிருக்கிறது. இந்த ஆப்ஸ் ஃபைனான்ஷியல் கணக்கீடுகளுக்கு உதவும் சிறந்த ஆப்ஸ் என பயன்பாட்டாளர்கள் கூறியிருக்கின்றனர். இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்துள்ளனர். புதிய அப்டேட்களும் அடிக்கடி இலவசமாகவே கிடைக்கின்றன.
தினசரி செலவுகளைச் சமாளிக்கும் ‘டெய்லி எக்ஸ்பென்ஸ்’!
Rating    4.5
தினசரி நாம் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பது தெரியாமலே செலவு செய்கிறவர்களுக்குத் தடுப்புக்கட்டை போடுகிற ஆப்ஸ்தான் இது. இதன்மூலம் ஒருவர் தனது மாத வருமானத்தில் ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்திருக்கிறார், அதன் மூலம் மாத வருமானம் எப்படி குறைந்திருக்கிறது, இந்த விகிதத்தில் செலவழித்தால், இந்த மாதம் அவரது வருமானத்தில் எவ்வளவு பணம் மிச்சம் இருக்கும் என்பதைக் கணித்துத் தரும் வகையில் இந்த ஆப்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆப்ஸை பயன்படுத்தி தினசரிக் கணக்குகளுக்கான வார, மாத விவரங்களை கிராபிக்ஸ் படங்களாக பெற முடியும். இதில் நாம் பயன்படுத்தும் நாட்டின் பணத்துக்கேற்ப விவரங்களை மாற்றிக்கொள்ள முடியும். இந்த ஆப்ஸ் கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது. இதற்கு 5-க்கு 4.5 ரிவியூ பெற்றிருக்கிறது.
தினசரி வரவு – செலவுகளைக் கணக்கிட இது மிகவும் உதவியாக இருப்பதாக இதைப் பயன்படுத்துபவர்கள் சொல்கிறார்கள்.  இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள்  இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்துள்ளனர். புதிய அப்டேட்களும் அடிக்கடி இலவசமாகவே கிடைக்கின்றன.
வருமான வரி கணக்கிட இன்கம் டாக்ஸ் அசிஸ்டென்ட்!
Rating   4.4
பலருக்கும் வருமான வரி என்றாலே வேப்பங் காய்தான். ஆனால், வருமான வரியை வருட ஆரம்பம் முதலே எப்படியெல்லாம் திட்டமிடலாம் என்பதை அழகாக எடுத்துச் சொல்கிறது இந்த ஆப்ஸ். நமது சேமிப்புக் கணக்குத் தொடர்பான விவரங்களையும், பிஎஃப் தொகை பங்களிப்பு மற்ற முதலீடுகளின் பங்களிப்பு என அனைத்துக்கும் ஏற்றவாறு கணக்கிட்டு நம் வருமான வரியை எப்படித் திட்டமிட வேன்டும் என்பதையும் எக்ஸ்எல் படிவங்களாக தந்துவிடுகிறது.
இந்த ஆப்ஸ் கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த ஆப்ஸ் 5-க்கு 4.4 ரிவியூ பெற்றிருக்கிறது. இந்த ஆப்ஸ் வருமான வரித் திட்டமிடலுக்கு உதவும் வகையில் சிறப்பான ஆப்ஸாக கருதப்படுகிறது என்கின்றனர் இதைப் பயன்படுத்துகிறவர்கள்.
கடந்த ஜூலை மாதம் வெளியான இந்த ஆப்ஸை இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரவிறக்கம் செய்துள்ளனர். புதிய அப்டேட்களும் அடிக்கடி இலவசமாகவே கிடைக்கின்றன.


கட்டுரை: http://senthilvayal.com/

கம்ப்யூட்டர் பராமரிப்பு! --




கம்ப்யூட்டர் பராமரிப்பு!
1. தினந்தோறும் டெம்பரரி பைல்களை அறவே நீக்க வேண்டும். இங்கு அறவே நீக்க வேண்டும் என்று சொல்வது, அவை ரீசைக்கிள் பின் என்னும் போல்டரில் கூட இருக்கக் கூடாது என்பதுதான். இதற்கு சி கிளீனர் போன்ற இலவச புரோகிராம்கள் நமக்கு உதவுகின்றன.

2. இன்டர்நெட் இணைப்பு பெற்று இணைய நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இணைந்து விட்டதா! உடனே உங்கள் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பை அப்டேட் செய்திடுங்கள். இதனைச் சில நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளலாம் என்றாலும், தினந்தோறும் நீங்கள் இன்டர்நெட் நெட்வொர்க்கில் பணியாற்றுபவர் என்றால் தினந்தோறும் கூட அப்டேட் செய்திடலாமே. இதற்கென ஓரிரு நிமிடங்கள் தானே ஆகும்.

3. கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் (Defrag) செய்வது மிக அவசியம். இதற்கான கால அவகாசம் நீங்கள் புரோகிராம்களை இன்ஸ்டால் மற்றும் அன் இன்ஸ்டால் செய்வதனைப் பொறுத்துள்ளது. இருப்பினும் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்வது நல்லது.

4. சிகிளீனர் போல கிளீன் மை டிஸ்க் புரோகிராம்கள் இணையத்தில் நிறைய கிடைக்கின்றன. இவற்றை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். சிலர் வாரத்தில் மூன்று முறை இதனைப் பயன்படுத்துவார்கள். டெம்பரரி பைல்களை நீக்குகையில் ரீசைக்கிள் பின் மற்றும் இன்டர்நெட் டெம்பரரி பைல்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனவா என்று பார்க்கவும்.

5.இன்னொரு வழியும் உள்ளது. Start மெனு சென்று அங்கு கிடைக்கும் ரன் பாக்ஸ் (Start>Run) செல்லுங்கள். %temp% என டைப் செய்து ஓகே கிளிக் செய்திடுங்கள். உடனே தற்காலிக பைல்கள் உள்ள போல்டர்கள் அனைத்தும் கிடைக்கும். வேறு எந்த தயக்கமும் இன்றி அனைத்தும் டெலீட் செய்திடுங்கள். ஒரு சில பைல்கள் அல்லது போல்டர்கள் அழிக்கப்பட முடியவில்லை என்று செய்திகள் வரலாம். எவ்வளவு அழிக்க முடியுமோ அவ்வளவையும் அழித்திடுங்கள்.

6. விண்டோஸ் தரும் ஆட்/ரிமூவ் புரோகிராம் மூலம் புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்தால், அது அந்த புரோகிராம் சார்ந்த பைல்களை முழுமையாக நீக்குவதில்லை. எனவே இதற்கென உள்ள சில புரோகிராம்களை டவுண்லோட் செய்து பயன்படுத்தவும். [You must be registered and logged in to see this link.] uninstaller_free_download.html என்ற தளத்தில் இந்த புரோகிராம் ஒன்று கிடைக்கிறது.

7. நீங்கள் வைத்து அவ்வப்போது அப்டேட் செய்திடும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சில மால்வேர்கள் மற்றும் ஸ்பை வேர்களை நீக்கக் கூடிய திறன் இல்லாமல் இருக்கலாம். எனவே அவற்றை நீக்குவதற்கென உருவாக்கப்பட்ட புரோகிராம்களை தினந்தோறும் இயக்கவும்.

8. கம்ப்யூட்டரை கிளீன் செய்வதைப் போல அதில் உள்ள டேட்டாவினப் பாதுகாப்பதற்கும் சில நடவடிக்கைகளை குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும். எனவே தினந்தோறும் வேலை முடித்தவுடன் நாம் உருவாக்கிய மற்றும் திருத்திய பைல்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.
தினந்தோறும் பேக் அப் செய்தாலும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் ஹார்ட் டிஸ்க் முழுவதையும் ஒரு இமேஜாக உருவாக்கி பேக் அப் டிஸ்க்கில் வைப்பது நல்லது. இந்த இமேஜ் இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆகி உங்களுக்கு உதவ முடியாத நிலையில் இந்த இமேஜ் விண்டோஸ் இயக்கம் முதல் உருவாக்கிய பைல்கள் வரை அனைத்தும் தரும்.

9. ரிஜிஸ்ட்ரி யை கிளீன் செய்திடுங்கள் என்று சில கட்டுரைகளில் படிக்கலாம். கம்ப்யூட்டர்களுக்குப் புதியவரா நீங்கள்? அப்படியானால் இந்த வேலையை மேற்கொள்ள வேண்டாம்.

உங்கள் கணினியில் Voice Recording செய்ய



headphone with micநீங்கள் பேசும் பேச்சு, கவிதை, பாடல்கள் எதுவானாலும் உங்கள் கணினியிலேயே பதிவு செய்து அதை கேட்டு மகிழலாம். CD, Pendriver போன்ற சாதனங்களிலும் பதிந்துவைத்துக்கொள்ள முடியும்.

இதற்கு உங்களிடம் இருக்க வேண்டிய மற்றொரு சாதனம் HEAD PHONE with mic. பெரும்பாலும் கணினியுடன் சேர்ந்தே கிடைக்கும். இல்லாதவர்கள் ஒரு நல்ல நிறுவனத்தின் தரமான HEAD PHONE with mic -ஐ வாங்கிக்கொள்ளுங்கள். இப்போது மிகக் குறைந்த விலையிலேயே இந்த HEADPHONE சந்தையில் கிடைக்கிறது.

கணினியில் வாய்ஸ் ரெக்கார்டிங் செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.
HEADPHONE with mic உங்கள் கணினியில் இணைத்துக்கொள்ளுங்கள்.
HEADPHONE உங்கள் தலையில் மாட்டிக்கொள்ளவும். நீட்டியிருக்கும் Mic -ஐ உங்கள் வசதிக்கு தக்கவாறு வாயருகே வைத்துக்கொள்ளுங்கள்.
Task Bar-ல் உள்ள Start Button அழுத்துங்கள். அதில்
Programe==>Accessories==>Entertainment==>Sound Recorder என்பதைத் தேர்ந்தெடுங்கள்.(windows xp  பயன்படுத்துபவர்களுக்கு மட்டும்)
Start==>all Programes==>Accessories==>Sound Recorder என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.( windows7 பயன்படுத்துபவர்களுக்கு)
தோன்றும் விண்டோவில் Start Recording என்பதை(சிவப்பு நிறத்தில் இருப்பதை) அழுத்தவும்.
உடனே உங்கள் கணினியில் ரெங்கார்டிங் start ஆகிவிடும்.
இப்போது நீங்கள் பேசவேண்டியதை பேசி மீண்டும் அந்த சிகப்பு பட்டனை(Stop Recording) அழுத்தும்போது அந்த ஆடியோ கோப்பை சேமிக்க கேட்கும்.
அதில் Yes கொடுத்து நீங்கள் பேசியதை, பாடியதை, வாசித்ததை சேமித்துக்கொள்ளுங்கள்.
sound recorder
கணினியில் குரலை பதிவு(Voice Recording) செய்ய
  1. பதிவு செய்ததை நிறுத்த
உங்கள் கணினியில் சேமித்த Audio file நீங்கள் CD-யில் Burn செய்துகொள்ளலாம். அல்லது பென்டிரைவ்(Pen drive) போன்றவற்றிலும் சேமித்து வைத்துக்கொள்ளலாம். இணையத்தின் மூலம்(Social network) நண்பர்களுக்கும் இந்த Audio file அனுப்பி வைக்கலாம்.

என்ன நண்பர்களே உங்கள் கணினியில் Voice Record அல்லது Sound Record செய்வது எப்படி என்பதை அறிந்துகொண்டீர்களா?

எப்4கீ – ரிபீட் செயல்பாடு



எப் 4 கீயைப் பற்றி இந்த பகுதியில் ஏற்கனவே எழுதி இருந்தாலும், அண்மையில் ட்ராயிங் டூல்ஸ்களுடன் இதனைப் பயன் படுத்திப் பார்க்கையில் புதிய அனுபவம் ஒன்று கிடைத்தது. எனவே அதனுடன் சேர்த்து, மீண்டும் எப்4 கீ குறித்த தகவல்கள் அனைத்தையும் இங்கு தருகிறேன்.
அடிப்படையில் F4 கீ நம் நேரத்தை மிச்சப்படுத்தும் ஒரு அருமையான வசதியாகும். இந்த கீயை அழுத்தும் முன் எந்த செயல்பாட்டினை மேற்கொண்டோமோ, அது அப்படியே மீண்டும் மேற்கொள்ளப்படும். எடுத்துக்காட்டாக எக்ஸெல் புரோகிராமினை எடுத்துக் கொள்வோம். இதில் நீங்கள் உருவாக்கும் ஒர்க் ஷீட்டில், இன்ஸெர்ட் வழியைப் பயன்படுத்தி ஒரு நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசையினை இணைப்பதாக வைத்துக் கொள்வோம். இது நடத்தி முடித்தவுடன், மீண்டும் எந்த வரிசையில் கர்சரை வைத்து F4 கீயை அழுத்தினாலும், முன்பு எந்த வரிசையை கூடுதலாக உருவாக்கினோமோ அதே போல இன்னொரு வரிசை சேர்க்கப்படும். அதிக எண்ணிக்கை யில் வரிசைகள் சேர்க்கப்பட வேண்டுமாயின். F4 கீயை அழுத்த அழுத்த அவை சேர்க்கப்படும். சொற்களை போல்ட், அன்டர்லைன், சாய்வு என எந்த பார்மட்டிங் செய்தாலும், அதே செயல்பாடு F4 கீயை அழுத்தும்போது மேற்கொள்ளப்படும்.
எம்.எஸ். வேர்டிலும் இதே செயல்பாட்டை எதிர்நோக்கலாம். கலர் மாற்றுதல், லைன் ஸ்பேஸ் மாற்றுதல் என எந்த செயல்பாட்டிற்கும் கூடுதலாக மேற்கொள்ள F4 கீயைப் பயன்படுத்தலாம். இனி ட்ராயிங் டூல்ஸ் இணைந்து இந்த கீயைப் பயன்படுத்தும் முறையைப் பார்க்கலாம். ட்ராயிங் டூல்ஸ்களைப் பயன் படுத்திப் புதிதாக வரைந்த ஒரு உருவத்தினை மீண்டும் கிடைக்க F4 கீயைப் பயன்படுத்தலாம். கலர் பில் செய்வதில் நாம் மேற்கொள்ளும் மாற்றம், கோடுகளின் அளவை மாற்றுதல், வண்ணங்களை மாற்றுதல் என எந்தச் செயல்பாட்டினையும் மீண்டும் மேற்கொள்ள F4 கீ பயன்படுகிறது.
இவை அனைத்திலும் நாம் முக்கியமாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது ஒன்று. நாம் இந்த கீயை அழுத்தும் முன் எந்த செயல்பாட்டினை மேற்கொண்டோமோ, அதனை மட்டுமே இந்த கீ மேற்கொள்ளும்.

பிரபஞ்சம் குறித்து அறிய சக்தி வாய்ந்த டெலஸ்கோப் அமைப்பு

அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா நாடுகள் இணைந்து மிகவும் சக்தி வாய்ந்த கதிர் இயக்கமுள்ள டெலஸ்கோப் ஒன்றை அமைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இதன் மூலம் பிரபஞ்சங்கள் குறித்தும், பூமிக்கு வெளியே உயிரினம் இருக்கிறதா? என்பது பற்றியும் ஆய்வு மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அரிய டெலஸ்கோப் அமைக்கும் பணி வரும் 2016-ம் ஆண்டு 
தொடங்கப்பட்டு 2024-ம் ஆண்டில் நிறைவு பெறும் என கருதப்படுகிறது. 

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews